Friday, February 16, 2024

 என் தமிழாசான் மெலட்டூர்

 நாராயண பாரதி

தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்


மெலட்டூர் நாராயணபாரதி அவர்களின் வாழ்க்கை வரலாற்று  நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கும் பேராசிரிரியர் கவிஞர் மின்னூர் சீனிவாசன் அவர்களே நூலை வெளியிட்ட அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர்  கிருட்டிணன் அவர்களே தம் மனைவி கவிஞர் என பெருமையோடு கூறி ஊக்குவிக்கும் மூத்த வழக்கறிஞர் செல்லையா அவர்களே  அருமை நண்பர் அரிமா மணிவண்ணன் அவர்களே முகம் இளமாறன் அவர்களே  இயல்பாக தில்லியிலிருந்து வருகை தந்து உரையாற்றி  நிகழ்வைச் சிறப்பிக்கும் முனைவர் சங்கர் அவர்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெருங்கவிஞர் கு.ம.பா மகன் கபிலன்  உள்ளிட்ட அவையை வணங்குகிறேன். பலமுறை இந்த் அரங்கத்தை வழங்கி மெலட்டூர் நாராயண பாரதியை சிறப்பிக்கும் சத்சங்க தலைவர் கிருட்டிணமூர்த்தி அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். 

 சிறந்த செயல்பாடுகளைச செய்பவர்களை மனதாராப் பாராட்ட வேண்டும் அதில் எந்தக் குழு உணர்ச்சியும் இருக்க் கூடாது. இந்த அவையில் கவிஞர் சலாலுத்தின்  பகுத்தறிவுக்கவிஞர் வெற்றிப் பேரொளி எழுத்தாளர் முயற்சி முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.  மெலட்டூரார் அனைத்துத் தரப்பிலும் எவ்வளவு பேரன்போடு வாழ்ந்திருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும், 

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

 எச்சத்தார் காணப் படும்

என்ற வள்ளுவப் பேராசான் குறள் வழி உணரலாம்.

திருவல்லிக்கேணி முசுலீம் மேல்நிலைப்பள்ளியில் நான் பள்ளி இறுதி வகுப்பு (பதிணோராம் வகுப்பு) படித்தேன். எனக்கு தமிழாசிரியர் தந்தையார் பெருங்கவிக்கோ. இறுதி வகுப்பு முடிந்தவுடன் புகுமுக வகுப்பிற்கு சேர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தழிழாசிராகப் பணியாற்றிய இரங்காச்சாரியார் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துசென்று எனது புகுமுக வகுப்பிற்கு எங்கு சேர்க்கலாம் என்று வினவிய்போது அவர் காட்டிய வழிதான் தனராச் பெய்ட் செயின் கல்லூரி.. நெடிய உருவத்தோடு பஞ்சகசம் கட்டி நாம மிட்டு தமிழ்ப்பணியாற்றிய ஆசான் இரங்காச்சாரி அவர்கள்.அவர்களின்  திருத்தாள்களில் வணங்கப் பணிப்பார் தந்தையார் . அருமைத் தந்தையார பெருங்கவிக்கோ.அவர் காட்டிய வழியில் த.பெ.செயின் கல்லூரியில் சேரிந்தேன்.

சிந்தாதிரிப்பேட்டை எம் இல்லத்திலிருந்து துரைப்பாக்கம் தபெ செயின் கல்லூரிக்குச் செல்வேன். அன்று கல்லூரியைச்  சுற்றி கண்ணுக்கெட்ட்டியவரை வெட்ட வெளியும் எதிர்ப்புறம் சவுக்கு மரங்களும் இருக்கும். மழை வந்துவிட்டால் கல்லூரியைச் சுற்றி கடல் பெருக்கெடுத்த து போல் இருக்கும். அந்தக் கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் பணியாற்றினர. நான் படிக்கும்போது பேராசிரியர் நாகராசன் முதல்வராக இருந்தார். அருமையான் பேராசிரியப் பெருமக்கள் பணியாற்றினர். சில பேராசிரியர்கள் நெஞ்சை விட்டு நீங்கார். அதில் ஒருவர்தார் மெலட்டூர் நாராயணபாரதி. லாசிக் வகுப்பு எடுத்த பேராசிரியர் உதயசங்கர் பூகோள வகுப்பு பேராசிரியர் பார்த்த சாரதி  தம் வகுப்பரையில் உயிரைக் கொடுத்து பாடம் நட த்துவார். தமிழ்ப் பேராசிரியர்கள் இ.சே.சுந்தர்  கண்ணன் சந்திரமவ்லி குறிப்பிட த் தக்கவர்கள். சந்திரமவுளி சாரணர் இயக்கப் பொறுப்பாளாரக இருந்தார். நான் சாரண் இயக்கத்திலும் பங்கு பெற்றிருந்தேன். மாணவர்படைக்கு தலைவராக அருமை ந்ண்பர் பாட்கர் செயல்பட்டார். அருமை ந்ண்பர்கள் சவுந்திராசன் இராவீந்திரன் சிவக்குமார் இராமலிங்கம்  போன்ற பல நண்பர் சாரணர் இயக்கத்தில் இருந்தனர். இன்றும் அந்தத் தொடர்புகள் பசுமையாக உள்ளது.

