உலக நாடுகளில் உலகத்
தமிழர்களின் தமிழ்ப்பணி
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசியர் தமிழ்ப்பணி
முன்னுரை
தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடர்ந்து உல்களாவிய தமிழ்ப்பணிகளில் உச்சப் பணியாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு நடத்துவது பெருமைக்குரிய ஒன்றாகும்.மாநாடு நடத்தும் சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் உள்ளிட்ட பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். உலக்மெங்கும் பயணித்துள்ள நான் சில நாடுகளின் உலகத் தமிழ் தமிழர்கள் பற்றி கருத்து வழங்குவதில் பெருமையுருகிறேன்
முதல் தமிழ்ப் பிரதமர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பாடிய கனியன் பூங்குன்றனாரின் பாடல் இன்று உலகம் முழுமையும் வாழும் தமிழர்கள் வாழ்ந்து தமிழர்களின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர். உலகத்தில் முதல் தமிழர் பிரதமாராக கயானா நாட்டில் மோசஸ் நாகமுத்து பொறுப்பேற்றது தமிழர்பெருமையின் மைல் கல்லாகும். பிரதமரை தமிழகத்திற்கு உலகப் பொருளாதர மாநாட்டிற்கு வரவழைத்து தமிழகத்திற்கு அறிமுகப் படுத்திய பெருமை முனைவர் சம்பத் அவர்களைச் சேரும். பிரதமரின் நூலைப் படித்தால் கீழ் மட்டத்திலிருந்து பிரதமர் வரை வர தம் வாழ்க்கை அனுபவத்தை பதிவு செய்துள்ளார், இன்றும் யான் அவரோடு முகநூல் தொடர்பில் உள்ளேன். பலமுறை என் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்கிறார்.
மலேசியத் தமிழர்கள்
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள் ஆனால் மலேசியாவில்தான் வாழ்கிறார்கள் என்றார். இன்றும் அதுதான் உண்மை தமிழர்கள் தமிழ் மொழியையும் தமிப் பண்பாட்டையும் காத்து வருகின்றனர். எல்லா நிலைகளிலும் தமிழ்நாட்டுடன் போட்டி போடும் அளவிற்கு பங்காற்றிவருகின்றனர். மலேசிய நாளிதழ்கள் பருவ இதழ்கள் இயக்கங்கள் என தமிழ் தமிழருக்கு அரிய தொண்டாற்றி வருகின்றன. மலேசியத் திருநாட்டின் நீண்ட கால மூத்த அமைச்சராக இருந்த பெருமை அம ர ர் டான்சிறி சாமிவேலு அவர்கள். உலகத் தமிழர்களின்பேரன்பைப் பெற்ற திருமகன், அண்மையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மநாட்டில் டான்சிறி சாமிவேலு அவர்கட்கு புகழஞ்சலி செலுத்தினார் பிரதமர் அன்வர் இப்ராகிம். மாநாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கும் பல்கலைக்கத் இந்தியத் துறைக்கும் 30 மில்லியன் ரிங்கட்களை வழம்க்கியுள்ளார். இன்றும் மாண்பமை சிவக்குமார் மலேசியத்திரு நாட்டின் அமைச்சராக உள்ளார். மலேசிய எங்கும் திருக்கோயில்கள் உள்ளன குறிப்பாக பத்துமலை திருக்கோயில் தமிழர்கள் பெருமையை செப்பும் திருக்கோயிலாகும். மலேசியாவில் 532 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன மலேசிய நாட்டில் பெரியார் கொள்கையாளர்களும் திராவிடக் கருத்துகளை மங்காமல் காத்து வருகின்றனர்.
