Thursday, September 26, 2024

 

உதயன் முதன்மை ஆசிரியர் ஆர். என் லோகேந்திரலிங்கம்

18 ஆண்டுகளாகத் தொடர்ந்து வழங்கி வரும் உதயன் உலகளாவிய விருது வழங்கும் விழா 2024 இவ்வாண்டும் கனடாவில் சிறப்புடன் நடைபெற்றது

கனடாவில் தமிழ்ப்பணி ஆசிரியர் உலகத் தமிழ்ப் பணிபாட்டு இயக்க ஆசியத் தலைவர் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர்  தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு உதயன் சர்வதேச் விருது 2024. கனடாவில் வழங்கி சிறப்பித்தனர்.

கனடாவில் உதயன் வார இதழ் வெள்ளிவிழாவைக் கடந்து நடைபெரும் உலக இதழாகும்.இவ்விதழ் சமூகம் கலை இலக்கியம் கவிதை தமிழ் அமைப்புகள் உலகச்செய்திகள் தாங்கி வெளிவரும் ஒரு ஒப்பற்ற இதழ். இதில் கதிரோட்டம் எனும் பகுதியில் வெளிவரும் தலையங்கங்கள் நேர்கொண்ட பார்வையாகவும் தீமைகளை சுட்டெரிக்கும் நெருப்பாகவும் நல்ல பணிகளை பாராட்டும் தென்றலாகவும் இருக்கும். தலையங்கத்தை ஒவ்வொரு வாரமும் சிற்பியைப் செதுக்கி வெளியிடுவார் உதயன் ஆசிரியர் நட்பின் நாயகர் லோகேந்திரலிங்கம்.உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஊடகத் துறைத் தலைவராக உள்ளா லோகேந்திரலிங்கம். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாடுகளை சிறப்பாக நட த்திய பெருமைக்குரியவர். உலகம் முழுமையும் பயணித்து உலகத் தமிழர்களின் பேரன்பைப் பெற்றவர். உதயன் இதழ் வழியாக கனடாவில் வாழ் கலைஞர்கள் ஆன்மீகப் பெருமக்கள் தொழிலதிபர்கள் இளம் தொழிலதிபர்கள் சாதனைபுரிந்த உலகப்பெருமக்கள் என அனைத்துப் பெருமக்களையும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து தொய்வில்லாமல் செய்து வருகிறார்.. உதயன் இதழின் அளப்பரிய தொண்டை உலகப் பெருமக்கள் நெஞ்சாரப் போற்றுகின்றனர்.

 இவ்வாண்டு ஏழு பெருமக்களுக்கு விருதுகள் வழங்கினர். அதில் நான்கு பெருமக்கள் கனடா நாட்டில் உள்ளபெருமக்கள். முறையே அறிஞர் சிவபாலு தங்கராசா இசாஇவாணி சுருதி பாலமுரளி தொழிலதிபர் இராச் நடராசா அருளாளர் சோமசுகந்த குருக்கள்  மூன்று பெருமக்கள் தமிழ்நாடு கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர், மலேசிய   டத்தோ நாகராசு அப்பலசாமி ஐரோப்பிய நாடுகளின் பிரான்சு நாட்டு சுப்பிரமணியன் அருள்மொழித்தேவன் ஆகியோருக்கு வழங்கினர். .

      உதயன் சர்வதேச விருது விழா  கனடா சுகார்பரோவில் உள்ள நக்கட் அவென்யூவில் பக்தியல் தி பாங்குவட் அரங்கில் மிகச் சிறப்பாக உலகத் தரத்திற்கு நடைபெற்றது. இந்த நிகழ்வு உலகத்தரத்திற்கு நடந்த பெருவிழாவாகும். அரங்க வாயிலில் வருகையாளர்கள் பதிவு செய்து உள்ளே அனுமதித்தனர். கூட்ட அரங்கம் மேடை அலங்காரம் மிகச்சிறப்பாக இருந்தது..காண்ப்பொர் இருக்கைகள் வட்டவடிவ அமைப்பில் இருக்கைகள் அமைக்கப்பட்டு தொடக்கமே கோலகலமாக இருந்தது. திரளான பதிரிக்கையாளர்கள் மேடையை நோக்கியவண்ணம் வரிசையாக தம் காட்சிக் கருவியுடன் நின்றுகொண்டிருந்தனர்.. ஒவ்வொரு மேசைக்கும் பழச்சாறும் நொறுக்குகள்ம் தொடந்து வழங்கிக் கொண்டிருந்தனர். உலகளவிய தமிழர்கள் அரங்கில் அமர்ந்து நிகழ்வுகளிக் கண்டு களித்தனர்.

விருது பெறுவோரைப் பற்றி ஒரு குறிப்பேடு வண்ணத்திலொரு குறிப்பேடு தயாரித்து அதில் விருது பெறுவோரின் வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளனர். குறிப்பேட்டில்  கனடா பிரதமர் அமைச்சர்கள் பாராளுமன்ற நகர்மன்ற வாழ்துக்களை வெளீயீடு செய்து விழாவில் வெளியிட்டனர்.. விருது பெறும் முன் வாழ்க்கைக் குறிப்பை ஒரு பெருமகன் அறிவித்து விருது வழங்கினர்.

      உதயன் லோகேந்திரலிங்கம் அவர்களின் 28 ஆண்டுகள் தொடர் பத்த்ரிக்க்கையளராகவும் எழுத்தாளராகவும் கவிஞராகவும் இசை நடன இலக்கிய  நிகழ்வுகளை முன்னின்று நட த்துவதும் சிறப்பு அழைப்பாளரகப் பங்கேற்பதும் உலகளாவிய பெருமக்களை வர்வேற்ற்று விழா நட த்துவதும் அவரது அன்றாட பணியாகும். குறிப்பாக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை தேர்தலில் அளபரிய தொண்டாற்றும் பெருமகன் உதயன் லோகேந்திரலிங்கம். அதனும் நன்றிப் பெருக்கை மேடையில் காண முடிந்த து. அனைத்தும் பெருமக்களும் அமைச்சர்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள் மேடையில் சூழ்ந்து விருதுகள் வழங்கியது கண்கொள்ளாக் காட்சியாகும்.. ஒவ்வொரு விருது நிகழ்வு தொடங்கும் முன்னும் பின்னும் நாட்டியம் இசை பாடல் என கலை நிகழ்ச்சியை நட த்தி மிகச் சிறந்த நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தனர். முத்தாய்ப்பாக விருதாளர்களுக்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி  கண்ணாடியில் தூணின் மேல் உலக உருண்டை அதில் உதயன் சின்னம் பொறிக்கப்பட்ட பரிசும் பல்வேறு பெருமக்களின் சான்றிதழ்கள் தமிழ்மக்கள் கைதட்டலோடு வழங்கி சிறப்பித்தனர்..

      மொத்த த்தில் கனடா உலக விருது மிகச் சிறந்த விருது என்பதை விழா உணர்த்தியதை உணரலாம்

No comments:

Post a Comment