Friday, December 1, 2023

  •  உலக் கவிஞர் தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானார் சென்னையில் நினைவேந்தல்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்




தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானதை நம் சேது பாட்கரா குழுமத்தின் தலைவர் சேதுகுமணன அவர்கள் இந்து நாளிதழில் ஒரு இரங்கல் விளம்பரம் வெளியிட்டிருந்தார். இகேதா அவர்கள் மறைந்தை நன்றி உணர்ச்சியோடு இந்தியத் திருநாட்டில் வெளியிட்டது அவரது நன்றியுணர்ச்சியைக் காட்டுகிறது. பின் தந்தையார் இசுரேல் கவிஞருடன்   இருக்கும் பட த்தை எனக்கு புலனத்தில் அனுப்பி ஐயாவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள் எனப் பதிவிட்டிருந்தார்.  பின் என்னை தொலைபேசியில் அழைத்தர் குமணன். நான் இகேதா அவர்களுக்கு ஒரு நம் கவிஞர்களை அழைத்து நினைவேந்தல் நட த்த வேண்டுமே என்றேன். நான் நாளை சென்னை வருகிறேன் நட த்திவிடுவோம் என்றார். இன்று நாம் இகேதா நினைவைப் போற்றும் வகையில் கூடியுள்ளோம்.

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 செய்நன்றி கொன்ற  மகற்கு

வள்ளுவப் பேராசான் கருத்துப்படி இன்று செய்நன்றியாக உலக் கவிஞருக்கு நினைவேந்தல் நட த்துகிறோம்.

இங்கு நாம் இகேதா என்ற கவிஞரை எண்ணுகிறோம் என்றால் அதற்கு மூல காரணம் கவிதை ஞாரி கிருட்டிணா சீனிவான். தமிழ்க் கவிஞர்களுக்கு உலகப் பார்வையை தொடக்கியவர் கவிதை ஞானி கிருட்டிணா சீனிவாசன். அவர் நட த்திய பொயட்ரி ஆங்கில மாதப் பத்திரிக்கை உலகப் புகழ் பெற்றது தாம் இறக்கும் வரை தொடர்ந்து நட த்தியவர். இகேதா அவர்களின் கவிதைகளை தொடர்ந்து பொயட்ரி ஆங்கில இதழில் வெளியிட்டு இந்திய மக்களுக்கு அறிமுகப் படுத்திய பெருமகன். இகேதாவின் கவிதைகளை மட்டுமே முழு இதழிலும் வெளியிட்டு பெருமை சேர்தவர். த்ந்தையார் பெருங்கவிக்கோவை 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாட்டிற்கு அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்ற பெருமை  கவிதைஞானி கிருட்டிணா அவர்களையே சாரும். 1980ஆம் ஆண்டே அமெரிக்க கவிஞர் ரோசுமேரி வில்கின்சன் சான்று வழங்கி அழைத்தமை வரலாற்று நிகழ்வாகும். அந்த மாநாட்டில் 300 கவிஞர்களின் கவிதைகளை கவிதைஞானி மொழிப்யர்க்க நாங்கள் அதை  வெளியிட்டு அதை அமெரிக்கா மாநாட்டில் அறிஞர் அவ்வை நடராசன் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட து தமிழ்க் கவிஞர்களின் பெருமைக்குரிய நிகழ்வாகும். 43 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.

குமணன் அவர்கள் சப்பான் மொழி ஆசிரியை கியோமி அவர்களின் எண்ணை கொடுத்டிருந்தார். நான் ஆங்கிலத்தில் பேசினேன் அவர் அழகு தமிழில் பேசினார் நான் அவரிடம் நினைவேந்தல் நிகழ்வில் தமிழில் பேசுங்கள் என்றேன் சிற்ப்பாக தமிழில் பேசினார். அவர் தமிழில் பேசுப்போது அழகாக மிளிர்கிறார்.  

டததைசாகு இகேடாஅ சனாவரி2 1928 ஆம் ஆண்டு  சப்பான் ஓட்டா  டோக்கியோ நக்ரில் எட்டுக்க் குழந்தைகளில் ஐந்தாம் மகனாகப்  பிறந்தார். நவம்பர் 15ஆம் நாள் 2023சின்சுக்கு டோக்கியோ நகரில் 15 நவம்பர் 2023 அன்று இறந்தார். தம் பெற்றோருக்கு  எட்டு மக்களில் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர். தம் 30ஆம் அகவையில் காச நோயால் பாதிக்கப்பட்டு உயிர் மீண்டு வந்தவர் உல்க நாடுகளின் பல்வேரு சிறப்பு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர் இகேதா. தேசாய் இகேதா புத்த அருள்ஞானி. மனித குல அமைதிக்காகப் பாடுபட்டவர் சோகா அக்காய் அமைப்பின் மூன்றாம் தலைவர். உலக் சோகா அக்காய் அமைப்பி  நிறுவனத் தலைவர்.  1957ஆம் ஆண்டு 50.000 சோக்கா அக்காய்இளைஞர்களைத் திரட்டி மனித குல் அழிவிற்கான 

 அனுஅயுத்தை எதிர்த்துப் போராட்டம் நட த்தியுள்ளார்.தம் 32ஆம் வய்தில் அமைரிக்கா கண்டா பிரேசில் போன்ற நாடுகளுக்கு நிச்சிரன் புத்த மத கொள்கைகளுக்கும் உலக அமைதிக்கும் பயணம் மேற்கொண்டார். இவரது துணைவியார் கோனெக்கோ இகேடா இணையருக்கு மூன்று மக்கள். இவர் புகைப்படம் த த்துவம் கவிதை இசை என அனைத்துத் துறையிலும் நூல்கள் வெளியிட்டுள்ளார்.இகேதா கல்லூரியின் நூலகர் பேசும்போது இகேதாவின் நூல்கள் அனைத்தும் கல்லூரியில் உள்ளதை குறிப்பிட்டார். பேராசிரியர்கள் அனைவரும் இகேதா பற்றி கவிதை தம்ழிலும் ஆங்கிலத்திலுக் பாடினீர்கள். இறுதியாக வள்ளியம்மாள் கல்விக்  குழுமத்தின் தலைவர் குமணன் உரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கவிதையால் அனைத்தும் முடியும் என்பதை சேது குமணன் சாதித்துள்ளார். 

(உலகக் கவிஞர் தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானார்30 /11/2023 சென்னையில் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

Wednesday, November 15, 2023

 


நேசமிலா இசுரேல் எங்குமே  

நெடுக பிணமாய் எண்ணுதே

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

குண்டு மழைகள் பொழிவதா

குவலயம் அமைதி காப்பதா

கண்டும் காணா மனிதமே

 கடமை உடைமை இழப்பதா 

 உண்டு உறங்கும் வாழ்விதா 

உரிமை பறித்தல் நியாயமா 

மண்டும் உலக மாண்பினை

 மண்ணில் புதைக்தல் அடுக்குமா 


அமாசு தொடுத்த அழிவுமே 

அடுத்த இசுரேல் வேகமும் 

எமனாய் மக்கள் உயிரையே

 எங்கும் ஒழிக்கும் போரிதே 

விமானம் குண்டுகள் போடுதே 

விரிவான் போர்க்களம் ஆனதே

 சமரசம் காணாஅ மெரிக்கா 

சதிவலை பிண்ணி அழிக்குதே 


மதத்தின் பெயரால் மக்களை

 மண்ணில் பிரித்தல் அவலமே

 குதர்க்க பிரிட்டன் ஆளுமை 

குழப்பிப் பிரித்த சூழ்ச்சியே

 எதற்கும் அஞ்சா வேகமாய்

 எதிரெதிர் துருவம் ஆனதே

  பதறியே மக்கள் அகதியாய் 

பரவியே எங்கும் மாய்வதோ


காசா மருத்துவ மனையிலே

 கொடுமைக் குண்டு விழுந்ததே 

 நேசமிலா இசுரேல் எங்குமே  

நெடுக பிணமாய் எண்ணுதே

 யாசர் அரபாத் ஈகமும்

 இந்திய கனிவுப் போக்குமே

 இணைந்தே செல்லும் வழியிலே 

இனிமைத் தீர்வு காண்கவே


Sunday, November 12, 2023

 தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேது 18ஆம் ஆண்டு நினைவு பொற்கிழி வழங்கு விழா