கல்ல்லூரியில் தமிப் பேராசிரியருக்கே உரிய  உடையுடனும் செறுக்க்கான் நடையுடன் புன்சிரிப்பு தவழும் முகப்பொழிவுடனும் ஒரு பெட்டியோடு வரும் காட்சி என் கண்முன்  நிற்கிறது.

 அருமைப் சகோதரர்  கவித்தேனி வசந்தகுமார் அவர்கள் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகச்  சிறப்பாகத் தொகுத்துள்ளார். உண்மையிலேயே தம் ஆசானின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கைத் தொகுப்பை எழுதி நிலைத்த புகழைத்த தந்துள்ளார். வசந்தகுமார் பணி மகத்தான் பணி  வாழ்த்துகள். பேராசிரியாரின் ஒவ்வொறு நிகழ்விலும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

சராசரியாக வெறும் பாட த்தை மட்டும்  சராசரி ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்களின் திறன்களை அறிந்து அவர்களை ஊக்குவிப்பதில்  தலையான பேராசிரியர் நாராயணபாரதி.  இன்று பாரதிய சனதா கட்சியில் இருக்கு கவிஞர் சுபாசு என்னோடு படித்தவர். அன்றே வானதி எனப் பெயர் மாற்றி கவிதைகள் படைத்த சிறந்த மாண்வர். கல்லூரிக் காலங்களில் பேராசான் கவியரங்கங்கள் நட த்தி மாணவர்கள் கவிதை யாக்க ஊக்குவிப்பார். ஒரு முறை பாரதியார் பற்றி கவியரங்கம் நட த்தினார் நானும் சுபாசும் மற்ற மாணவர்களும் பங்கேற்றோம் . அன்று நான் எழுதிய மகாகவி பாரதியைப் பற்றி எழுதிய கவிதை என் கவியாற்றலைத் தூண்டியது நினைவில் உள்ள சில வரிகள்

 பாரதியை பைந்தமிழில் 

பாடச் சொன்னார்

பண்பரசர் எங்கள்திரு

 பாரதி ஆசான்

பா “ரதி “யைப் பாடுதற்கு

 யான் பாவலன் இல்லை

 பாரதியின் தாள் பணிந்து

 தொடங்கு கின்றேன்  

தொடர்ந்து எழுதிய வரிகள் நினைவில் இல்லை. தொடர்ந்து உலகெங்கும் கவிதையில் பயணித்து வருகிறேன். 

நண்பர் சுபாசும் மற்ற மாணவர்களும் சிறந்த் கவிதைகள்  வழங்கினர்.  இன்றும் கவிஞர் சுபாசின் கவிதைகள் முகநூலில் காண்பேன் நாராயண பாரதியி தாக்கம் இருக்கும்.

புகுமுகவகுப்பிற்குப் பின் வணிகவியல் பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். முதுகலை வ்ணிகவியல் மதுரை பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தேன்.

சுட்டி மிகச் சிறந்த இதழ் அந்த இதழை பேராசிரியர் சுந்தர் பேராசிரிய நாராயண் பாரதியும் நட த்திவந்தனர். தமிழில் மிகச் சிறந்த்  இதழ் . தமிழில் செறிந்த செம்மையான் செய்திகளை வழங்கிய இதழ் . அதில் ஆசானின் பங்களிப்பு மகத்தானது என்று பேராசிரியர் இ.சே. சுந்தரே கூறியுள்ளார். சுட்டி போன்ற இதழ்களை நட த்துவது சாதாரனச் செயல ல்ல சாதனைச் செம்மலாக வாழ்ந்துள்ளார்.

அம்பத்தூரில் கம்பன் கழகத்தை உருவாக்க அவர் பட்ட பாட்டை அருமையாகப் பதிவிட்டுள்ளார் நண்பர் வசந்தகுமார். கம்பனின் புகழைப் பரப்பிய சான்றோரக வாழ்ந்த பெருமகன்.

பேராசானின் நினைவேந்தல்  கூட்டம் அம்பத்தூரில் நடப்பதறிந்து  ஓடோடிச் சென்று ஆசானுக்கு அஞ்சலி செலுத்தி  தமிழ்ப்பணியுலும் வெளியிட்டேன். நீதியரசர் வள்ளிநாயகம் பங்கேற்று சிறப்பித்தார்.

ஏழை எளியோர்க்கு வாரி வாரி வழங்கி 

ஈதல் இசைபாட வாழ்தல் அதுவல்ல

ஊதிய மில்லை உயிர்க்கு

என்ற குறளுக்கு இலக்காக வாழ்ந்த தமிழ் அறிஞர் புகழ் ஓங்குக.

