Friday, February 23, 2024




 தென்காசி இராயகிரி தமிழ்ச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா மேனாள் தலைவர் கால்நடை மருத்துவர்  சிவசுப்பிரமணியம் பட த் திறப்பு

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

இராயகிரி தமிழ்ச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழாவும் மேனாள் தலைவர் கால்நடை மருத்துவர்  சிவசுப்பிரமணியம் அவர்களின் பட த் திறப்பும் இங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு என்னை அழைத்துள்ளீர்கள். உங்கள் பேரன்பிற்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

 சென்ற ஆண்டு இதே நாள் சென்னையிலிருந்து துபாய் வழியாக சூரிச் நகருக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு  பயணமானேன் .  சூரிச் விமான் நிலையத்தில் சுவிட்சர்லாந்து  வள்ளுவன் பள்ளி நிருவனர் முருகவேல் தம் நண்பருடனும்பிரான்சு உலகத் தமிழோசை கிருபானந்தன் அவர்களும் சூரிச் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுது வரவேற்றனர். பின் பிரான்சு சுடார்சுபர்க்  நகருக்கு கிருபானந்தன் தம் மருமகன் ஊர்தி ஓட்ட அழைத்துச் சென்றார். சுடார்சு பர்க் நகரில் பொங்கல் விழாவும் பெர்ன் ந்கரில் திருவள்ளுவர் திருநாளும் கொண்டாடி பாரிசு வழியாக சென்னை திரும்பினேன்.

இவ்வாண்டு நண்பர் பாவாணர் கோட்ட நெடுஞ்சேரலாதன் என்னை இவ் விழாவிற்கு வரவேண்டும் என இரு மாதங்களுக்கு முன்னரே இசைவு பெற்று இங்கு அழைத்துள்ளார். நான் சென்னையிலிருந்து பொதிகை தொடரி மூலம் இராசபாளையம் காலை வந்திறங்கி தொடர் வண்டி நிலையத்திலிருந்து நெடுஞ்சேரலாதனிற்கு தொடர்புகொண்டேன் அவர் தானி வந்து கொண்டிருக்கிறது என்றார் அரைமணிநேரம் கழித்து நான் தானியைப் பிடித்து முறம்பு வரத் தொடங்கினேன். பாவாணர் கோட்டம் பன்னெடுங்காலம் தொண்டாற்றிவருகிறது தாணிஓட்டுநருக்கு கோட்டம் தெரியவில்லை சோழபுரத்தில் இறக்கிவிட்டார். பின் ஒரு பேருந்தில் அங்கிருந்து ஏற்றிவிட்டனர் நெடுஞ்சேரலாதனுக்கு தொடர்பு கொண்டேன் அவர் முறம்பு வந்துவிட்டேன் என்றேன் அவர் ஐயா நான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார் முறம்பில் ஒரு தேனீர் கடையில் காலை 6-30 மணியளவில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தேன். அதுபோது தம் நண்பரோடு நெடுஞ்சேரலாதன் வருகை தந்தார். இது தன் மாணவர் கடை என்று பெருமிதமாக்க கூறினார் அங்கிருந்த மாணவர் மகனுக்கு அவரது அருமை தெரியவில்லை. 

பின் அங்கிருந்து கோட்ட த்திற்கு அழைத்துசென்றார். பெரிய அரங்கம் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ளார். தன்னை என்றும் முன்னெடுத்துச் செல்லாமல் கொள்கைக்காகவே வாழும் திருமகன் ஐயா நெடுஞ்சேரலாதனின்  பணியை எண்ணி இறும்பூதெய்தினேன். தம் பாவாணர் கோட்ட படைப்புகளையும் என்னிடம் வழங்கினார். 

 திராவிடக் கொள்கையின் ஆணிவேர் நம் நெடுஞ்சேரலாதான்  நான் இரு ஆண்டுகளுக்கு முன்பு தம்பி கவியரசன் மகள் திருமணத்திற்கு அமெரிக்கா சென்றபோது அய்யாவின் வளர்த்த கிடா மார்பில் குத்துவது வளர்ந்த கிடாவும்தான் குத்துகிறது தம் பாவாணர்கோட்ட  பதிவுகள் நுல்கள் என 5கிலோ இருக்கும் அமஎரிக்காவிற்கு கொண்டு செல்ல அனுப்பிவைத்தார். எம் பொருளையெல்லம் இங்கு வைத்துவிட்டு அந்தப் பொதியை கொண்டு சென்று சிக்காக்கோ பாபுவிடம் வழங்கி நெடுஞ்சேரலாத  அரும்பணியைப் பற்றிக் கூறினேன். இயல்பாக உணர்வோடு உந்துதலோடு வளர்பவர்களை சிதைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க க் கூடாது. மலேசியாவிற்கு பாரதியார் விழாவிற்கு அழைத்துச் சென்றேன். அங்கு தனித்தமிழ அன்பர் திருவளவனோடு இணைந்து ஆற்றிய பணி அளப்பரியது.

பின் அவரது இல்லம்  சென்றோம் அன்பே உருவான் ஐயாவின் துணைவியாரை வணங்கினேன்.அவரது வழியினர் வாழ்வு பல்வேறு சிக்கலில் உள்ளதால்  அவர்துணைவியார் நெடுஞ்சேராலாதன் மேல் மிக க் கோபாமாகா இருந்தார். தம் பெண்டு பிள்ளை பதவி பணம் என்று வாழும் பண்டாரப் பரதேசிகள் உள்ள நாட்டில் கொள்கை மாறாச் சிங்கமாக தனித்தமிழ் காக்கும் மறவராக பகுத்தறிவுக் கோமானாக வலம் வருகிறார் நம் நெடுஞ்சேரலாதன். 