தமிழ்மாமணி வா,மு,சே,திருவள்ளுவர்


(11-11-2023அன்று அன்னை சேதுவின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் சிறப்பாக 19 அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கி  பொற்கிழி வழங்கிபோது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை. )

இன்று எங்கள்  அன்னை சேதுவின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் சிறப்பாக 19 அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கி  பொற்கிழி வழங்கி மகிழ்கிறோம்.6-11-2023 அன்று  ஆண்ட நாயகபுரம்  உள்ள எங்கள் அன்னையின் நினைவிட த்தில் உரையாற்றிய அபிராம ம் மேனாள ஊராட்சி மன்றத் தலைவர் மருத்துவர் குமணன் பேசும்போது  கடந்த 18 ஆண்டுகளாக அன்னையின் நினைவிட த்திற்கு வருகை த்ந்து கொண்டிருக்கிறேன் பெருங்கவிக்கோ நூற்றாண்டு காணவேண்டும் அம்மா நினவேந்தலுக்கு நாமெல்லாம் வருவோமென்று  நெகிழ்ச்சியுடன் கூறினார். உலமெல்ளாம் அளந்த தந்தையார் பெருங்கவிக்கோ தம் சிந்தையில் தோன்றிய  பெருமக்களுக்கு திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் திருக்கரத்தால் வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கும்    பேராசிரியர் மகாலிங்கம் காஞ்சி மணிமொழியார் குடித் தோன்றல் தொடக்க உரை ஆற்றும் எனது ஆசான் பேராசிரியர் இ.செ.சுந்தர் வாழ்த்துக் கவிதை வழங்கும் கவிச்சிங்கம் கண்மதியன் வருகைதந்துள்ள பெருமக்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன். விருது பெருமக்களை அறிமுகப் படுத்துவதில் பேருவகை கொள்கிறேன்.

முதுபெரும் புலவர் வே.பதுமனார் 

புலவர் பதுமானார் 2-41936ஆம் ஆண்டு வேலூர் குடியேற்றம் பகுதியில் பிறந்து அரும்பணியாற்றி வருபவர். 33ஆண்டுகள் முதுகலைத் தமிழாசிரியராக பணியாற்றியவர். பல்வேறு குழுக்களில் பங்கேற்று மிகச்சிறந்த மலர்களை உருவாக்கியவர். வானொலி  தொலைக் காட்சிகளில் பங்கேற்ற பெருமைக்குரியவர். மலேசியா சிங்கப்பூர் இலங்கை தாய்லாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர். தமிழியக்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராகப் பங்கேற்று அளப்பரிய தொண்டாற்றும் புலவர் பெருமகன். தமிழ்ப்பணியில் சிறந்த ஆய்வியல் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

கவிஞர் சுரதா கல்லாடன்

உவமைக் கவிஞர் சுராதாவின் திருமகன் கல்லாடன். தந்தையைப் போன்று சிறந்த கவிஞர். தந்தை வழி தொண்டாற்றும் தமிழ்ப்பணித் தொண்டர். பாவேந்தர் பாரதிதாசன் கவிதைக்கள் முழுமையும் தொகுத்து வெளியீடு செய்த  சாதனையாளர். தந்தை தொடங்கிய உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையை சிறப்பாக நட த்தி வருபவர். அண்மையில் பேரவையின் சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்புடன நட த்தி அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். தந்தை சிலையை சென்னையில் கலைஞர் திருக்கரத்தால் திறந்துவைத்து அழியாப் புகழை உருவாக்க்கிய திருமகன் கவிஞர் சுரதா கல்லாடன்.

தமிழ்த்திரு சாய் இரவிச்சந்திரன்

உலகெங்கும் ஆன்மீகம் பரப்பும் அருளாளர். சாய் திருக்கோயில்கள் வழி உணவு வழங்கும் அறப் பணியை திறம்பட செய்து வருபவர். மலேசியாவில் ஆசிரியமணி மாணிக்கம் நட த்தும் பாரதியார் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் சென்று அரும்பணியாற்றுபவர். உலக்த் தமிழ் மாநாடுகளில் பங்கேற்ற பெருமைகுரியவர். உணவை வீணாக்க கூடாது என முழங்கி ஏழைகளுக்கு வழங்கும் பசிப்பிணி மருத்துவர் சாய் இரவிசந்திரன். தமிழ்வழியே வழிபாடுகளை நட த்தும் தமிழ் நெறித்த்தொண்டர்.

பெருங்கவிஞர் இளமாறன் 

புரட்சி கவிஞர் புகழ் பரப்பும் அருந்தமிழ்க்கவிஞர். பாவேந்தர் பாசறை அமைப்பை  நிறுவி தொடர்ந்து பாவேந்தர் நிகழ்வு நட த்தி வரும் சாதனையாளர். முகம் இதழ் வழி அருந்தமிழ்த் தொண்டாற்றும் இதழாளர். தம் இல்லத் திருமணவிழாவில் சிற்றிதழ் நட த்தும் இதழாளர்களுக்கு 75 பெருமக்களுக்கு தொகை வழங்கிய புரவலர் பெருமகன். மிகச் சிறந்த மரபுப் பாவலர். பன்னூல்களைப் படைத்த பெருமைக்குரியவர். 

 வழக்கறிஞர் தி.ச.சிவகுமார்

திராவிட இயக்கத்தைச் சார்ந்த பெருமகன் . தம் தந்தை திராவிட முன்னேற்றக் கழத்தின் பொறுப்பாளராக பணியாற்றதை பெருமைபட கூறும் சிந்தனையாளர். வறியோருக்கு வழங்கும் புரவலர் பெரும்கன். உயர் நீதி மன்ற வழக்கறிஞராக அரும்பணியாற்றி வருகிறார். 

கவிஞர் முருகையன் 

திருவாரூர் மாவட்ட த்தில் 1-7- 1941 ஆம் ஆண்டு பிறந்தவர் சென்னைத் துறைமுகத்தில் நிருவாக அலுவலராகப் பணியாற்றிவர். சட்டமன்ற  உறுப்பினர் சித்தமல்லி சோமசுந்தரம் அவர்களால் ஈர்க்கப்பட்டு ஏற்றம் பெற்றவர். தி.மு.க இலக்கிய அணியின் உறுப்பினர். கலைஞர் விருது பெற்றவர். பாவேந்தர் பாசறை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் கவிக்கொண்டல்  போன்ற அமைப்புகளில் பங்கேற்று அரும்பணி ஆற்றி வருபவர். மிகச் சிறந்த மரப்புப் பாவலர் அந்த நினைவுகள் யாழிசை போன்ற நூல்களைப் படைத்துள்ளார். நான் மலேசியா ப்ன்னாட்டுப் பகுத்தறிவும் மநாட்டின் அயலக் குழுத் தலைவராக  இருந்தபோது மலேசியா பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டில் பங்கேற்று பகுத்தறிவுச் சிந்தைனையை உலகெங்கும் பரப்பியவர்.  மலேசிய சிங்கப்பூர நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர். 

புலவர் குடியாத்தம் குமணன்

புலவர் குடியாத்தம் குமணன் நாடறிந்த பட்டிமன்றப் பேச்சாளர். கோவையில் தமிழாசிரியாகப் பணியாற்றிய இலக்கணப் புலவர். மரபுக் கவிதை நூல் வெளியிட்டு தமிழுக்கு அணி சேர்த்தவர். நான் மலேசியா ப்ன்னாட்டுப் பகுத்தறிவும் மநாட்டின் அயலக் குழுத் தலைவராக  இருந்தபோது பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டில் பங்கேற்று பகுத்தறிவுச் சிந்தைனையை உலகெங்கும் பரப்பியவர்.  மலேசிய சிங்கப்பூர நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர். மிகச் சிறந்த திராவிட இயக்கச் சிந்த்னையாளர் சூம் இணைய வழி நாள்தோறும் உரையாற்றும் நாவுக்கரசர்.