Saturday, January 6, 2024

 


அந்தணப் புலவர் கபிலர் அகவலும் செந்தமிழ்ச் செழியன் சந்தக் கவிகளும்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி

 இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம

புலவர் செந்தமிழ்ச்செழியன் நாடறிந்த புலவர் நற்றமிழ் கற்பிக்கும் பேராசான் தலைவர் கலைஞர் கலைஞர் தளபதி முதல்வர் ஸ்டாலின் இருவரது தொண்டறங்களையும் நூல் எழுதி நிலை நிறுத்திய பெருமகன் இன்று அந்தணப் புலவர் கபிலர் அகவலும் செந்தமிழ்ச் செழியன் ச்ந்தக் கவிகளும் நூலை எழுதியுள்ளார். அன்று வாழ்ந்த கவிஞர் கபிலர் பெருமான இன்று வாழும் கவிஞர பாடும் அளவுக்கு தமிழ் தொய்வில்லாமல் தொடரந்து புயணிக்கிறது என்றால் அது ந்ம அணிவகுப்புதான. தமிழ்க் கவிதை தொய்வின்றி தொடர்ந்து பயணிப்பதை நாம் அறியலாம். கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி கருத்தின் முன்னோடி கடமையின் சிகரம்.. யார் எவர் என அடையும் எண்ணாது நம் மண்ணில் படைத்துள்ளனர அந்தப் படைப்புகள்கதான் உலகப் புகழை தமிழ் அன்னைக்குத் தந்துள்ளது. கொரணா தீனுண்மி காலத்தில் உலகத்தையே முடக்கிப் போட்டாலும் இந்தக் கவிஞனின் சிந்தனையை செயலை முடக்க்கவில்லை. இணைய வழி தம் பதிவுகளை வழங்கிய வண்ணமிருந்தார். என்னுடைய செவ்வியையும் உலகவன் தொலைக்காட்சியில் பதிவு செய்து பேராற்றலை வெளிப்படுத்தினார் செழியனார். 

உலகத் தீரே உலகத் தீரே 

நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்து

 சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்

 மனிதற்க்கு வயது நூறு அல்லது இல்லை

என உலகத்தை நோக்கி மனித வாழ்வை படம்பிடிக்கிறார் . வள்ளுவப் பெருமான் கூறும் 

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்

 பெருமை உடைத்துஇவ் உலகு

நிலையாமையையும் கூற்றுவன் எப்போதும் வருவான் என எச்சரிக்கிறார் நம் செழியனார்.

நால்வகைச் சாதி இந்நாட்டினில் நாட்டினீர்

 மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால் 

 பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே 

அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறி 

கலந்து கருப்பெறல் கண்ட து உண்டா

&&&&&&

வட திசை பாப்பான் தென் திசை ஏகின்

 நடையது கோணிப் புலையன் ஆவான்

&&&&&&&

மீண்டும் வள்ளுவப்பேராசானின் 

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

 செய்தொழில் வேற்றுமை யான் 

என்ற மனித சமத்துவத்தை தமக்கே உரிய கருத்துக் கனலோடு முழங்குகிறார் செழியனார்.

அருந்தவ மாமுனியாம் பகவற்குக் 

கருவூர்ப் பெரும்பதி கண்பெரும் புலைச்சி

 ஆதிவயிற்றில் அன்று அவதரித்த 

கான்முளையாகிய கபிலனும் நானே 

என கபிலரின் பிறப்பை நம் கண்முன் நிறுத்திகிறார். செழியனார். தொல்காப்பியத்திலிருந்து நடிப்புக்கு வழங்கிய பத்து கருத்துக்களை வழங்கியுள்ளார். தற்போது கபிலர் பிறந்த பாங்கை திரைப்படம் காண்பது போல் உணர்ச்சிபொங்க தந்துள்ளார்.

திருவும் வறுமையும் செய்தவப் பேறும்

 சாவதும் வேறிலை தரணியோர்க்கே

 குலமும் ஒன்றே குடியும் ஒன்றே 

இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே

இது செழியனார் பெயரின்றி வந்தால் சங்க காலப் பாட்டோ என்னும் அளவிற்கு நடையும் கருத்தும்  நம்மை வியக்கவைக்கிறது. ஐம்பூதங்களும் மாறாமல் இன்றும் மாறி மாறி நிலைத்து நிற்பதுபோல் தமிழ் மொழியின் ஆற்றலும் மாறி மாறி நிற்கிறது. 

வழிபடுதெய்வம் வழிபாடெல்லாம் 

வழக்கமெல்லாம் ஒன்றுதான்

பெரறிஞர் அண்ணாமொழிந்த ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற செரிவான மொழிக்கு விளக்கம் தருகிறார் செழியனார்.

சந்தப் பாடல்களில் இன்றும் மாறாது சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டுகிறார். 

பாடுபட்டுப் பணத்தைத் தேடிப்     

புதைத்து வைக்கும் பித்தரே

 கூடுவிட்டு ஆவி போனால் 

கொண்டு போவதென்னவோ

       &&&&&&

குடங்குடமாய் பாலைக் கொட்டிக்

 குளிரச் செய்வதேனடா

 உயிரைத் திண்ணப் பசிக் குழந்தை

 கூப்பிட்டழுகும் பாரடா

இந்த சந்தப் பாவில் மூடப் பழக்கங்களை புறமுதுகிட்டுத் துரத்திய தந்தை பெரியாரின் முழக்கமாகத் தருகிறார். நான் 2002ல் வெளியிட்ட நெருப்புநதி நூலில் 

சிலைமேல் பால் 

குலைபதறும் குழந்தை 

குடமுழுக்குத் திருவிழா  

என எழுதியிருந்தேன் அந்தக் கருத்தினுடைய சாரம் இன்றும் தமிழ்மண்ணிற்கு தேவையாக உள்ளது. 

