தொண்ணூறு கண்டு நூற்றாண்டு நோக்கி பெருங்கவிக்கோவின் தமிழ்த்
தொடர் திருவிழா
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசிரியர் தமிழ்ப்பணி
இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
தந்தையார் பெருங்கவிகோவின் 90 அகவைத்
திருவிழா என்பது தம் வாழ்நாள் முழுமையும் கண்ட உழைப்பு உரிமை இவற்றின் உச்சத் திருவிழா.
1975ஆம் ஆண்டு சென்னையில் கவிஞரின் 40ஆம் அகவைக்கு
குழு அமைத்து சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் எண்ணச்சுடர் என்ற 600 பக்க நூலை வெளியிட்டது இன்னும் என் நெஞ்சில் நீங்கா
நினைவாக உள்ளது. திரைப்பட இய்க்குநர் சிவானந்தம் அவர்களின் அர்ப்பணிப்பு மக்த்தானது.
அதைத் தொடர்ந்து இன்று வரை நூல் வெளியீடும் பிற்ந்த நாளும் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம்.
1985ஆம் ஆண்டு சனவரி 27 என் திருமணம் மதுரையில் பேராசிரியர் தலைமையில் திருச்சியில்
பிப்ரவரி 2,3 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற முதல் மாநாடு சென்னையில் 9ஆம் நாள்
இதே பெரியார் திடலில் பொன்விழா அனைத்துக் கட்சிகள் சூழ மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் டி.பி.இராதாகிருட்டிணன் பொன்விழாக் குழுத் தலைவராகவும்
குறள்ஞானி மோகன் ராசு செயலாளராகவும் மிகச்
சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொறு பிற்ந்த நாளிலும் நூல் வெளியீடுகள்.
1990ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின்
இரண்டாம் மாநாடு நான்கு நாட்கள் கவிஞர் புரட்சி தாசன் திருமண மண்டபத்திலும் விசிபி
தங்க கடற்கரை அரங்கிலும் சிறப்பாக நடைபெற்றது. தடா என்ற கொடிய சட்டம் இருந்த நாளில்
தமிழ் உணர்வு தழைத்து ஓங்க இம் மாநாடு அச்சாரமாக விளங்கியது.
1993 தமிழாசிரியர் பதவியை உதறி குமரி
சென்னை நடைப்பயணம் பிப்ரவரி 9ஆம் நாள் சென்னையில்
பிறந்தநாள் முடித்து பிப்ரவரி 12ஆம் நடைப்பயணம் 100 தமிழறிஞர்களுடன் தொடங்கி 50 நாட்கள்
நடந்து சென்னையில் நிறைவு விழா இதே பெரியார்
திடலில்.முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் நீதியரசர் வேணுகோபால் சங்கரலிங்கனார்
உள்ளிட்டோரின் ஆதரவு மகத்தானது. தொடர்ந்து ஊர்திப் பயணமாக அதே தட த்தில் பன்னாட்டுத்
தமிழுறவு மன்றம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் குன்றாமல் தொடர்ந்து பயணிக்கிறது. உச்சமாக
குமரி சென்னை ஐதிராபாத் போபல் இமயம் தில்லி வரை சென்று இந்தியப் பிரதமரிடம் திருகுறளை
தேசிய நூலாக்கவும் தமிழை ஆட்சி மொழியாக்கவும் கோரிக்கை வழங்கப்பட்ட து. சென்னையில்
வைரவிழா முடித்து இவ்வாண்டும் ஊர்திப் பயணம் தொடர உள்ளது தொடர்ந்து குமரியில் காந்தி
மண்டபத்தில் தொடக்க விழா நட த்தும் தியாகி
முத்துக்கருப்பண் பாராட்டுக்குரியவர்.
அதே 19993ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு
மன்றத்தின் 3ஆம் மாநாடு செருமணி பெர்லினில் உலகமே வியக்க நடைபெற்றது. தமிழகத்திலிருந்து
50பெருமக்கள் பங்கேற்றனர். இந்த மாநாடு ஒருவராலாற்றுப் பதிவு.
1995ஆம் ஆண்டு பெருங்கவிக்கோவின் 60ஆம்
அகவை மணிவிழா. நீதியரசர் வேணுகோபால் தலைவராகவும்
காவலர் செம்மல் முனியாண்டி செயலாளராகவும் ஒரு குழு அமைத்து சென்னை மீயூசிக்
அகடாமியில் ஒருநாள் விழாவாக தமிழகமே திரண்டு வாழ்த்தியது. தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் மக்கள் தலைவர் மூப்பனார் பங்கேற்று வாழ்த்தினர்.
கலைஞர் திருக்கரத்தால் ஒரு அம்பாசிடர் ஊர்தி வழங்கி ஒரு சாதனையை நிகழ்த்தினோம். தொடர்ந்து
ஒவ்வொறு ஆண்டும் நூல் வெளியீடுகள்
1999ஆம் ஆண்டு தாய்லாந்து பங்காக் நகரில்
பன்னாட்டுத் தமிழுறவு ம்ன்ற 4ஆம் மாநாடு 4 நாட்கள் உலகமே வியக்க நடைபெற்றது உலகெங்கிலிருந்தும்
உலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.தலவர் கலைஞரின் பவளவிழாவை பாங்காக்கில் நடத்தி தலைவர்
கலைஞரின் திருக்கரத்தில் மரகத புத்தர் சிலை வழங்கினோம். இலங்கை அமைச்சர் தொண்டைமாண்
பேராயர் சற்குணம் டான்சிறி சோமசுந்தரம் பங்கேற்று சிறப்பித்தனர். தமிழகத்திலிருந்து
160 பெருமக்கள் பங்கேற்றனர். சிலர் மலேசிய சிங்கப்பூர் சென்று திரும்பினர். உயிரைப்
பணயம் வைத்து நட த்திய மாநாடு.