திருக்குறள்தொண்டர் வை.மா.குமார்

திருவள்ளுவர் கழகம் அமைத்து சென்னையில் பெரும்விழாக்கள் நட த்தும் சாதனையாளர். கவியரங்கம் பட்டிமன்றம் விருது வழங்கல் என தொடர்ந்து சலிப்பின்றி நட த்தும் சாதனை சிகரம்.

கவிஞர் எழில்வேந்தன் 

மிகச் சிறந்த பன்மொழிக் கவிஞர் பல்வேறு கவிதை அமைப்புகளில் பங்கேற்று கவிதை வழங்கியவர். இந்திய மொழிகள் பலவற்றில் இவர் கவிதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.1995 ஆம் ஆண்டு தில்லியில்  குடியரசு தினக் கவியரங்கில் பங்கேற்றார். இந்திய மொழிகள் உலக மொழிகளிலும்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

மகளிர் மாமணி பாலமீரா 

பேராயாக் கட்சியில் தொண்டாற்றி தற்போது வாசன் அவர்களின் வழியில் தொண்டாற்றும் பெருமாட்டி. தம் வாழ்க்கையை பொது வாழ்க்கைக்கௌ அர்ப்பணித்த மகளிர் மாமணி.

தமிழ்நடைச்செம்மல் சிவசாமி

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தி தாராபுரம் கிளையின் பொறுப்பாளார். தந்தையார் தலைமியில் தமிழூர்த்திப் பயணத்தில் அருந்தமிழ்த் தொண்டராக வந்தவர்.  

 பாவாணர் கோட்டம் இளங்கண்ணன்

முறம்பு பாவாணர் கோட்ட த்தின் பொறுப்பாளர். மிகச் சிறந்த பேச்சாளார். பாவாணர் கொள்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அளப்பரிய தொண்டாற்றும் தனித்தமிழ் அன்பர். அன்னை சேது அருள்மங்கல் விழாவில் சிறந்த உரையாற்றிய செந்தமிழ்ச்செல்வர்.

ஈரோடு கவிஞர் இளையகோபால் 

திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் ஈரோடு தெற்கு மாவட்ட  தி.மு.க. அமைப்பாளர்.  தமிழ்ப்பணி பொன்விழா ஆண்டில் தமிழ்ப்பணிச்செம்மல் என்ற விருதினைப் பெற்ற உலகளாவிய பெருமக்களில் இவரும் ஒருவர். முகநூலில் சிறந்த கவிதைகளைப் படைக்கும் படைப்பாளர்.  பல்வேறு அமைப்புகளில் அமைப்புகளில் பட்டங்கள் பெற்ற பெருமைக்குரியவர். மிகச் சிறந்த தமிழ்த்தொண்டர். ஈரோட்டில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கலைஞர் நூற்றாண்டுவிழாக் கவியரங்கின் அமைப்பாளர். ஈரோடு திராவிடர் கழகத்தின் பொறுப்பாளரிகளில் ஒருவர்.

நற்றமிழ்த்தொண்டர் அ.சி.சின்னப்பாத்தமிழர்  

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நற்றமிழைப் பரப்பிவரும் தொண்டர் செம்மல். எண்னிலடங்கா தமிழ் வளர்க்கும் நூல்களை வெளியிட்டு மக்களைச் சென்றடைய அயராது பாடுபடும் படைப்பாளார். மானம் கருதாது தமிழுக்காக உழைத்துவரும் ஒப்பற்ற மாவீர ர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் தில்லியில்  நட த்திய செம்மொழிப் போராட்ட த்தில் பக்கேற்ற தமிழ்ப்போராளி.

முனைவர் சபீராபீவி அல்மீன்

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அளப்பரிய தொண்டாற்றும் தொண்டறச் செல்வி முனைவர் சபிரா பேகம் அல் அமீன். சமூக அவலங்களை துடைத்தெறிய எளிய மக்களின் காவலரக செயல்படும் பெருமாட்டி. தமிழ்ப்பணி  பொன்விழா ஆண்டில் தமிழ்ப்பணிச்செம்மல் என்ற விருதினைப் பெற்ற உலகளாவிய பெருமக்களில் இவரும் ஒருவர். மதுரையில் பல்வேறு அமைப்புகளில் பங்கேற்று சிறந்த தமிழ்த்தொண்டாற்றும் மகளிர் திலகம். மூன்று முறை தலாக் செய்யப்பட்ட பெண்ணை வாழவைத்து மக்களை அவர்களோடு இணைத்த மனிதநேயச் செம்மல். 

 பட த்துறைப்பாவலர் நல்ல அறிவழகன்

முனைவர் பட்டம் வரை பயின்று பட்டம் பெற்ற கல்வியாளர்.  தொடக்கப் பள்ளி  மேல்நிலைப்பள்ளி கல்லூரிகளில் பணியாற்றிய ஆசிரியர் செம்மல். திரைப்பட த் துறையில் பல படங்களில் திரைப்படப் பாடல்களை யாத்து இன்றும் முயற்சித் திலகமாக இருப்பவர். மெய்யழகி திரைப்பட த்தில் இவரது பாடலை எசு.பி. பாலசுப்பிரமணிய்ம் பாடியுள்ளார் என்பது தனிச்சிறப்பு. மலேசியா சென்று தம் நூல்களையும் குறுந்தகடையும் வெளியிட்ட பெருமைக்குரியவர். பல்வேறு பட்டங்களைப் பெற்ற சாதனைச் செம்மல்.

 மாட்சியர் இரா.மோகன சுந்தரம் 

மிகச் சிறந்த பேச்சாளர். ஆற்றல் மிகுந்த ஆய்வுக் கட்டுரைகளை  வழ்ங்கும் ஆய்வுச் செம்மல். தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகத்தில் பணியாற்றிய ஆய்வறிஞர்

இதழாளர் வேலன் தளபதி.

முற்றம் இதழின் ஆசிரியர். ஊடகத் துறையில் அயராது பாடுபட்டு வரும் ஊடகச் செம்மல். பல்வேறு அறிஞர் பெருமக்களை தம் ஊடகம் மூலம் பதிவெடுத்து உலகெங்கும் பரப்பும் தொண்டறச் செம்மல் . 

தமிழ்த் தொண்டர் பூபாளன்

பூபாளன் சென்னையில் எந்த நிகழ்விலும் கலந்து கொண்டு பெருந்தொண்டாற்றும் பெருமகன். நலிந்த குழந்தைகுளுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து அறப்பணியாற்றும் தொண்டறச் செம்மல். எளியோர் நலம் பேணும் சமூகப் புரட்சியாளாரக வலம் வருகிறார்.


Monday, October 16, 2023

  இருநூறு ஆண்டு காணும் அருட்பேரொளி வள்ளலார் 


அருட்பெருஞ் சோதி வள்ளல்

           அன்பினால் உலகை ஈர்த்தார் 

நெறியிலா  வஞ்ச நெஞ்சர் 

            நிந்தனை செய்தே மாய்த்தார் 

வறுமையின் பிடியில் மக்கள்  

           வெந்திடும் துயரை சாய்க்க  

     கருவறை காக்கும் தாயாய் 

                      கருணையாய் உணவை ஈந்தார்

   

          

         உருவமே இல்லா ஒளியை

                   உன்னத இறையாய்த் தந்தார் 

          மறுவிடும் சாதி மதத்தை 

                    மண்ணிலே புதைத்த நேயர் 

          தெருவெலாம் அருட்பா பாடி 

                      திக்கெலாம் நிலையாய் உள்ளார் 

      அருளொளி அண்ணல் எம்மான்  

               அணிபுகழ் பேறே வாழ்க        


 தமையன்  வாரா நிலையால்

         தளிராக உரையைத் தந்தார்  

எமைஆளும் பேறு பெற்ற    

             எண்ணிலாப் பாக்கள் யாத்தார் 

 சமற்கிரு தம்தாய் மொழி                       

         சங்கரர்    சொன்ன போது

இமைபோல தமிழைக் காக்க 

        இனியதந் தைமொழி என்றார்


இருநூறு ஆண்டு காணும்

         இன்னலைப் போக்கும் வள்ளல்

 தருமம்  காக்கும் சென்னை 

           தகுதியாய் மொழிந்தார் அன்றே 

பெருமையாம்  முதல்வர் ஸ்டாலின்

             பெற்றிமை விழாவைக் கண்டார் 

 அருள்நெறி காக்கும் பாதை

            அருட்சன் மார்க்கம் வாழ்க



Thursday, September 14, 2023

 நிகரிலா கோடி மகளிர்  நிம்மதி காக்கும் ஸ்டாலின்!