அவர் இல்லத்திலிருந்து இராயாகிரிக்கு அழைத்து வந்தார். தாம் பிறந்த மண் இராயகிரி என பெருமை பொங்க கூறினார். வரும் வழியெங்கும் மலைகளும் ஏரிகளும் பசுமைக் கம்பளம் விரிதாற் போன்று செழிப்பாக இருந்த து. அருவிகள் பல இங்கு உள்ளன ஓய்வாக வாருங்கள் அழைத்துச் செல்கிறேன் என்றார். தம் இளமை கால நண்பர் ஒருவரை அன்போடு அனைத்து சிறு கடையில் உணவு வழங்கினார். நம் நெடுஞ்சேரலாதன். இதையெல்லாம் நான் குறிப்பிடுவதற்கு காரணம் நான் அரும்பாடுபட்டு இந்த இராயகிரிக்கு வந்துள்ளது இராயகிரியில் பிறந்து அருந்தொண்டாற்றும் நெடுஞ்ச்சேரலாதனின் தமிழ்தொண்டு ஒன்றே.இந்த மண்ணில் பிறந்து தமிழிற்கு அரும் பணியாற்றிய அருணாச்சலனார் முத்துசாமிப் பெருமகன் கந்தசாமிப் புலவர் போன்றோர் படங்களெல்லாம் இங்கே வைத்துள்ளீர்க்ள். இன்றும் தமிழ் வாழ்கிறது என்றால் இங்கு பிறந்த பேரறிஞர்கள்தான்.  

மேனாள் தமிழ்ச்சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் பட த்தை தென்காசி மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் இராச ஈசுசரன் மிகப் பொறுப்புணச்ச்சியோடு பட த்தை திறந்து வைத்து சென்றிஉக்கிறார். தி.மு.க. ஒன்றுதான் மக்களோடும் தமிழோடும் பயணிக்கிறது என்பதற்கு சிறந்த் சான்று. நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பெரியார் அண்ண கலைஞர் வழியில் இயக்கத்தை வழிட த்துகிறார். தமிழ் உணர்வையும் பகுத்தறிவு இய்க்கத்தையும் கட்டிக் காக்கும் இயக்கம் தி.மு.க.

அமர ர் சிவசுப்பிரமணியம் அவர்களின் சகோதர ர்  மக்கள் அனைவரும் அவரின் புகழ் பாடுவதோடு மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியத்தில் சான்றுகளை அடுக்கி வந்தனர் . எனக்கு பெருமகிழ்வாக இருந்த து. தம்பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறார் குற்ப்பாக அவர் மகள் பாடகர் பாடும்போது என் தந்தை இந்தப் பாடலை உணர்ந்து மகிழ்வார் இந்தப் பாட்லைப் பாடுங்கள் எனக் கூறியபோது எந்த அளவுக்கு இணைந்து வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது. 

சிவசுப்பிரமணியம் துணைவியார் இங்கே அமைதியின் வடிவாக அமர்ந்துள்ளனர். கால்நடை மருத்துவராகவும் தமிழ்ச்சங்கத் தலைவராஅகவும் பொதுநலத் தொண்டராகவும் வாழ்ல்ந்திருகிறார் என்றால் முழுமையும் அம்மா அவர்களின் அர்ப்பணிப்பான வாழ்க்கையே ஆகும்.  

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்                  ஏறுபோல் பீடு நடை

என்ற குறளுக்கு இலக்காக வாழ்ந்த பெருமாட்டி. இறப்பு என்பது தூங்கி எழுவது போன்றது என்கிறார் நம் வள்ளுவப் பேராசான். அம்மையார் ஐயா அவர்களின் பசுமையான் நினைவோகளோடு வாழுங்கள் என வேண்டுகிறேன்.

          தில்லியில் பணிபுரியும் அவரது மகன் ஞனசம்பந்தன் உரையைக் கண்டு மகிழ்ந்தேன். வெளியூர் சென்றால்தான் நம் மொழியின் அருமை தமிழர்களின் பெருமை புரியும். மிகச் சிறப்பாக ஒரு தமிழியக்கவாதி போன்று உரையாற்றினார். மிகச்சிறப்பு தங்களின் பங்களிப்பு இராயகிரி தமிழ்சங்கத்திற்கு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      நினைவு மலர் ஒன்று வெளியிட்டுள்ளீர்கள்.  மறைந்த மருத்துவரின் பெருமைக்கள் அனைத்தும் அடங்கிய மலராக உள்ளது. அதில் நெடுஞ்சேரலாதனின் கவிதை இராயகிரி மலைகள் மேல விளக்காக நம் ம்ருத்துவரின் பெருமையைப் பேசுகிறது. தலைவர் குருசாமி தம் கட்டுரையில் தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவோம் என்று எழுதியுள்ளார். கட்டாயம்  இதைச் செய்யவேண்டு. சாதி மத அடையாளங்களை துறந்து தமிழர்களாக இணைந்து கட்டிடம் கட்டுங்கள்.

 உலக நாடுகளிஎல்லாம் தமிழர்கள் தமிழியக்கங்கள் கட்டிடங்கள் கட்டி சிறந்த தமிழ்த்த் தொண்டாற்றுகின்றனர். மலெசியா போன்ற நாடுகளில் தமிழர்கள் சிறு கிராமங்களில்கூட கட்டிங்கள் கட்டி தமிழ்த் தொண்டு புரிகின்றனர். அருமை இராயகிரி தமிழ் உள்ளங்களே ஐயா சிவசுப்பிரமணியம் காட்டிய வழியில் பணியாற்றி தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் உருவாக்கி தலைமுறைக்கு வழிகாட்டுங்கள் என வேண்டி விழைகிறேன். இனமானக் காவலர் பேராசியர் க.அன்பழ்கனார், நாவலர் நெடுஞ்செழியன் தமிழர் தலைவர் வீரமணி போன்றோருக்கு தமிழ்ப்பாலூட்டிய தமிழ்ப் பேராசிரியர்கள் பிறந்த மண்ணில் உரையாற்றியதை பெரும் பேராகக் கருதுகிறேன். வாழ்க இராயகிரி தமிழ்ச்சங்கம் சிவசுப்பிரமணியனார் புகழ் ஓங்குக. 