சிங்கப்பூர் தமிழர்கள்
சிங்கப்பூர் தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடு. சிங்கப்பூரில் எங்கு சென்றாலும் தமிழ் அன்னை ஆட்சி செய்கிறாள். தமிழ் நாளிதழை அரசாங்கமே நட த்துகிறது. மிகச் சிறந்த தமிழ் கவிஞர்கள் எழுத்தாளர்கள் இயக்கங்கள் என தமிழை முன்னெத்துச் செல்லும் நாடுகளில் சிங்கப்பூர் பெருமைமிக்க நாடாக விளங்குகிறது.கணினித் துறை மாநாடுகளை நட த்திய பெருமை சிங்கப்பூருக்கு உண்டு. சிங்கப்பூர் லீக்குவான்யூ மறைந்தபோது தமிழகத்தில் படங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். நான் பலமுறை சென்று மாநாடுகள் விழாக்கள் என பல்வேற் நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன். தமிழர்களின் உழைப்பும் அந் நாட்டில் பெரும்பங்கு வகிக்கிறது . சிங்கப்பூரின் தந்தை லீகுவான்யூவே த்மிழர் பங்களிப்பை பாராட்டியிருக்கிறார். தமிழ் மொழி வளர்ச்சியில் சிங்கப்பூர் பணி மகத்தானது
மியான்மர்(பர்மா) தமிழர்கள்
மியானமாரில் வாழும் தமிழர்கள் நம் முகவை மாவட்ட பேச்சு மொழியாக தமிழைப் பேசுகின்றனர். 2002 ஆம் ஆண்டு அறிஞர் கலைச்செல்வன் அழைப்பில் நானும் பேராசிரியர் ஆறு அழகப்பனும் சென்றிருந்தோம். மோன்லே தட்டோன் பர்மா முழுமையும் சென்று தமிழர்களோடு உறவாடினோம். தட்டோன் பகுதியில் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளனர். தலைவர் கலைஞரின் கரம் தொட்ட கல்லில் சிலை செதுக்கி வைத்துள்ளனர். நண்பர் அமர ர் மாரிமுத்து அவர்களின் பெரும் முயற்சி. நாங்கள் கோட்டம் சென்றபோது திருக்குறள் ஓதி மாலைஅணிவித்து வாழ்த்தினர். பர்மா இராணுவ புரட்சியின்போது பல தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். மணிப்பூர் வழியாக பலர் நடந்தே வந்து மாண்டு சிலர் சேர்ந்துள்ளனர். அறிஞர்சாமிநாத சர்மாவின் நூலைப் படித்தால் அந்த அவலத்தை உணரலாம். திருக்குறளை பர்மீய மொழியில் மொழி பெயர்த்துள்ளனர்.மிக உயர்ந்த ஆலயங்கள் தற்போது புணரமைகப்பட்டுள்ளன. மிகச் சிறந்த தொழில் அதிபர்களாக உள்ளனர். இலக்கிய அமைப்புகள் செம்மையாக செயல் படுகின்றன. பல தமிழ் மாநாடுகளை நத்திய பெருமைக்குரிய தமிழ்ர்கள்.குடியுரிமை இல்லாத் தமிழர்களாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அல் ல லுறுகின்றனர், துரத்தப்பட்ட தமிழர்கள் சொத்துகள் பல நூறு கோடி இதுநாள் வரை மீட்கப் படவில்லை.
தாய்லாந்தில் தமிழர்கள்
தாய்லாந்தில் தமிழர்கள் செயற்கை கல் வணிகர்களாக உள்ளனர். அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாடு நட த்தினோம். கலைஞரின் பவள விழாவை ஒரு நாள் முழுவதும் உலகத் தமிழர்களோடு நட த்தி தலைவர் கலைஞரிடம் மரகத வண்ண புத்தர் சிலையை வழங்கினோம் இன்றும் கலைஞர் கரூவூலத்தில் உள்ளது. மாரியம்மன் திருக்கோயில் பாங்காக் நகரில் உள்ளது. தாய்லாந்து பெருமக்களும் வழிபடுகின்றனர். இசுலாமியத் தமிழர்கள் செயற்கை கல் வணிகத்தில் இங்கு சிறந்து விளங்குகின்றனர்.
