உலக க் கல்வித் திறன் மேம்பாட்டில் தமிழ் மொழியின் பங்கு
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசிரியர் தமிழ்ப்பணி
இயக்குநர் பன்னாட்டுத் தம்ழுறவு மன்றம்
எண்ணற்ற நூல்க ளைப் படைத்து இலக்கிய உலகில் தளராது தொண்டாற்றும் மெய்ஞானி பிரபாகர்பாபு அவர்கள் உலகச் செம்மொழி தம்ழிச் சங்கம் சென்னையில் தூய தாமசுகலை ம்ற்றும் அறிவியல் கல்லூரியை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் உல்கத் தமிழர்களை ஒருங்கிணைந்து மாநாடு நட த்துவது பெருமைக்குரிய ஒன்றாகும். சென்னையில் அறிஞர் சான் சாமுவேல் நட த்திய உலகத் தம்ழ் ஆராய்ச்ச்சி மாநாட்டில் பிராபாகர் பாபு அவர்கள் வெளிநாட்டுப் பேராளர்களிடம் அவர் காட்டிய பரிவும் வரவேற்பும் நெஞ்சில் நிலையாக உள்ளன. தூஉய தாமச்சு கல்லூரிப் பெரும்க்களையும் பாராட்டி மகிழ்கிறேன்
உலகளாவிய நிலையில் தமிழர்கள் பரவி வாழ்கின்றனர். அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளால் தமிழர்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். மலேசிய சிங்கப்பூர் இலங்கை மியான்மர் அமெரிக்கா கனடா ஆசுத்திரேலியா ஐரோப்பிய நாடுகள் தென்ஆப்ரிக்கா இந்தோனேசியா கென்யா பிரிட்டன் சப்பான் சுவிட்சர்லாந்து என அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் கல்வி மேம்பாட்டினாலும் போராட்டச் சுழ்நிலைகளாலும் போர் பதட்டங்களாலும் அந்தியர் ஆதிக்கங்களாலும் ஆங்காங்கே புலம் பெயர்ந்துள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்கள் தம் இலக்கியங்களையும் பண்பாடுகளையும் கலைகளையும் ஆண்மீக எண்ணங்களையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் பாதுகாத்து வருகின்றானர்.
நான் இலண்டன் மாநகர் சென்றிருந்த போது ஈழத்து கவிஞர் கருணான்ந்த ராசா திருக்குறளில் காமத்துப் பாலை மட்டும் பிரித்து வள்ளுவன் காதல் என்ற நூலை எழுதி பதிப்பித்து என்னிடம் தந்தார். புலம்பெயர்ந்து தம் வாழ்க்கைநிலைகளில் போராடி குடும்பம் காத்து மரபுக் கவிதையில் நூல எழுதி அதைப் பதிப்பித்துள்ளார் என்றால் திருவள்ளுவரின் திருக்குறள் எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறியலாம். இலண்டனில் பேராசிரியர் கோபன் மகாதேவா திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை வெளியிட்டுள பாங்கு என்னை வியக்கவைத்தது. அணமையில்தான் பேராசியர் ,கோபன் மகாதேவா காலமானார். சுடரொளி வெளியீட்டுக் கழகம் சார்பில் இதழாளர் சம்பந்தம் பொன் பாலசுந்தரம் உலகம் முழுவதும் கவிதைப் போட்டி நிகழ்வை தமிழ்ப்பணியில் வெளியிட்டு வந்த கவிதைகளை பரிசீலித்து முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் ஆறுதல் 25 பெருமக்களுக்கு பரிசுகள் அறிவித்து சென்னையில் பன்னாட்ட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் சென்னையில் விழா நட த்தி தந்தையார் பெருங்கவிக்கோ திருக்கரத்தால் அனைவருக்கும் வழங்கினோம். மரபுக் கவிதைகளின் தாக்கம் அயலகத்தமிழர்களிடம் உள்ள உணர்வை அறியலாம்.