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்.

வறுமை விரட்டிய கலைஞர் 

வாஞ்சையாய் அடியை ஒட்டி

 பொறுமையின் சிகரம் பெண்கள் 

பொழிவான வா4ழ்க்கை வாழ 

திறமாக நிதியைத் திரட்டி 

திண்ணிய நெறியில் நன்றே

 உரமென தமிழகம் காக்கும் 

உன்னத முதல்வர் ஸ்டாலின்!


மகளிர் நலனைப் பேணும்

 மகத்துவக் திட்டம் காணும் 

சிகரமாய் ஆயிரம் வழங்கும்

 சரித்திரத் தலைவர் ஸ்டாலின் 

தகர்ந்திடும் வஞ்சம் எல்லாம்  

தகுதியாம் ஊக்கம் ஸ்டாலின் 

நிகரிலா கோடி மகளிர் 

           நிம்மதி காக்கும் ஸ்டாலின்!


திட்டம் முழங்கிய அன்றே

 திறத்தினை ஆய்ந்து அறிந்து 

மட்டிலா ஏழ்மை மக்கள் 

மதிவழி உண்மை கண்டு 

தட்டிய கதாவாய்த் திறக்கும் 

தகுதியர்  எம்மான் ஸ்டாலின் 

சிட்டென அண்ணா நாளில் 

செழிப்பின் ஆயிரம் அன்றோ! 


சனாதானம் என்றும் பேசி 

சதிவலை பிண்ணும் கீழோர்

  மனிதருள் சமத்துவம் காண 

மணுவினை மண்ணில் மாய்த்து 

 பண்ணீ ராயிரம் கோடி 

பகலவன் ஒளியைப் போன்று 

கனியென வழங்கும் ஸ்டாலின் 

கற்பகத் தருவே வாழ்க

Sunday, August 13, 2023

 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நத்துவது என்பது தமிழ் சார்ந்த பெருமக்கள் எந்த அளவுக்கு பற்றாக உள்ளோம் எனபதை இந்நிகழ்வு மூலம் அறியலாம்.

  கலைஞரின் திருமகள் போராளி கனிமொழி அவர்கள் இன்று மணிப்பூர் அவலத்திற்கு அனைத்துக் கட்சி குழுவோடு திமுக சார்பில் மணிப்பூர் சென்றுள்ளதால் அம்மையார் இங்கு வர இயலவில்லை. செயலலிதாவின் ஆணவத்தில் தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது சிறைவாயிலில் கலைஞர் அவர்கள் கைலியோடு உட்கார்ந்து போராட்டம் நடத்தினார் அப்போது கவிஞர் கனிமொழி உடன் தலைவரோடு நின்றதைக் கண்ட கண்கள் இன்றும் நெஞ்சோடு நிலைத்து உள்ளது. பாராளுமன்றத்தில் தமிழர் சிந்தனைகளையும் தமிழின் சிறப்புகளையும் மகளிர் பாதுகாப்புக்காக் வழங்கும் முழக்கம் இந்தியாவே உற்று நோக்குகிறது. கனிமொழி மிகச் சிறந்த கவிஞர்.தலைவர் கலைஞர் போன்று தமிழ் இலக்கியவாதியாக வாழ்பவர். தொண்டறத் தலைவியை போற்றி மகிழ்கிறேன்.


 தமிழ் இலக்கிய  இந்நிகழ்வுக்கு ஆதரவு நல்கிய அமைச்சர் கீத சீவன் அவர்களையும் தூத்துக்குடி மாநராட்சி தந்தை செகன் பெரியசாமி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். ஐயாபெரியசாமி  அவர்கள் கலைஞரின்  முரட்டுப் பக்தர் . நெருக்கடி காலத்தில் கழகத்தை கட்டிக்காத்த பெருமகன்.அவர் உருவாக்கிய தொண்டர்கள் இன்று தூத்துக்குடியின் கழகத் தூண்களாக உள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். 

மதுரையிலிலும் தூத்துக்குடியிலும்  ஒரே நாளில் ஒரே நேரத்தில்  நிகழ்வு இருந்தாலும் இன்று பொன்விழாக் காணும் தமிழ்ப்பணிக்கு  மதுரையில் பேராசிரியர் இரா. மோகன் நிரமலா அற்க்கட்டளை விருதைப் பெற்று விரைந்து இங்கு வந்துள்ளேன் என்றால்  தலைவர் கலைஞர் தமிழக் இந்தியா உலகம் எங்கு தொண்டாற்றிய தீரர்  அல்லவா நாம் தலைவரின் தட த்திலே பயணிக்கும் பாங்குதான்.

வருகை த்ந்துள்ள குறள்ஞானி மோகன்ராசு கலைஞரின் அருமை பெருமைகளை சிறப்பாகப் பேசிய நெல்லை செயந்தா அவர்கட்கும் மற்றும் பங்கேற்றுள்ள கருஞசட்டை வீர ரகள் தி.மு. க மகளிர் அணிபெருமக்கள் அனைவருக்கும்  என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன். கலைஞரின் நூற்றாண்டை சிறப்பக கொண்டாட பெருமுய்றசி மேற்கொண்ட தமிழ்ப்பணிச்செம்மல் முத்துநகர் அன்பழகன் அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். கலைஞர் மேல் தீராப் பற்றுகொண்டவர். பல்வேறு இலக்கியப் பணிகளை தூத்துக்குடி நகரில் ஆற்றிவரும் அரும்பணி யாம் அறிந்ததே. கலைஞர் காலத்தில் சட்டன்றத் தேர்தலின்போது ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு தி.மு.கவில் விண்ணப்பம் செய்வார். நான் பலமுறை கேட்டுள்ளேன். அவருடைய பொருளாதார் நிலை நான் அறிவேன். ஏன் ;பணச்சுமையில் விண்ணப்பிக்கிகிறீர்கள் எனக் கடிந்துகொள்வேன். அதற்கு அவர் கூறிய் சொற்கள் என்னை நெகிழச் செய்த து. யான் வேட்பாளர் தேர்வின்போது கலைஞரைக் காணக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறதே ஐயா எனக் கூறினார். கலைஞர் மீது தீராப் பற்றுக் கொண்ட அன்பழகன் நூற்றாண்டு விழா நடத்துகிறார்.

கலஞரின் கவிதைகள் குறித்துப் பேசப் பணித்துள்ளார்கள். இந்த கவிதை மழை நூலைப் பாருங்கள்1110 பங்கள் கொண்ட  நூல் .210 தலைப்புகளில் பாடியுள்ளார் தலைவர். 1938ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை எழுதிய பாக்கள். தொடாத துறையே இல்லை எனும் அளவிற்கு அனைத்துத் தலைப்புகளிலும் பாடியுள்ளார் கலைஞர். தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேறு பாடிய கவிய்ரங்கங்களில் தந்தையார் பெருங்கவிக்கோ கவிஞர் முடியரசன் கவிக்கோ அப்துல் இரகுமான் கவிப்பேர ரசு வைரமுத்து  பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் கவிவேந்தர் மேத்தா எண்ணற்ற கவிஞர்கள் பங்கேற்றுப் பாடியுள்ளனர். 

1938ஆம் ஆண்டு இந்திப் போராட்ட த்தின்போது கலைஞர் கவிதை அனைவரையும் சுண்டி இழுக்கிறார்.