.அரபு நாடுகளில் தமிழர்கள்
அர்பு நாடுகளில் தமிழர்கள் வேலை நிமித்தம் சென்றவர்கள். அனைத்து அரபு நாடுளிலும் தமிழர்கள் தொழிலாளிகளக உள்ளனர். துபாய் கத்தார் போன்ற நாடுகளில் தொழில் அதிபர்களாக்வும் உள்ளனர்.அண்மையில் இறந்த குவைத் சேது பல அமைப்புகள் நிறுவி அருந்தொண்டு ஆற்றியுள்ளார். துபாய் தமிழர்கள் பல மாநாடுகள் நட த்திய பெருமைக்குரியவர்கள்.. முனைவர் சம்பத் அவர்களின் உலகப் பொருளாதார மாநாடு இருமாநாடுகள் நட த்திய சாதனையாளர்கள். அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் யான் கலந்துகொண்டேன் அங்கு வாழும் சாதனையாளர்களைக் காணும் நல் வாய்ப்பு கிட்டியது. பட்டயக் கணக்கர்கள் ஏராளமனோர் அங்கு தொழில் புரிகின்றனர். அரபு நாடுகளில் திரைப்பட கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பக நடைபெறுகிறது.தமிழகத்தின் தினத்தந்தி நாளிதழ் அங்கு வெளிவருகிரது. சிறப்பாக அரபு நாடுகளின் செய்திகளை வெளியிருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள்
ஐரோப்பிய நாடுகளில் தமிழின் ஆளுமை மிகச் சிறப்பாக விளங்குகிறது. இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நட த்திய பெருமை பிரான்சு நாட்டிற்கு உண்டு.புதுவைப் பெரும்க்கள் பலர் குடியுரிமை பெற்று த்மிழர்கள் வணிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குகின்றனர். பல்வேறு இன்னல்களில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆலயங்கள் வணிக நிறுவனங்கள் பண்பாட்டு விழாக்கள் என உச்ச நிலையில் பணியாற்றுகின்றனர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 3ஆம் மாநாடு செருமனி பெர்லினில் நட த்தினோம். 19993 ஆம் ஆண்டு 3 நாட்கள் செருமனியில் நட த்துவது என்றால் தமிழ் தமிழர் எழுச்சியை எண்ணிப் பாருங்கள். ஐம்பது பெருமக்களை அழைத்துச் சென்றோம் கி.ஆ.பெ விசுவநாதம் நீதியசர் வேணுகோபால் போன்ற முதிர்ந்த அறிஞர்கள் பங்கேற்றனர். ஈழத்தமிழர் குணரத்தினம் தலைமை தாங்கி நட.த்தினார். இன்றும் அங்கு தமிழ் தமிழர் இலகியம் பண்பாடு இசை என அனைத்துத் துறையிலும் மேலோங்கி உள்ளனர். அண்மையில் யான் பிரன்சு சுடார்பக்சு ந்கருக்கு பொங்கல் விழாவிற்கு அழைக்கப்பட்டேன். மிகச் சிற்ப்பாக அனைத்துத் த்மிழர்களும் கூடி விழார் நட த்தினர்.தமிழ்ச்சோலை எனும் அமைப்பின் மூலம் பிரான்சு வாழும் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி வழங்குகின்றனர். திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும தமிழ் ஆசிரிய்ர்க்ளுக்கு விருதுகள் வழங்கினேன். ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஈழத்தமிழர்கள் மாநாகராட்சி சட்டமன்றம் என அனைத்துத் துறைகளிலும் பொறுப்பேற்று தமிழர் பெருமையை நிலை நாட்டியுள்ளனர்.
அமெரிக்கா தமிழர்கள்
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் வைத்து அனைத்துச் சங்கங்களும் இணைந்து ஃபெட்னா அமைப்பைன் மூல ஒவ்வொரு மாநிலங்களின் தலைநகர்களிலும் மாநாடுகள் தமிழ்கத் தலைவர்கள் இலக்கியவாணர்கள் சிறந்த கலைஞர்களை அழைத்துசிறப்புடன் நட த்தி சிறபிக்கின்றனர். உலகெங்கும் தமிழர்கள் பங்கேற்ற மாநாடாக. பத்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் எங்கள் தமிழ்ப்பணியைப் பாராட்டி விருது வழங்கினர். சட்டக் கதிர் ஆசிரியர் ச்ம்பத் பங்கேற்றார். இங்கு நடக்கும் மாநாட்டின் சிறப்புஅங்கு வாழும் கல்வியாளர்கள் மருத்துவர்கள் பொறிஞர்கள் களப்பணியாளர்களாக உள்ளதைக் கண்டு வியந்திருகிறேன் . பல சங்கங்க்ளில் தமிழ் இதழ்கள் நட த்தி தம் படைப்புகளை படைத்து சாதிக்கின்றனர் அமெரிக்கத் தமிழர்கள்.
