Saturday, January 6, 2024

 


அந்தணப் புலவர் கபிலர் அகவலும் செந்தமிழ்ச் செழியன் சந்தக் கவிகளும்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி

 இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம

புலவர் செந்தமிழ்ச்செழியன் நாடறிந்த புலவர் நற்றமிழ் கற்பிக்கும் பேராசான் தலைவர் கலைஞர் கலைஞர் தளபதி முதல்வர் ஸ்டாலின் இருவரது தொண்டறங்களையும் நூல் எழுதி நிலை நிறுத்திய பெருமகன் இன்று அந்தணப் புலவர் கபிலர் அகவலும் செந்தமிழ்ச் செழியன் ச்ந்தக் கவிகளும் நூலை எழுதியுள்ளார். அன்று வாழ்ந்த கவிஞர் கபிலர் பெருமான இன்று வாழும் கவிஞர பாடும் அளவுக்கு தமிழ் தொய்வில்லாமல் தொடரந்து புயணிக்கிறது என்றால் அது ந்ம அணிவகுப்புதான. தமிழ்க் கவிதை தொய்வின்றி தொடர்ந்து பயணிப்பதை நாம் அறியலாம். கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி கருத்தின் முன்னோடி கடமையின் சிகரம்.. யார் எவர் என அடையும் எண்ணாது நம் மண்ணில் படைத்துள்ளனர அந்தப் படைப்புகள்கதான் உலகப் புகழை தமிழ் அன்னைக்குத் தந்துள்ளது. கொரணா தீனுண்மி காலத்தில் உலகத்தையே முடக்கிப் போட்டாலும் இந்தக் கவிஞனின் சிந்தனையை செயலை முடக்க்கவில்லை. இணைய வழி தம் பதிவுகளை வழங்கிய வண்ணமிருந்தார். என்னுடைய செவ்வியையும் உலகவன் தொலைக்காட்சியில் பதிவு செய்து பேராற்றலை வெளிப்படுத்தினார் செழியனார். 

உலகத் தீரே உலகத் தீரே 

நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்து

 சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்

 மனிதற்க்கு வயது நூறு அல்லது இல்லை

என உலகத்தை நோக்கி மனித வாழ்வை படம்பிடிக்கிறார் . வள்ளுவப் பெருமான் கூறும் 

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்

 பெருமை உடைத்துஇவ் உலகு

நிலையாமையையும் கூற்றுவன் எப்போதும் வருவான் என எச்சரிக்கிறார் நம் செழியனார்.

நால்வகைச் சாதி இந்நாட்டினில் நாட்டினீர்

 மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால் 

 பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே 

அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறி 

கலந்து கருப்பெறல் கண்ட து உண்டா

&&&&&&

வட திசை பாப்பான் தென் திசை ஏகின்

 நடையது கோணிப் புலையன் ஆவான்

&&&&&&&

மீண்டும் வள்ளுவப்பேராசானின் 

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

 செய்தொழில் வேற்றுமை யான் 

என்ற மனித சமத்துவத்தை தமக்கே உரிய கருத்துக் கனலோடு முழங்குகிறார் செழியனார்.

அருந்தவ மாமுனியாம் பகவற்குக் 

கருவூர்ப் பெரும்பதி கண்பெரும் புலைச்சி

 ஆதிவயிற்றில் அன்று அவதரித்த 

கான்முளையாகிய கபிலனும் நானே 

என கபிலரின் பிறப்பை நம் கண்முன் நிறுத்திகிறார். செழியனார். தொல்காப்பியத்திலிருந்து நடிப்புக்கு வழங்கிய பத்து கருத்துக்களை வழங்கியுள்ளார். தற்போது கபிலர் பிறந்த பாங்கை திரைப்படம் காண்பது போல் உணர்ச்சிபொங்க தந்துள்ளார்.

திருவும் வறுமையும் செய்தவப் பேறும்

 சாவதும் வேறிலை தரணியோர்க்கே

 குலமும் ஒன்றே குடியும் ஒன்றே 

இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே

இது செழியனார் பெயரின்றி வந்தால் சங்க காலப் பாட்டோ என்னும் அளவிற்கு நடையும் கருத்தும்  நம்மை வியக்கவைக்கிறது. ஐம்பூதங்களும் மாறாமல் இன்றும் மாறி மாறி நிலைத்து நிற்பதுபோல் தமிழ் மொழியின் ஆற்றலும் மாறி மாறி நிற்கிறது. 

வழிபடுதெய்வம் வழிபாடெல்லாம் 

வழக்கமெல்லாம் ஒன்றுதான்

பெரறிஞர் அண்ணாமொழிந்த ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற செரிவான மொழிக்கு விளக்கம் தருகிறார் செழியனார்.

சந்தப் பாடல்களில் இன்றும் மாறாது சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டுகிறார். 

பாடுபட்டுப் பணத்தைத் தேடிப்     

புதைத்து வைக்கும் பித்தரே

 கூடுவிட்டு ஆவி போனால் 

கொண்டு போவதென்னவோ

       &&&&&&

குடங்குடமாய் பாலைக் கொட்டிக்

 குளிரச் செய்வதேனடா

 உயிரைத் திண்ணப் பசிக் குழந்தை

 கூப்பிட்டழுகும் பாரடா

இந்த சந்தப் பாவில் மூடப் பழக்கங்களை புறமுதுகிட்டுத் துரத்திய தந்தை பெரியாரின் முழக்கமாகத் தருகிறார். நான் 2002ல் வெளியிட்ட நெருப்புநதி நூலில் 

சிலைமேல் பால் 

குலைபதறும் குழந்தை 

குடமுழுக்குத் திருவிழா  

என எழுதியிருந்தேன் அந்தக் கருத்தினுடைய சாரம் இன்றும் தமிழ்மண்ணிற்கு தேவையாக உள்ளது. 

பிச்சைக்காரன் பிச்சை கேட்டால் 

ஒதுங்கி நின்று வீசுவாய்

 உச்சைக் குடும்மி பிச்சை மட்டும்

 பதுங்கிப் போட்டு வணங்குவாய் 

 இன்றுகூட மத்திய நிதியமைச்சர் நிர்மலா அம்மையார் கோவிலில் தட்டினில் தட்சனை போடுங்கள் என்ற பேச்சுக்கான் சாட்டையடியாக க் காண்கிறேன். செழியனாரின் சந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

 ஏசு அல்லா இந்துக் கடவுள்கள் அனைத்தையும் கடந்து தூய்மையான கள்ளமில் உள்ளத்திற்கு வாருங்கள் என மொழிகிறார் செழியனார். வள்ளுவப் பேராசனின் 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் 

ஆகுல நீர பிற.

 என்ற குறள் வழி வாழ இந்நூல் பரை சாற்றுகிறது. வாழ்க செந்தமிழ்ச்செழியனார் ஓங்குக அவரது எழுத்தாற்றல்.

No comments:

Post a Comment