வாருங்கள் எல்லோரும் இந்திப்                                 போருக்குச் சென்றிடுவோம் வந்திருக்கும      

இந்திப்பேயை  விரட்டித் திரும்பிடுவோம்  

ஓடிவந்த இந்திப்பெண்ணே கேள் நீ

தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே

 வீரத் தமிழ் கொஞ்சும் நாட்டிலே நாங்கள்

சாரமிலாச் சொற்கள்  ஏற்கமாட்டோ ஏட்டிலே.

 இந்திப் பேயை இன்று வரை தமிழ் நாட்டில் அண்ட விடாது செய்த பெருமைக்குரிய தலைவர் கலைஞர். 

சென்னை கலைவாணர் அரங்கில்15-9-1975 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்  கவியரங்கில் தாம் கண்ட அண்ணனை போற்றிப் புகழ்கிறார். 

அண்ணனை ஒரு துறவி என்பேன்

அவர் வாயெல்லம் காவி தரித்திருந்தார்        

அண்ணனை ஒரு தெய்வம் என்பேன்                                                 

 அவருக்கு துரோகிகளும் தூபதீபம் காட்டுகின்றனர்                                    அண்ணனை ஒரு கண்ணன் என்பேன்                                                        

   அவரைப் பூதகியும் தூக்கி பால் கொடுக்கின்றாள் 

அரியாசனமாய் அவர் நம் இதயத்தை ஆக்கிக் கொண்டார்                                        அரியாசங்கள் அவரை ஆரம்பத்தில்                                                                

புரியாமல் எதிர்த்த துண்டு                                                                   

 சரியாசனச் சமதர்ம ம் போதிக்க வந்த                                                 

   தென்னாட்டு மார்க்ஸ் என்று                                                                  

    பின்னால்தான் தெளிவடைந்தார்  

1975 ஆம் ஆண்டு அண்ணா குண நலன்களையும் அவர்தம் பெருமையையும் படம் பிடித்துக் காட்டுகிறார். நாம் இப்போது இந்தக் 


கவிதைகளைப் படித்தாலும்இளைய தலைமுறையினர் அண்ணாவின் பெருமையை உணரலாம். 

தாம் வாழும் காலம வரை உலகில் நடந்த அத்தனை நிகழ்வுக்கும் தம் கருத்தை வழங்கிய காலக் கரூவூலம் தலைவர் கலைஞர்.  1980 ஆம் ஆண்டு புதுவை வானொலி நிலையத்தார் விடுதலை நாள் கவியரங்கம் கலைஞர் தலைமையில் நட த்தினர். அங்கு அவர் பாடிய கவிதைகள் என்றும் நிலைத்து நிற்குக்

சரித்திரத்துப் பொன்னெழுத்தில்                                            

  சுதந்திரத்தை மின்னவிட்டுத்                                                                 

தரித்திரத்தைத் தலைமீது தாங்கி நிற்கும்                                           

  தாயகத்தை வாழ்த்துகின்றேன்

           இப்படி பாடிய கலைஞர் தான் நாட்டின் தரித்திரத்தை எல்லாம் மாற்றிய பெருமகைகுரிய பெருமகன். பிச்சைச்கார ர் மறுவாழ்வுத் திட்டம், குடிசை மாற்றுவாரியம், கைரிக்சா ஒழிப்புத் திட்டம் என்ற எண்ணற்ற திட்டங்களை தீட்டிய பெருமைகுரியவர்.

இறுதியில்                                                                                                

     மாறிவரும் பூமியிலே                                                                        

போலிகள் அசலாகும்                                                                                              

    பித்தளை பொன்னாகும் – இந்தப்                                                     

 பொய்மைகளை வீழ்த்திடவே                                                                            

  மாறிவரும் ஊரினிலே -தமிழில்                                                         

ஊறிவரும் கவிஞர்களை அழைக்கின்றேன்                                                          

   எனப் பாடியுள்ளார். 

சில நாடுகள் இருக்கின்றன என்ற தலைப்பில் 1-6-81 அன்று எழுதியுள்ளார். சர்வாதிகாரத்தை தோலுரித்துக் காட்டுகிறார்.   

சில நாடுகள் இருக்கின்றன                                                                     

  அங்கே ஊராட்சி முதல் பாராட்சி வரையில்                                         

  சனநாயக் குழந்தை சனிப்பதே இல்லை                                                

கருவில் ஒரு புழுவாய் நெளிந்துடும்போதே                             

  கலைத்து முடித்துக் களிப்பெய்திடுவர்

 அன்று வங்க தேசத்துக்காக எழுதியது இன்றும் தலைவர் கலைஞரின் வரிகள் உலகநாடுகளின் சனநாயக அழிப்பை சர்வாதிகார முனைப் பை தெளிந்து எழுதியுள்ள ஒப்பற்ற சனநாயகவாதி கலைஞர். 

உன்காலணியை வாழ்த்துகின்றேன் எனும் தலைப்பில் 3-6-1982 ஆம் ஆண்டு தம் பிறந்த நாளில் எழுதியுள்ளார்                                                        

   தண்டவாளத்தில் படுத்தபோதும்                                                                     

   தனிமைச் சிறையில் வறுத்தபோதும்                                                        

  கண்ட அண்ணன் வடித்த கண்ணீர்  என்                                                         களைப்பைத் தீர்க்க தஎளித்த பன்னீர்                                                               

 ஆண்டு இருபதைக் கடந்த வயதில்                                                    

  பாண்டியில் என்னை வதைத்த காலை                                                                       தந்தை பெரியார் தடவிய மருந்தே -என்                                                                       சிந்தை குளிர்ந்த அமுத விருந்தாம்.

            கலைஞர் தம் இளமைக்காலத்தில் அவரது போராட்டமும் தாக்குதலும் அவர் மொழியில் நாம் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. தம் தலைவர்கள் கலக்கம் அவர்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை நமக்கு உணர்த்துகிறது. அதை தம் வாழ்நாளில் மக்களுக்காகவே வாழ்ந்த மகானாக நம் உள்ளத்தில்மிளிர்கிறார். தம் பெற்றோரையும் 

அஞ்சுகத்தாய் முத்துவேலர்                                                                                              எனைப் பெற்றபோது                                                                                    

  இசைபாடி மகிழ்விப்பான்                                                                  

    இவனென்று காத்திருந்தார் இவனோ                                              

 வசைபாடும்  அரசியலின் மத்தியிலே                                                                            வசமாக சிக்கிக் கொண்டான்  

               தலைவர் கலைஞரை வசை பாடியது போன்று யாரையும் வசைபாடி இருக்க மாட்டார்கள் நம் அரசியல் ஆரியக் கூட்டங்கள். தம் கவிதையாலேயே தம் மனக் குமுறலைத் கலைஞர்  வெளியிடுகிறார்.

          நீதி கேட்டு  திருச்செந்தூருக்கு நடைப்பயணம் நடந்த நீதிமான் தலைவர் கலைஞர். 10 – 5-1982ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.   

  செந்தூர் கடற்கரையுடன் நமது பயணம்                                                                              முழுமை அடைந்து விடவில்லை                                                                                                   இது தொடர் பயணம்                                                                                               தொல்லைகள் தொகை தொகையாக வரினும்                                                                                  தூ என்றிகழ்ந்து விட்டுக்                                                                                                               கால் கொப்பளித்தாலும்                                                                                         காட்டாறுகள் குறுக்கிட்டாளும்                                                                                              கடும் சோதனைகள் எதிர்பட்டாளும்                                                                                 தூக்குமேடையே வரவேற்றாலும்                                                                                              அனைத்தையும் ஏற்க                                                                                                   

 அண்ணா வழியி அமைதி பூண்டு                                                                                                                                புயலின் வேகத்தைப்                                                                                              புன்னகையால் தடுத்திடும் பயணம்  

             தம் கால்கள் கொப்பளிக்க மக்கள் தலைவராக கலைஞர்மக்களோடு சென்ற நடைப்பயணம் சரித்திரச் சான்று.  தந்தை பெரியார்தான் தலைவர் கலைஞரின் பல்கலைக்கழ்கம். அந்தப் பல்கலைக் கழ்கம் பறி ஈரோட்டு எரிமலை எனும் தலைப்பில் 18-9-2003ஆம் ஆண்டு எழுதியுள்ளார்

          கோடிச் சூரிய வெப்பக் கொள்கைதனை ஏந்திக்கொண்டு                                                                  எரிமலைப் பெரியார் எழுந்து வந்தார்

    தந்தை பெரியாரை உலகின் உச்சமாய் உணர்த்துகிறார். இன்றும் அவருடைய ப்குத்தறிவு சூரியக்கதிர்கள் தமிழர்களை செம்மைப் படுத்துகிறது. 