கனடா தமிழர்கள்
கனடா நாட்டில் நம் தமிழர்கள் அமைச்சர்களாகவும் மாநகராட்சி உறுப்பினர்களாவும் சிற்ப்பாகப் பணியாற்றுகின்றனர். ஈழத் தமிழரளுக்கு குடியுரிமைகொடுத்து குடிமக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் வழங்கி தமிழ் தமிழர் மேம்பாடு அடைய வழிகோலியுள்ளது. எண்ணற்ற தமிழ் இதழ்கள் வெளிவருகின்றன, எண்ணற்ற தமிழ் வானொலி தொலைக்காட்ட்சிகள் வலம்வருகின்றன. தமிழ் இயக்கங்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. ஈழத்தில் உள்ள ஆலயங்கள் அனைத்தையும் அங்கு உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். நாளும் நூல் வெளியீடுகள் நாட்டிய அரங்கேற்றங்கள் மாநாடுகளென தமிழர் பண்பாட்டுக் களமாக கனடா விளங்குகிறது.
தென் ஆப்ரிக்கா தமிழர்கள்
ஆங்கிலேயர்களால் கூலிகளாக அழைடத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் இனறு தொழில் அதிபர்களாக கல்வியாளாராக பண்பாட்டுத் தூதர்களாக உள்ளனர்.முனைவர் சம்பத் பொருளாதார மாநாட்டிற்கு வருகை வந்த லோகிநாயுடு டர்பன் துணை மேயராக இருந்த பெருமைக்குரியவர். மிக்கி செட்டிஎனும் தென் ஆப்ரிக்கா தமிழர் தமிழைப் ப்யிற்றுவிக்க சென்னை இராமசாமி பல்கலைக்கழ்கத்தோடு இணைந்து 60 தமிழாசிரியர்கள் சென்னையில் பயிற்சி பெ’ற்றனர். டர்பன் நகர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் வழி அனைவருக்கும் பட்டம் வழங்கினார். தமிழ் அறிஞர்கள் உலகமெங்கும் பங்கேற்றதைக் கண்டு யான் வியந்துள்ளேன்.
சீனாவில் தமிழர்கள்
பேராசியர் நாகநாதன் அவர்களின் சினப் பயணம் நூலைப் பல்லாண்டுகளுக்கு முன் படித்டிருந்தேன். அதில் காங்காங் வழியில் சீனா பயணத்தை எழுதியிருந்தார். நானும் காங்காங்கில் வாழும் தமிழர்களை சந்தித்து விட்டு ச் சென்றேன் காஙகாங்கில் குழுவோடு பயணித்தவர்களுகு நம் எல்.கே.எ. சையத் அகமத் தம் நிறுவணத்தில் உணவு வழங்கினார். எம் தந்தையார் அவ்வை நடராசார் பயணத்தின் போது யாசின் அவர்கள் விருந்தளித்தார். நண்பர் அலெக்சு காங்காங் முழுமையும் சுற்றிக் காண்பித்து தொடர் வண்டியில் சீனா வழியனுப்பினார். நமது சென்னை செங்கல்பட்டு தூரம்தான் தொடர்வண்டியில் சென்றேன்.அங்கு ஒரு பகுதியில் தொடர்வண்டியை நிறுத்தி சீன விசா வழங்குகின்றனர் பின் சீனாவின் சன்சென் ப்குதிக்குச் சென்றேன். சன்செங்கிலிருந்து சீனாவின் அனைத்துப் ப்குதிகளுக்கும் செல்லாலாம்.. சென்சங்க் பகுதியில் தமிழர்கள் உணவு கடை வைத்துள்ளனர். தற்போது காங்காங் சீனாவுடன் இணைந்துள்ளது. தமிழ் வானொலி காங்கில் பல்லாண்டு காலமாக உள்ளது. அழகு தமிழில் சீனப் பெருமக்கள் பேசுகின்றனர். சீனாவிற்கும் தமிழகத்திற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. பயண முன்னோடி யுவான்சுவாங் இந்திய தமிழக பயணத்தை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சீன்ப் பிரதமர் சின்பிங் இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் சந்திப்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. தமிழை சீன வளரும் தலைமுறைகள் பயில்கின்றனர். நம் ம்லேசியா வாழ் தமிழ்ப் பிள்ளைகள் சீனம் பயில் கின்றனர்.
