Saturday, September 5, 2015

அமெரிக்காவின் உயர்ந்த பல்கலைக்கழகங்கள்


(தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் சூன் 2014ஆம் ஆண்டு அமெரிக்க பல்கலைகழகங்களுக்குச் சென்றபோது எழுதியது)
அமெரிக்காவின் உயர்ந்த பல்கலைக்கழகங்கள் மூன்றிர்க்குச்  சென்றேன். ஒன்று அறிவுச் சுரங்கமாகத் திகழும்,ஃகார்டுவார்டு பல்கலைக்கழகம்,  மசாசுசட்சு இன்சுடிடுயூட் ஒஃப் டெக்னாலாசி, மற்றொன்று அறிஞர் அண்ணாவிற்கு டாக்டர் பட்ட, வழங்கிய யேல் பல்கலைக்கழகம்.
    கணினி அறிஞர் தம்பி கவியரசன் ஒகியோ மாநிலத்தில் கொலம்பசு நகரிலிருந்து எங்களின் கடைசித் தம்பி தமிழ்மணிகண்டன் வாழும் மேரிலேண்டு பகுதிக்கு குடும்பத்தோடு வந்தார். நாங்கள் அங்கிருந்து மேரிலாண்டில் உள்ள ஒசியானிக் சிட்டி கடற்கரைக்குச் சென்று அங்கு ஒரு நாள் தங்கினோம். கடற்கரையை மிகச் சிறப்பான சுற்றுலாத் தலமாக வைத்துள்ளனர். அருமை மக்கள் தமிழ்நடைப்பாவை கவின் சாதுகுருவோடு நாஙகள் கடல் அழகையும் மணல் வெளியையும் கண்டு மகிழ்ந்தோம்.
    கடற்கரையின் சாலைப் பகுதியில் விஞ்ச் மூலம் கடல் அழகையும் நகர் அழகையும் காணமுடியும். அழகு அழகான மிதிவண்டிகல் வாடகைக்கு விடுகின்றனர். உல்லாசமாக மிதி வண்டியில் பயணித்து உடல் பயிற்சியும் உள்ளக் களிப்பும் பெறுகின்றனர். மணல் வெளியை  ஒட்டினாற்போல் மரத்தால் தரைச்சாலை அமைத்துள்ளனர். நடைப் பயிற்சி செல்வோர் மரச் சாலை உள்ள அளவு நடந்து செல்கின்றனர். மறுபுறம் மரச்சாலை ஒட்டி தொடர் கடைகளும் உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் சூழ்ந்து பரபரப்பான எழிலான சுற்றுலாத் தலமாக உள்ளது. நானும் தம்பியும் நடந்து சென்றோம். உலக மக்கள் கூடும் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது.

