Tuesday, July 25, 2023

 பூமியை ஆளும் குறளோன்

காற்றுள உயிர்மை போன்று   

        கண்ணிமை காத்தல் போல

 உற்றுயிர் உரிமைக் குறளே 

உலகினை ஆளக் கண்டேன் 

 கற்றலில் தமிழைக் கொண்டோர் 

கவின்மிகு குறளின் ஆசான் 

நற்றவ வள்ளுவர் அமர்ந்தார் 

நயத்தகு பள்ளக் கில்தான்


உரிமையாய் உயிராய் எண்ணி

உன்னத குறளை ஓதி 

விரிமன பெர்னின் தந்தை  

வித்தகத் தமிழர் கூடி

  உரித்தநல் பெண்கள் எங்கும் 

உ:ளமகிழ் சேலைக் கோளம் 

கருத்தினில் தமிழர் மாட்சி

களிப்பினில் சுவிசில்  நின்றேன்


பள்ளக்(கைத்} தூக்கிய இளையோர் 

பல்லாண்டு தமிழைப் பாடும்

 தள்ளாத முதியோர் சேர்ந்தே 

தகுதியாம் குறளைப் போற்றும்

 வில்லினில் பாயும் அன்பாய் 

வலம்வரும் சுவிசும் தாண்டி 

சொல்லினில் வென்ற குறளோன் 

சுழற்சியாய் பூமிப் பந்தில்




வள்ளுவர் பள்ளி கண்ட 

வான்நிகர் விழாவின் மாட்சி

 அள்ளிய அமுத ஊற்றை 

ஆசான் முருக வேளும்                                                                                     

தெள்ளிய தமிழர் தேர்ந்த

தொல்தமிழ் விழாவில் யானும்

 உள்ளொளி பொங்க நன்றாய் 

உறவாடி ந்ன்றேன் வென்றேன்


4-2-2023 அன்று சுவிடசர்லாந்து திருவள்ளுவர் ஆண்டு திருவிழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் பங்கேற்றபோது எழுதிய பாடல்ஆ


No comments:

Post a Comment