Sunday, February 18, 2024

 




உலக க் கல்வித் திறன் மேம்பாட்டில் தமிழ் மொழியின் பங்கு

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தம்ழுறவு மன்றம்


     எண்ணற்ற நூல்க ளைப் படைத்து இலக்கிய உலகில் தளராது தொண்டாற்றும் மெய்ஞானி பிரபாகர்பாபு அவர்கள் உலகச் செம்மொழி தம்ழிச் சங்கம்  சென்னையில் தூய தாமசுகலை ம்ற்றும் அறிவியல் கல்லூரியை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் உல்கத் தமிழர்களை ஒருங்கிணைந்து மாநாடு நட த்துவது பெருமைக்குரிய ஒன்றாகும். சென்னையில் அறிஞர் சான் சாமுவேல் நட த்திய உலகத் தம்ழ் ஆராய்ச்ச்சி மாநாட்டில் பிராபாகர் பாபு அவர்கள் வெளிநாட்டுப் பேராளர்களிடம் அவர் காட்டிய பரிவும் வரவேற்பும் நெஞ்சில் நிலையாக உள்ளன. தூஉய தாமச்சு கல்லூரிப் பெரும்க்களையும் பாராட்டி மகிழ்கிறேன்

    உலகளாவிய நிலையில் தமிழர்கள் பரவி வாழ்கின்றனர். அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளால் தமிழர்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். மலேசிய சிங்கப்பூர் இலங்கை மியான்மர் அமெரிக்கா கனடா ஆசுத்திரேலியா ஐரோப்பிய நாடுகள் தென்ஆப்ரிக்கா  இந்தோனேசியா கென்யா பிரிட்டன் சப்பான் சுவிட்சர்லாந்து என அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் கல்வி மேம்பாட்டினாலும் போராட்டச் சுழ்நிலைகளாலும் போர் பதட்டங்களாலும் அந்தியர் ஆதிக்கங்களாலும் ஆங்காங்கே புலம் பெயர்ந்துள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்கள் தம் இலக்கியங்களையும் பண்பாடுகளையும் கலைகளையும் ஆண்மீக எண்ணங்களையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் பாதுகாத்து வருகின்றானர். 

     நான் இலண்டன் மாநகர் சென்றிருந்த போது ஈழத்து கவிஞர் கருணான்ந்த ராசா திருக்குறளில் காமத்துப் பாலை மட்டும் பிரித்து வள்ளுவன் காதல் என்ற நூலை எழுதி பதிப்பித்து என்னிடம் தந்தார். புலம்பெயர்ந்து தம் வாழ்க்கைநிலைகளில் போராடி குடும்பம் காத்து மரபுக் கவிதையில் நூல எழுதி அதைப் பதிப்பித்துள்ளார் என்றால் திருவள்ளுவரின் திருக்குறள் எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறியலாம். இலண்டனில் பேராசிரியர் கோபன் மகாதேவா திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை வெளியிட்டுள பாங்கு என்னை வியக்கவைத்தது. அணமையில்தான் பேராசியர் ,கோபன் மகாதேவா காலமானார். சுடரொளி வெளியீட்டுக் கழகம் சார்பில் இதழாளர் சம்பந்தம் பொன் பாலசுந்தரம்  உலகம் முழுவதும் கவிதைப் போட்டி நிகழ்வை தமிழ்ப்பணியில் வெளியிட்டு  வந்த கவிதைகளை பரிசீலித்து முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் ஆறுதல் 25 பெருமக்களுக்கு பரிசுகள் அறிவித்து சென்னையில் பன்னாட்ட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் சென்னையில் விழா நட த்தி தந்தையார் பெருங்கவிக்கோ திருக்கரத்தால் அனைவருக்கும் வழங்கினோம். மரபுக் கவிதைகளின் தாக்கம் அயலகத்தமிழர்களிடம் உள்ள உணர்வை அறியலாம்.

    பிரான்சில் அருளாளர் சிவதாசன் அவர்கள் யான் சென்றிருந்த போது அங்குள்ள கோவிலுக்கு சிலைகள் வேண்டும் என்றார் நான் தமிழகம் வரும்போது ஆவண செய்கிறேன் என்றேன். முத்துக்குமாரசாமி குருக்களும் சிவதாசன் அவர்களும் தமிழகம் வருகை தந்தனர். அண்மையில் காலமான் அருளாளர் ஈப்போ நடராசன் அவர்கள் வழி கும்பகோணம் சாமிநாதன் நிறுவனம் வழியாக சிலை செய்து அனுப்பி வைத்தோம். அந்த சிலை இன்றும் தமிழர்கள் வழிபடு சிலைகளாக உள்ளது. நான் மீண்டும் பாரிசு சென்றபோது கண்டும் மகிழ்ந்தேன். அண்மையில் நான் பாரிசு சென்றபோது நண்பர் செயராமன் கோவிந்தசாமி பிர்தவுசு நட த்தும் சங்கீதா உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையை அனைவரும் காணும் வண்ணம் வைத்துள்ளார்.  செயராமன் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் நூலை பிர்தவுசு அவர்களே  வெளியிட்டுள்ளார். தமிழ் இலைக்கியங்களின் தாக்கம் உலகத் தமிழர்களிடம் நீக்கற நிறைந்துள்ளதை அறியலாம் 

     இந்த ஆண்டு பிரான்சு சுடார்சு பர்க் நகருக்கு தலைவர்கிருபானந்தன் அழைத்திருந்தார்கள். அங்குள்ள தமிழர்கள் எல்லம் கூடி நட த்திய பொங்கல் விழா என் வாழ்நாளில் மறக்க இயலா விழாவாகும். தமிழ்ச்சோலை என்ற அமைப்பின் மூலம் தமிழ்ப்பள்ளி நட த்துகின்றனர். அனைத்து பள்ளிகளின் மாணவர்களுக்கும் திருக்குறல் போட்டி நட த்தி பரிசு வழங்குகின்றனர். வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு விழாவில் பரிசுகளை வழங்கினேன். தமிழ் பேச்சுப் போட்டி சிறுகதைப் போட்டி நடனப் போட்டி எனதமிழ்க் கலைகளைப்  சிறப்பாகப் பாதுகாக்கின்றனர்.

    இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து நகருக்கு வள்ளுவன் பாடசாலை நிறுவனத்தார் என்னை திருவள்ளுவர் ஆண்டு விழாவிற்கு அழைத்திருந்தனர். நிறுவனர் முர்கவேள் ந ந்தினி இணையர் திருவள்ளுவரை பள்ளக்கில் ஏற்றிவைத்து திருக்குறள் பாடி மேடைக்கு கொண்டுசென்றது வரலாற்றுப் பதிவாகும்  நானும் பெர்ன் நகர் மேயரும் சிறப்பு விருந்தினராக இருந்தோம். கவியரங்கம் பட்டிமன்றம் உரையரங்கம்   நாட்டியம் நாடகம் பாடல் என அனைத்தும் கொஞ்சு தமிழில் சிறப்பாக நடைபெற்றது வியப்பைத் தந்த து. அழகு தமிழை தம் வழித்தோன்றல்களுக்கு ஊட்டியுள்ளதை அறிய முடிந்த து.

    பேர்ன் ந்கரில் உள்ள திருகோயிலுக்கு அருளாளர் சசி அழைத்திருந்தார். அங்கு முழுமையும் தமிழிலேயே வழிபாடு, ஆன்மீகத் தமிழை போற்றி பாதுகாக்கின்றனர். தேவாரம் திருவாசகம் அனைத்தும் பெர்ன் ந்கரில் ஒலிக்கின்றது.

    யான் மியான்மர் சென்றிருந்தபோது அக்கு இராணுவ ஆட்சி நடைபெறுகிற்துஇருப்பினும் வள்ளுவர் கோட்டம் அமைத்து திருக்குறளை ஓதுகின்றன. தமிழ்க்கல்விக்கு பள்ளி நட த்துகின்றானர். இரங்கூன் நகரில் கோவில்களில் தமிழ் பயிற்றுவிக்கின்றனர். பெருங்கவிஞர் நாரா நாச்சியப்பன் அவர்களின் உறவினரிடமிருந்து பர்மீய மொழியில் திருக்குளை மொழிபெயர்த்த நூலை பேராசியர் ஆறு அழகப்ப்ன் பெற்று தமிழக அரசிடம் வழங்கினார்.

செருமனி ரெய்னே ந்கர் சென்றிருந்தபோது ரெய்னே நதியின் பாலத்தில் பல்வேறு நாட்டின் அறக் கருத்துகள் அவரவர்கள் மொழியில் உள்ளன. நம் கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் வரிகள் உள்ளதை உலகப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் கணேசலிங்கம் கமலநாதன் காண்பித்தனர். 

    தென்னாப்பிர்க்கா ந்கரில் டர்பன் நகரில் நம  அன்மீக க் கோயில்கள் பல உள்ளன. அங்கு தமிழ் பயில வாய்ப்பில்லை மிக்கி செட்டி என்ற தமிழர் சென்னை இரமசாமி பல்கலைகழகத்தோடு இணைந்து 50 பெருமக்களுக்கு ஆசிரியப் பயிற்சி அளித்து அங்கு உலப் பண்பாட்டி அறிஞர்கள் டர்ப்ன் சென்று

     பட்டம் வழங்கினோம், இன்று தென்னாப்பிரிக்கா தமிழர்கள் தமிழ் பயில்கின்றனர்.

மலேசிய சிங்கப்பூர் அமெரிக்க கனடா என அனைத்து நாடுகளைப் பற்றியும் பதிவிட்டுள்ளேன். தாய்மொழி வழி பயின்றால்தான் கல்வித் திறன் அதிகரிக்கும் தமிழை அறிந்து உலகை அறிவோம்

 மத்தியில் வெற்றி காண்போம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


இந்திய சனநா யகமே

    இடரிடும் நிலையில் இன்றே 

உந்திடும் தலைமை அமைச்சர்

    உதிர்த்திடும் சொற்கள் எல்லாம் 

நொந்திடும் மாற்றுக் கட்சி 

    நசுக்கிடும் அவலம் அன்றோ! 

வெந்ததை தின்னும் மக்கள் 

     வேதனை தீர்க்காப் பேச்சு! 


தமிழக சட்ட மன்றம்

    தகுதியைக் குலைக்கும் இந்தாள்

அமிழ்தெனப் பேசிய மன்றில் 

    ஆளுநர் மமதைப் போக்கால்

 தமிழினம் அடக்கும் ஈனம்  

    தக்கதை உணர்த்தா ஒன்றியம் 

தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட

      தடுத்திடத் துணியும் அவலம்!


வெள்ளத்தைக் கண்டும் ஏனோ 

    வெறுமனோ வெற்றுக் கூச்சல்

 கள்ளமில்  மக்கள் மீள 

    கருணையாய் பொருளை வழங்க 

ந்ல்லறம் இல்லா ஒன்றியம் 

     நாட்டினில் துரத்துவோம் இன்றே!

 வெல்தமிழ் ஸ்டாலின் ஆட்சி  

    வெற்றியைக் காண்போம் நன்றே!


உயிரையே கொடுத்து வென்ற 

    உன்னத தமிழ்ன் ஆட்சி

 வயிரையே நிறைக்கும் மாந்தர் 

    வஞ்சக சூழ்ச்சி  எல்லாம் 

பயிரிடை உள்ள களையாய்   

    பாரினில் அறுத்து எறிவோம்

உயிரெனத் திராவிட ஆட்சி 

    உரிமையாய் மத்தியில் காண்போம்!

Friday, February 16, 2024

 புண்ணியர் ஸ்டாலின் வாழி

தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்.


