Tuesday, September 3, 2024

 

குவலய  விருதைப் பெற்றேன்

தூயவன்

கனடா உலக விருதை

 கனிவாய் உவந்தே தந்தார்

மனதில் மாசில் லோகன்

      மகிழ்வின் அன்புப் பெருக்கு

கனவா நனவா என்றே

கருதும் டொரண்டோ நகரில்

குணத்தோர் இணைந்தே தந்த

குவலய  விருதைப் பெற்றேன்  

 

மலரை எனக்கே சூட்டி

 மன்றம் ஊர்தி அழைத்து

தளரா நட்பின் நாதம்

 திரண்ட மக்கள் அரங்கில்

பலரும் வியந்தே அழைக்க

பருவத் தமிழாம் கன்னி

பலகனி தொங்கும் தோப்பாய்

     பாவை மனமாய் நின்றேன் 

 

உலகத் தமிழின் எழுச்சி

உவந்தே அரங்கம் கண்டேன்

 பல்கலை வித்தகர் காட்சி

பருவ இதழ்கள் மாட்சி

 தலைவர் அமைச்சர் சூழ்ந்தே

தக்க அரசியல் சான்றோர்

 கலைவுயர் கனடா மண்ணில்

 கவினார் விருதைத் தந்தார்

 

 உணவுத் திருவிழா போன்றே

 உவந்தே உணவுகள் வழங்கி

கனிவாய் இசையின் ஆட்சி

கருதும் அறிஞர் எல்லாம்

இனிமை இயைந்தே மன்றம்

இயல்பாய் மக்கள் வெள்ளம்

வினையின் உதயன் மாட்சி

விருதின் பெருமை அன்றோ

 

{கனடாவில் டொரண்டோ நகரில் 26 -5-2024 அன்று உதயன் உலக விருது 2024 பெற்றபோது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் எழுதியது}

No comments:

Post a Comment