2003ஆம் ஆண்டு மதுரையில் பன்னாட்டுத்
தமிழுறவு மன்றத்தின் வெள்ளிவிழா ஐந்தாம் மாநாடு ஐந்து நாட்கள் திருக்குறட்செம்மல் மணிமொழியனார்
தலைமையில் நடைபெற்றது உலகெங்கும் தமிழர்கள் பஞ்கேற்று சிறப்பித்தனர்.
9-2-2005 பெருங்கவிக்கோவின் 70ஆம் அகவை
விழா சென்னை இராணி சீதை அரங்கில் தலைவர் கலைஞர்
பேராசிரியர் காவியக்கவிஞர் வாலி பங்கேற்று சிறப்பித்தனர். தோழர் நிலவு முத்துகிருட்டிணன்
அரும்பணியாற்றினார். தொடர்ந்து நூல் வெளியீடுகள்.
2009ஆம் ஆண்டு மலேசியாவில் பன்னாட்டுத்
தமிழுறவு மன்றத்தின் 4ஆம் மாநாடு கோலாலம்பூர் ஈப்போ பினாங்கு மலேசியா நான்கு நகர்களில்
நான்கு நாட்கள்ள் நடைபெற்றது உத்தமா சாமிவேலூ பிரதம துறையின் அமைச்சர் செம்மொழி இராமசாமி
பினாங்கு மாநில துணையமைச்சர் பேராசிரியர் இராமசாமி உலகத் தமிழ்ப் பெருமக்கள் பங்கேற்றனர்.மலேசியா
தருமலிங்கம் இரா. மாணிக்கம் பாலசுப்பிரமணியம் விக்டர் போன்றோரின் பங்களிப்பு மகத்தானது.
9-2-20010ஆம் ஆண்டு பெருங்கவிக்கோவின்
75ஆம் ஆண்டு பவளவிழா சென்னையில் சந்திரசேகர் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இனமானப் பேராசிரியர் க.அன்பழகனார் தலைமையில் சேது
காப்பியம் வெளியிட வள்ளல்பெருந்தகையர் சேப்பியார்
10,00,000 பொற்கிழி வழங்கி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சேது காப்பியம் 12 காண்டங்கள்
தொடர்ந்து வெளிவந்துள்ளது
. 9-2- 2015 பெருங்கவிக்கோவின் 80ஆம்
அகவை முத்துவிழா நீதியரசர் கோகுலகிருட்டிணன் தலைவராகவும் மேனாள் மேயர் சா.கணேசன் புரவலராகவும் முனைவர் திவாகரன்
செயலராகவும் இருந்தனர். இதே பெரியார் திடலில் சிறப்பக நடைபெற்ற்றது இனமானப் பேராசிரியர்
தமிழர் தலைவர் பங்கேற்று வாழ்த்தினர்
2015ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின்
7ஆம் மாநாடு அமெரிக்கா வாசிங்டனில் நடைபெற்றது. அமெரிக்காவில் பெருங்கவிகோவின் சேது
காப்பியம் நூற்கள் அறிமுகமும் 80ஆம் அகவை விழாவும் நடைபெற்றது. மாநாட்டில் மேனாள் மேயர்
சா,கணேசன் சந்திரசேகர் கவிச்சிங்கம் கண்மதியன் உலகநாயகி பழநி எண்ணற்ற உலகளாவிய பெருமக்கள்
பங்கேற்றனர்.கணிஞர் வா.மு.சே.கவியரசன் பொறிஞர் வா.மு.சே. தமிழ்மணிகண்டன் பொறுப்பேற்று
சிறப்புடன் நட த்தினர். தொடர்ந்து நூல்ல்வெளியீடுகள்.
9-2-2025ஆம் ஆண்டு 90ஆம் அகவை வைரவிழா நடத்த கல்வி வேந்தர் கல்விக்கோ
விசுவநாதன் தலைமையில் ஒரு குழு உருவாக்கி மிகச்
சிறப்பாக 90 அகவைத் திருவிழாவை நட த்த திட்டமிட்டு குழுக் கூட்டங்கள் ஐயா வேந்தர் அவர்கள்
இல்லத்திலேயே நடைபெற்று மிகச் சிறப்பாக குழு இயங்குகிறது.அனைத்துக் கட்சித் தலைவர்கள்
தமிழக முதல்வர் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் பேரதரவு தந்து வருகின்றனர். பெருங்கவிக்கோவின்
ஒவ்வொறு ஆண்டும் தமிழுக்கு ஒரு படைப்பும் தமிழகம் முழுமையும் எங்கும் தமிழ் எதிலும்
தமிழ் முழக்க ஒருங்கிணைப்பும் உலகளாவிய தமிழர்களின் தமிழ்த்திருவிழாவாக நடைபெறுகிறது
என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல்
இறுதி எமக்கு வாராது
என்றன் மொழி உலகாளவைக்காமல்
என்றன் உயிரோ போகாது
என்ற பெருங்கவிக்கோவின் கவிதைக்கிணங்க
வாழ்நாள் தொடரட்டும் தமிழ் தழைத்து ஓங்கட்டும். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும்
உலகத்தமிழர்கள் சார்பாகவும் வைரவிழா வாழ்த்துகள்.
No comments:
Post a Comment