ஈழத்துப் போராட்டங்களால் பிரான்சில் புலம் பெயர்ந்த உங்களோடுஅடுத்த தலைமைமுறைகளோடு 2054 திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் விழா
அருமை நண்பர் கிருபானந்தன் அவர்கள் சென்னை வருகை தந்தபோது சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஒரு வரவேற்பு வழங்கினோம். அந்த வரவேற்பின் தன் தம்பி மகன் திருமணம் ஈழத்திலிருந்து தம் தாய் தன்னோடு படித்த நண்பர் முரளி குடும்பம் பிரான்சில் தம் மகனோடு படிக்கும் பிரான்சு மாணவர்கள் என உலகச் சுற்றத்தையே கூட்டியிருந்தார் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பட்டம் வழங்கி சிறப்பித்து மகிழ்ந்தோம்.1993ஆம் ஆண்டு ஐரோப்ப்பிய மண்ணின் செருமணி பெர்லின் நகரில் மாநாடு நட்த்தினோம். தமிழகத்திலிருந்து 50 பெருமக்க்கள் ஈழக் குடும்பங்களில் த்ங்கியிருந்து இன்றும் அந்த்த் தொடர்புகள் பல்லிப் பெருகி தோப்பாக உள்ளது. அந்த காலக்கட்ட்த்தில் எத்தனையோ எம் ஈழத்துச் சொந்தங்கள் இங்கு வருவதற்கு மன்றம் பெரும்ப்பணியாற்றியுள்ளது. ஈழத்து போராட்டங்களால் புலம் பெயர்ந்த நீங்க்ள் இன்று அடுத்த தலைமைமுறைகளோடு திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறீர்கள். அந்த தமிழ்ப் பெரும விழாவிற்கு என்னை அழைத்துள்ளீர்கள். பிரான்சு வாழ் எம் தமிழ்ச் சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் தமிழக மக்களின் சார்பிலும் உலகத் தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டு பொக்கள் வாழ்த்துக்களை தெருவித்துக் கொள்கிறேன். நான் வருவதை கிருபா அவர்களுக்கு தெரிவித்து சூரிச் விமான நிலையம் நேற்று வந்தடைந்தேன். கிருபா தம் தங்கை மக்னோடு என்னை பூங்கொத்து கொடுத்து வரவேற்று இரவொடு இரவாக சுடாபர்க் நகர் அழைத்து வந்துள்ளார். கடுமையான குளிர் இந்தக் குளிரும் இருப்பினும். தங்கள் அன்பால் மிக வெதுவெதுப்பாக உள்ளது. காலை எழுந்தவுடன் கிருபா என்னை ஓய்வெடுங்கள் என்று கூறினார் இல்லை நான் அரங்கம் வருகிறேன் என்று காலையில் அவரோடே வந்துவிட்டேன். என்னை. ஊர்தியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றபோது ஒரு அழைப்பு கிருபா கைப்பேசிக்கு வந்த்த்து நான் எடுத்துப் பேசினேன் நான் உசா அக்கா பேசுகிறேன் என்ற் ஒரு குரல் வந்த்து நானும் திருவள்ளுவர் பேசுகிறேன் என்றி உரையாடினேன் நான் அரங்கம் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். கிருபாவுடன் கூறுங்கள் என்று கூறினார். அரங்கம் வந்தவுடன் அனைவரும் பம்ம்பரமாகச் சுழன்று கூட்ட் நிகழ்வை நட்த்த தாங்கள் மேற்கொண்ட உழைப்பை தமிழ் உணர்வை பண்பாட்டை காக்கும் பாங்கை நெஞ்;சார[ப் போற்றுகிறேன். இந்த மேடை தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் மேடை இந்த அரங்கம் தமிழ்ப் பண்பாட்டும் சுரங்கம். என் அருகில் ஒரு நண்பர் அமர்ந்தார் தான் சுந்தர் என அறிமுகப் படுத்திக் கொண்டார். கிருபா என் மைத்துனர் என்றார் அவர் தங்கையைத்தான் மண்ந்துள்ளேன் என்றார். நானும் கிருபாவின் தங்கை ருக்குமணியும் ஈழத்தில் ஒருவர் ஒருவர் விரும்பினோம் திருமண்ந்திற்கும் குடும்பத்தார் ஒப்பவில்லை. போராட்ட காலம் நான் கடும் போராட்ட்த்திற்கிடையில் இன்னலின் உச்சத்திற்கு சென்று ப்ல்வேறு நாடுகளைக் கடந்து செருமணிக்கு அகதியாக வந்து செருமனி சட்ட நடவடிக்களையெல்லாம் தாங்கி இந்த சுடார்பெர்க் நகர் வந்தேன். மீண்டும் எட்டு ஆண்டுகள் கழிந்து எவ்வித்த் தொடர்பும் இன்றி எனையே நினைத்து மணமாகாமல்இருந்த என் அருமைக் காதலி ருக்மணியை ஈழம் சென்று பெற்றோர் ஒப்புதலோடு அழைத்து வந்து இஙுகு திருமணம் செய்து கொண்டேன் என்றார். நான் ஒரு நிமிடம் மலைத்து விட்டேன். ருக்குமணி அம்மா எந்திருங்க அருமை நண்பர்களே இந்த இணையருக்கு ஒரு பலத்த கரஒலி தட்டுங்கள்.