   சாதி ஏதடா சரித்திரம் ஏதடா அவை                                                                                         பாதியில் வந்த சமுதாயக் கேடடா                                                                             மாதவதம் மாய்த்திட டா மனிதனை                                                                மடயனாக்கும் நம்பிக்கை வீழ்த்திட டா  

         சாதியையும் மத த்தையும் சாடி சமத்துவபுரங்களை நாடெங்கும் தொடங்கி சமுத்துவத்தை நடைமுறைப்படுத்தியவர் தலைவர் கலைஞர்.   

           கலைஞர் நூற்றாண்டில் நாம் அவர் இலக்கியங்களைப் பேசிவருகிறோம் அதைவிட தாம் கொண்ட கொள்கைக்கு ஒரு பெரும் படையை உருவாக்கி  காட்டுக்கோப்பாக காத்து நம் முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தம் காலத்திலேயே சிறிபியைப்போல் செதுக்கி இன்று திராவிட முன்மாதிரி அரசாக செம்மாந்து நடைபோட வழிகோ பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா லியுள்ளார். தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைமுறைப்[படுத்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை நெஞ்சார்ப் போற்றுகிறேன். தலைவர் கலைஞர் அவர்க்ள் ஐயன் திருவள்ளுவருக்கு குமரிக்கடலில் சிலை வைத்து தமிழர் பெருமை உலகுக்கு உணர்த்தினார். நமது முதல்வர் கலைஞர் நூற்றாண்டை உலகெங்கும் நட த்தி கலைஞர் புகழை நிலைநாட்டுகிறார்.. உச்சமாக தருமிகு சென்னையில்  வங்க கடலில் நமது கலைஞர் பேனாவை பெரும் முய்ற்சிக்கிடையில்  அமைக்கிறார் முதல்வர் . 

         தாய்லாந்து பாங்காக் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாட்டில் கலைஞரின் பவள விழாவை ஒரு உலகத் தமிழர்களோடு நட த்தி சென்னையில் தலைவர் கலைஞரை தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் பங்கேற்ற அனைவரும் மரகத புத்தர் சிலையை வழங்கி வாழ்த்துப் பெற்றோம்.இன்று தூத்துக்குடிகிளை கலைஞர் நூற்றாண்டை      நட த்துகிறது. முதல்வரின் ஒப்பற்ற ஆட்சிக்கு அரணாக இருப்போம்.

      திராவிட முன்மாதிரி ஆட்சி வாழ்க. தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக

(30-7-2023 அன்றுபன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்)

Wednesday, August 9, 2023

உலக நாடுகளில் உலகத்

 தமிழர்களின்  தமிழ்ப்பணி

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசியர் தமிழ்ப்பணி



முன்னுரை

தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடர்ந்து உல்களாவிய தமிழ்ப்பணிகளில் உச்சப் பணியாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு நடத்துவது  பெருமைக்குரிய ஒன்றாகும்.மாநாடு நடத்தும் சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் உள்ளிட்ட பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். உலக்மெங்கும் பயணித்துள்ள நான் சில நாடுகளின் உலகத் தமிழ் தமிழர்கள்  பற்றி கருத்து வழங்குவதில் பெருமையுருகிறேன்

முதல் தமிழ்ப் பிரதமர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பாடிய கனியன் பூங்குன்றனாரின் பாடல் இன்று உலகம் முழுமையும் வாழும் தமிழர்கள் வாழ்ந்து தமிழர்களின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர். உலகத்தில் முதல் தமிழர் பிரதமாராக கயானா   நாட்டில் மோசஸ் நாகமுத்து பொறுப்பேற்றது தமிழர்பெருமையின் மைல் கல்லாகும். பிரதமரை தமிழகத்திற்கு உலகப் பொருளாதர மாநாட்டிற்கு வரவழைத்து தமிழகத்திற்கு அறிமுகப் படுத்திய பெருமை முனைவர் சம்பத் அவர்களைச் சேரும். பிரதமரின் நூலைப் படித்தால் கீழ் மட்டத்திலிருந்து  பிரதமர் வரை வர தம் வாழ்க்கை அனுபவத்தை பதிவு செய்துள்ளார், இன்றும் யான் அவரோடு முகநூல் தொடர்பில் உள்ளேன். பலமுறை என் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்கிறார்.

மலேசியத் தமிழர்கள்

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள் ஆனால் மலேசியாவில்தான் வாழ்கிறார்கள் என்றார். இன்றும் அதுதான் உண்மை தமிழர்கள் தமிழ் மொழியையும் தமிப் பண்பாட்டையும் காத்து வருகின்றனர். எல்லா நிலைகளிலும் தமிழ்நாட்டுடன் போட்டி போடும் அளவிற்கு பங்காற்றிவருகின்றனர்.  மலேசிய நாளிதழ்கள் பருவ இதழ்கள் இயக்கங்கள் என தமிழ் தமிழருக்கு அரிய தொண்டாற்றி வருகின்றன. மலேசியத் திருநாட்டின் நீண்ட கால மூத்த அமைச்சராக இருந்த பெருமை அம ர ர் டான்சிறி சாமிவேலு அவர்கள். உலகத் தமிழர்களின்பேரன்பைப் பெற்ற திருமகன், அண்மையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மநாட்டில் டான்சிறி சாமிவேலு அவர்கட்கு புகழஞ்சலி செலுத்தினார் பிரதமர் அன்வர் இப்ராகிம். மாநாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கும்  பல்கலைக்கத் இந்தியத் துறைக்கும் 30 மில்லியன் ரிங்கட்களை வழம்க்கியுள்ளார். இன்றும் மாண்பமை சிவக்குமார் மலேசியத்திரு நாட்டின் அமைச்சராக உள்ளார். மலேசிய எங்கும் திருக்கோயில்கள் உள்ளன குறிப்பாக பத்துமலை திருக்கோயில் தமிழர்கள் பெருமையை செப்பும் திருக்கோயிலாகும். மலேசியாவில் 532 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன மலேசிய நாட்டில் பெரியார் கொள்கையாளர்களும் திராவிடக் கருத்துகளை மங்காமல் காத்து வருகின்றனர்.

சிங்கப்பூர் தமிழர்கள்

சிங்கப்பூர் தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடு. சிங்கப்பூரில்  எங்கு சென்றாலும் தமிழ் அன்னை ஆட்சி செய்கிறாள். தமிழ் நாளிதழை அரசாங்கமே நட த்துகிறது. மிகச் சிறந்த தமிழ் கவிஞர்கள் எழுத்தாளர்கள் இயக்கங்கள் என தமிழை முன்னெத்துச் செல்லும்  நாடுகளில் சிங்கப்பூர் பெருமைமிக்க நாடாக விளங்குகிறது.கணினித் துறை மாநாடுகளை நட த்திய பெருமை சிங்கப்பூருக்கு உண்டு. சிங்கப்பூர் லீக்குவான்யூ மறைந்தபோது தமிழகத்தில் படங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். நான் பலமுறை சென்று மாநாடுகள் விழாக்கள் என பல்வேற் நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன். தமிழர்களின் உழைப்பும் அந் நாட்டில் பெரும்பங்கு வகிக்கிறது . சிங்கப்பூரின் தந்தை லீகுவான்யூவே த்மிழர் பங்களிப்பை பாராட்டியிருக்கிறார்.  தமிழ் மொழி வளர்ச்சியில் சிங்கப்பூர் பணி மகத்தானது

