Sunday, October 13, 2024

 

மொழிப்போராளி புலவர் சுந்தராசன்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

 

     கன்னியாகுமரி மாவட்ட த்தில் பிறந்து சென்னையில் மாநாகராட்சிப் பள்ளியில் தமிழாசிரியாகப் பணியாற்றி தம் வாழ்நாள் முழுமையும் மொழிக்காகவே வாழ்ந்த சுந்தர ராசன் குமரியில் அடக்காட்சிவிளையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

     கறுத்த உருவம் வெண்ணிற எளிய வேட்டி சட்டை  எண்ணெய் படிந்த தலைமுடி அப்பலுக்கில்லாத புன் சிரிப்பு அடங்க மறுக்கும் அமைதியான் ஆளுமை  சுந்தராசனின் அடியாளங்களாகும்

தலைநகர்த் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை சென்னையில் உருவாக்கி தமிழகத்தில் மொழிப்பொராட்ட உணர்வுகளுக்குக் களம் அமைத்தவர் புலவர் பெருமகன். தமிழகம் முழுமையும் பயணித்து உணர்வுகளைத்திரட்டி தமிழிற்காக அணிஅமைத்த பெருமை சுந்தராசன் அவர்கட்கு உண்டு..

              உச்சக்க்கட்ட போராட்டமாக தில்லியில் செம்மொழிப் போராட்ட த்திற்க்காக  தந்தையார் பன்னாட்டுத் தமிழிறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தமிழாகரர் ஆறு அழகப்பன் புலவர் அறிவுடை நம்பி தில்லி தமிழ்ச்சங்கச் செயலாளர் முகுந்தன் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்த்தை நத்திய போது களம் கண்ட பொராளிகளுள் நானும் ஒருவனாக நினைவுகளெல்லாம் மனக் கண்முன் தோன்றுகிறது.

                       தலைவர் காலைஞர் அவர்கள் த்ந்தையார் பெருங்கவிக்கோ அவர்களையும் ,புலவர் சுந்தரராசன் அவர்களையும் கலைஞர் கடித த்தில் தகுறிப்பிட்ட பதிவு வரலாற்றுப் பதிவு. அனைத்துக் கட்சித் தலைவர்களயும் தமிழ் அமைப்புகளையும் தமிழிற்க்காக ஒன்று திரட்டிய பெருமை புலருக்கு உண்டு.

       சென்னையில் வண்டலூரி ப்குதியில் தலைந்கர்த் தமிழ்ச்சங்கத்தின் கட்டிட த்தை கட்டிய மாவிர ர். கட்டிட த்தில் உள்ள ஒவ்வொரு செங்கலும் அவருடைய உழைப்பை பறைசாற்றும். கட்டிட அரங்கில்நூற்றிர்க்கௌ தமிழிற்காக உழைத்த தமிழறிஞர்க்ளின் படங்கள்  அலஙகரிக்க்கின்றன. இன்றும் தமிழ் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்வுகள்அரங்கில்  தொடர்ந்து நடைபெறுகின்றன சென்னையில். ஒரு நிலையான அரங்கையும், அதன் முன் செம்மாந்த திருவள்ளுவர் சிலையையும் உருவாக்கிய பெருமகன் சுந்தர ராசன்..பாவலர் கணபதி சிறப்பாக நட த்தி வருகிறார்.

தலைநகர்த் தமிழ்சங்கம் வழி மக்கள் செங்கோல் என்ற இதழையும் நட த்தி சிறந்த இதழாளராக அரும்பணியாற்றினார். ஒரு சிறந்த எழுத்தாளர் தமிழ் ஆட்சிக் கட்டிலில் அமர முப்பது நூல்களைப் படைத்த் படைப்பாளி .

     புலவர் சுந்தர ராசன் தொண்டர்க்குத் தொண்டர் சிறந்த படைப்பாளர் மொழிக்காக களம் கண்ட போராளி அவர் இழப்பு தமிழுக்குப் பேரிழப்பு அவர் பணியை தொடர்ந்து சிரமேற்கொண்டு பணியாற்றுவதே புலவர்க்குச் செய்யும் அஞ்சலியாகம். புலவர் பெருமான் புகழ் ஓங்குக.

 

 

 

No comments:

Post a Comment