உயர்தனிச் செம்மொழி மாந்தர்   

    உன்னத நாட்டில் வாழும் 

வியத்தகு தமிழர் கூட்டி 

    வித்தக் வருகைத் தந்து 

நயத்தகு நானிலத் தமிழர்

    நன்குள பெருமை பேசி 

அயர்விலாப் பயனை நல்கும் 

      அணிபுகழ் ஸ்டாலின் வாழ்க


தமிழரின் தொண்மை கண்டு 

    தரணியில் வென்ற தமிழர் 

அமிழ்தான சேவை எண்ணி 

    அன்பு நெஞ்சத்   தோடே 

பொழியும் மழையப் போன்றே

    பொன்மாலை விருதைத் தந்தார்

 விழியெலாம் இன்பம் பொங்க 

            வித்தகத் தலைவர் ஸ்டாலின்       


வேர்களைத் தேடியே எங்கும் 

    வெல்தமிழ் மக்கள் அழைத்து 

பலகனித் தோட்டம் போன்றே 

    பல்நாடு மக்கள் கண்டோம்

களம்பல கண்ட மாந்தர்

    கலைஞர் கவிஞர் சான்றோர் 

புலம்பெயர் மாந்தர் வந்தார்

    புண்ணியர் ஸ்டாலின் வாழ்க                                                                                                      

 என் தமிழாசான் மெலட்டூர்

 நாராயண பாரதி

தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்


மெலட்டூர் நாராயணபாரதி அவர்களின் வாழ்க்கை வரலாற்று  நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கும் பேராசிரிரியர் கவிஞர் மின்னூர் சீனிவாசன் அவர்களே நூலை வெளியிட்ட அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர்  கிருட்டிணன் அவர்களே தம் மனைவி கவிஞர் என பெருமையோடு கூறி ஊக்குவிக்கும் மூத்த வழக்கறிஞர் செல்லையா அவர்களே  அருமை நண்பர் அரிமா மணிவண்ணன் அவர்களே முகம் இளமாறன் அவர்களே  இயல்பாக தில்லியிலிருந்து வருகை தந்து உரையாற்றி  நிகழ்வைச் சிறப்பிக்கும் முனைவர் சங்கர் அவர்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெருங்கவிஞர் கு.ம.பா மகன் கபிலன்  உள்ளிட்ட அவையை வணங்குகிறேன். பலமுறை இந்த் அரங்கத்தை வழங்கி மெலட்டூர் நாராயண பாரதியை சிறப்பிக்கும் சத்சங்க தலைவர் கிருட்டிணமூர்த்தி அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். 

 சிறந்த செயல்பாடுகளைச செய்பவர்களை மனதாராப் பாராட்ட வேண்டும் அதில் எந்தக் குழு உணர்ச்சியும் இருக்க் கூடாது. இந்த அவையில் கவிஞர் சலாலுத்தின்  பகுத்தறிவுக்கவிஞர் வெற்றிப் பேரொளி எழுத்தாளர் முயற்சி முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.  மெலட்டூரார் அனைத்துத் தரப்பிலும் எவ்வளவு பேரன்போடு வாழ்ந்திருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும், 

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

 எச்சத்தார் காணப் படும்

என்ற வள்ளுவப் பேராசான் குறள் வழி உணரலாம்.

திருவல்லிக்கேணி முசுலீம் மேல்நிலைப்பள்ளியில் நான் பள்ளி இறுதி வகுப்பு (பதிணோராம் வகுப்பு) படித்தேன். எனக்கு தமிழாசிரியர் தந்தையார் பெருங்கவிக்கோ. இறுதி வகுப்பு முடிந்தவுடன் புகுமுக வகுப்பிற்கு சேர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தழிழாசிராகப் பணியாற்றிய இரங்காச்சாரியார் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துசென்று எனது புகுமுக வகுப்பிற்கு எங்கு சேர்க்கலாம் என்று வினவிய்போது அவர் காட்டிய வழிதான் தனராச் பெய்ட் செயின் கல்லூரி.. நெடிய உருவத்தோடு பஞ்சகசம் கட்டி நாம மிட்டு தமிழ்ப்பணியாற்றிய ஆசான் இரங்காச்சாரி அவர்கள்.அவர்களின்  திருத்தாள்களில் வணங்கப் பணிப்பார் தந்தையார் . அருமைத் தந்தையார பெருங்கவிக்கோ.அவர் காட்டிய வழியில் த.பெ.செயின் கல்லூரியில் சேரிந்தேன்.

சிந்தாதிரிப்பேட்டை எம் இல்லத்திலிருந்து துரைப்பாக்கம் தபெ செயின் கல்லூரிக்குச் செல்வேன். அன்று கல்லூரியைச்  சுற்றி கண்ணுக்கெட்ட்டியவரை வெட்ட வெளியும் எதிர்ப்புறம் சவுக்கு மரங்களும் இருக்கும். மழை வந்துவிட்டால் கல்லூரியைச் சுற்றி கடல் பெருக்கெடுத்த து போல் இருக்கும். அந்தக் கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் பணியாற்றினர. நான் படிக்கும்போது பேராசிரியர் நாகராசன் முதல்வராக இருந்தார். அருமையான் பேராசிரியப் பெருமக்கள் பணியாற்றினர். சில பேராசிரியர்கள் நெஞ்சை விட்டு நீங்கார். அதில் ஒருவர்தார் மெலட்டூர் நாராயணபாரதி. லாசிக் வகுப்பு எடுத்த பேராசிரியர் உதயசங்கர் பூகோள வகுப்பு பேராசிரியர் பார்த்த சாரதி  தம் வகுப்பரையில் உயிரைக் கொடுத்து பாடம் நட த்துவார். தமிழ்ப் பேராசிரியர்கள் இ.சே.சுந்தர்  கண்ணன் சந்திரமவ்லி குறிப்பிட த் தக்கவர்கள். சந்திரமவுளி சாரணர் இயக்கப் பொறுப்பாளாரக இருந்தார். நான் சாரண் இயக்கத்திலும் பங்கு பெற்றிருந்தேன். மாணவர்படைக்கு தலைவராக அருமை ந்ண்பர் பாட்கர் செயல்பட்டார். அருமை ந்ண்பர்கள் சவுந்திராசன் இராவீந்திரன் சிவக்குமார் இராமலிங்கம்  போன்ற பல நண்பர் சாரணர் இயக்கத்தில் இருந்தனர். இன்றும் அந்தத் தொடர்புகள் பசுமையாக உள்ளது.

கல்ல்லூரியில் தமிப் பேராசிரியருக்கே உரிய  உடையுடனும் செறுக்க்கான் நடையுடன் புன்சிரிப்பு தவழும் முகப்பொழிவுடனும் ஒரு பெட்டியோடு வரும் காட்சி என் கண்முன்  நிற்கிறது.

