துன் சாமிவேலு புகழ் வாழி
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
மலேசியத் தமிழர் மாண்பே
மாசிலா தொண்டுச் செல்வ
உலகினில் தமிழர் வாழ்வில்
எண்டிசை சாமி வேலு
கலையினில் வேந்தன் சாமி
கற்றலில் உயர்ந்த பொறிஞர்
மலெயெனப் புகழின் உச்சம்
மன்னனே சென்ற தெங்கே !
அதிருமே உன்றன் பேச்சு
அக்கங்காரம் அடக்கும் மூச்சு
விதியிலா மக்கள் தம்மில்
வியத்தகு மாற்றம் கண்டோய்
மதியென மலேசிய மண்ணில்
மாண்புடன் மூத்த அமைச்சாய்
விதிகளை வென்ற எங்கள்
சரித்திரச் செம்மல் எங்கே!
மந்திரம் ம இ க நாதம்
மாத்தமிழ் தமிழர் தலைவர்
முந்திடும் சாலை மாற்றம்
முனைந்துமே கண்ட தீரர்
உந்தியே தமிழ் நேசன்
உயர்த்திய இதழின் ஆசான்
நொந்துன் சாமிவேலு புகழ் வாழி
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
மலேசியத் தமிழர் மாண்பே
மாசிலா தொண்டுச் செல்வ
உலகினில் தமிழர் வாழ்வில்
எண்டிசை சாமி வேலு
கலையினில் வேந்தன் சாமி
கற்றலில் உயர்ந்த பொறிஞர்
மலெயெனப் புகழின் உச்சம்
மன்னனே சென்ற தெங்கே !
அதிருமே உன்றன் பேச்சு
அக்கங்காரம் அடக்கும் மூச்சு
விதியிலா மக்கள் தம்மில்
வியத்தகு மாற்றம் கண்டோய்
மதியென மலேசிய மண்ணில்
மாண்புடன் மூத்த அமைச்சாய்
விதிகளை வென்ற எங்கள்
சரித்திரச் செம்மல் எங்கே!
மந்திரம் ம இ க நாதம்
மாத்தமிழ் தமிழர் தலைவர்
முந்திடும் சாலை மாற்றம்
முனைந்துமே கண்ட தீரர்
உந்தியே தமிழ் நேசன்
உயர்த்திய இதழின் ஆசான்
நொந்திடும் எழுத்தின் வாழ்வே
நோன்பே எங்கு சென்றாய்!
சாதனைத் தலைவர் எங்கள்
சந்ததி கண்ட சான்றோன்
பாதகம் போக்கி தமிழ்ப்
பள்ளியை காத்த கோவே
ஓதிடும் கோவில் கண்டாய்
ஓய்விலா மாந்த நேயா
மேதினி பல்கலைக் கழகம்
மேவிய அறமே எங்கே!திடும் எழுத்தின் வாழ்வே
நோன்பே எங்கு சென்றாய்!
சாதனைத் தலைவர் எங்கள்
சந்ததி கண்ட சான்றோன்
பாதகம் போக்கி தமிழ்ப்
பள்ளியை காத்த கோவே
ஓதிடும் கோவில் கண்டாய்
ஓய்விலா மாந்த நேயா
மேதினி பல்கலைக் கழகம்
மேவிய அறமே எங்கே!
No comments:
Post a Comment