Tuesday, December 14, 2021

 தமிழ்நாடு திருவள்ளுவர்  கழகம் அறக்கட்டளை  நடத்திய பட்டி மன்றம்


  நடுவர்: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


தொடர்நிகழ்வுகள் பல நடத்தி  சாதனை நிகழ்த்தியுள்ளார்  தொண்டர் திலகம் வை.மா.குமார். இன்று திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் சிறந்து விளங்குவது கல்விச் செல்வமா? பொருட்செல்வமா? எனும் தலைமையில் 

சிந்தனைப்பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில் நடுவராகப் பொறுப்பேற்று நட்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்வில் இரு தலைப்பிலும் வழக்காட உள்ள பெருமக்களைப் போற்றுகிறேன். தொடர் மழை வெள்ளங்களுக்கிடையில் வருகை தந்துள்ள பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

நம் குறளாசான் கல்வி எனும் அதிகாரத்தில் 391ஆம் குறள் நம்மை சிந்திக்க செயலாற்றவைக்கும் குறளாகும்

கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக

தமது குறைகள் நீங்குமளவுக்கு குறையில்லாமல் கற்க வேண்டும். கற்றால் மட்டும் போதுமா அதன் வழி நடந்து சிறப்புற மேன்மையுறவேண்டும். இந்தக் குறள் கல்வியின் சிறப்பை மனிதகுலத்திற்கு வழங்குகிறது. கல்வி என்பது பணிக்காக  பதவிக்காக் அறப்பணிகளுக்காக குடும்ப  உயர்வுக்காக சமுதாய உயர்வுக்காக நாட்டு உயர்வுக்காக மனிதநேய சம நிலைச் சிந்தனைகளுக்கா என அனைத்து நிலைகளுக்கும் கல்வி அச்சாணியாக உள்ளது. 

அண்ணல்  காந்தியடிகள் இலண்டன் சென்று பாரிசுட்டர் பட்டம் முடித்து தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞர் பணியாற்றச் சென்றவர். அங்கு நடக்கும் நிறவெறிக் கொடுமைகள் கண்டு தம் அறப்பணியைத் தொடங்கியவர். பின் இந்தியா வந்து விடுதலைப் போராட்ட்த்தில் தலையேற்று நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார். அவர் பயின்ற அறக் கல்வியும் அறிவுக் கல்வியும்  தம் வாழ்நாளில்  மனச்சான்றோடு பயண்படுத்தியதை நாம் அறியலாம். தமிழக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியபேரறிஞர்அண்ணா எளிய குடும்பத்தில் பிறந்து உயர் கல்வி கற்று  சராசரியான மனிதர்கள்போல தன் பெண்டு பிள்ளை வேலை என வாழாமல் தந்தைபெரியாரிடம் இணைந்து தமிழ்நாட்டைக் காத்த பெருமகன் அவர் வழியில்  கிடைத்த தலைவர் கலைஞர் தமிழகத்திற்கு சாதித்த சாதனைகள் கற்க கசடற கற்றபியன் நிற்க என்ற குரளுக்கு சான்றாகினர்.

பொருளின் சிறப்பைப் பற்றிக்  வள்ளுவப் பேராசான் கூறும் குறள் சிந்திக்க வைக்கிறது. 


பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது

 பொருளல்ல இல்லை பொருள்  (751)

  நம் நடைமுறை வாழ்கையிலேயே காணலாம் பொருள் உள்ளவர்களை அனைவரும் மதிக்கும் போக்கு இன்றும் உள்ளது. எந்தக் காரியங்களையும் பொருளுள்ளவர்கள் எளிதாக செய்யும் திறன் உடையவராகின்றனர். இந்தக் காலத்தில் கல்வியே பொருள் இல்லையென்றால் கேள்விக்குறியாகிறது. வள்ளு வப் பேராசான் எந்த பொருளைப் பற்றிப் பாடுகிறாரோ அந்தப் பொருளின் நிலையினின்றே பாடுகிறார் என்பதை அறியாலாம். 