 அருமைப் சகோதரர்  கவித்தேனி வசந்தகுமார் அவர்கள் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகச்  சிறப்பாகத் தொகுத்துள்ளார். உண்மையிலேயே தம் ஆசானின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கைத் தொகுப்பை எழுதி நிலைத்த புகழைத்த தந்துள்ளார். வசந்தகுமார் பணி மகத்தான் பணி  வாழ்த்துகள். பேராசிரியாரின் ஒவ்வொறு நிகழ்விலும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

சராசரியாக வெறும் பாட த்தை மட்டும்  சராசரி ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்களின் திறன்களை அறிந்து அவர்களை ஊக்குவிப்பதில்  தலையான பேராசிரியர் நாராயணபாரதி.  இன்று பாரதிய சனதா கட்சியில் இருக்கு கவிஞர் சுபாசு என்னோடு படித்தவர். அன்றே வானதி எனப் பெயர் மாற்றி கவிதைகள் படைத்த சிறந்த மாண்வர். கல்லூரிக் காலங்களில் பேராசான் கவியரங்கங்கள் நட த்தி மாணவர்கள் கவிதை யாக்க ஊக்குவிப்பார். ஒரு முறை பாரதியார் பற்றி கவியரங்கம் நட த்தினார் நானும் சுபாசும் மற்ற மாணவர்களும் பங்கேற்றோம் . அன்று நான் எழுதிய மகாகவி பாரதியைப் பற்றி எழுதிய கவிதை என் கவியாற்றலைத் தூண்டியது நினைவில் உள்ள சில வரிகள்

 பாரதியை பைந்தமிழில் 

பாடச் சொன்னார்

பண்பரசர் எங்கள்திரு

 பாரதி ஆசான்

பா “ரதி “யைப் பாடுதற்கு

 யான் பாவலன் இல்லை

 பாரதியின் தாள் பணிந்து

 தொடங்கு கின்றேன்  

தொடர்ந்து எழுதிய வரிகள் நினைவில் இல்லை. தொடர்ந்து உலகெங்கும் கவிதையில் பயணித்து வருகிறேன். 

நண்பர் சுபாசும் மற்ற மாணவர்களும் சிறந்த் கவிதைகள்  வழங்கினர்.  இன்றும் கவிஞர் சுபாசின் கவிதைகள் முகநூலில் காண்பேன் நாராயண பாரதியி தாக்கம் இருக்கும்.

புகுமுகவகுப்பிற்குப் பின் வணிகவியல் பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். முதுகலை வ்ணிகவியல் மதுரை பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தேன்.

சுட்டி மிகச் சிறந்த இதழ் அந்த இதழை பேராசிரியர் சுந்தர் பேராசிரிய நாராயண் பாரதியும் நட த்திவந்தனர். தமிழில் மிகச் சிறந்த்  இதழ் . தமிழில் செறிந்த செம்மையான் செய்திகளை வழங்கிய இதழ் . அதில் ஆசானின் பங்களிப்பு மகத்தானது என்று பேராசிரியர் இ.சே. சுந்தரே கூறியுள்ளார். சுட்டி போன்ற இதழ்களை நட த்துவது சாதாரனச் செயல ல்ல சாதனைச் செம்மலாக வாழ்ந்துள்ளார்.

அம்பத்தூரில் கம்பன் கழகத்தை உருவாக்க அவர் பட்ட பாட்டை அருமையாகப் பதிவிட்டுள்ளார் நண்பர் வசந்தகுமார். கம்பனின் புகழைப் பரப்பிய சான்றோரக வாழ்ந்த பெருமகன்.

பேராசானின் நினைவேந்தல்  கூட்டம் அம்பத்தூரில் நடப்பதறிந்து  ஓடோடிச் சென்று ஆசானுக்கு அஞ்சலி செலுத்தி  தமிழ்ப்பணியுலும் வெளியிட்டேன். நீதியரசர் வள்ளிநாயகம் பங்கேற்று சிறப்பித்தார்.

ஏழை எளியோர்க்கு வாரி வாரி வழங்கி 

ஈதல் இசைபாட வாழ்தல் அதுவல்ல

ஊதிய மில்லை உயிர்க்கு

என்ற குறளுக்கு இலக்காக வாழ்ந்த தமிழ் அறிஞர் புகழ் ஓங்குக.

Saturday, January 6, 2024

 


அந்தணப் புலவர் கபிலர் அகவலும் செந்தமிழ்ச் செழியன் சந்தக் கவிகளும்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி

 இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம

புலவர் செந்தமிழ்ச்செழியன் நாடறிந்த புலவர் நற்றமிழ் கற்பிக்கும் பேராசான் தலைவர் கலைஞர் கலைஞர் தளபதி முதல்வர் ஸ்டாலின் இருவரது தொண்டறங்களையும் நூல் எழுதி நிலை நிறுத்திய பெருமகன் இன்று அந்தணப் புலவர் கபிலர் அகவலும் செந்தமிழ்ச் செழியன் ச்ந்தக் கவிகளும் நூலை எழுதியுள்ளார். அன்று வாழ்ந்த கவிஞர் கபிலர் பெருமான இன்று வாழும் கவிஞர பாடும் அளவுக்கு தமிழ் தொய்வில்லாமல் தொடரந்து புயணிக்கிறது என்றால் அது ந்ம அணிவகுப்புதான. தமிழ்க் கவிதை தொய்வின்றி தொடர்ந்து பயணிப்பதை நாம் அறியலாம். கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி கருத்தின் முன்னோடி கடமையின் சிகரம்.. யார் எவர் என அடையும் எண்ணாது நம் மண்ணில் படைத்துள்ளனர அந்தப் படைப்புகள்கதான் உலகப் புகழை தமிழ் அன்னைக்குத் தந்துள்ளது. கொரணா தீனுண்மி காலத்தில் உலகத்தையே முடக்கிப் போட்டாலும் இந்தக் கவிஞனின் சிந்தனையை செயலை முடக்க்கவில்லை. இணைய வழி தம் பதிவுகளை வழங்கிய வண்ணமிருந்தார். என்னுடைய செவ்வியையும் உலகவன் தொலைக்காட்சியில் பதிவு செய்து பேராற்றலை வெளிப்படுத்தினார் செழியனார். 