பிச்சைக்காரன் பிச்சை கேட்டால் 

ஒதுங்கி நின்று வீசுவாய்

 உச்சைக் குடும்மி பிச்சை மட்டும்

 பதுங்கிப் போட்டு வணங்குவாய் 

 இன்றுகூட மத்திய நிதியமைச்சர் நிர்மலா அம்மையார் கோவிலில் தட்டினில் தட்சனை போடுங்கள் என்ற பேச்சுக்கான் சாட்டையடியாக க் காண்கிறேன். செழியனாரின் சந்தப் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

 ஏசு அல்லா இந்துக் கடவுள்கள் அனைத்தையும் கடந்து தூய்மையான கள்ளமில் உள்ளத்திற்கு வாருங்கள் என மொழிகிறார் செழியனார். வள்ளுவப் பேராசனின் 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் 

ஆகுல நீர பிற.

 என்ற குறள் வழி வாழ இந்நூல் பரை சாற்றுகிறது. வாழ்க செந்தமிழ்ச்செழியனார் ஓங்குக அவரது எழுத்தாற்றல்.

Monday, January 1, 2024

 உலகக் கவிஞர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

உலக க் கவிஞர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நடப்பது பொறுத்தமான ஒன்று.தலைவர்  கலைஞரும் உவமைக் கவிஞரும் இணைபிரியாத நண்பர்கள். தலைவர் கலைஞர் நன்றி உணர்ச்சியின் வடிவம். சுரதா வாழும் காலத்திலேயே அவர் நிகழ்வுகளில் பங்கேற்று புகழ்ந்து பெருமைப்ப்டுத்தியுள்ளார். சுரதா இறந்தபின் அவர் சிலையை அசோக் நகரில் திறந்து கவிஞருக்கு நிலையான புகழைத் தந்துள்ளார். அந்த்ச் சிலையை திறப்பதற்கு சுரதாகல்லாடன் எடுத்த முயற்சிகள் அளப்பரியது தந்தைக்க்கு செய்யவேண்டிய்  பணியை சுரதா கல்லாடன் ஆற்றியுள்ளார் வாழ்த்துகள். வாழும்காலத்தில் சுரதா இணையரை அன்போடு கவனித்த இராசேசுவரி கல்லாடன் இணையரை நெஞ்சார்ப் போற்றுகிறேன்.

புதுவை தமிழ்ச்ச்ங்கத் தலைவர் வி.முத்து தலைசி’றந்த தமிழ்ப் புரவலர்.தமிழ் நிகழ்வுகள் அனைத்திலும் சிறப்பாக பங்கேற்று சிறப்பிக்கிறார். இன்று கலைஞர் நூற்ராண்டு விழாவில் தலைமையேற்று  கவிஞர் இராசேசுவரிக்கு வழங்கிய விருது தகுதியான் விருது, நூறு எழுத்தாளர் பெருமக்கள் விருது பெறுகிறீர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். விழாக் குழுவினரை நெஞ்சாரப் போற்றுகிறேன். 

கலைஞரின் நூற்றாண்டு விழா என்பது கலைஞருக்குப் பெருமையல்ல தமிழினத்திற்கு கிடைக்கும்  பெருமை. அருமைக் கவிஞர் கடவூர் மணிமாறன் அவர்கள் சுரதா 100 நூறு கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து நூலை தொகுத்துள்ளார். அந்த நூலை புதுவைத் தமிழ்சங்கத்  தலைவர் முத்து வெளியிட நான் பெற்றுக் கொண்ட தை பெரும் பேறாகவே கருதுகிறேன். கடவூர் மணிமாறன் சுரதா நூற்றாண்டுச் சிறந்த பதிவாக கொண்டு வந்துள்ளார்.

தலைவர் கலைஞர் அவர்களை ஆண்டுதோறும் பலமுறை நானும் தந்தையாரும் சென்று காண்பது வழக்க்கம். பலமுறை தலைவரிடம் உரூபா 50 உரூபா 10 நோட்டுகள் பெற்றுள்ளேன். தலைவர் கலைஞரைப் போல் எளிமையாக அனைவரையும் கண்டு அளவளாவும் அரசியல் தலைவரை காண்பது அரிது. ஒருமுறை தமிழ்க் கவிஞர்கள் அனைவரையும்  ப்ன்னாட்டுத் தமுழுறவு மன்றம் சார்பில் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில்  அழைத்துச் சென்றோம், அப்பொது இங்கே உள்ள கவிஞர் சிந்தைவாசன் செங்கரும்பு ஆசிரியர் கவிஞர் தாமரைப் பூவண்ணன் ஆகியோர் இங்கு விருது பெறுகின்றனர். விருது பெறும்  பெருமக்கள் அனைவரும் கலைஞரின் ஆற்றலை பெருமையை  உலகம்  பின்பற்றச் செய்யவேண்டும். 

