நேசமிலா இசுரேல் எங்குமே
நெடுக பிணமாய் எண்ணுதே
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
குண்டு மழைகள் பொழிவதா
குவலயம் அமைதி காப்பதா
கண்டும் காணா மனிதமே
கடமை உடைமை இழப்பதா
உண்டு உறங்கும் வாழ்விதா
உரிமை பறித்தல் நியாயமா
மண்டும் உலக மாண்பினை
மண்ணில் புதைக்தல் அடுக்குமா
அமாசு தொடுத்த அழிவுமே
அடுத்த இசுரேல் வேகமும்
எமனாய் மக்கள் உயிரையே
எங்கும் ஒழிக்கும் போரிதே
விமானம் குண்டுகள் போடுதே
விரிவான் போர்க்களம் ஆனதே
சமரசம் காணாஅ மெரிக்கா
சதிவலை பிண்ணி அழிக்குதே
மதத்தின் பெயரால் மக்களை
மண்ணில் பிரித்தல் அவலமே
குதர்க்க பிரிட்டன் ஆளுமை
குழப்பிப் பிரித்த சூழ்ச்சியே
எதற்கும் அஞ்சா வேகமாய்
எதிரெதிர் துருவம் ஆனதே
பதறியே மக்கள் அகதியாய்
பரவியே எங்கும் மாய்வதோ
காசா மருத்துவ மனையிலே
கொடுமைக் குண்டு விழுந்ததே
நேசமிலா இசுரேல் எங்குமே
நெடுக பிணமாய் எண்ணுதே
யாசர் அரபாத் ஈகமும்
இந்திய கனிவுப் போக்குமே
இணைந்தே செல்லும் வழியிலே
இனிமைத் தீர்வு காண்கவே
No comments:
Post a Comment