இந்திய முசுலீம்லீக் நடத்திய மீலாது தொடர்சொற்பொழிவு சமய
நல்லிணக்க விழா
தமிழ்மாமணி வா.முசே.திருவள்ளுவர்
இந்திய முசுலீம் லீக் வடக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பில் நடைபெறும் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன. இந்த நிகழ்வுக்கு நான் வருவதற்கு காரணமான் என் பள்ளி நண்பர் குலாம் உசேன் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் எங்கள் தமிழாசிரியர். தந்தையார் அவர்கள் தம் பூசை அறையில் எல்லா தெய்வங்களையும் வணங்குவார். அறையில் கிறித்தவர்களின் கர்த்தரும் இந்துக்களின் பல தெய்வங்களும் இசுலாமியரின் மக்காமதினாவும் ஆசையைத் துறந்த புத்தரும் அருட்பிரகாச வள்ளலாரும் அருட்குநாதர் சாதுகுருசாமிகளும் உள்ளார்கள். அனைவருக்கும் கற்பூர தீபம் காட்டி வழிபடுவார். சுத்த சன்மார்க்க நெறி எம் தந்தையார் அவர்களின் வழிபாட்டில் இருக்கும். அவர் வழிபடும் முறை இசுலாமிய முறை போன்று ஐந்துமுறை முட்டியிட்டு மண்ணில் முட்டி வழிபடுவார்.தற்போது எம் தந்தையாரின் நெற்றி வடுவை தற்போதும் காணலாம்.
திராவிட இயக்கத் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா முட்டிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அருமை முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் திராவிடக் கலன்களாகும். பொறுப்பேற்று குறுகிய காலத்தில் பொற்கால ஆட்சியைத்த் தரும் பெருமகன் ஸ்டாலின் வழியில் அரிய தொண்டாற்றும் அருமைப் பெருமகன் நாஞ்சில் சம்மபத் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் போன்றே நானும் பேச்சைக் கேட்க ஆவலாய் உள்ளேன். பெருமகனுக்கு வணக்கம.
நிகழ்வுக்கு தலைமைதாங்கியுள்ள ஆலம்கான் சிறப்பாக நிகழ்ச்சியை தொடர்ந்து செம்மையாக் ஒருங்கிணைத்து அனைவரையும் அரவணைத்து நட்த்தும் தொகுப்புரையாற்றும் நிசாமுதின், தொடர்ந்து உரையாற்றவுள்ள மவுலவி அப்துல் காதர்சிராசு, முகமது அபுபக்கர் வருஅனவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே சாலையில் உள்ள முசுலீம் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன்.அந்தப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் அப்துல் சலாம் மிக இனிமையான குரலில் ஓதுவார் அது இனிமை நாதமாக ஒலிக்கும். அருமை நண்பர் குலாம் உசேன் அவர்கள் நன்கு அறிவார்கள். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பள்ளியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் கொண்டாடுவார்கள். இன்றும் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர் பெருமகன் அப்ப்துல் சலாம் அவர்கள் நபிகள் நாயகம் சல்லலாகு அலைகுவ சல்லம் அவர்களைப் பற்றிப் பேச மேடை ஏற்றினார்கள். அதுதான் எனது முதல் மேடை. இன்று உலகம் முழுமையும் மேடை ஏறி முழங்கிக் கொண்டிருக்கிறேன்.
நம் திருவள்ளுவப் பேராசான் எழுதிய குறளுக்கு மண்ணில் சான்றாக வாழ்ந்து வழிகாட்டிய அருளாளர் நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைகுவ சல்லம் அவர்கள்.. நாயகம் அவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது ஒரு அம்மையார் குப்பையை அவர் தலைமேல் வீசிக் கொண்டிருந்தார். ஒரு நாள் குப்பை விழவில்லை உடனே நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம் அவர்கள் அந்த அம்மையாரைப் பற்றி விசாரிக்க அவர் உடல் நலமில்லை என் அறிந்து அவரைக் காணச் சென்றார். அந்த அம்மையார் மனம் திருந்தி மார்க்கத்தின் இணைந்தார்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்நயம் செய்து விடல்
தனக்கு தீமை செய்தவரையும் அவர் நாண நன்நயம் செய்த குறள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
நாயகம் அவர்கள் தாயின் காலடியில் சொர்க்கம் எனக் கூறி தாயின் பெருமையை நிலைநாட்டியுள்ளார். நம் உண்ணும் உணவு நா சுவைக்கும் முன் தந்தை சுவைத்திருக்க வேண்டும் என்ற தந்தை பேணலை உணர்த்தியுள்ளார். நபிகள் நாயகம் சல்ல்லாகு சலைகுவ சல்லம் அவர்கள் ஒட்டகத்தைக் கட்டிவிட்டுத் தூங்குங்கள். உங்கள் கடமையை செய்து இறைவனைக் கும்பிடுங்கள். என தன் சீடர்களுக்கு கூறியுள்ளார்.
ஏழைகளின் பசியை உணர இரமலான் மாதத்தில் .நோண்பு இருக்கப் பணித்தார்.. தன் உணவை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பண்பை நெறியாக்கியுள்ளார்.
நாயகம் அவர்கள் தம் மெக்கா மதினா குர்துப் போரின்போது மதினாவை அடைந்து விட்டார் அப்போது மதினா மக்கள் மூன்று கட்டளைகள் விதித்தனர். குறிப்பிட்ட நாள் வரை மக்காவிலிருந்து மதினாவில் நுழையக்கூடாது. மீறி யாரும் நுழைந்தால் தாங்களே அவர்களை ஒப்படைக்க வேண்டும் அவர்கட்கு இங்கு மரண தண்டணை வழஙகப்ப்படும். நபிகள் நாயகம் அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவர்கள் ஒப்புதலோடு மதினா நுழைந்தார என்பது வரலாறு.
இன்றைய மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைப் போட்டு கடந்த ஒராண்டாக போராடி வருகிறார்கள். அனைத்து எதிர்க் கட்சிகளும் எதிர்க்கின்றனர். ஆனால் அவர்களின் போராட்ட உணர்வை மதிக்க்காத அரசாக உள்ளது. நான் தில்லி சென்றபோது போராட்டக் களத்தைக் கண்டு அதிர்ந்து போனேன். குடும்பத்தோடு விவசாயிகள் போராடி வருகின்றனர். நானும் பங்கேற்று சன் தொலைக்காட்சியில் ஆதரித்து பேட்டி கொடுத்தேன்.. மனித நேயம் முற்றிலும் இங்கு படுகொலைக்கு ஆளாக்கப் படுவதைக் காணலாம். நாயகம் சமூக நல்லிணக்கத்தைக் கற்பித்தார் அதன்படி நடப்போம்.
நாயகம் மாற்றாரின் தவறையும் மண்ணித்து வாழக் கட்டளையுட்டுள்ளார். நாயகம் மனித நேயத்தோடு வாழப் பணித்தார் அவர் வழிப்படி வாழ்ந்து வெல்வோம்.
(9-10-2021 அன்று தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)
No comments:
Post a Comment