உலகத் தீரே உலகத் தீரே 

நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்து

 சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்

 மனிதற்க்கு வயது நூறு அல்லது இல்லை

என உலகத்தை நோக்கி மனித வாழ்வை படம்பிடிக்கிறார் . வள்ளுவப் பெருமான் கூறும் 

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்

 பெருமை உடைத்துஇவ் உலகு

நிலையாமையையும் கூற்றுவன் எப்போதும் வருவான் என எச்சரிக்கிறார் நம் செழியனார்.

நால்வகைச் சாதி இந்நாட்டினில் நாட்டினீர்

 மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால் 

 பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே 

அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறி 

கலந்து கருப்பெறல் கண்ட து உண்டா

&&&&&&

வட திசை பாப்பான் தென் திசை ஏகின்

 நடையது கோணிப் புலையன் ஆவான்

&&&&&&&

மீண்டும் வள்ளுவப்பேராசானின் 

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

 செய்தொழில் வேற்றுமை யான் 

என்ற மனித சமத்துவத்தை தமக்கே உரிய கருத்துக் கனலோடு முழங்குகிறார் செழியனார்.

அருந்தவ மாமுனியாம் பகவற்குக் 

கருவூர்ப் பெரும்பதி கண்பெரும் புலைச்சி

 ஆதிவயிற்றில் அன்று அவதரித்த 

கான்முளையாகிய கபிலனும் நானே 

என கபிலரின் பிறப்பை நம் கண்முன் நிறுத்திகிறார். செழியனார். தொல்காப்பியத்திலிருந்து நடிப்புக்கு வழங்கிய பத்து கருத்துக்களை வழங்கியுள்ளார். தற்போது கபிலர் பிறந்த பாங்கை திரைப்படம் காண்பது போல் உணர்ச்சிபொங்க தந்துள்ளார்.

திருவும் வறுமையும் செய்தவப் பேறும்

 சாவதும் வேறிலை தரணியோர்க்கே

 குலமும் ஒன்றே குடியும் ஒன்றே 

இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே

இது செழியனார் பெயரின்றி வந்தால் சங்க காலப் பாட்டோ என்னும் அளவிற்கு நடையும் கருத்தும்  நம்மை வியக்கவைக்கிறது. ஐம்பூதங்களும் மாறாமல் இன்றும் மாறி மாறி நிலைத்து நிற்பதுபோல் தமிழ் மொழியின் ஆற்றலும் மாறி மாறி நிற்கிறது. 

வழிபடுதெய்வம் வழிபாடெல்லாம் 

வழக்கமெல்லாம் ஒன்றுதான்

பெரறிஞர் அண்ணாமொழிந்த ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற செரிவான மொழிக்கு விளக்கம் தருகிறார் செழியனார்.

சந்தப் பாடல்களில் இன்றும் மாறாது சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டுகிறார். 

பாடுபட்டுப் பணத்தைத் தேடிப்     

புதைத்து வைக்கும் பித்தரே

 கூடுவிட்டு ஆவி போனால் 

கொண்டு போவதென்னவோ

       &&&&&&

குடங்குடமாய் பாலைக் கொட்டிக்

 குளிரச் செய்வதேனடா

 உயிரைத் திண்ணப் பசிக் குழந்தை

 கூப்பிட்டழுகும் பாரடா

இந்த சந்தப் பாவில் மூடப் பழக்கங்களை புறமுதுகிட்டுத் துரத்திய தந்தை பெரியாரின் முழக்கமாகத் தருகிறார். நான் 2002ல் வெளியிட்ட நெருப்புநதி நூலில் 

சிலைமேல் பால் 

குலைபதறும் குழந்தை 

குடமுழுக்குத் திருவிழா  

என எழுதியிருந்தேன் அந்தக் கருத்தினுடைய சாரம் இன்றும் தமிழ்மண்ணிற்கு தேவையாக உள்ளது. 

பிச்சைக்காரன் பிச்சை கேட்டால் 

ஒதுங்கி நின்று வீசுவாய்

 உச்சைக் குடும்மி பிச்சை மட்டும்

 பதுங்கிப் போட்டு வணங்குவாய் 

 இன்றுகூட மத்திய நிதியமைச்சர் நிர்மலா அம்மையார் கோவிலில் தட்டினில் தட்சனை போடுங்கள் என்ற பேச்சுக்கான் சாட்டையடியாக க் காண்கிறேன். செழியனாரின் சந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

 ஏசு அல்லா இந்துக் கடவுள்கள் அனைத்தையும் கடந்து தூய்மையான கள்ளமில் உள்ளத்திற்கு வாருங்கள் என மொழிகிறார் செழியனார். வள்ளுவப் பேராசனின் 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் 

ஆகுல நீர பிற.

 என்ற குறள் வழி வாழ இந்நூல் பரை சாற்றுகிறது. வாழ்க செந்தமிழ்ச்செழியனார் ஓங்குக அவரது எழுத்தாற்றல்.

Monday, January 1, 2024

 உலகக் கவிஞர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

உலக க் கவிஞர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நடப்பது பொறுத்தமான ஒன்று.தலைவர்  கலைஞரும் உவமைக் கவிஞரும் இணைபிரியாத நண்பர்கள். தலைவர் கலைஞர் நன்றி உணர்ச்சியின் வடிவம். சுரதா வாழும் காலத்திலேயே அவர் நிகழ்வுகளில் பங்கேற்று புகழ்ந்து பெருமைப்ப்டுத்தியுள்ளார். சுரதா இறந்தபின் அவர் சிலையை அசோக் நகரில் திறந்து கவிஞருக்கு நிலையான புகழைத் தந்துள்ளார். அந்த்ச் சிலையை திறப்பதற்கு சுரதாகல்லாடன் எடுத்த முயற்சிகள் அளப்பரியது தந்தைக்க்கு செய்யவேண்டிய்  பணியை சுரதா கல்லாடன் ஆற்றியுள்ளார் வாழ்த்துகள். வாழும்காலத்தில் சுரதா இணையரை அன்போடு கவனித்த இராசேசுவரி கல்லாடன் இணையரை நெஞ்சார்ப் போற்றுகிறேன்.