 மியான்மர்(பர்மா) தமிழர்கள்

 மியானமாரில் வாழும் தமிழர்கள் நம் முகவை மாவட்ட பேச்சு மொழியாக தமிழைப் பேசுகின்றனர். 2002 ஆம் ஆண்டு அறிஞர் கலைச்செல்வன் அழைப்பில்  நானும் பேராசிரியர் ஆறு அழகப்பனும் சென்றிருந்தோம். மோன்லே தட்டோன் பர்மா முழுமையும் சென்று தமிழர்களோடு உறவாடினோம். தட்டோன் பகுதியில் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளனர். தலைவர் கலைஞரின் கரம் தொட்ட கல்லில் சிலை செதுக்கி வைத்துள்ளனர். நண்பர் அமர ர் மாரிமுத்து அவர்களின் பெரும் முயற்சி. நாங்கள் கோட்டம் சென்றபோது திருக்குறள் ஓதி மாலைஅணிவித்து வாழ்த்தினர். பர்மா இராணுவ புரட்சியின்போது பல தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். மணிப்பூர் வழியாக பலர் நடந்தே வந்து மாண்டு சிலர் சேர்ந்துள்ளனர். அறிஞர்சாமிநாத  சர்மாவின் நூலைப் படித்தால் அந்த அவலத்தை உணரலாம். திருக்குறளை பர்மீய மொழியில் மொழி பெயர்த்துள்ளனர்.மிக உயர்ந்த ஆலயங்கள் தற்போது புணரமைகப்பட்டுள்ளன. மிகச் சிறந்த தொழில் அதிபர்களாக உள்ளனர். இலக்கிய அமைப்புகள் செம்மையாக செயல் படுகின்றன. பல தமிழ் மாநாடுகளை நத்திய பெருமைக்குரிய தமிழ்ர்கள்.குடியுரிமை இல்லாத் தமிழர்களாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அல் ல லுறுகின்றனர், துரத்தப்பட்ட தமிழர்கள் சொத்துகள் பல நூறு கோடி இதுநாள் வரை மீட்கப் படவில்லை. 

தாய்லாந்தில் தமிழர்கள் 

தாய்லாந்தில் தமிழர்கள் செயற்கை கல் வணிகர்களாக உள்ளனர். அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாடு நட த்தினோம். கலைஞரின் பவள விழாவை ஒரு நாள் முழுவதும் உலகத் தமிழர்களோடு நட த்தி தலைவர் கலைஞரிடம் மரகத வண்ண புத்தர் சிலையை வழங்கினோம் இன்றும் கலைஞர் கரூவூலத்தில் உள்ளது. மாரியம்மன் திருக்கோயில் பாங்காக் நகரில் உள்ளது. தாய்லாந்து பெருமக்களும் வழிபடுகின்றனர். இசுலாமியத் தமிழர்கள் செயற்கை கல் வணிகத்தில் இங்கு சிறந்து விளங்குகின்றனர்.

.அரபு நாடுகளில் தமிழர்கள் 

அர்பு நாடுகளில் தமிழர்கள் வேலை நிமித்தம் சென்றவர்கள். அனைத்து அரபு நாடுளிலும் தமிழர்கள் தொழிலாளிகளக உள்ளனர். துபாய் கத்தார் போன்ற நாடுகளில் தொழில் அதிபர்களாக்வும் உள்ளனர்.அண்மையில் இறந்த குவைத் சேது பல அமைப்புகள் நிறுவி அருந்தொண்டு ஆற்றியுள்ளார். துபாய் தமிழர்கள் பல மாநாடுகள் நட த்திய பெருமைக்குரியவர்கள்.. முனைவர் சம்பத் அவர்களின் உலகப் பொருளாதார மாநாடு இருமாநாடுகள் நட த்திய சாதனையாளர்கள். அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் யான் கலந்துகொண்டேன் அங்கு வாழும் சாதனையாளர்களைக் காணும் நல் வாய்ப்பு கிட்டியது. பட்டயக் கணக்கர்கள் ஏராளமனோர் அங்கு தொழில் புரிகின்றனர். அரபு  நாடுகளில் திரைப்பட கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பக நடைபெறுகிறது.தமிழகத்தின் தினத்தந்தி நாளிதழ் அங்கு வெளிவருகிரது. சிறப்பாக அரபு நாடுகளின் செய்திகளை வெளியிருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள்

ஐரோப்பிய நாடுகளில் தமிழின் ஆளுமை மிகச் சிறப்பாக விளங்குகிறது. இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நட த்திய பெருமை பிரான்சு நாட்டிற்கு உண்டு.புதுவைப் பெரும்க்கள் பலர் குடியுரிமை பெற்று த்மிழர்கள் வணிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குகின்றனர். பல்வேறு இன்னல்களில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆலயங்கள் வணிக நிறுவனங்கள் பண்பாட்டு விழாக்கள் என உச்ச நிலையில் பணியாற்றுகின்றனர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 3ஆம் மாநாடு செருமனி பெர்லினில் நட த்தினோம். 19993 ஆம் ஆண்டு 3 நாட்கள் செருமனியில் நட த்துவது என்றால் தமிழ் தமிழர்  எழுச்சியை எண்ணிப் பாருங்கள். ஐம்பது பெருமக்களை அழைத்துச் சென்றோம் கி.ஆ.பெ விசுவநாதம் நீதியசர் வேணுகோபால்  போன்ற முதிர்ந்த அறிஞர்கள் பங்கேற்றனர். ஈழத்தமிழர் குணரத்தினம் தலைமை தாங்கி நட.த்தினார். இன்றும் அங்கு தமிழ் தமிழர் இலகியம் பண்பாடு இசை என அனைத்துத் துறையிலும் மேலோங்கி உள்ளனர். அண்மையில் யான் பிரன்சு சுடார்பக்சு ந்கருக்கு பொங்கல் விழாவிற்கு அழைக்கப்பட்டேன். மிகச் சிற்ப்பாக அனைத்துத் த்மிழர்களும் கூடி விழார் நட த்தினர்.தமிழ்ச்சோலை எனும் அமைப்பின் மூலம் பிரான்சு வாழும் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி வழங்குகின்றனர். திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும தமிழ் ஆசிரிய்ர்க்ளுக்கு விருதுகள் வழங்கினேன். ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஈழத்தமிழர்கள் மாநாகராட்சி சட்டமன்றம் என அனைத்துத் துறைகளிலும் பொறுப்பேற்று தமிழர் பெருமையை நிலை நாட்டியுள்ளனர்.

அமெரிக்கா தமிழர்கள்

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் வைத்து அனைத்துச் சங்கங்களும் இணைந்து ஃபெட்னா அமைப்பைன் மூல ஒவ்வொரு மாநிலங்களின் தலைநகர்களிலும் மாநாடுகள் தமிழ்கத் தலைவர்கள் இலக்கியவாணர்கள் சிறந்த கலைஞர்களை அழைத்துசிறப்புடன்  நட த்தி  சிறபிக்கின்றனர். உலகெங்கும் தமிழர்கள் பங்கேற்ற மாநாடாக. பத்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் எங்கள் தமிழ்ப்பணியைப் பாராட்டி விருது வழங்கினர். சட்டக் கதிர் ஆசிரியர் ச்ம்பத் பங்கேற்றார். இங்கு நடக்கும் மாநாட்டின் சிறப்புஅங்கு வாழும்  கல்வியாளர்கள் மருத்துவர்கள் பொறிஞர்கள் களப்பணியாளர்களாக உள்ளதைக் கண்டு வியந்திருகிறேன் . பல சங்கங்க்ளில் தமிழ் இதழ்கள் நட த்தி தம் படைப்புகளை படைத்து சாதிக்கின்றனர் அமெரிக்கத் தமிழர்கள்.



