சோலை தமிழினியன் இலக்கியச்சோலை 12ஆம் ஆண்டு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் கவிக்கொண்டல் விருதைப் பெற்று ஆற்றிய உரை
சோலை தமிழினியன் இலக்கியச் சோலையின் 12ஆம் ஆண்டுவிழாவையும் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு மிகச் சிறந்த நிகழ்வை நட்த்துகிறார். ஒரு இதழ் நட்த்துவது என்பது ஈகமான செயல், அந்த ஈகத்தை தம் இல்லாளோடு இணைந்து சிறப்பாக நடத்துகிறார் தமிழினியன் கொரனா காலத்திலும் வருகை தந்துள்ள பெருமக்கள் அவருக்கு ஒரு சிறந்த கைதட்டு வழங்க வேண்டுகிறேன். இதழ் நட்த்துவது என்பதே அரிய செயல் அவரே ஒரு சிறந்த கவிஞர் எழுத்தாளர் தம் நூல்களை வெளியிடாமல் தம் பதிப்பக வழி 12 எழுத்தாளர்களின் நுல்களை வெளியிடுகிறார் அதற்கு ஒரு கை தட்டை வழங்க வேண்டுகிறேன்.. எல்லாவற்றிர்க்கும் மேலாக 9 பெருமக்களின் பெயரில் விருதை நிறுவி ஆண்டுதோறும் விருதை வழங்கி வருகிறார். இவ்வாண்டு எனக்கு கவிக்கொண்டல் மா செங்குட்டுவன் விருதை வழங்கியுள்ளார். விருதை இயக்குநர் திலகம் சுப முத்துராமன் திருக்கரத்தால் வழங்குகிறார். இயக்குநர் திலகம் ஆரம்பம் முதல் இறுதிவரை எளிமையாக அமர்ந்து இந்த நிகழ்வை சிறபிக்கிறார்
.கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களைப்ப்ற்றி இங்கு எத்துணை பெருமக்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை. மூத்த பெருமக்களுக்குத் தெரியும் வருகை தந்துள்ள இளைஞர் பெருமக்களுக்கு தெரிவிப்பது என் கடமையாகக் கருதுகிறேன். மா.செ. அவர்கள் தொடக்கம்முதல் இறுதி வரை திராவிட முன்னேற்றக் கழக இதழாளர்களில் ஒருவர். விடுதலை நம்நாடு கழகக் குரல் தமிழின ஓசை கவிக்கொண்டல் என பல இதழ்களில் இறுதி நாள் வரை தொண்டாற்றிய திராவிடத் திருமகன் நம் ஐயா மா.செங்குட்டுவன் அவர்கள். மா.செ அவர்கள் திராவிட இயக்கப் பதிவுகளை கவிக்கொண்டல் இதழில் வெளியிட்டு இரு நூல் தொகுதிகளை வெளியிட்டுள்ளார் அதைப் படித்தால் திராவிட இயக்க வரலாற்றையும் அவர் பங்களிப்பையும் நாம் அறியலாம்,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்தில் குரல் பதிவுக்கு அறிவியல் சாதனங்கள் இல்லை அந்தக் காலத்தில் அண்ணா அவர்கள் பேசிய பேச்சை பதிவு செய்ய வருபவர் வரவில்லை அன்று இளைஞராக இருந்த மாசெ அவர்கள்தான் அண்ணா அவர்களின் பேச்சை பதிவுசெய்தார். திராவிட நாடு இதழில் வெளியானபோது அண்ணா அவர்களே அழைத்து பாராட்டிய பெருமகன். அண்ணா மலேசியா சென்றிருந்தபோது அண்ணாவின் நிகழ்சிகள் உரைகள் அனைத்தையும் மலேசியாவில் அண்ணா என்ற நூலாக வெளியிட்டார். மகாகவி பாரதிக்கு தொடர் நிகழ்வுகள் நட்த்துவார்கள் ஆனால் பாவேந்தர் பாரதிதாசனுக்கு விழா நடத்தமாட்டார்கள். 1971ஆம் ஆண்டுகளில் தமிழ்மன்றங்கள் ஒன்றியப் பேரவை என்ற அமைப்பை நிறுவி அந்த அமைப்பின் வழி தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களும் கவிக்கொண்டல் மாசெ அவர்களும் நடத்திய விழாக்கள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன. நெருக்கடி நிலை காலத்தில் பாவேந்தர் சிலையை கலுவி கொண்டாடிய நிலைகள் எல்லாம் இளைஞர்கள் அறிய்வேண்டிய செய்திகளாகும்.
தன்னலமற்ற அவரது அவரது தொண்டைச் சிறப்பிக்கும் வண்ணம் நம் தமிழ் வள்ளல் மாம்பலம் சந்திரசேகர் சோலை தமிழினியனின் இலகியச்சோலையில் விருதை நிறுவியுள்ளார். தமிழ்வள்ளல் சந்திரசேகர் மா. செங்குட்டுவன் செங்குட்டுவன் பேரன்பு கொண்டவர் அவரின் பிறந்தநாளின்போது இறுதி வரை கண்டு பொன்னாடை போர்த்தி முகநூலில் பகிர்வார். அவர்பால் பேரன்புகொண்ட அவர் நிறுவிய விருதை உளம் மகிழ்வோடு பெற்று கவிக்கொண்டல் மாசெ புகழ் ஓங்குக எனக் கூறி விடைபெறுகிறேன்.
(8-1- 2022 அன்று சோலை தமிழினியன் இலக்கியச்சோலை 12ஆம் ஆண்டு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் கவிக்கொண்டல் விருதைப் பெற்று ஆற்றிய உரை)
No comments:
Post a Comment