புதுவை தமிழ்ச்ச்ங்கத் தலைவர் வி.முத்து தலைசி’றந்த தமிழ்ப் புரவலர்.தமிழ் நிகழ்வுகள் அனைத்திலும் சிறப்பாக பங்கேற்று சிறப்பிக்கிறார். இன்று கலைஞர் நூற்ராண்டு விழாவில் தலைமையேற்று  கவிஞர் இராசேசுவரிக்கு வழங்கிய விருது தகுதியான் விருது, நூறு எழுத்தாளர் பெருமக்கள் விருது பெறுகிறீர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். விழாக் குழுவினரை நெஞ்சாரப் போற்றுகிறேன். 

கலைஞரின் நூற்றாண்டு விழா என்பது கலைஞருக்குப் பெருமையல்ல தமிழினத்திற்கு கிடைக்கும்  பெருமை. அருமைக் கவிஞர் கடவூர் மணிமாறன் அவர்கள் சுரதா 100 நூறு கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து நூலை தொகுத்துள்ளார். அந்த நூலை புதுவைத் தமிழ்சங்கத்  தலைவர் முத்து வெளியிட நான் பெற்றுக் கொண்ட தை பெரும் பேறாகவே கருதுகிறேன். கடவூர் மணிமாறன் சுரதா நூற்றாண்டுச் சிறந்த பதிவாக கொண்டு வந்துள்ளார்.

தலைவர் கலைஞர் அவர்களை ஆண்டுதோறும் பலமுறை நானும் தந்தையாரும் சென்று காண்பது வழக்க்கம். பலமுறை தலைவரிடம் உரூபா 50 உரூபா 10 நோட்டுகள் பெற்றுள்ளேன். தலைவர் கலைஞரைப் போல் எளிமையாக அனைவரையும் கண்டு அளவளாவும் அரசியல் தலைவரை காண்பது அரிது. ஒருமுறை தமிழ்க் கவிஞர்கள் அனைவரையும்  ப்ன்னாட்டுத் தமுழுறவு மன்றம் சார்பில் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில்  அழைத்துச் சென்றோம், அப்பொது இங்கே உள்ள கவிஞர் சிந்தைவாசன் செங்கரும்பு ஆசிரியர் கவிஞர் தாமரைப் பூவண்ணன் ஆகியோர் இங்கு விருது பெறுகின்றனர். விருது பெறும்  பெருமக்கள் அனைவரும் கலைஞரின் ஆற்றலை பெருமையை  உலகம்  பின்பற்றச் செய்யவேண்டும். 

தலைவர் கலைஞர் முதல்வர் பொறுப்பில் இருக்கும்போது  நானும் தந்தையும் பொங்கல் திருநாளன்று  தலைவர் கலைஞர அவர்களைக் காணச் சென்றோம். அப்போது செம்மொழி வாரியப் பெருமக்கள்  வருகை தந்திருந்தனர். அறிஞர் பெருமக்கள் பலர் சூழ்ந்திருந்தனர். செம்மொழி பொறுப்பு அதிகாரி செமொழி இராமசாமி  அந்த ஆண்டு செயல் சாதனை அட்ட்டவனைகளை காண்பித்தார். அதைக் கண்டு தம ஆட்சியில்  தமிழைச் செம்மொழியாக்கி செம்மொழி வாரியச் சாதனைகளை பெருமைதமடைந்து முதல்வர் கூறிய வார்த்தைகள் என் செவியிலும் நெஞ்சிலும் நிலையாக நிற்கிறது. தலைவர் சம்ற்கிருத த்திற்கு தனித்துவம் என்று ஓன்று கிடையாது அனைத்தும் நம்மிடம்மிருந்து எடுத்து  தன்வயமாக்கி கொண்டார்கள் அவற்றையெல்லாம் நம் ம்ழொயின் சிறப்பு என்பதை உறுதிபட நிலைநாட்ட வேண்டும் எஎன்று கூறினாரா. செம்மொழியின் அடையாளமாக வாழ்ந்த  தலைவர் கலைஞர் அவர்கள்  நூற்றாண்டு விழா உலகம் ம்ழுமையும் கொண்டாடி வருகிறார்கள்  தலைவரின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் பணியை உலகத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்

அண்மையில் யான் திருவாரூர் சென்றிருந்தேன் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்ட த்தைக் காணவேண்டும்  திருவாரூர் மாவட்ட  தமிழ்ப்பணி அன்பர் மடப்புரம் தங்கவேல் அவர்களைக் தொடர்புகொண்டு கூறினேன் உடனெ அவர் வருகை தந்து காட்டூர் கோட்டம் அழைத்துச் சென்றார். கலைஞரின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக அங்கு கலையம்சத்தோடு நிறுவியுள்ளனர். கல்லக்குடி போராட்டம்  அனைத்து கலைஞரின் போராட்டங்களையும் நிலையாக கலை ஒவியமாக வைத்துள்ள்னர். தயாளு அம்மையார் அறக்கட்டளை வழி கலைஞர் குடும்பம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர் அனைவரும் காணவேண்டும். நம் முதல்வர் இளைஞர்கள் தந்தை பெரியார் பேர றிஞர் அண்ணா தலைவர் கலைஞர்  தட த்தைப் பின்ற்றும் திராவிடப் பல்கலைக்கழகமாக உருவாக்கியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அரும் திராவிடப் பணியை போற்றுவோம்.

தமிழக அரசின் அகவைமுதிர்ந்த  தமிழறிஞர்கள் உதவி பெறுவோர் சங்கத்தின் பொறுப்பாளர் துரைமுருகன் பம்பரமாக சுழன்று பணியாற்றும் முனைவர்  அருணா தொல்காப்பியன் ஆகியோரின்   பேருழைப்பை இங்கு காண்கிறேன்.  இணைந்து பணியாற்றும் அனைத்த்ப் பெருமக்களுக்கும் வாழ்த்துகள். 

கலைஞர் வ்ழியில் தமிழ் தமிழரை உயர்த்துவோம் ஓங்குக கலைஞர் புகழ்.