Monday, May 1, 2023

 உலகத் திருக்குறள் மையம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலைஞரின் கவிதைமழை நூல் ஆய்வுரை

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 

ஆசிரியர் தமிழ்ப்பணி

 இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

முன்னுரை

முத்தமிழறிஞர் தலைவர் தலைவர் கலைஞர் அவர்கள் நூற்றாண்டு விழாவை உலகத் திருக்குறள் மையம்  கொண்டாடுவது சாலச்  சிறந்ததாகும். ஐயன் திருவள்ளுவரை குமரியில் நிறுவி உலகப் பார்வையை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை நிறுவி திருக்குறள் முழுமையும  சலவைக் கற்களால் பொறித்துவைத்து அழியாப் புகழை நிறுவியுள்ளார்  தலைவர் கலைஞர். வள்ளுவர் கோட்டத்திலேயே தொடர்ந்து உலகத் திருக்குறள் மையம் திருக்குறள் சான்றோர்களின் முழக்கங்கள் 1006 நிகழ்வுகளைத் தாண்டி நடைபெறுவது தமிழர்கள் பெற்ற பெரும்பேறு இன்று  தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தலைவர் கலைஞரின் நூல்களை ஆய்வு செய்வது பெருமைக்குரிய ஒன்றாகும்.

கலைஞரின் கவிதை மழை

 அதில் தலைவர் கலைஞரின் கவிதை நூலை ஆய்வு செய்வதில் பெருமையுறுகிறேன். உலகத் திருக்குறள் மையத்திற்கு நன்றியை உரித்தாக்குகிறேன். 

கவிதை மழை நூலிற்கு அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் சின்னக் குத்தூசி அவர்கள் “தட்டிக் கொடுக்காமலே பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் முதல்தரக் கவிஞன்” என்று ஒரு கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அதை அரூப் தருமோ சிவராமு என்கிற பிரமிள்  எழுதியுள்ளதாக என்கிறார். இந்த உண்மையை கவிதை மழை படிப்போர் உணரலாம். 

கலைஞரின் சாதனை

தலைவர் கலைஞரின் மொத்த கவிதைகளையும் தொகுத்து கலைஞரின் கவிதைகள் நூலை தமிழ்க்கனி பதிப்பகம் உரிமையில் சென்னை சீதை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இந்நூல் 210 தலைப்புகளில் 1107 பக்கங்கள் வெளியாகியுள்ளது. சிறந்த கட்டி அட்டையோடு மிகச் சிறந்த செம்பதிப்பாக உள்ளது. ஒவ்வொரு கவிதையும் எந்த ஆண்டு நிகழ்வு விபரம் குறிப்பிடப் பட்டுள்ளது. தலைவர் கலைஞர் உ;லகம் தழுவிய அளவில் தொடாதா துறை இல்லை என்னும் அளவிற்கு கவிதை மழை பொழிந்துள்ளார். தம் வாழ்க்கையே திருக்குறள் வாழ்வாக வாழ்ந்த பெருமகன் தலைவர் கலைஞர். 

திருக்குறள் பணி

 கவிதை மழை நூலில் 1-1-2000ஆம் ஆண்டு குமரியில் ஐயன் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து வரலாற்றுச் சாதனை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்கள் உலகம் முழுமையும் பங்கேற்ற பெருவிழா. அவ்விழாவில் உலகத்திருக்குறள் மையமும் தங்கள் பங்களிப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் 31-12-1999 அன்று அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் தலைமையில் சிறப்பான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்தில் தலைவர் கலைஞர் அவர்களின்  கவிதை திருக்குறள் காட்டிய பரிமாணங்களை தம் சிம்மக் குறளால் குறளைக் கூறி தம் மொழியையும் சிறப்பாகப் பாடியுள்ளார். தலைவர் கலைஞரின் முழக்கத்தில் சில

கலைஞரின் திருக்குறள் சிந்தனைகள்

“ஆதி பகவன் மைந்தன் ஆணை வழி நடப்போம்

அதை தடுக்க முனைவோரின் செயல்களை முடிப்போம்” (பக்.691) அன்னத்தின் தூவியிலே கறுப்பின் சின்னத்தைக் காணப்போமொ அதனால்தான் குறையிலாக் குறள் என்றும்