கல்வியும் பொருளும் நம் வாழ்வில் எவ்வாறு அங்கம் வகிக்கின்றன என்பட்தி திருக்குறள் வழி கற்றுணர்ந்து வாதாட வருகின்றனர் நம் அறிஞர் பெருமக்கள்

  யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்  

  சாந்துனையும் கல்லாத வாறு (397)


வள்ளுவர் பெருமான் கூறியதற்கு இணங்க  திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் மிகச் சிறந்த விளக்குவது கல்விச் செல்வமே தலைப்பில்  உரையாற்ற முன்னைவர் வாணிசோதி,  ஆசுகவி இனியா இளங்கலை மாணவி சனனி  கற்றவர்களுக்க்கெல்லம்  எங்கு சென்றாலும் சிறப்பு என்ற வகையில் கற்ற்றிந்த அறிஞர் பெருமக்கள் திருவள்ளுவர்  கழக அறக்கட்டளைக்கு வருகை  தந்துள்ளனர். . 


ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை

 ஊக்கார் அறிவுடையார்  

என்கிறார் வள்ளுவப் பேராசான் . 

கல்வி கற்கிறீர்கள் கற்றபின் செல்லவத்தை சேர்க்க பாடாய் படுகிறீரகள்/ பின் சேர்த்த செல்வத்தை பாதுகாப்பதும் நமது கடமை என மொழிகிறார் நம் ஆசான். நம்  அறிவுக்கு புலப்படாத இந்த்த் தொழிலைச் நாம் செய்யமுடியுமா என்ற பட்டறிவு இல்லாமல்   இருக்கும் முதலையும் அறிவுடையவர்கள் இழக்க மாட்டார்கள் என நம் ஆசான் ஆணித்தரமாக்க் கூறுகிறார்.  

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொண் றுண்டாகச் செய்வான் வினை. (758) 


மலைமேல் நின்று யானைப் போரைக் காண்பது போல்  தக்க பொருளோடு செயலைச் செய்தால் வாழ்வின் உச்சத்தை அடைமுடியும்.  என்று வள்ளுவப் பெருமான் கூறியதற்கு இணங்க  திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழ்யில்  மிகச் சிறந்து விளங்குவது பொருட் செல்வமே. எனும் தலைப்பில் ஆய்ந்தறிந்த அறிஞர் பெருமக்கள் கவிஞர் பொருனை மாயன்  ககவிஞர் ஞால இரவிச்சந்திரன் கவிஞர் மதியரசு திருவள்ளுவர்  கழக அறக்கட்டளைக்கு வாதாட வந்துள்ளனர். திருவள்ளுவர் கழக அறக்கட்டளை அழைத்துள்ள நிகழ்வுக்கு வருகை தந்துள்ள சிந்தனைச் செல்வங்களே திருவள்ளுவர் கூறும் அறச் சிந்தனைகளை வருகை தந்துள்ள  அறவாணர்கள்  கருத்துக்களை நுட்பமாகக் கேளுங்கள்.

கல்விச்செல்வமே என்ற அணியின் தலைவர் முனைவர் வாணிசோதி பேச வருகிறார்கள். நெல்லை மாவட்டத்துப் பெருமாட்டி இங்கு சிந்தி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பல்லாவரத்திலிருந்து குன்றத்தூர் கும்மனாஞ்சாவடி வழியாக திருவேற்காட்ட்டில் உள்ள கல்லூரிகுச் செல்கிறார்கள். தினமும் 34கிலோமீட்டர்  பயணித்து தமிழ்ப்பேராசிரியப்  பணியாற்றும் பெருமாட்டியை கல்விச் செல்வமே என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கிறேன்.  பேராசிரியர் உரை மிகச் சிறந்த உரை. வள்ளுவப் பெருமான் கல்விக்கே என  சிறப்பாக பதிவு செய்துள்ளார். 

பொருட்செல்வமே எனும் அணிக்கு தலைமை தாங்கும் கவிஞர் பொருனை மாயன் வருகிறார். தோற்றமே புலவர் பெருமக்களின் தோற்றத்தோடு இருகிறார். ஆனால் பொருளுக்கு ஆதரவாக பேச வருகிறார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பட்டிமன்ற நிகழ்வுகளில் பேசிவரும் பெருமகன். திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கு உருகார் என்ற மொழிக்கேற்ப  திருவாசக உரைகள் பல வழங்கிய கவிஞர். வருக பொருட்செல்லவமே  தலைப்பில் திருக்குறள் பதிவைத்தருக.