தலைவர் கலைஞர் முதல்வர் பொறுப்பில் இருக்கும்போது  நானும் தந்தையும் பொங்கல் திருநாளன்று  தலைவர் கலைஞர அவர்களைக் காணச் சென்றோம். அப்போது செம்மொழி வாரியப் பெருமக்கள்  வருகை தந்திருந்தனர். அறிஞர் பெருமக்கள் பலர் சூழ்ந்திருந்தனர். செம்மொழி பொறுப்பு அதிகாரி செமொழி இராமசாமி  அந்த ஆண்டு செயல் சாதனை அட்ட்டவனைகளை காண்பித்தார். அதைக் கண்டு தம ஆட்சியில்  தமிழைச் செம்மொழியாக்கி செம்மொழி வாரியச் சாதனைகளை பெருமைதமடைந்து முதல்வர் கூறிய வார்த்தைகள் என் செவியிலும் நெஞ்சிலும் நிலையாக நிற்கிறது. தலைவர் சம்ற்கிருத த்திற்கு தனித்துவம் என்று ஓன்று கிடையாது அனைத்தும் நம்மிடம்மிருந்து எடுத்து  தன்வயமாக்கி கொண்டார்கள் அவற்றையெல்லாம் நம் ம்ழொயின் சிறப்பு என்பதை உறுதிபட நிலைநாட்ட வேண்டும் எஎன்று கூறினாரா. செம்மொழியின் அடையாளமாக வாழ்ந்த  தலைவர் கலைஞர் அவர்கள்  நூற்றாண்டு விழா உலகம் ம்ழுமையும் கொண்டாடி வருகிறார்கள்  தலைவரின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் பணியை உலகத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்

அண்மையில் யான் திருவாரூர் சென்றிருந்தேன் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்ட த்தைக் காணவேண்டும்  திருவாரூர் மாவட்ட  தமிழ்ப்பணி அன்பர் மடப்புரம் தங்கவேல் அவர்களைக் தொடர்புகொண்டு கூறினேன் உடனெ அவர் வருகை தந்து காட்டூர் கோட்டம் அழைத்துச் சென்றார். கலைஞரின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக அங்கு கலையம்சத்தோடு நிறுவியுள்ளனர். கல்லக்குடி போராட்டம்  அனைத்து கலைஞரின் போராட்டங்களையும் நிலையாக கலை ஒவியமாக வைத்துள்ள்னர். தயாளு அம்மையார் அறக்கட்டளை வழி கலைஞர் குடும்பம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர் அனைவரும் காணவேண்டும். நம் முதல்வர் இளைஞர்கள் தந்தை பெரியார் பேர றிஞர் அண்ணா தலைவர் கலைஞர்  தட த்தைப் பின்ற்றும் திராவிடப் பல்கலைக்கழகமாக உருவாக்கியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அரும் திராவிடப் பணியை போற்றுவோம்.

தமிழக அரசின் அகவைமுதிர்ந்த  தமிழறிஞர்கள் உதவி பெறுவோர் சங்கத்தின் பொறுப்பாளர் துரைமுருகன் பம்பரமாக சுழன்று பணியாற்றும் முனைவர்  அருணா தொல்காப்பியன் ஆகியோரின்   பேருழைப்பை இங்கு காண்கிறேன்.  இணைந்து பணியாற்றும் அனைத்த்ப் பெருமக்களுக்கும் வாழ்த்துகள். 

கலைஞர் வ்ழியில் தமிழ் தமிழரை உயர்த்துவோம் ஓங்குக கலைஞர் புகழ். 

Wednesday, December 13, 2023

 மலேசியா கெடா மாநிலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மேனாள் அமைச்சர் ட த்தோ சுப்பிரமணியம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

மலேசியா கெடா மாநிலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மேனாள் அமைச்சர் ட த்தோ சுப்பிரமணியம் மலேசியாவில் காலமானார். ட த்தோ சுப்பிரமணியம் தமிழகத்தில் பயின்று மலேசியாவின் சிறந்த மருத்துவர்.  ம இ க வின் பொறுப்பேற்று தேர்தலில் வென்று மலேசிய அமைச்சராகப் பொறுப்பேற்று அருந்தமிழ்த் தொண்டாற்றியவர். வேலூர் திராவிட இயக்க குடும்பமான மூத்த வழக்கறிஞர் சமரசம் அவர்க்ளின் சகோதரி தாமரைச் செல்வியை மண ந்து இணையரோடு அரும்பணியாற்றியவர். கெடா நகரில் அவரது இல்லத்தில் தங்காத தமிழ்ப் பெருமக்களே இல்லை என்னும் அளவிற்கு விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கிய பெருமக்கள்.  கெடா ந்கரில் உலகத்தமிழர் ஒற்றுமை மாநாட்டை  சிறப்புடன் தம் துணைவியார் அமர ர் ட த்தின்  தாமரைச்செல்வியோடு இணைந்து நட த்திய சாதனைத் திலகம். மாநாட்டின் பன்னாட்டுக் குழுத் தலைவராக தமிழ்மாமணி வா.மு. சே . திருவள்ளுவரை நியமித்தார். மாநாட்டு மலரை விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட  தமிழ்மாமணி வா.மு.சே திருவள்ளுவர் பெற்ருக்க் கொண்டார்.இனமானக் காவலர்  பேராசிரியர் க.அன்பழ்கனார் மகள் தாமரை இதய் மருத்துவர் சொக்கலிங்கம் இணையர் பங்கேற்று சிறப்பித்தனர். கவிஞர் செம்பை சேவியர் புலவர் தேவதாசு இலக்கியத் தேனி வாசு இலங்கை ரூபன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிந்து அனைவரையும் இராசராச சோழன் வென்ற பூசாங்க பள்ளத்தாக்கு பகுதிக்கு அழைத்து சென்று அருந்தொண்டு ஆற்றிய பெருமகன். சென்னை வரும்போதெல்லாம் என்னை சந்தித்துச் செல்லும் பேரன்பிற்குரியவர். நான் சுவிட்சலாந்து செல்வதற்கு முன் அவரை சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.பெருமகன் அண்மையில் காலமானார் என்ற செய்தியை ஆசிரியமணி மாணிக்கம் தெரிவித்தார். மலேசியா ரோட்டரி சங்கத்தின் வாயிலாக ஏழை எளியோருக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல் பெருமகன் மலேசியப் பயணத்தில் பல நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்.

