என் தமிழாசான் மெலட்டூர்
நாராயண பாரதி
தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்
மெலட்டூர் நாராயணபாரதி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கும் பேராசிரிரியர் கவிஞர் மின்னூர் சீனிவாசன் அவர்களே நூலை வெளியிட்ட அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன் அவர்களே தம் மனைவி கவிஞர் என பெருமையோடு கூறி ஊக்குவிக்கும் மூத்த வழக்கறிஞர் செல்லையா அவர்களே அருமை நண்பர் அரிமா மணிவண்ணன் அவர்களே முகம் இளமாறன் அவர்களே இயல்பாக தில்லியிலிருந்து வருகை தந்து உரையாற்றி நிகழ்வைச் சிறப்பிக்கும் முனைவர் சங்கர் அவர்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெருங்கவிஞர் கு.ம.பா மகன் கபிலன் உள்ளிட்ட அவையை வணங்குகிறேன். பலமுறை இந்த் அரங்கத்தை வழங்கி மெலட்டூர் நாராயண பாரதியை சிறப்பிக்கும் சத்சங்க தலைவர் கிருட்டிணமூர்த்தி அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.
சிறந்த செயல்பாடுகளைச செய்பவர்களை மனதாராப் பாராட்ட வேண்டும் அதில் எந்தக் குழு உணர்ச்சியும் இருக்க் கூடாது. இந்த அவையில் கவிஞர் சலாலுத்தின் பகுத்தறிவுக்கவிஞர் வெற்றிப் பேரொளி எழுத்தாளர் முயற்சி முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர். மெலட்டூரார் அனைத்துத் தரப்பிலும் எவ்வளவு பேரன்போடு வாழ்ந்திருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும்,
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தார் காணப் படும்
என்ற வள்ளுவப் பேராசான் குறள் வழி உணரலாம்.
திருவல்லிக்கேணி முசுலீம் மேல்நிலைப்பள்ளியில் நான் பள்ளி இறுதி வகுப்பு (பதிணோராம் வகுப்பு) படித்தேன். எனக்கு தமிழாசிரியர் தந்தையார் பெருங்கவிக்கோ. இறுதி வகுப்பு முடிந்தவுடன் புகுமுக வகுப்பிற்கு சேர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தழிழாசிராகப் பணியாற்றிய இரங்காச்சாரியார் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துசென்று எனது புகுமுக வகுப்பிற்கு எங்கு சேர்க்கலாம் என்று வினவிய்போது அவர் காட்டிய வழிதான் தனராச் பெய்ட் செயின் கல்லூரி.. நெடிய உருவத்தோடு பஞ்சகசம் கட்டி நாம மிட்டு தமிழ்ப்பணியாற்றிய ஆசான் இரங்காச்சாரி அவர்கள்.அவர்களின் திருத்தாள்களில் வணங்கப் பணிப்பார் தந்தையார் . அருமைத் தந்தையார பெருங்கவிக்கோ.அவர் காட்டிய வழியில் த.பெ.செயின் கல்லூரியில் சேரிந்தேன்.
சிந்தாதிரிப்பேட்டை எம் இல்லத்திலிருந்து துரைப்பாக்கம் தபெ செயின் கல்லூரிக்குச் செல்வேன். அன்று கல்லூரியைச் சுற்றி கண்ணுக்கெட்ட்டியவரை வெட்ட வெளியும் எதிர்ப்புறம் சவுக்கு மரங்களும் இருக்கும். மழை வந்துவிட்டால் கல்லூரியைச் சுற்றி கடல் பெருக்கெடுத்த து போல் இருக்கும். அந்தக் கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் பணியாற்றினர. நான் படிக்கும்போது பேராசிரியர் நாகராசன் முதல்வராக இருந்தார். அருமையான் பேராசிரியப் பெருமக்கள் பணியாற்றினர். சில பேராசிரியர்கள் நெஞ்சை விட்டு நீங்கார். அதில் ஒருவர்தார் மெலட்டூர் நாராயணபாரதி. லாசிக் வகுப்பு எடுத்த பேராசிரியர் உதயசங்கர் பூகோள வகுப்பு பேராசிரியர் பார்த்த சாரதி தம் வகுப்பரையில் உயிரைக் கொடுத்து பாடம் நட த்துவார். தமிழ்ப் பேராசிரியர்கள் இ.சே.சுந்தர் கண்ணன் சந்திரமவ்லி குறிப்பிட த் தக்கவர்கள். சந்திரமவுளி சாரணர் இயக்கப் பொறுப்பாளாரக இருந்தார். நான் சாரண் இயக்கத்திலும் பங்கு பெற்றிருந்தேன். மாணவர்படைக்கு தலைவராக அருமை ந்ண்பர் பாட்கர் செயல்பட்டார். அருமை ந்ண்பர்கள் சவுந்திராசன் இராவீந்திரன் சிவக்குமார் இராமலிங்கம் போன்ற பல நண்பர் சாரணர் இயக்கத்தில் இருந்தனர். இன்றும் அந்தத் தொடர்புகள் பசுமையாக உள்ளது.
