Sunday, March 9, 2025

 எந்திரன் வடிவாய் எழுச்சித் திருவாய்


 எழுக எழுக பெருங்க விக்கோ


 


தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 

ஆசிரியர்  த்றமிழ்ப்பணி  

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்


 


சிந்தை குளிர சிந்தனைக் களமாய்


 சிறகை விரிக்கும் பெருங்க விக்கோ


விந்தைச் செயலால் விரிவான் அளவை


வியக்க அளந்த பெருங்க விக்கோ


 மந்திரக் கணக்கால்  மாத்தமிழ் அன்பர்


மனதை வென்ற பெருங்க விக்கோ


எந்திரன் வடிவாய் எழுச்சித் திருவாய்


 எழுக எழுக பெருங்க விக்கோ


 


சிம்புட் பறவை பிறப்பைப் போன்றே  


சாம்பல் துளியில் பிறப்பெ டுப்பார்


அம்புகள் பாயும் அறிவுக் கொடையென


அகிலம் முழுமையும் படைத்த ளித்தார்


வம்புகள் வழக்கு தமிழுக்கு வருமெனில்


வரிந்து புரிந்து  நின்றே போரிடுவார்


 நம்பும் தமிழை நாநிலம் போற்றவே


 நடையாய் நடந்த நாயகர்  வாழியவே


 


                        தொண்ணூறு கண்டு தொண்டறம் போற்றி


தொல்குடி காக்கும் செழுமைச் சீராளன்


 கண்ணென கலைஞர் வழியில் நின்றே


 கழகம் காக்கப் பாடல் புணைந்தோன்


தன்னிலை மறந்தே தமிழைக் காக்க  


தளமெலாம் தமிழர் மாநாடு கண்டோன்


முன்னிலை மறந்து பொதுநிலை காக்க


 முனையும் அறமூ திளைஞர் வாழியவே


 


                        இல்லற வாழ்வின் எழுச்சித் தெய்வம்


இதய சேதுவின் வார்ப்பு இவரே


சொல்லால் வையகம் இணைக்கும் ஆற்றல்


 செழுமைச் சிறப்பின்  பண்பு இவரே


 வெல்லும் வகைகள் வேதனை வரினும்


 வெடிக்கும் வெடியாய் வலம்வரு வாரே


அல்லும் பகலும்  மொழியில் பொழியும்


 அமிழ்த அன்னை யிவரே  வாழியவே

.எந்திரன் வடிவாய்எழுச்சித் திருவாய்

எழுக எழுக பெருங்க விக்கோ

No comments:

Post a Comment