ஞாயும் ஞாயும் யாராகியரோ எந்தைய்ம் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்றா புறநானூறுப் பாடலின் இலக்கணம் இந்த இணையர். அவர்கள் வந்த்து மட்டுமல்ல தம் குடும்பங்களையே இந்த மண்ணிற்கு வரவழைது தமிழ்ச் சுற்றத்தைக் காத்துள்ளனர். கிருபாவின் மனைவி கலையரசி சுந்தரின் தங்கை. அண்மையில் தமிழ்நாடு வருகை த்ந்தனர் நாங்கள் உறவாடி மகிழ்ந்தோம். குற்ற மிலனாய் குடிசெய்து வாழ்வானை சுற்றமாய்ச் சுற்றும் உலகு என்ற குறளுக்கு இலக்ணமாக வாழும் உங்கள் அனைவரையும் நெஞ்சார்ப் போற்ற்கிறேன்.
இங்கே வருகை த்ந்துள்ள அருட் தந்தை கெலன் பிராட்சிசு அவர்கள் பிரஞ்சு மொழி இதழில் பொங்கல் திருவிழா குறித்து தாம் எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். எனுற்ம் தமிழைக் காக்கும் அறிஞர் சி.யூ.போப், அறிஞர் விராமாமுனிவர் இன்றும் உலகத் தமிழ் மாநாடுகளுக்கு காரணமாக விளங்கும் அருட்தந்தைகள் வழியில் தொண்டாற்றும் கெலன் அவர்களின் பணி ஓங்குக. இங்கு அடுத்த தலைமுறைகள் பிரான்சு நாட்டில் பிரஞ்சு மொழி பண்பாட்டோடு வளர்ந்தாலும் நம் மொழி பண்பாடு மொழி அழியா வண்ணம் தமிழ்ச்சோலை மிகச்சிறப்பக மொழியையும் பண்பாட்டையும் காத்து வருகிறது தமிழ்ச்சொலை அமைப்பினர் அனைவருக்கும் எம் நென்ச்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழ்ப்பணி பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலகெங்கும் எம்ம்மோடு இணைந்து பணியாற்றும் பெருமக்களுக்கு தமிழ்ப்பணிச்செம்மல் விருது வழங்கினோம். அப்போது கிருபானந்தம் கலையரசி இணைய்ருக்கு வழங்கினோம், தாம் பெற்ற் இன்பம் பெறுக் இவ்வையகம் என்ற கிருபாவின் வேண்டுகோளை ஏற்று தமிழ்ப்பணியாற்றும் பெருமக்களுக்கு பன்னாட்டுத் தமிழுறவு தமிழ்ப்பணிச் செம்மல் விருது வழங்ச்கி சிறப்பிப்பதில் பெரும்கிழ்ச்சியடைகிறேன். விழா தொடக்கத்தில் மகளிர் பெருமக்கள் பொங்கல் வைத்து மிகச் சிற[ப்பாக்க் கொண்டாடினீர்கள். அப்போது நான் குலவையிடுங்கள் எனக் கூறினேன் நீங்கள் அனைவரும் மிகச்சிற்ப்பாக்க் குலவையிட்டீர்கள். எங்கல் பாட்டிகள் இராமாயி பூவாயி போன்ற பெருமக்கள் எல்லாம் மங்கல ஒலியாக எழுப்பிய ஒலி இன்று பிரான்சு ந்கரிலும் ஒலித்த்து. இங்கு நடந்த பேச்சுப் போட்டி திருக்குறள் போட்டி இசைப் போட்டி என அனைத்துப் போட்டிகள்லும் பங்கேற்ற பரிசு பெற்ற மாணவச் செல்வங்களையும் அவர்களை தமிழ்ப் பண்பாட்டோடு வளர்த்த பெற்றோர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment