சென்னையில் தமிழாகரர் பேராசிரியர் ஆறு. அழகப்பனார் பவள விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவருக்கு தமிழ்மாமணி பட்டம் தமிழக ப.ச.க. தலைவர் பொற்றாமரை இல. கணேசன் தலைமையில் பெருங்கவிக்கோ முன்னிலையில் முன்னாள் துணைவேந்தர்கள் முனைவர் க.ப. அறவாணன், முனைவர் பொற்கோ வழங்கினர்.
கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் தமிழ்ப்பணி இதழின் அரிய சேவையையும், உலகளாவிய தமிழ்த் தொண்டையும்., உரைவீச்சையும் பாராட்டி தமிழ்மாமணி பட்டம், வழங்கப் பட்டது.
இவவிழாவில் அறிஞர் பெருமக்கள் தமிழ்மாமணி பட்டம் பெற்றனர். எழுகதிர் அரு.கோபாலன், கவிதைஉறவு ஏர்வாடி இராதாகிருட்டிணன்
கண்ணியம் குலோத்துங்கன், தென்மொழி பூங்குன்றன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் கடவூர் மணிமாறன், முகம் மாமணி உள்ளிட்ட பெருமக்கள் சிறப்பிக்கப் பட்டனர்.
No comments:
Post a Comment