வீரமகான் பிபின்ராவத் – வீர்ர்கட்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
அகில இந்திய தலைமைக்கோ
ஆற்றல் செயலின் பெருமைக்கோ
தகிக்கும் வானம் உடைந்தந்தோ
தன்னிகர் மக்கள் அழுகையந்தோ
முகிலின் கூட்டம் எதிரியாமோ
முழுமைத் தலைமை முடிந்ததந்தோ
பகிரும் உலகமே சோகமந்தோ
படையின் சிகரம் அழிந்த்தந்தோ!
வீரன் நாட்டினைக் காப்பதற்கே
விதியாய் சாவோம் என்றாரே
உறவார் உற்றார் மக்களுமே
உவந்தே ஏற்க மொழிந்தாரே
பறந்தே வானில் சாதித்தோன்
பிரிவு எம்மை வதைக்கிறதே
இறந்த போதும் இல்லாளே
இணைந்தே மாண்ட கொடுமையென்னே!
தில்லி சூளூர் அடைந்த்துமே
தீதின் கொடுமை வெடித்ததுவே
அள்ளும் உடலாய் மலையினிலே
அவலம் நடக்கல் முறையாமோ
உள்ளம் உவக்க கிராமத்தார்
உருகிக் காக்க முனைந்தாரே
தள்ளும் ஊழின் கொடுமையந்தோ
தணலாய் வீர்ர்கள் மாண்டாரே!
வீர் மகான் பிபின்ராவத்
வித்தக வீர்ர் படையோர்க்கே
அருமை முதல்வர் ஸ்டாலினுமே
அணியாய் வழங்கும் வீரவணக்கம்!
பெருமை பிரதமர் அமைச்சரெலாம்
பெரிதாய் வணங்கும் வீரவணக்கம்!
உரிமை வழியாம் மகளோடு
உரித்தாய் சொல்வோம் வீரவணக்கம்!
No comments:
Post a Comment