கல்ல்லூரியில் தமிப் பேராசிரியருக்கே உரிய உடையுடனும் செறுக்க்கான் நடையுடன் புன்சிரிப்பு தவழும் முகப்பொழிவுடனும் ஒரு பெட்டியோடு வரும் காட்சி என் கண்முன் நிற்கிறது.
அருமைப் சகோதரர் கவித்தேனி வசந்தகுமார் அவர்கள் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாகத் தொகுத்துள்ளார். உண்மையிலேயே தம் ஆசானின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கைத் தொகுப்பை எழுதி நிலைத்த புகழைத்த தந்துள்ளார். வசந்தகுமார் பணி மகத்தான் பணி வாழ்த்துகள். பேராசிரியாரின் ஒவ்வொறு நிகழ்விலும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.
சராசரியாக வெறும் பாட த்தை மட்டும் சராசரி ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்களின் திறன்களை அறிந்து அவர்களை ஊக்குவிப்பதில் தலையான பேராசிரியர் நாராயணபாரதி. இன்று பாரதிய சனதா கட்சியில் இருக்கு கவிஞர் சுபாசு என்னோடு படித்தவர். அன்றே வானதி எனப் பெயர் மாற்றி கவிதைகள் படைத்த சிறந்த மாண்வர். கல்லூரிக் காலங்களில் பேராசான் கவியரங்கங்கள் நட த்தி மாணவர்கள் கவிதை யாக்க ஊக்குவிப்பார். ஒரு முறை பாரதியார் பற்றி கவியரங்கம் நட த்தினார் நானும் சுபாசும் மற்ற மாணவர்களும் பங்கேற்றோம் . அன்று நான் எழுதிய மகாகவி பாரதியைப் பற்றி எழுதிய கவிதை என் கவியாற்றலைத் தூண்டியது நினைவில் உள்ள சில வரிகள்
பாரதியை பைந்தமிழில்
பாடச் சொன்னார்
பண்பரசர் எங்கள்திரு
பாரதி ஆசான்
பா “ரதி “யைப் பாடுதற்கு
யான் பாவலன் இல்லை
பாரதியின் தாள் பணிந்து
தொடங்கு கின்றேன்
தொடர்ந்து எழுதிய வரிகள் நினைவில் இல்லை. தொடர்ந்து உலகெங்கும் கவிதையில் பயணித்து வருகிறேன்.
நண்பர் சுபாசும் மற்ற மாணவர்களும் சிறந்த் கவிதைகள் வழங்கினர். இன்றும் கவிஞர் சுபாசின் கவிதைகள் முகநூலில் காண்பேன் நாராயண பாரதியி தாக்கம் இருக்கும்.
புகுமுகவகுப்பிற்குப் பின் வணிகவியல் பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். முதுகலை வ்ணிகவியல் மதுரை பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தேன்.
சுட்டி மிகச் சிறந்த இதழ் அந்த இதழை பேராசிரியர் சுந்தர் பேராசிரிய நாராயண் பாரதியும் நட த்திவந்தனர். தமிழில் மிகச் சிறந்த் இதழ் . தமிழில் செறிந்த செம்மையான் செய்திகளை வழங்கிய இதழ் . அதில் ஆசானின் பங்களிப்பு மகத்தானது என்று பேராசிரியர் இ.சே. சுந்தரே கூறியுள்ளார். சுட்டி போன்ற இதழ்களை நட த்துவது சாதாரனச் செயல ல்ல சாதனைச் செம்மலாக வாழ்ந்துள்ளார்.
அம்பத்தூரில் கம்பன் கழகத்தை உருவாக்க அவர் பட்ட பாட்டை அருமையாகப் பதிவிட்டுள்ளார் நண்பர் வசந்தகுமார். கம்பனின் புகழைப் பரப்பிய சான்றோரக வாழ்ந்த பெருமகன்.
பேராசானின் நினைவேந்தல் கூட்டம் அம்பத்தூரில் நடப்பதறிந்து ஓடோடிச் சென்று ஆசானுக்கு அஞ்சலி செலுத்தி தமிழ்ப்பணியுலும் வெளியிட்டேன். நீதியரசர் வள்ளிநாயகம் பங்கேற்று சிறப்பித்தார்.
ஏழை எளியோர்க்கு வாரி வாரி வழங்கி
ஈதல் இசைபாட வாழ்தல் அதுவல்ல
ஊதிய மில்லை உயிர்க்கு
என்ற குறளுக்கு இலக்காக வாழ்ந்த தமிழ் அறிஞர் புகழ் ஓங்குக.
No comments:
Post a Comment