பிரான்சில் அருளாளர் சிவதாசன் அவர்கள் யான் சென்றிருந்த போது அங்குள்ள கோவிலுக்கு சிலைகள் வேண்டும் என்றார் நான் தமிழகம் வரும்போது ஆவண செய்கிறேன் என்றேன். முத்துக்குமாரசாமி குருக்களும் சிவதாசன் அவர்களும் தமிழகம் வருகை தந்தனர். அண்மையில் காலமான் அருளாளர் ஈப்போ நடராசன் அவர்கள் வழி கும்பகோணம் சாமிநாதன் நிறுவனம் வழியாக சிலை செய்து அனுப்பி வைத்தோம். அந்த சிலை இன்றும் தமிழர்கள் வழிபடு சிலைகளாக உள்ளது. நான் மீண்டும் பாரிசு சென்றபோது கண்டும் மகிழ்ந்தேன். அண்மையில் நான் பாரிசு சென்றபோது நண்பர் செயராமன் கோவிந்தசாமி பிர்தவுசு நட த்தும் சங்கீதா உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையை அனைவரும் காணும் வண்ணம் வைத்துள்ளார். செயராமன் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் நூலை பிர்தவுசு அவர்களே வெளியிட்டுள்ளார். தமிழ் இலைக்கியங்களின் தாக்கம் உலகத் தமிழர்களிடம் நீக்கற நிறைந்துள்ளதை அறியலாம்
இந்த ஆண்டு பிரான்சு சுடார்சு பர்க் நகருக்கு தலைவர்கிருபானந்தன் அழைத்திருந்தார்கள். அங்குள்ள தமிழர்கள் எல்லம் கூடி நட த்திய பொங்கல் விழா என் வாழ்நாளில் மறக்க இயலா விழாவாகும். தமிழ்ச்சோலை என்ற அமைப்பின் மூலம் தமிழ்ப்பள்ளி நட த்துகின்றனர். அனைத்து பள்ளிகளின் மாணவர்களுக்கும் திருக்குறல் போட்டி நட த்தி பரிசு வழங்குகின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவில் பரிசுகளை வழங்கினேன். தமிழ் பேச்சுப் போட்டி சிறுகதைப் போட்டி நடனப் போட்டி எனதமிழ்க் கலைகளைப் சிறப்பாகப் பாதுகாக்கின்றனர்.
இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து நகருக்கு வள்ளுவன் பாடசாலை நிறுவனத்தார் என்னை திருவள்ளுவர் ஆண்டு விழாவிற்கு அழைத்திருந்தனர். நிறுவனர் முர்கவேள் ந ந்தினி இணையர் திருவள்ளுவரை பள்ளக்கில் ஏற்றிவைத்து திருக்குறள் பாடி மேடைக்கு கொண்டுசென்றது வரலாற்றுப் பதிவாகும் நானும் பெர்ன் நகர் மேயரும் சிறப்பு விருந்தினராக இருந்தோம். கவியரங்கம் பட்டிமன்றம் உரையரங்கம் நாட்டியம் நாடகம் பாடல் என அனைத்தும் கொஞ்சு தமிழில் சிறப்பாக நடைபெற்றது வியப்பைத் தந்த து. அழகு தமிழை தம் வழித்தோன்றல்களுக்கு ஊட்டியுள்ளதை அறிய முடிந்த து.
பேர்ன் ந்கரில் உள்ள திருகோயிலுக்கு அருளாளர் சசி அழைத்திருந்தார். அங்கு முழுமையும் தமிழிலேயே வழிபாடு, ஆன்மீகத் தமிழை போற்றி பாதுகாக்கின்றனர். தேவாரம் திருவாசகம் அனைத்தும் பெர்ன் ந்கரில் ஒலிக்கின்றது.
யான் மியான்மர் சென்றிருந்தபோது அக்கு இராணுவ ஆட்சி நடைபெறுகிற்துஇருப்பினும் வள்ளுவர் கோட்டம் அமைத்து திருக்குறளை ஓதுகின்றன. தமிழ்க்கல்விக்கு பள்ளி நட த்துகின்றானர். இரங்கூன் நகரில் கோவில்களில் தமிழ் பயிற்றுவிக்கின்றனர். பெருங்கவிஞர் நாரா நாச்சியப்பன் அவர்களின் உறவினரிடமிருந்து பர்மீய மொழியில் திருக்குளை மொழிபெயர்த்த நூலை பேராசியர் ஆறு அழகப்ப்ன் பெற்று தமிழக அரசிடம் வழங்கினார்.
செருமனி ரெய்னே ந்கர் சென்றிருந்தபோது ரெய்னே நதியின் பாலத்தில் பல்வேறு நாட்டின் அறக் கருத்துகள் அவரவர்கள் மொழியில் உள்ளன. நம் கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் வரிகள் உள்ளதை உலகப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் கணேசலிங்கம் கமலநாதன் காண்பித்தனர்.
தென்னாப்பிர்க்கா ந்கரில் டர்பன் நகரில் நம அன்மீக க் கோயில்கள் பல உள்ளன. அங்கு தமிழ் பயில வாய்ப்பில்லை மிக்கி செட்டி என்ற தமிழர் சென்னை இரமசாமி பல்கலைகழகத்தோடு இணைந்து 50 பெருமக்களுக்கு ஆசிரியப் பயிற்சி அளித்து அங்கு உலப் பண்பாட்டி அறிஞர்கள் டர்ப்ன் சென்று
பட்டம் வழங்கினோம், இன்று தென்னாப்பிரிக்கா தமிழர்கள் தமிழ் பயில்கின்றனர்.
மலேசிய சிங்கப்பூர் அமெரிக்க கனடா என அனைத்து நாடுகளைப் பற்றியும் பதிவிட்டுள்ளேன். தாய்மொழி வழி பயின்றால்தான் கல்வித் திறன் அதிகரிக்கும் தமிழை அறிந்து உலகை அறிவோம்
No comments:
Post a Comment