சூழுக வெற்றிப் பொங்கல்
தமிழ்மாமணி வா. மு. சே திருவள்ளுவர்
ஐயன் தோன்றிய ஆண்டே
அகிலத் தமிழர் ஆண்டாம்
வையப் பெரியார் கூட்டிய
வளமார் தமிழாண் டாமே
தையையே தமிழர் மரபாய்
தக்கநல் கனடா காணும்
உய்யும் நிலையை மீண்டும்
உயர்வாய் ஸ்டாலின் கண்டார்!
மெய்யின் உணர்வை அறியா
மேட்டுக் குடியோர் சிலரே
பொய்யாம் அறுபது குட்டி
பொதுமை ஆண்டாய்ப் பரப்பும்
செய்யும் இழிமைச் செயலை
சேர்ந்தே மாய்ப்போம் வாரீர்
கையுடன் கவசம் போன்றே
கழக ஆட்சி வாழ்க!!
புத்தொளிர் வீசும் பொங்கல்
புனித வள்ளுவர் ஆண்டில்
இத்தரை வியக்கும் வண்ணம்
இணைந்தே வெல்வோம் வாரீர்!
வித்தகப் புரட்சி உழவர்
வீதியில் நின்றே வென்றார்
எத்திசை உழவர் வாழ்வே
ஏற்றமாய் வாழ்க வாழ்க!!
நாடுள நட்பு நன்றாய்
நாட்டிடும் இன்பப் பொங்கல்
மட்டிலா முதல்வர் ஸ்டாலின்
மாண்புடைத் தழிழர் பொங்கல்
கட்டியம் கூறும் பெண்கள்
காத்திடும் குடும்ப்ப் பொங்கல்
சுட்டிடும் வள்ளுவ ஆசான்
சூழ்ந்திடும் வெற்றிப் பொங்கல்!!
No comments:
Post a Comment