அணுக்கூடக் கறையில்லா மறை என்றும் கூறுகின்றோம் சமத்துவப் பேரொளியாய் சமுதாயப் புரட்சி செய்யும்

 தத்துவப் பெரு ஞானியாய் 

மகத்துவம் மிக்க் கொண்ட மனித குலத் திருவிளக்காய் 

பூமிக்கே புனித உரை வகுத்தளித்துப்  

புத்தெழுச்சி பெற்றுத் தந்த புனிதனவன் 

அருளாதாரம் வழங்கிப் போற்றியவன்  அரசியல் பொருளாதாரம் என ஆய்வுரை ஆற்றியவன் 

–ஆளும் காலச்சாரம் எதுவெனக் காட்டியவன்!

 வள்ளுவன்! வள்ளுவன் வள்ளுவன்! (பக்.693) 

ஆதிபகவனாக திருவள்ளுவரைக் கூறி அவர் கருத்துக்களை முடக்குவோரை முடிப்போம் என புரட்சிக் கனலாக முழங்கியுள்ளார். தத்துவப் பெருஞானி சமுத்துவப் போராளி புத்தெழுச்சிப் புனிதன் அருளாதரம் வழங்கியோன் என புகழாரம் சூட்டியுள்ளார் கலைஞர்.

தம் கவியரங்க தலைமைக் கவிதையில் 36 திருக்குறட்பாக்களை மேற்கோளாக்க் காட்டி தம் நடையில் விளக்கமும் தந்து மெய்சிலிர்க்க வைக்கிறார் தலைவர் கலைஞர். அதற்குச் சான்றாக ஒருகுறள் 

 ”பொழியும் மழையில் பொல்லாக் கோடையில்

புற்றுகள் வளரினும் புதர்கள் மூடினும் – கடவுள் 

புலப்படும் வரையில் கடுந்தவம் புரிவேனென்று 

பலப்பல சொல்வதெல்லாம் தவமன்று என்பார் 

 எந்த உயிர்க்கும் தீங்கு இழைக்காதிருப்பதும் 

எதையும் தாங்கு இதயம் பெற்றிருப்பதுமே

 தவமெனப் படுமென்று  தகைவாய்ச் சொல்வார்

 தாரணிக்கே மறை தந்த தமிழ் மறை ஞானி” (பக்.703) 

அதற்கான குறள் பாடல்

 உற்றநோய் நோன்றல் உயிர்குறுகண் செய்யாமை 

அற்றே தவத்திற் குரு

 குமரியில் சிலையைத் திறந்து வைத்து அந்த சிலையை திறந்த வைக்க உலகத் தமிழர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்வை தம் கவியரங்க உரையில் உணர்ந்து குறட்பாக்களை பதிவிட்டுள்ளார் தலைவர் கலைஞர்..

கையாளும் உத்திகள்

 13-4-1968 ல் நடந்த வானொலி கவியரங்கில் கலைஞர் பதிவு வள்ளுவரை தந்தையாக்க் கூறுகிறார்.

”ஒத்தவயது ஒத்தகுணம் ஒத்தமுகம் 

உள்ள நல்லீர் உமைப் பெற்றெடுத்த தாய் யார் என்றேன்

 தமிழ் என்றார் தந்தையோ வள்ளுவராம்! (பக்150)

அண்ணா எனத் தழுவிக்கொண்டார். 

“யாகவராயினும் நாகாத்தல் முதற்படியாம் 

வாய்க்குள் வெறி நாய் காத்தல் ஆணவத்தின் மேற்படியாம் அங்கிருந்து உருண்டு விட்டால் உருவின்றி 

சுழன்று போகும் நெஞ்சழுத்தம் (பக்.152) என் வள்ளுவரின் நாகாக்கும் நயத்தை தம் மொழியில் கூறியுள்ளார். 

