மத்தியில் வெற்றி காண்போம்
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
இந்திய சனநா யகமே
இடரிடும் நிலையில் இன்றே
உந்திடும் தலைமை அமைச்சர்
உதிர்த்திடும் சொற்கள் எல்லாம்
நொந்திடும் மாற்றுக் கட்சி
நசுக்கிடும் அவலம் அன்றோ!
வெந்ததை தின்னும் மக்கள்
வேதனை தீர்க்காப் பேச்சு!
தமிழக சட்ட மன்றம்
தகுதியைக் குலைக்கும் இந்தாள்
அமிழ்தெனப் பேசிய மன்றில்
ஆளுநர் மமதைப் போக்கால்
தமிழினம் அடக்கும் ஈனம்
தக்கதை உணர்த்தா ஒன்றியம்
தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட
தடுத்திடத் துணியும் அவலம்!
வெள்ளத்தைக் கண்டும் ஏனோ
வெறுமனோ வெற்றுக் கூச்சல்
கள்ளமில் மக்கள் மீள
கருணையாய் பொருளை வழங்க
ந்ல்லறம் இல்லா ஒன்றியம்
நாட்டினில் துரத்துவோம் இன்றே!
வெல்தமிழ் ஸ்டாலின் ஆட்சி
வெற்றியைக் காண்போம் நன்றே!
உயிரையே கொடுத்து வென்ற
உன்னத தமிழ்ன் ஆட்சி
வயிரையே நிறைக்கும் மாந்தர்
வஞ்சக சூழ்ச்சி எல்லாம்
பயிரிடை உள்ள களையாய்
பாரினில் அறுத்து எறிவோம்
உயிரெனத் திராவிட ஆட்சி
உரிமையாய் மத்தியில் காண்போம்!
No comments:
Post a Comment