 பொருட்செல்வமே தலைப்பில் அரிய கருத்துக்களைத் தந்துள்ளீர்கள். நம் மண்ணிலேயே உழைப்பால் உயர்ந்த சிறந்த செல்வர்கள். இலக்கிய செல்வர் குமரிஅனந்தனால் அழைத்துவரப்பட்ட தம்பி வசந்த்குமாரை வி.சி.பி நிறுவணத்தில் பணியாளாக சேர்ந்து இன்று வசந்த் நிறுவணம் 100ஆவது கிளையைத் துவங்குகிறது. பாராளுமன்ற உறுப்பினராக வசந்தகுமார் மகன் உள்ளார். பொருள்செல்வத்தின் சான்று. 

கல்விச் செல்வத்திற்கு பேச ஆசுகவி இனியா அவர்களை அழைக்கிறேன். எந்த இலக்கிய நிகழ்வுக்கும் அயர்ச்சியில்லாமல் சென்று இலக்கியம் வளர்க்க்கு  கவிஞர்இனியா அவர்கள் பணி மகத்தான பணி வாழ்த்துகிறேன். 

இனியா அவர்கள் மிகச்சிறந்த  திருக்குறள் சிந்தனைகளை வழங்கினார். என் அருமைத்தையார் அவர்களும் சிற்றந்தையார் அவர்களும் ஒரு ஆண்டநாயகபுரம் குக் கிராமத்தில் பிறந்தவர்கள். எனது தாத்தா  முத்து பாட்டி இராமாயி அரும்பாடுபட்டு கல்வியைக் கொடுத்தனர். அந்தக் கல்வியின் சிறப்புதான் இன்று நாங்கள் கல்விச் சிகரத்தில் உள்ளோம். தந்தையார் நீங்கள் அறிந்த உலா மாக்கவி பெருங்கவிக்கோ என் அருமை சிற்றந்தையார் வா,மு.முத்தராமலிங்கம் ஐ ஆர் எஸ் முடித்து இந்தியாவின் நேரடித்துறைத் தலைவராக பொறுப்பேற்று  கல்வியால் சாதித்து சுற்றங்களை பேணிக் காத்தவர். இனியா வழி கல்வியின் பெருமையை பதிவு செய்கிறேன். 

 அடுத்து பொருட்செல்வமே தலைப்பில் காணொளிகளின் காதநாயகன் கவிஞர் ஞால. இரவிச்சந்திரன் அவர்களை அழைப்பதில் மகிழ்கிறேன். கவிஞர் ஞால இரவிச்சந்திரன் சிறந்த கவிதை நூலை  பெருமகன்  வழங்கியுள்ளார். வருக திருவள்ளுவரின் பொருட்சிந்தனைகளைத் தருக.. 

கவிஞர் ஞால இரவிச்சந்திரன் பொருள் சார்ந்த திருக்குறள் கருத்துக்களை வழங்கினார். வாழ்த்துகள். மலேசியா சென்றவர்களுக்குத் தெரியும் துன்சம்பந்தன் சாலையில் 25 மாடி கட்ட்டிடம் மாலேசியா தோட்டப்பு’றத் தொழிலாளிகளின் கட்டிடம். அதை உருவாக்கிய பெருமை டான்சிறி சோம சுந்தரம் அவர்களைச் சாரும். எழுத்தாளர்கள் கவிஞர்கள்  மாணவர்களுக்கு கல்வி பயில நிதி உதவி என அனைவருக்கும் நிதி வழங்கும் பெருமகன். சிறந்த எழுத்தாளர்களுக்கு உயரிய 10000 டாலர் உயரிய விருதைத் தரும் பெருமகன். பொருளை உருவாக்கி மக்கட்கு வழங்கும் அவர்களை அறிய வேண்டும் என பதிவு செய்கிறேன்.

 கல்வியே எனும் தலைப்பில் இறுதியாக மாணவி சனனி  அவர்களைப் பேச அழைக்கிறேன்.மாணவியை பயிற்றுவித்து அழைத்து வந்துள்ள வாணி சோதியைப் பாராட்டுகிறேன்.. மாணவி சனனி மிகச்சிறந்த உரையாற்றினார். வாழ்த்துகள் மிகச் சிறப்பாகப் பேசினீர்கள் தொடர்க. 