கனடா தமிழர்கள்

கனடா நாட்டில் நம் தமிழர்கள் அமைச்சர்களாகவும் மாநகராட்சி உறுப்பினர்களாவும் சிற்ப்பாகப் பணியாற்றுகின்றனர். ஈழத் தமிழரளுக்கு குடியுரிமைகொடுத்து குடிமக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் வழங்கி தமிழ் தமிழர் மேம்பாடு அடைய வழிகோலியுள்ளது. எண்ணற்ற தமிழ் இதழ்கள் வெளிவருகின்றன, எண்ணற்ற தமிழ் வானொலி தொலைக்காட்ட்சிகள் வலம்வருகின்றன. தமிழ் இயக்கங்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. ஈழத்தில் உள்ள ஆலயங்கள் அனைத்தையும் அங்கு உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். நாளும் நூல் வெளியீடுகள் நாட்டிய அரங்கேற்றங்கள் மாநாடுகளென தமிழர் பண்பாட்டுக் களமாக கனடா விளங்குகிறது. 

தென் ஆப்ரிக்கா தமிழர்கள்

ஆங்கிலேயர்களால் கூலிகளாக அழைடத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் இனறு தொழில் அதிபர்களாக கல்வியாளாராக பண்பாட்டுத் தூதர்களாக உள்ளனர்.முனைவர் சம்பத் பொருளாதார மாநாட்டிற்கு வருகை வந்த லோகிநாயுடு டர்பன் துணை மேயராக இருந்த பெருமைக்குரியவர். மிக்கி செட்டிஎனும் தென் ஆப்ரிக்கா தமிழர் தமிழைப் ப்யிற்றுவிக்க சென்னை இராமசாமி பல்கலைக்கழ்கத்தோடு இணைந்து 60 தமிழாசிரியர்கள் சென்னையில் பயிற்சி பெ’ற்றனர்.  டர்பன் நகர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் வழி அனைவருக்கும் பட்டம் வழங்கினார். தமிழ் அறிஞர்கள் உலகமெங்கும் பங்கேற்றதைக் கண்டு யான் வியந்துள்ளேன்.

சீனாவில் தமிழர்கள்

பேராசியர் நாகநாதன் அவர்களின் சினப் பயணம் நூலைப் பல்லாண்டுகளுக்கு முன் படித்டிருந்தேன். அதில் காங்காங் வழியில் சீனா பயணத்தை எழுதியிருந்தார். நானும் காங்காங்கில் வாழும் தமிழர்களை சந்தித்து விட்டு ச் சென்றேன் காஙகாங்கில் குழுவோடு பயணித்தவர்களுகு நம் எல்.கே.எ. சையத் அகமத் தம் நிறுவணத்தில் உணவு வழங்கினார். எம் தந்தையார் அவ்வை நடராசார் பயணத்தின் போது யாசின் அவர்கள் விருந்தளித்தார். நண்பர் அலெக்சு காங்காங் முழுமையும் சுற்றிக் காண்பித்து தொடர் வண்டியில் சீனா வழியனுப்பினார். நமது சென்னை செங்கல்பட்டு தூரம்தான் தொடர்வண்டியில் சென்றேன்.அங்கு ஒரு பகுதியில் தொடர்வண்டியை நிறுத்தி சீன விசா வழங்குகின்றனர் பின் சீனாவின் சன்சென் ப்குதிக்குச் சென்றேன். சன்செங்கிலிருந்து சீனாவின் அனைத்துப் ப்குதிகளுக்கும் செல்லாலாம்.. சென்சங்க் பகுதியில் தமிழர்கள் உணவு கடை வைத்துள்ளனர். தற்போது காங்காங் சீனாவுடன் இணைந்துள்ளது. தமிழ் வானொலி காங்கில் பல்லாண்டு காலமாக உள்ளது. அழகு தமிழில் சீனப் பெருமக்கள் பேசுகின்றனர். சீனாவிற்கும் தமிழகத்திற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. பயண முன்னோடி யுவான்சுவாங் இந்திய தமிழக பயணத்தை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சீன்ப் பிரதமர் சின்பிங் இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் சந்திப்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. தமிழை சீன வளரும் தலைமுறைகள் பயில்கின்றனர். நம் ம்லேசியா வாழ் தமிழ்ப் பிள்ளைகள் சீனம் பயில் கின்றனர். 

சப்பானில் தமிழர்கள்

2002 ஆம் ஆண்டு சப்பான் ஒசாக்கா நகருக்குச் சென்றேன். அங்கு வளர்ச்சியின் சிகரமாக உள்ள சப்பான் கண்டு வியந்துள்ளேன்.ஒசாகா டோக்கியோ புல்லட் விரைவு வண்டியில் பயணித்த அனுபவம் இன்றும் பசுமையாக உள்ளது. இகேதா என்னும் பெருமகன் மிகச் சிறந்த கவிஞர். அவர் பெயரில் இகேதா பல்கலைக் கழகம் உள்ளது. அருமைத் த்ந்தையார் பெருங்கவிக்கோவின் அரிய முயற்சியால் நம் நாட்டு சேதுபாசுகரா கல்விக் குழும ம் மூலம் இகேதா மகளிர் அறிவியல் கல்லூரி நிறுவி சப்பான் தமிழகம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற்றுள்ளது. மயிலாடு துறையை சேர்ந்த செந்தில்குமார் பேரியார் கொள்கைகளில் பற்றுள்ள பெரும்கனாக சப்பானில் பணியாற்றுகிறார். சப்பானில் தமிழ்சங்கம் வைத்து பொங்கல் விழா ஆண்டு தோறும் நட த்துகின்றனர். அண்மையில் நம் முதல்வர் ஸ்டாலின் சப்பான் சென்ற்போது அனைவரும் குடும்பத்தோடு சந்தித்து தமிழர் பெருமையை உலகுக்கு பறைசாற்றினர். சப்பான்  தமிழ் ஆய்வுகளை உடன்பாடுகளை இரு நாட்டு அறிஞர்களும் தொடர்ந்து வழங்கியுள்ளனர்.

ஆசுத்ரேலியா தமிழர்கள்

ஆசுத்ரேலியா தமிழர்கள் மற்ற் நாடுகளைப் போன்றே ,மிகச் சிறந்த மாநாடுகள் நட த்தி தமிழ் உயர்வில் பெரும் பங்காற்றுகின்றனர். மிகச் சிறந்த கல்வியாளர்கள் நூலாசிரியர்கள் வாழும் நாடாக ஆசுத்ரேலியா விளங்குகிறது.

இந்தோனிசியா தமிழர்கள்

இந்தொனோசியாவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் மேடான் பகுதிக்குச் செல்லாலம். அங்கு கோயில்கள் தேவாலயங்கள் என வழிபாட்டு நிலையில் உள்ளனர். பலர் தொழில் துறையிலும் சிற்ந்து விளங்குகின்றனர். இந்தோனியாவின் பணத்தாளில் விநாய்கர் படம் அச்சடிக்கப் பட்டுள்ளது.


மொரிசுயசு ரீயூனியன் தீவுகள்

மொரிசுயசு தீவு பல தமிழர்கள் வாழும் பகுதி. உல்கத் தமிழராய்ச்சி மாநாடு நடத்திய பெருமைக்குரிய நாடு. திருவள்ளுவரின் எழில் பொங்கும் சிலையை நிறுவியுள்ளனர்.பரசுராமன் மொரிசுயசின் சனாதிபதியாக இருந்து உலகத் தமிழ் மாநாடுகள் பலவற்றில் பங்கேற்று தமிழர் பெருமையை பறைசாற்ரியுள்ளார். ரியீனியன் தீவுகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். யோகாச்சாரி நீலமேகம் தமிழர் வழிபாடு முறைகள் என 600 பக்க நூலை வெளியிட்டுள்ளார். சென்னையில் அவரது வெளியிட்டோம்.


நிறைவுரை

ஒட்டு மொத்தமாக தமிழ் உலக் மொழியாகியுள்ளது . தமிழர்கள் உலக இனமாக வலம் வருகிறது. உலகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து தமிழ் பண்பாட்டை தமிழர் சிந்தனைகளை மேலும் மெரூகூட்ட கலைஞர் நூற்றாண்டில் ஒன்றுபடுவொம் தமிழால் வெல்வோம்.

(12/8/2023 அன்று முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாட்டில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய ஆய்வுக் கட்டுரை)