Sunday, December 10, 2023

 ஊட்டிடும் தாயைப் போன்றே  

ஊக்கமாய் முதல்வர் ஸ்டாலின் 


 காலத்தின் சூழல் எல்லாம்

  கோலத்தின் அழிவாய்ப் போச்சே 

ஞாலத்தைச் சுற்றி  மாசே

  ஞாயிறை மறைக்கும் வண்ணம்

 ஓலமாய் மழையின் உச்சம்

 ஓய்விலா சென்னை மண்ணில்

பேயென நகரம் சாய்க்கும் 

பேதமை ஏனோ ஏனோ 


படகினில் செல்லும் வன்ணம் 

  பெய்ததே வெள்ளம் எங்கும்

 தடமுள நீரின் போக்கில் 

அடுக்ககம் வின்னை முட்டும்

மடக்கிடும் நீரே இல்லம்  

மடையென பாய்ந்தே மாய்க்கும் 

திடமிலா மக்கள் ஊரில் 

தீமையாய் மாறும் மோசம்


ஆட்சியின் அசூர வேகம் 

ஆளுமைப் திட்டப் போக்கால்

 மாட்சிமை உயிர்கள் எல்லாம்  

மாதவப் பணியால் காத்தார்

ஊட்டிடும் தாயைப் போன்றே  

ஊக்கமாய் முதல்வர் ஸ்டாலின் 

காட்டிடும் கடமை வேகம்

காவலாம் திமுக அன்றோ


மனமாசு கருத்தைக் கூறும்  

மக்களின் துன்பம் அறியார்

 தினமுமே உளறும் நெஞ்சர்

 திண்ணியப் பணியை மெச்சார் 

வினைகளை ஆற்ற வேண்டும் 

 விருட்சமாய் வழங்க வேண்டும்

 சினத்துடன் உள்ள மக்கள்

 சீற்றத்தைப் போக்க வேண்டும்

Thursday, December 7, 2023

 

 

புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின் திருமணப் பொன்விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்



புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின்திருமணப் பொன்விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. நிகழ்வுக்க்கு இணையர் மக்கள் பொறியாளர் அமுதா நடேசன் வரவேற்புரை வழங்கினார். தம் தந்தை தாயின் சிறப்பகைக் கூறி அனைவரையும் வரவேற்றார். வாழ்த்துகள். அமரிக்காவில் வாழும் மகன் அருளரசு தம் பெற்றோரின் பெருமையையும் அமெரிக்க தமிழகத் தமிழர்களில்  நிலையையும் ஆற்றொழுக்காகப் பேசினார் வாழ்த்துகள். மருத்துவர் செய்கணேசு தம் பெற்றோருக்குத் தெரியாமலேயே இந்த நிகழ்வை நட த்தி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார் சிறப்பு.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மண்ணுயிர்க் கெல்லாம் இனிது

            என்ற வள்ளுவப் பேராசான் வாக்குப்படி இந்த இணையர் தம்பெருமையையும் காத்து உலகிற்கு நன் மக்களை ஈன்று சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். தங்களின் பலத்த கரவொலிக்கிடையில் பொன்விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொன்னரசனின் தம்பி இராசேந்திரன் தொடக்கம் முதல் இன்று வரை எம்மையெல்லாம் அழைத்து விழாவை சிறப்பாக நட த்திவருகிறார். இப்படி ஓர் தம்பி பவள விழா நேரத்தில் அமைவது சிறப்பு தம்பி உடையான் படைகஞ்சான் என்பது உண்மை போலும்.  வாழ்த்துகள். அனைவரும் அம்மா சந்திரா அவர்களின் பெருமையைப் பேசினீர்கள் மக்கள் உட்பட பேசினார்கள். யான் புலவர்கரசரின் ஈகத்தை பதிவிட விரும்புகிறேன், எந்த சராசரி மனிதனுக்கு பிள்ளையை முறையாக  வளர்க்கும் பெற்றோரும் பொறாமை வஞசனைஇல்லா உறவுகளும் இருந்தால் இயல்பாக பொன்விழா நட்த்துவார்கள். தங்களைச் சார்ந்த உறவுகள் கூடுவார்கள்.