 இறுதியாக செலவமே தலைப்பில் பேசுவதற்கு கவிஞர் மதியரசு அவர்களை அழைக்கிறேன்.முத்தாய்ப்பாக திருக்குறள் கருத்துகளில் செல்வச் செழுமையை வழங்க வேண்டுகிறேன். மதியரசு மிகச் சிறந்த பதிவுகளை சிலப்பதிகாரம் தொல்காப்பியம் புறநானூறு என இலக்கியப்ப் பதிவுகளை வழங்கியுள்ளார். சிறப்பு. 

இங்கு அமர்ந்து கேட்போர் சார்பில் பொருளுக்கு அருளாளர் ஐயாப்பிள்ளை அவர்களையும் கல்விக்கு கவிஞர் திருவைபாபு அவர்களையும் அழைக்கிறேன். அனைவரின் கருத்துக்களையும் கேட்ட நான் எதற்கு தீர்ப்பு வழங்குவது என்ற திகைப்பில் இருக்கிறேன். மிகச் சிறப்பாக தங்கள் அணிக்கு சிறப்பாக வாதாடியுள்ளீர்கள். பொருள் குறித்து நீங்கள் பேசும்போது எனக்க் தென் ஆப்ப்ரிக்கா வாழும் தமிழர் மிக்கி செட்டி நினைவுக்கு வருகிறார். தென் ஆப்ரிக்காவில் தமிழர்கள் தமிழ் தெரியாமல் ஆங்கிலத்திலேயே உரையாடுவார்கள் .உலகெலாமுணர்ந்து ஓதற்கறியவன் பாடலையே ஆங்கிலத்திலே எழுதிவைத்துத்தான் பாடுவார்கள். அந்தத் தமிழர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்க மிக்கி செட்டி என்ற பெருந்தமிழர் 40 பெருமக்களுக்கு தமிழாசிரியர் பயிற்சி இராமசாமி பல்கலைக்கழகத்தோடு இணைந்து தம் சொந்த செலவில் உருவாக்கினார்.. பட்டமளிப்புவிழாவிற்கு தென் ஆப்ரிக்காவிற்கு  உலகத்த்ழிப் பண்பாட்டுக் கழகப் பெருமக்களை அழைத்து பட்டம் வழங்கினார். நானும் தந்தையும் பங்கேற்றோம். ஒரு தமிழர் செல்வம் தமிழ்க்கல்விக்கு அறமாக இருந்ததை பதிவுசெய்கிறேன். 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்                             செல்வச் செவிலியால் உண்டு 

     என்ற குறளுக்கு சான்றாக வாழ்கிறார். இதில் பொருளின் பெருமையை அறியலாம்

                                              

  ஊருணி நிறைந் தற்றே உல்கவாம்                                                                          பேரறி வாளன் திரு   

                                                                                     திருவள்ளுவப் பெருமானே யார் பேரறிவாளன் என்கிறார் என்றால் அனைவருக்குக் வழங்குபவர்க்க்கே. அடுத்தவரின் நண்மைக்கு வாழ்பவரே பேரறிவாளன்.. கர்மவீர்ர் காமராசர் தந்தை பெரியார் இருவரையும் இங்கு எண்ண வேண்டும். இருவருமே தமிழர்களின் கல்விக்கு கண்ணாக உள்ளனர். அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராசர். அனைத்து நிலை மக்களும் கல்வியில் மேம்;பட்டு உயர அயராது உழைத்தவர் தந்தை பெரியார். கல்வியால் அனைத்தையும் பெறமுடியும் ஆதலால் திருவள்ளுவர் வழியில் திருக்குறள் மொழியில் மிகச்சிறந்து விளங்குவது கல்விச்செல்வமே.. எனத் தீர்ப்பளித்து விடைபெறுகிறேன். வாழக வள்ளுவர். வளர்க திருக்குறள் தொண்டறம்


.( 12-12-2021 அன்று திருவளுவர் கழகம் அறக்கட்டளை நட்த்திய பட்டிமன்றத்தில் நடுவராக பொறுப்பேற்று ஆற்றிய உரை.).








No comments:

Post a Comment