வீங்கிடும் அளவைப் போன்றே
வீணான
இந்தி வேண்டாம்!
தூயவன்
சிந்தன சிறிதும் இன்றி
செந்தமிழ் மொழியைச் சாடும்
நந்தமிழ்
மண்ணின் மங்கை
நிர்மலா பேசும் வேசம்
நொந்திடும்
தமிழர் வாழ்வில்
நுட்பமாய்த்
தாக்கும் மாயம்
வந்திடும் பதவி சுகத்தால்
வண்டமிழ் தாக்கும் கயமை!
திருக்குறள் கூறும் நாவால்
தீந்தமிழ் பழிக்கும் மோசம்
பெரியாரின் சொல்லைக் கூறி
பெருந்தமிழ் அழிக்கும் அவலம்
பாரதி
சொன்னான் அன்றே
பைந்தமிழ் சாகும் என்றே
அருமைப்
பற்றால் வாழ
அருந்தமிழ்ச் சொற்கள் அன்றோ
நந்தமிழ் நாட்டின் பேறே
நங்கையர் அமைச்சர் வாழ்வு
செந்தமிழ் காக்கா விடினும்
செழுமையைப் புதைக்க வேண்டாம்
குந்தகம் பிரதான் பேச்சால்
குருதியில் கலக்கா இவர்கள்
மந்தியைப் போன்றே வாழும்
மனிதர் இவர்கள் அன்றோ!
ஆங்கிலம்
தமிழைக் கற்றே
அகிலமே புகழ வாழும்
தேங்கிடும்
இந்தி கற்க
தேவையில் திணிப்பு அன்றோ!
ஓங்கிடும் மாநிலம் எல்லாம்
ஒருகுடைக் கீழே காண்க
வீங்கிடும்
அளவைப் போன்றே
வீணான இந்தி வேண்டாம்!
No comments:
Post a Comment