ஆனார் தெய்வத் தமிழ்ச்சங்கம் மருத்துவர் பாரி தகுதி திவாகர் பொறிஞர் சிறீதார் முனைவர் மல்லிகா எதிரில் அமர்ந்திருக்கும் கவிக்கோ வசந்தராசன் புலவர்குழு முனைவர் சோ. கருப்பாசாமி எண்ணற்ற தமிழ் உறவுகள் கூட முடியுமா. புலவர்க்கரசரின் தமிழ்த்தொண்டிற்காகவே அவருடை உலகளாவிய தமிழ் உரைகளுக்காகவே நாமெல்லம் கூடி வாழ்த்துகிறொம் . பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பிலும்  புலவரின் இளைமைக்க்கால நண்பர் பெரும்புலவர் செந்தமிழ்ச்செழியானார் சார்பிலும் பொன்விழா இணையரை வாழ்த்துகிறேன்

  புலவர்க்கரசர் தம் வாழ்வை தமிழுக்காகா வாழ்ந்து ஆற்றியுள்ள சிறப்பை நம் மருத்துவர் பாரி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தமது மருத்துவ்ப் பணிகளுக்கிடையில் எண்ணற்ற் உலகக் குறிப்புகளையெல்லாம் வழங்கி நம்மை சிந்திக்க வைத்துள்ளார். படிக்கும் காலத்திலேயே மாணவர் மன்ற தமிழ்த் தேர்வுகளிலேயெ மிகச் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் வேலை தேடி சென்னை வரும்ப்பொது மாணவர் மன்ற ஆட்ட்சிக்குழு உறுப்பினராக இருந்த புலவர் கோ, வில்வபதி புலவர் தணிகை உலகநாதன் இந்து தியாலசிகள் பள்ளியில் இருந்தபோது இரவது தமிழ்ப்பற்றை அறிந்து இவருக்கு தமிழாசிரியராக நியமித்துள்ளனர். அதே பள்ளியில் தலைமையாசிரியர் வரை சென்று சிறந்த நன்மாணாக்கர்களை உருவாக்கிய பெருமைக்குரிய ஆசிரியப் பெருமகன் தம் துணைவியாரையும் தமிழாசிரியராக உருவாக்கி   அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றியுள்ளனர். இவர் தொடக்க காலத்திலிருந்தே இதழாசிரியர். புன்னகை என்ற இதழை நட த்திய பெருமைக்குரியவர். .

 இலக்கியச் சோலை இதழின் ஆசிரியர் தமிழினியன் தம் இதழில் ஒரு செய்திவெளிய்ட்டுள்ளார். பொன்னரசன் பொங்கல்  மூன்று நாள் பள்ளி வ்டுமுறையில் கர்நாடாககோலர் தங்கவயல் பகுதிக்கு பட்டிமன்றப் பேச்சுக்காக சென்றுள்ளார் இவர் பேச்சின் திறத்தை அறிந்த பேராயக் கட்சியின் வேட்பாளரான புலீந்த்திரன் தம் தேரதல் பரப்புரைக்காக 10 நாள் தங்கி பரப்புரைசெய்யுங்கள்  என வேண்டியுள்ளார். பொன்னரசன் பள்ளி வேலையை எண்ணி சொல்லாமல் இரவோடு இரவாக சென்னை திரும்ப்பிவிட்ட்டார். இவர் மட்டு ம் அன்று பேராயக் கட்ட்சியின் பிடியில் சிக்கியிருந்தால் ஒரு மத்திய மந்திரியாகவே வந்திருப்பார். மிக ஆற்றல் பொறுந்தியவர் நம் புலவர்க்கரசர்.

மின்வாரியத்தின் அதிகாரி சிறீதர் அவர்கள் மிகச் சிறந்த உரையாற்றியுள்ளார். எல்ல நிலைகளிலும்  தமிழ் வரவேண்டும் என்று போராடிகொண்டிருக்கும் வேலையில் தமிழைப் பட்டி மன்றப் பேச்சுகளால். எழுத்துக்களால் தகுதியான் தமிழை மாணவர்களுக்கு ஆசானாக இருந்து கற்பித்தலால் தம் வாழ்நாளை வழங்கிய பொன்விழாக் காணும் இணையரை வாழ்த்தி  மகிழ்கிறேன்.உங்கள் தொண்டு மென்மேலும் தொடரவேண்டும் பாவேந்தர் குடும்ப விளக்கின் பாட்டுபோல் ”அவள் இருக்கிறாள் என்பதே இன்பம் ” என்ற கவிதை வழி நூற்றாண்டு கண்டு  வாழ்க வாழ்க என வாழ்த்தி விடைபெறுகிறேன்.

(26 -11-23 அன்று சென்னையில் புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின்திருமணப் பொன்விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

Friday, December 1, 2023

  •  உலக் கவிஞர் தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானார் சென்னையில் நினைவேந்தல்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்




தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானதை நம் சேது பாட்கரா குழுமத்தின் தலைவர் சேதுகுமணன அவர்கள் இந்து நாளிதழில் ஒரு இரங்கல் விளம்பரம் வெளியிட்டிருந்தார். இகேதா அவர்கள் மறைந்தை நன்றி உணர்ச்சியோடு இந்தியத் திருநாட்டில் வெளியிட்டது அவரது நன்றியுணர்ச்சியைக் காட்டுகிறது. பின் தந்தையார் இசுரேல் கவிஞருடன்   இருக்கும் பட த்தை எனக்கு புலனத்தில் அனுப்பி ஐயாவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள் எனப் பதிவிட்டிருந்தார்.  பின் என்னை தொலைபேசியில் அழைத்தர் குமணன். நான் இகேதா அவர்களுக்கு ஒரு நம் கவிஞர்களை அழைத்து நினைவேந்தல் நட த்த வேண்டுமே என்றேன். நான் நாளை சென்னை வருகிறேன் நட த்திவிடுவோம் என்றார். இன்று நாம் இகேதா நினைவைப் போற்றும் வகையில் கூடியுள்ளோம்.