    அங்கிருந்து பாசுடன் நகரில் வசிக்கும் மருமகன் கோபிநாதன் இல்லத்திற்குச் சென்றோம். புதிய இல்லம் வாங்கி குடியேறியுள்ளார். மூன்று அடுக்குள்ள கட்டிடம். மரம்தான் வீடுகட்டப் பயண்படுத்தியுள்ளனர்.பாசுடனில் உள்ள ஃகார்டுவேர்டு பல்கலைக் கழகத்திற்கு மருமகள் முத்துமாரி மக்கள் தமிழ்நடைப்பாவை ஆகியோருடன் கோபி ஊர்தியில் அழைத்துச் சென்றார். ஃகார்டுவார்டு பல்கலைக்கழகம் முதன்மைச்சலையில் இருபுறமும் பரந்த வெளியில் பல்கலைகழகம் உள்ளது. மகன் கவின் சாதுகுருவை இப் பல்கலைகழகங்களில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆவல் எங்கட்கு உண்டு. கவினை புத்துணர்ச்சியூட்ட அப் பல்கலைக்கழத்தைப் பற்றி மருமகள் விவரித்துக் கொண்டே வந்தார். பல்கலைகழகத்திற்கென வரவேற்பு அரைக்கு அழைத்துச் சென்றார் மருமகன் கோபிநாதன்.பின் நாங்கள் அனைவரும் பதிவு செய்தோம். குட்டிப் பேருந்துகள் ஒவ்வொரு குழுவாக அழைத்துச் சென்றனர். எங்களது நேரம் வந்தது மற்றவர்களோடு நாங்களும் குழுவாக ஏறிச் சென்றோம். வரவேற்பு அரையிலேயே பல்ககலைக் கழகம் பற்றிய அச்சடித்த படிவங்கள் இருந்தன நாங்கள் எடுத்துக் கொண்டோம்.
    பல்கலைக் கழக்த்தில் உள்ள அரங்கில் அனைவரையும் அமர வைத்தனர். சிறிது நேரத்திற்கும் பிற்கு ஒரு பேராசிரியர் மேடையில் தோன்றி அறிமுகப் படுத்திக் கொண்டார். இந்தப் பல்கலைக் கழகத்தின் சிறப்புகள் பற்றியும். தேர்ச்சி விகிதம் பற்றியும். அங்குள்ள படிப்புகள் பற்றியும் நாற்பது நிமிடம் உரையாற்றினார். புன்சிரிப்போடும் மாணவர்கட்கும் பெற்றோர்கட்கும் புரியும் வண்ணம்  பவர் பாயின்ட் மூலம் திரையில் தெளிவுபடுத்தினார் எம்.ஐ.டி. பேராசிரியர். 35 வயது மதிக்கத்தக்க பேராசிரியராகத் தோன்றினார். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பெற்றோர்களும் மாணவர்களும் அரங்கில் இருந்தனர். அனைவரும் குறிப்பேட்டிலும் கைக் கணீனியிலும் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
    பேராசிரியரின் உரை முடிந்தவுடன் குழுக்களாக பிரித்து பலகலைக் கழகத்தில் பயிலும், மாணவ மாணவிகள் எங்களை அழைத்துச் சென்றனர். எங்கள் குழுவிற்கு பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளம் மாணவி அழைத்து சென்றார். தன்னை புன்சிரிப்போடு அறிமுகப் படுத்திக்கொண்டார். பின் அவர் எங்களை வழிகாட்டி உரையாற்றி அழைத்துசென்ற பாங்கு மிகச் சிற்ப்பாக இருந்தது. அவர் எங்களை நோக்கி பேசிக்கொண்டே பின்புறமாக நடந்து கொண்டே பல்கலைக் கழகத்தின் சிறப்பையும் அங்குள்ள படிப்பின் உயர்வையும், கூறிக் கொண்டே சென்றார்..
    பல்கலைக் கழ்கத்தின் ஒவ்வொறு துறைக்கும் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு துறையையும் காணும்போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. சாலையின் இருபுறங்களிலும் பல்கலைக்கழகம்தான். ஒருபுறம் முடித்து சாலையின் மறுபுறம் உள்ள பகுதிக்கும் அழைத்துச் சென்றார். வகுப்பு அறைகள், அரங்கங்கள், அனைத்து விளையாட்டு திடல்கள் கூடங்கள்,   நூலகங்கள், நீச்சல் குளங்கள், உணவு விடுதிகள் பூங்காக்கள் என பிரமீப்பூட்டும் வகையில் பல்கலைகழகம் இருந்தது, இங்கு பிள்ளைகளைப் படிக்க வைக்க பெரும் செலவாகும் என்று மாரி கூறினார்.
  மாசாசுசடச் இண்டிடீயூட் ஒஃப் டெக்னாலசி (எம்.ஐ.டி). மட்டுமல்ல தகுதியும் இருந்தால்தான் இங்கே படிக்கும் பேறு கிட்டும். இதுவும் பாசுட்டனில் மாசாசுசட்சு பகுதியிலேயே உள்ளது. நம் சென்னையில் எம்.ஐ.டி உண்டு. மெட்ராசு இன்சுடுயூட் ஒஃப் டெக்னாலசி இங்கும் தலைசிறந்த மாணவர்களே பயில்வர்.
