அன்னை சேதுமதியின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2012 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திருகுறள் நாவை சிவம், புலவர் தமிழாளன்,திருச்சி நாகராசன்,இதழ்மாமணி பட்டாபிராமன்,செந்தமிழ்விரும்பி பார்த்தசாரதி செல்லம் பூசாரி, கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் சிந்தை கோ.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார். கிராம மக்கள் அனைவருக்கும் ஆண்டநாயகபுரம் மடத்தில் உணவு வழங்கப்பட்டது. திரு பால் செந்தில் அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட ஏற்பாடு செய்திருந்தார்.
05=11-2012 அன்று மாலை ஆண்டநாயகபுரம் முத்து இராமயி இல்லத்தில் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது.
11-11-2012 அன்று அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொற்கிழி வழங்கு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முனைவர் அவ்வை நடராசன் தலைமையேற்று கவிச்சிங்கம் கண்மதியன், செந்தமிழ்முரசு செந்தமிழ் விரும்பி ஆகியோர்க்கு தலா ரூ.10,000 பொற்கிழி வழங்கினார்.செம்மொழி மத்திய நிறுன இராமசாம், முனைவர் மறைமலை இலக்குவனார், கவிக்கொண்டல் செங்குட்டுவன், வாழ்த்த்ரை வழங்கினர்.
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாறினார். முனைவர் ஆண்டவர் அறிமுகவுரையாற்றினார். நிறைவாக பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நன்றி பாராட்டினார். அனைவருக்கும் சரவண்பவண் உணவகத்தில் உணவு வழங்கப்பட்டது.
நானும் நினைவுகளைச் சுமக்கின்றேன். முனைவர் ஆண்டவர் அவர்களின் உடன் மாணாக்கன். இப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில்...
ReplyDelete