சப்பானில் தமிழர்கள்
2002 ஆம் ஆண்டு சப்பான் ஒசாக்கா நகருக்குச் சென்றேன். அங்கு வளர்ச்சியின் சிகரமாக உள்ள சப்பான் கண்டு வியந்துள்ளேன்.ஒசாகா டோக்கியோ புல்லட் விரைவு வண்டியில் பயணித்த அனுபவம் இன்றும் பசுமையாக உள்ளது. இகேதா என்னும் பெருமகன் மிகச் சிறந்த கவிஞர். அவர் பெயரில் இகேதா பல்கலைக் கழகம் உள்ளது. அருமைத் த்ந்தையார் பெருங்கவிக்கோவின் அரிய முயற்சியால் நம் நாட்டு சேதுபாசுகரா கல்விக் குழும ம் மூலம் இகேதா மகளிர் அறிவியல் கல்லூரி நிறுவி சப்பான் தமிழகம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற்றுள்ளது. மயிலாடு துறையை சேர்ந்த செந்தில்குமார் பேரியார் கொள்கைகளில் பற்றுள்ள பெரும்கனாக சப்பானில் பணியாற்றுகிறார். சப்பானில் தமிழ்சங்கம் வைத்து பொங்கல் விழா ஆண்டு தோறும் நட த்துகின்றனர். அண்மையில் நம் முதல்வர் ஸ்டாலின் சப்பான் சென்ற்போது அனைவரும் குடும்பத்தோடு சந்தித்து தமிழர் பெருமையை உலகுக்கு பறைசாற்றினர். சப்பான் தமிழ் ஆய்வுகளை உடன்பாடுகளை இரு நாட்டு அறிஞர்களும் தொடர்ந்து வழங்கியுள்ளனர்.
ஆசுத்ரேலியா தமிழர்கள்
ஆசுத்ரேலியா தமிழர்கள் மற்ற் நாடுகளைப் போன்றே ,மிகச் சிறந்த மாநாடுகள் நட த்தி தமிழ் உயர்வில் பெரும் பங்காற்றுகின்றனர். மிகச் சிறந்த கல்வியாளர்கள் நூலாசிரியர்கள் வாழும் நாடாக ஆசுத்ரேலியா விளங்குகிறது.
இந்தோனிசியா தமிழர்கள்
இந்தொனோசியாவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் மேடான் பகுதிக்குச் செல்லாலம். அங்கு கோயில்கள் தேவாலயங்கள் என வழிபாட்டு நிலையில் உள்ளனர். பலர் தொழில் துறையிலும் சிற்ந்து விளங்குகின்றனர். இந்தோனியாவின் பணத்தாளில் விநாய்கர் படம் அச்சடிக்கப் பட்டுள்ளது.
மொரிசுயசு ரீயூனியன் தீவுகள்
மொரிசுயசு தீவு பல தமிழர்கள் வாழும் பகுதி. உல்கத் தமிழராய்ச்சி மாநாடு நடத்திய பெருமைக்குரிய நாடு. திருவள்ளுவரின் எழில் பொங்கும் சிலையை நிறுவியுள்ளனர்.பரசுராமன் மொரிசுயசின் சனாதிபதியாக இருந்து உலகத் தமிழ் மாநாடுகள் பலவற்றில் பங்கேற்று தமிழர் பெருமையை பறைசாற்ரியுள்ளார். ரியீனியன் தீவுகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். யோகாச்சாரி நீலமேகம் தமிழர் வழிபாடு முறைகள் என 600 பக்க நூலை வெளியிட்டுள்ளார். சென்னையில் அவரது வெளியிட்டோம்.
நிறைவுரை
ஒட்டு மொத்தமாக தமிழ் உலக் மொழியாகியுள்ளது . தமிழர்கள் உலக இனமாக வலம் வருகிறது. உலகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து தமிழ் பண்பாட்டை தமிழர் சிந்தனைகளை மேலும் மெரூகூட்ட கலைஞர் நூற்றாண்டில் ஒன்றுபடுவொம் தமிழால் வெல்வோம்.
(12/8/2023 அன்று முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாட்டில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய ஆய்வுக் கட்டுரை)
No comments:
Post a Comment