    நாம் காணும் முகநூல் கண்டுபிடித்த் பெருமகன் இந்தப் பல்கலைக் கழக்த்தில்தான் படித்தவர் என்ற தகவலும் அறியமுடிந்தது. பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நிறிவணர்களின் சிலை இருந்த்து. அவரது காலில் கைவைத்து வணங்கினர். அவர் கால்மட்டும் அனைவரின்கைபட்டுக்கொண்டே இருப்பதால் கால் பலபலவென்று இருந்தது. சிலையுடன் நின்று படமெடுத்தனர் நாங்களும் படமெடுத்துக் கொண்டோம்.பின் இல்லம் திரும்பினோம்.
    பாசுட்டனிலிருந்து கனக்டிகெட் சென்றோம். அங்கு தம்பி கவியின் நண்பர் சுரேசு கவுரி இல்லத்தில் தங்கினோம். மக்கள் பாவை, கவின் சுரேசுகவுரியின் மக்கள் இருவர் மருமகள் முத்துமாரியுடன் தம்பி கவியரசன் யேல் பல்கலைக் கழக்த்திற்கு அழைத்துச் சென்றார். இப் பல்கலைக் கழகமும் அமெரிக்காவின் உய்ர்ந்த பல்கலைக்கழ்கங்களில் ஒன்று. அந்தப் பகுதி முழுமையுமே பல்கலைக் கழகமாகவே உள்ளது. நமது நம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சென்னிற அமைப்பு போன்றே உள்ளது.  வரவேற்பு அறையில் நாங்கள் பதிவு செய்துகொண்டோம்.அங்கு ஒரு அரங்கில் இரண்டு நேரங்களில் உரை வழங்குகின்றனர். நாங்கள் எங்கள் நேரத்திற்கு சென்று அமர்ந்தோம். அந்தப் பல்கலைக்கழகத்தில்  படித்த கறுப்பு நிற மாணவிதான் எங்களுக்கு  பல்கலைக்கழத்தைப் பற்றியும் அந்தப் பல்கலைகழக்த்தின் சிறப்புகள் பற்றியும் நீண்ட உரையாற்றினார். பல்கலை கழகத்தைப் பற்றி ஒரு திரைப்படம் ஒன்று காண்பித்தன்ர். மிகச் சிறப்பாக இருந்தது. கடைசியில் அதில் திரைக் கதை வசனம் நடிப்பு இசை அனைத்தும் அப் பல்கலை கழகத்தில் படித்தவர்கள் என குறிப்பிட்டனர். உண்மையிலேயே மாணவர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. மிகச் சிறப்பாக எடுத்திருந்தனர். உரை முடிந்தவுடன் பல்கலைக் கழக குறிப்பேட்டை வழங்கினர். மிகப் பெரிதாக் இருந்தது  கிட்டத்தட்ட 800 பக்கம் அச்சடிக்கப்பட்டதாக இருந்த்து. நான் கவினுக்கும் சென்னையில் படிக்கும் தம்பி ஆண்டவர் மகள் சேதுச்செல்விக்கும் வாங்கினேன்.
    பின் குழுவாக மாணவ மாணவிகள் அழைத்துச் சென்றனர். பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளைப் பற்றியும் விவரித்துக் கொண்டே சென்றனர். ஒவ்வொரு துறையும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களை இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளது. பலகலை கழகத்தின் அரங்கம் மிகப் பெரிய அரங்கமாக இருந்த்து.இங்குதான் உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் உரையாற்றியுள்ளனர் என்று கூறினார், அங்கு அழைத்துச்சென்ற் போது என் இருகண்களும் கலங்கின. சாதாரணக் குடியில் பிறந்து வறுமையில் படித்து பெரியாரால் ஈர்ர்க்கப்பட்டு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை கூறி அதன் படி வாழ்ந்து தமிழக மக்களின் அண்ணனாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா உரையாற்றிய அரங்கம். யேல் பல்கலைகழத்தில் சுற்றியபோதெல்லாம் பேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் என்னை ஆழ்த்தின. அண்மையில்தான் மியான்மர் நாட்டில் பல்லாண்டுகள் சிறையில் வாடி சன்நாகம் தழைக்கப் பாடுபட்ட ஆங்சான்கியூ அரங்கில் பங்கேற்று பேருரை வழங்கியதாகக் கூறினர்.
    நம் ஊரில் கல்வி நன்கு வளர்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் தமி பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் அவர்களைப்பற்றிய தன் அறிவுப்பும் பல்கலைக் கழ்கத்தில் சிறப்பும் அங்கு பயின்ற மாணவர்களின் வெற்றிகளும் பட்டியலிடப் படவேண்டும்.
பெற்றோரகளும் மாணவர்களும் முறையாக் கண்டு மனத்தெளிவு பெறும் வண்ணம் செயல்பட வேண்டும். நம்நாட்டில் காசு ஒன்றே குறிக்கோளாகக் கொண்டுள்ள கல்விமுறையைக் கண்டு வறுந்தினேன்
   
     

No comments:

Post a Comment