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 செய்நன்றி கொன்ற  மகற்கு

வள்ளுவப் பேராசான் கருத்துப்படி இன்று செய்நன்றியாக உலக் கவிஞருக்கு நினைவேந்தல் நட த்துகிறோம்.

இங்கு நாம் இகேதா என்ற கவிஞரை எண்ணுகிறோம் என்றால் அதற்கு மூல காரணம் கவிதை ஞாரி கிருட்டிணா சீனிவான். தமிழ்க் கவிஞர்களுக்கு உலகப் பார்வையை தொடக்கியவர் கவிதை ஞானி கிருட்டிணா சீனிவாசன். அவர் நட த்திய பொயட்ரி ஆங்கில மாதப் பத்திரிக்கை உலகப் புகழ் பெற்றது தாம் இறக்கும் வரை தொடர்ந்து நட த்தியவர். இகேதா அவர்களின் கவிதைகளை தொடர்ந்து பொயட்ரி ஆங்கில இதழில் வெளியிட்டு இந்திய மக்களுக்கு அறிமுகப் படுத்திய பெருமகன். இகேதாவின் கவிதைகளை மட்டுமே முழு இதழிலும் வெளியிட்டு பெருமை சேர்தவர். த்ந்தையார் பெருங்கவிக்கோவை 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாட்டிற்கு அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்ற பெருமை  கவிதைஞானி கிருட்டிணா அவர்களையே சாரும். 1980ஆம் ஆண்டே அமெரிக்க கவிஞர் ரோசுமேரி வில்கின்சன் சான்று வழங்கி அழைத்தமை வரலாற்று நிகழ்வாகும். அந்த மாநாட்டில் 300 கவிஞர்களின் கவிதைகளை கவிதைஞானி மொழிப்யர்க்க நாங்கள் அதை  வெளியிட்டு அதை அமெரிக்கா மாநாட்டில் அறிஞர் அவ்வை நடராசன் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட து தமிழ்க் கவிஞர்களின் பெருமைக்குரிய நிகழ்வாகும். 43 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.

குமணன் அவர்கள் சப்பான் மொழி ஆசிரியை கியோமி அவர்களின் எண்ணை கொடுத்டிருந்தார். நான் ஆங்கிலத்தில் பேசினேன் அவர் அழகு தமிழில் பேசினார் நான் அவரிடம் நினைவேந்தல் நிகழ்வில் தமிழில் பேசுங்கள் என்றேன் சிற்ப்பாக தமிழில் பேசினார். அவர் தமிழில் பேசுப்போது அழகாக மிளிர்கிறார்.  

டததைசாகு இகேடாஅ சனாவரி2 1928 ஆம் ஆண்டு  சப்பான் ஓட்டா  டோக்கியோ நக்ரில் எட்டுக்க் குழந்தைகளில் ஐந்தாம் மகனாகப்  பிறந்தார். நவம்பர் 15ஆம் நாள் 2023சின்சுக்கு டோக்கியோ நகரில் 15 நவம்பர் 2023 அன்று இறந்தார். தம் பெற்றோருக்கு  எட்டு மக்களில் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர். தம் 30ஆம் அகவையில் காச நோயால் பாதிக்கப்பட்டு உயிர் மீண்டு வந்தவர் உல்க நாடுகளின் பல்வேரு சிறப்பு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர் இகேதா. தேசாய் இகேதா புத்த அருள்ஞானி. மனித குல அமைதிக்காகப் பாடுபட்டவர் சோகா அக்காய் அமைப்பின் மூன்றாம் தலைவர். உலக் சோகா அக்காய் அமைப்பி  நிறுவனத் தலைவர்.  1957ஆம் ஆண்டு 50.000 சோக்கா அக்காய்இளைஞர்களைத் திரட்டி மனித குல் அழிவிற்கான 

 அனுஅயுத்தை எதிர்த்துப் போராட்டம் நட த்தியுள்ளார்.தம் 32ஆம் வய்தில் அமைரிக்கா கண்டா பிரேசில் போன்ற நாடுகளுக்கு நிச்சிரன் புத்த மத கொள்கைகளுக்கும் உலக அமைதிக்கும் பயணம் மேற்கொண்டார். இவரது துணைவியார் கோனெக்கோ இகேடா இணையருக்கு மூன்று மக்கள். இவர் புகைப்படம் த த்துவம் கவிதை இசை என அனைத்துத் துறையிலும் நூல்கள் வெளியிட்டுள்ளார்.இகேதா கல்லூரியின் நூலகர் பேசும்போது இகேதாவின் நூல்கள் அனைத்தும் கல்லூரியில் உள்ளதை குறிப்பிட்டார். பேராசிரியர்கள் அனைவரும் இகேதா பற்றி கவிதை தம்ழிலும் ஆங்கிலத்திலுக் பாடினீர்கள். இறுதியாக வள்ளியம்மாள் கல்விக்  குழுமத்தின் தலைவர் குமணன் உரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கவிதையால் அனைத்தும் முடியும் என்பதை சேது குமணன் சாதித்துள்ளார். 

(உலகக் கவிஞர் தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானார்30 /11/2023 சென்னையில் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)