அரசு கட்டில் மணிமகுடம் அணிமணிகள் துறந்துவிட்டு 

ஆர்ண்யம் சென்ற விசுவாமித்தர்ரும் 

மேனகையின் விசுவாமித்தராரய் ஆன கதை அறியீரோ

 ”நீட்டலும் மலித்தலும் வேண்டா உலகம் 

பலித்தது ஒழித்து விடின் ”

இதனை மறுப்பார் கயவரில் ஒரு வகையாம் அதில் பல்வகையும் பாடுதற்கு திருச்சிற்றம்பலம் வருகின்றார் என குறள் கூறி கவிஞரை அழைக்கின்றார். (பக்.182) 

திருக்குறள் கருத்துகள்

அன்றைய சிறுவர் அரங்கில் ( கலைவாணர் அரங்கம்)16-9-1968அன்று திருவள்ளுவர் திருநாள் கவியங்கில் வள்ளுவப் பேராசானை வாயார மனதார உலகறிய மொழிந்துள்ளார் 

”தலைவர் கலைஞர்.இருள்சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை என்று அருளுடைமை அருள்கின்றார் குறள் அறிஞர் அன்புடைமை, அறிவுடைமை ஆள்வினையுடைமை பண்புடைமை நாணுடைமை பொறையுடைமை ஒழுக்கமுடைமை ஊக்கமுடைமை இப்படி பத்துடை இயற்றிக் காட்டி எனைத் தேற்ற முயல்கின்றார் ” (பக்.200) 

என கவிதை மழை பொழிகிறார் தலைவர் கலைஞர்.

 கையாளப்படும் முறைமை

வள்ளுவர்க்கு சிலை வைத்துச் சிறப்புச் செய்யும் தமிழ் நாடு 

அதை எதிர்த்துத் துள்ளுவோர்க்கு 

மூக்காணாங் கயிறு மாட்டும் மறவர் வீடு 

ஐந்தெழுத்தில் வள்ளுவர் அறிக என்போம்

 அறியாதார் இரண்டெழுத்தில் வள் என்று குரைப்பர் 

மூன்றெழுத்தை குறைப்பார். வள்ளுக்கு இடையே கால் போட்டு 

வாள் எடுத்தால் வாள் வாள் என்பர்! (பக்.202) 

என போர்முரசம் கொட்டுகிறார். திருவள்ளுவரின் படத்தையும் குறளியும் பேருந்தில் மாட்டியதை நயம்பட உரைக்கிறார் தலைவர் கலைஞர்

.28-7 2002 அன்று கழகம் தமிழரின் அறம் என்ற தலைப்பி.ல் ஐயன் நெறிபோற்றி எனக் குறிப்பிடுகிறார். 

“அறிவுக்குத் தெளிவேற்றி ஒளியேற்றி 

ஐயன் திருவள்ளுவரின் நெறிபோற்றி 

அகழ்ந்திட அகழ்ந்திட நிறைந்து வழிந்திடும் 

அன்பின் ஊற்றாகும் அமுதப் பெருக்காகும்” (பக்.793)

ஆய்வு முடிவு 

கவிதை மழை தமிழர்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் நூலாக உள்ளது. ஒவ்வொரு தலைப்புகளும் ஆய்வுக்குரிய அகண்டப் பெருவெளியாக உல்ளது. இவ்வாய்வில் திருக்குறள் சார்ந்ததே ஆய்ந்துள்ளேன்.ஆய்வாளர்கள் மூழ்கி முத்தெடுக்க ஒரு பெருங்கடலாக கவிதை மழை உள்ளது. 

நிறைவுரை

இறுதியாக ஒருபதிவை செய்வது என் கடமையாகும். தலைவர் கலைஞரை அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோவோடு அடிக்கடி செனறு காண்பது வழக்கம். ஒருமுறை பன்னாடுத் தமிழ் நடுவம் நிகழ்ச்சிக்கு அமெரிக்க மருத்துவர் பஞ்சாட்சரம் அவர்களோடு அழைக்கச் சென்றிருந்தேன். அன்று தலைவர் கலைஞர் தேனீர் வழங்கி தாம் எழுதிய கவிதையை படித்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். 

அது யான் பெற்ற பெரும்பேறு இன்று தலைவர் கலைஞர் கவிதைகள் அனைத்தையும் படிப்பது அவனருளாலே அவன் தாள் வணங்கி என கலைஞர் பெருமானை எண்ணிப் பெருமையுறுகிறேன். கவிதைகளின் வள்ளுவப் பெருமான் பற்றியது மட்டும் குறிப்பிட்டுள்ளேன். கவிதை மழை படியுங்கள் தமிழர் வரலாற்றை அறியுங்கள். 


No comments:

Post a Comment