சென்னையில் ஆனந்த இல்லம் திங்களிதழை வெளியிட்டு
தமிழ்மாமணி வா.மு.சேதிருவள்ளுவர் ஆற்றிய உரை
நண்பர் மனோகரன் அவர்கள் தொலைபேசியில் அழைத்து ஆனந்த இல்லம் இதழை வெளியிடவேண்டும் எனக் கூறினார். வருகிறேன் என்று கூறி இன்று இங்கு தங்கள் முன் நிற்கிறேன். அண்மையில்தான் கத்திப்பாரா சாலைப் பூங்காவை நம் சாதனைத்தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார் அந்தப் பூங்காவில் நாம் இந்த இதழை வெளியிடுகிறோம்.மிக்க மகிழ்ச்சி
, நிருபர்கள் அறிமுகம், வளர்ச்சி ஆலோசனைகள் கூட்ட வரவேற்புரையாற்றிய கிருட்டிணமூர்த்தி மனோரகனும் சென்னை முசிலிம் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள் எனக் கூறினார். எனக்குப் பின் அப் பள்ளியில் படித்த பெருமக்கள். என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ எங்கட்கு தமிழாசிரியர் அவர் ஊட்டிய உணர்வுதான் இன்று மனோகரன் போன்றவர்கள் தமிழ் ஆர்வத்தோடு இதழ் நடத்துகின்றனர்.
வருகை தந்துள்ள இதழாளர்கள் இணை ஆசிரியர் திரு சி.கே. பெருமாள், உதவி ஆசிரியர்,திருமதி தீபா மதுரவாயல்,திருமதி. முத்துலட்சுமி ஜான்சி ராணி அறக்கட்டளை, நிருபர்கள் உதயகுமார், கோட்டீஸ்வரன், சரண்ராஜ்,ஜெயசித்ரா அச்சரப்பாக்கம், தமிழரசி செங்கல்பட்டு,பாத்திமா,விஜயாமணி எண்ணூர்,கண்ணன் பட்டயக்கணக்கர் சந்திரசேகரன்,பேராசிரியர் மகேந்திரன் ஆகியோர் வருகை தந்துள்ளனர் அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பூங்காவிற்கு நான் மனோகரன் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிட்டேன் யாரும் இன்மையால் நான் திரும்பிவிட்டேன் இருப்பினும் ஒரு இதழ் நட்த்துவது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். மனோகரனிடம் கைப்பேசியில் பேசியபோது நான் அச்சகத்தில் உள்ளேன் என்றார். அவசியம் நான் வரவேண்டும் என வலியுறுத்தினார். அவர் நிலையறிந்து அவரை ஊக்குவிக்கும் முகத்தான் இங்கு வருகை தந்துள்ளேன். மீண்டும் வருகை தந்தபோது அருமைச்சகோதரர் கலைமாமணி தி.க.ச. புகழேந்தி அவர்களைக் கண்டேன்.தமிழகத்தின் கலைக்காகவே வாழ்ந்த தி.க.சண்முகம் அவர்களின் திருமகனார். நான் வெளியிட் தி. க. ச. புகழேந்தி பெற்றுக்கொள்வது சாலச் சிறந்த்து. எம் தந்தையார் பெருங்கவிக்கோ தொடங்கிய தமிழ்ப்பணி இதழை கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கிடையில் நடத்தி வருகிறேன். இதழ் நடத்துவுது எளிதான செயலன்று. மனோகரன் அவர்கள் திட்டமிட்டு சிறப்பாக நடத்தவேண்டும் என விழைகிறேன். இதழ் நட்த்துவோர்க்கு கொள்கை உரம் இருக்க வேண்டும் நம் கருத்தை தெளிவாகப் பதிவு செய்யவேண்டும்.. எங்கள் .தமிப்பணி இதழ் கொள்கை இதழாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கைக்கு தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. எங்கள் பன்னாட்டுத் தம்ழுறவு மன்றத்தின் ஏழு மாநாடுகளையும் நடத்துவற்கு இந்த இதழின் பங்களிப்பு மகத்தானது. இதனை நான் கூறுவதற்குக் காரணம் ஒரு இதழ் உலகத்தை நம்மோடு ஒருங்கிணைக்கிறது. தமிழ்ப்பணி இதழ் நாங்கள் செருமணி, தாய்லாந்து, மலேசியா, அமெரிக்கா, போன்ற வெளிநாடுகளில் நடத்திய மாநாட்டின் தூதுவனாக செயல்பட்ட்து. இதழ்ப் பணிக்காக நான் உலகம் முழுமையும் பயணித்து ஒரு உறுப்பிணர் குழாத்தையே உருவாக்கியுள்ளேன். அந்தக் காலகட்ட்த்தில் இதழ்களை அஞ்சலில்தான் அனுப்பவேண்டும். உலகம் முழுமையும் ஒரு உறுப்பிணர் குழாத்தையே பெற்றிருந்த பெருமைக்குரிய இதழ் தமிழ்ப்பணி இன்று இணையதளத்தில் வலம் வருகிறது.
நண்பர் மனோகரன் அவர்களின் ஆனந்த இல்லம் முதல் இதழைக் கண்டேன் மிகச் சிறப்பாக வெளியிட்டுள்ளார். உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அண்ணாச்சி வி.சி. சந்தோசம் அவர்க்ளின் வாழ்த்தைப் பெற்றுள்ளார். இலக்கியம் ஆண்மிகம் அரசியல் மருத்துவம் அறிவியல் வணிகம் என அனைத்து துறை சார்ந்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தம் துணைவியார் மகாலட்சுமி கால்மானாலும் அம்மையாரின் நினைவைப் போற்றியும் பின் அமரர் அரசு, நண்பர் தமிழ்ச்செல்வன் இதழ்களின் காவலராக வாழ்ந்த அமரர் வி.சி.பன்னீர்தாசு ஆகியோர்க்கு இந்த இதழை காணிக்கையாக்கியுள்ளார் ஆசிரியர். அவரது நன்றியுணர்ச்சி போற்றத்தக்கது.
இதழாளர் மனோகரன் சிறந்த கவிஞராகவும் உள்ளார் நமது முப்படை தளபதி பிபின் இராவத் அவர்கட்கு எழுதியுள்ள கவிதை நம் நெஞ்சைப் பிழிகிறது.
”முப்பிறவி இருப்பது உண்மையெனில் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் என்றே காதிருக்கிருக்கிறது முப்படைகளும் உங்களுக்காக எப்போது வருவீரோ என்றே”
இதழாளர் மனோகரன் அவர்கள் பழுத்த அனுபவம் உள்ளவர். சிறந்த நண்பர்களைப் பெற்றவர். அவருடைய அனுபவமும் நட்பும் இந்த இதழை நன்கு கொண்டுசெல்வார் என்பதில் ஐயமில்லை.. ஆனந்த இல்லம் சிறந்து விளங்க வாழ்த்தி விடைபெறுகிறேன்
(. 03-01-2022 திங்கட்கிழமை மாலை 3-30 மணி அளவில் சென்னை கிண்டி கத்திப்பாரா பூங்காவில் ஆனந்த இல்லம், 2-ம் மாதம் டிசம்பர் இதழை தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வெளியிட்டு ஆற்றிய உரை )
Top Casinos Near Me (Alaska) - Mapyro
ReplyDeleteCheck out the top casinos in Alaska in 청주 출장샵 Alaskan 경기도 출장안마 · Hollywood Casino at Charles Town Races. 의정부 출장마사지 · 안산 출장안마 Casino at Banyak, WA · Casino 정읍 출장마사지 at Beau Rivage, WA.