நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர்
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
(பன்னாட்டுத் தமிழுறவு மன்றம 25 - 2 - 2024 அன்று சென்னையில் நடத்திய கலைஞர் நூற்றாண்டு விழாக கவியரங்கில் பெருங்கவிக்கோ தலைமையில் தமிழ்மாமணி வா.மு.சே திருவள்ளுவர் பாடிய கவிதை)
நடையாய் நடக்கும் நற்றமிழ் நாயகர்
நாநிலப் புகழை தமக்கே கொண்டவர் தடைகளை உடைக்கும் போர்ப்படை அரிமா தகுதியர் காக்கும் செந்தாமிழ்ச் செம்மல் உடைமையாய் கலைஞர் உள்ளம் காப்பவர் உரிமைக் குரலாய் உலகில் உரைப்பவர் திடமாய் கலைஞர் நூற்றாண் டுகாண் தீந்தமிழ்ப் பெருங்க விக்கோ போற்றி
திராவிட இயக்கம் தழைக்க உதித்த தீந்தமிழ் மொழியின் ஆற்றல் மறவர் கருவிலே திருவாய் மலர்ந்த நேயர் கற்பனைக் கெட்டா முயற்சித் தீரர் பெரியார கரத்தைப் பற்றியே பாங்காய் பகுத்தறி வுகாத்த பகலவன் ஆனார் திரைப்படம் புகுந்தே தமிழால் ஆண்ட தீந்தமிழ்க் கலைஞர் திண்மையும் உச்சம்
கலையின் ஆற்றல் வாழ்வின் தொடக்கம் கதிராய் உலகில் ஒளிர்ந்தே வென்றார் தலைவர் அண்ணா தலைமை கொண்டார் தகுதியின் ஆற்றலாய்த் துணிந்தே நின்றார் பகுதி எல்லாம் திமுக கிளைகள் பாதை வகுத்தே பாரினில் வென்றார் தகுதித் தலைமைகள் அண்ணா வழியில் தக்கார் கலைஞர் தலைமை ஏற்றார்
அண்ணா முதல்வராய் மறைந்த போதே அரசியல் போக்கில் அணியாய் நின்றனர் தன்னிலை உணர்ந்த தலைவர் கலைஞர் தக்கதை உணர்ந்து கழகம் காத்தார் சென்நீர் விட்டே கழகம் மீட்டே சேனைத் தலைவர் முதல்வர் ஆனார் கண்ணீர் மல்க அண்ணா போற்றி கழகம் காப்பதில் பொன்விழாக் கண்டார்
அரசியல் அணிமலர்ப் பாதை அன்று அடர்ந்த ஆணவம் கரடு முரடாய்த் துரத்திய மூடரைத் துணிந்தே என்றும் துண்பக் கடலில் நீந்தியே வென்றார் மாறிய அரசியல் மனிதரை எல்லாம் மண்ணின் பொறுமையாய் ஏற்ற குணத்தர் தூரிகை என்றும் துணையாய் ஏற்றே தொடரும் முரசொலி தந்தை கலைஞர்
அன்னை இந்திரா அவசர நிலையை ஆணவப் போக்கால் பிரகடனம் செய்தார் விந்திய இந்தியத் தலைவர் எல்லாம் வியப்பாய்க் காத்த சனநா யகக்கோ வின்னே அதிர எதிர்த்த செம்மல்` வித்தக ஸ்டாலின் மணக் கோலத்தில் வீணர்கள் சிறையில் அடித்தே மகிழ்ந்தனர் விரிவான் தலைவர் முதல்வர் இன்றே
கத்தும் கடலின் ஒசையைப் போன்றே கதிரவன் உமிழும் ஒளியைப் போன்றே சித்தம் குளிரும் தென்றலைப் போன்றே சிவந்த வான வண்ணம் போன்றே நித்தம் நித்தம் கலைஞர் நம்முன் நீள்புகழ் ஆற்றல் மரமாய் உள்ளார் கண்மணித் தலைவர் முதல்வர் ஸ்டாலின் கரத்தை உயர்த்துவோம் மாதோ
No comments:
Post a Comment