மலேசியா கெடா மாநிலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மேனாள் அமைச்சர் ட த்தோ சுப்பிரமணியம்
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
மலேசியா கெடா மாநிலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மேனாள் அமைச்சர் ட த்தோ சுப்பிரமணியம் மலேசியாவில் காலமானார். ட த்தோ சுப்பிரமணியம் தமிழகத்தில் பயின்று மலேசியாவின் சிறந்த மருத்துவர். ம இ க வின் பொறுப்பேற்று தேர்தலில் வென்று மலேசிய அமைச்சராகப் பொறுப்பேற்று அருந்தமிழ்த் தொண்டாற்றியவர். வேலூர் திராவிட இயக்க குடும்பமான மூத்த வழக்கறிஞர் சமரசம் அவர்க்ளின் சகோதரி தாமரைச் செல்வியை மண ந்து இணையரோடு அரும்பணியாற்றியவர். கெடா நகரில் அவரது இல்லத்தில் தங்காத தமிழ்ப் பெருமக்களே இல்லை என்னும் அளவிற்கு விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கிய பெருமக்கள். கெடா ந்கரில் உலகத்தமிழர் ஒற்றுமை மாநாட்டை சிறப்புடன் தம் துணைவியார் அமர ர் ட த்தின் தாமரைச்செல்வியோடு இணைந்து நட த்திய சாதனைத் திலகம். மாநாட்டின் பன்னாட்டுக் குழுத் தலைவராக தமிழ்மாமணி வா.மு. சே . திருவள்ளுவரை நியமித்தார். மாநாட்டு மலரை விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட தமிழ்மாமணி வா.மு.சே திருவள்ளுவர் பெற்ருக்க் கொண்டார்.இனமானக் காவலர் பேராசிரியர் க.அன்பழ்கனார் மகள் தாமரை இதய் மருத்துவர் சொக்கலிங்கம் இணையர் பங்கேற்று சிறப்பித்தனர். கவிஞர் செம்பை சேவியர் புலவர் தேவதாசு இலக்கியத் தேனி வாசு இலங்கை ரூபன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிந்து அனைவரையும் இராசராச சோழன் வென்ற பூசாங்க பள்ளத்தாக்கு பகுதிக்கு அழைத்து சென்று அருந்தொண்டு ஆற்றிய பெருமகன். சென்னை வரும்போதெல்லாம் என்னை சந்தித்துச் செல்லும் பேரன்பிற்குரியவர். நான் சுவிட்சலாந்து செல்வதற்கு முன் அவரை சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.பெருமகன் அண்மையில் காலமானார் என்ற செய்தியை ஆசிரியமணி மாணிக்கம் தெரிவித்தார். மலேசியா ரோட்டரி சங்கத்தின் வாயிலாக ஏழை எளியோருக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல் பெருமகன் மலேசியப் பயணத்தில் பல நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்.
No comments:
Post a Comment