Saturday, September 5, 2015

அமெரிக்க மண்ணில் தேமதுரத் தமிழோசை


தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்
(அமெரிக்க நாட்டில் வாசிங்டன் நகரில் சூலை 25,26 – 2015 நாட்களில் நடந்த பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் தமிழர் ஒற்றுமை மாநாட்டு மலருக்கு மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவரின் முகவுரை )
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் தமிழர் ஒற்றுமை மாநாடு அமெரிக்க நாட்டில் வாசிங்டன் நகரில் நடைபெறுவதென்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாளாகும். அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் ஐந்தாம் உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு சான்பிரான்சிசுக்கோ செல்லதிட்டமிட்டபோது உலக்கவிஞர் சங்கத் தலைவர் பத்மபூசன் கிருட்டிணா சீனிவசன் வழி உலகக் கவிஞர் உரோசுமேரி வில்கின்சன் சான்று அனுப்பி அமெரிக்க நுழைவைப் 35 ஆண்டுகட்கு முன்பே பெற்று  அருமை சிற்றந்தையார் வா.மு.முத்துராமலிங்கம் பயணச்சீட்டு வழ்ங்க மாநாடு முடித்து உலகை வலம் வந்தார். பின் மருத்துவாமாணி பஞ்சாட்சரம் அவர்கள் தமிழ் ஈழ மாநாடு நீயூயார்க்கில் தந்தையார் தலைமையிலேயே உலகத் தமிழ்த் தலைவரக்ள் பங்கேற்றனர்.
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து                               மன்னுயிர்க் கெல்லாம்  இனிது.
என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதின் மெய்மையை வாழ்வில. உணர்கிறோம். என் அன்புச் சகோதரர் பொறிஞர் கவியரசன் அவர்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாடு நடந்தபோது பெரும் இன்னலுக் உட்பட்டோம் பெருந்தொகை அனுப்பி மாநாடு வெற்றிகரமாக நடத்த பேருழைப்பும் பொருளும் வங்கினார். கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உத்தமம் போறுப்பேற்று செம்மையான முறையில் மாநாட்டை நடத்தினார். அமெரிக்காவிலும் பல்க்லைகழக வாசு அரங்கநாதன் அவர்களோடு இணைந்து கணினி மாநாட்டை தமிழ்ப் பெருமக்களுக்கு சான்று வழங்கி அழைத்து சிறப்பாக நடத்தி தமிழுக்கும் தமிழர்க்கு பெருமைசேர்த்தார்.
    தம்பி தமிழ்மணிகண்டன் வாஞ்சையின் வடிவம். பிறருக்கு உதவுவதில் பேருள்ளம் கொண்டவர்.  எங்களது பணிகளில் இரண்டறக் கலந்தவர். 1993 ஆம் ஆண்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்காக சென்னை கன்னியாகுமரி நடைப்பயணம் வந்தபோது எங்களோடு உர்க்க  முழக்கமிட்டு நடந்த நற்றமிழ் நாயகர். சென்ற ஆண்டு நான் அமெரிக்கா சென்றபோது அவருடைய இல்லத்தில் தமிழ் நூல்கள் பலவற்றையும் வாங்கி ஆழ்ந்த சிந்தனையில் பல்வேறு பாடல்களைப் பாடினார். நான் இரசித்தேன் தந்தை எங்களுக்கெல்லாம் ஊட்டிய உணர்வு குன்றாமல் பெருக்கெடுத்து ஒடியது கண்டு மகிழ்ந்தேன்.
    தற்போது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டை உலகத்தமிழ் அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்று பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 7ஆம் உலகத்தமிழர் மாநாட்டை சிறப்பாக அரும்பாடுபட்டு நடத்திகிறார். உலகம் முழுமையும் வரும் பேராளர்களுக்கு சான்றுருதி வழங்கி அழைத்துள்ளார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற பொன் மொழிக்கொப்ப எங்களுடைய இன்பங்களை பொதுமையாக்கி தமிழிற்கும் தமிழர்க்கு ஏற்றம் தரு பணிகளில் மகிழ்கிறோம்.
    பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநட்டை அழைப்பை 44 ஆண்டுகளாக தமிழர்களின் படைக்கலனாக இருக்கும் தமிழ்ப்பணியில் வெளியானவுடன் ஆர்வத்தோடு பேராளர்களாகப் பதிவு செய்தனர். அமெரிக்கா என்பது அனைவராலும் வர இயாலாத பொருட்செலவு உள்ள பணியாக இருந்தது. இருப்பினும் தமிழ் மீதும் அருமைத் தந்தையார் அவர்களின் கண்ணயராப் பணீமீதும் எண்பது வயதில் தடம் மாறாமல் கொள்கைச் சிகரமாக வாழும் தொண்டறக் கோமான் மீது கொண்ட பேரன்பால் பதிவு செய்து வருகை தருகின்றனர். அப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
    இணைப்பு
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் மாநாடு எனது பொன்விழா ஆண்டில் மலேசியாவில் 2009ஆம் ஆண்டில் 4 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அண்ணன் டாக்டர் தருமலிங்கம், அருளாளர் விக்டர் அவர்க்ளின் பேருழைப்பை மறக்க இயாலாது.
    பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டு மலர்கள் தமிழினத்தின் வரலாற்றுப்பதிவுகள். அறிவியல் முன்னேற்றத்தின் முழு சக்தியையும் பயண்படுத்தி மலர் தயாராகிறது. உல்கம் முழுமையும் கட்டுரை வாழத்துரை வழங்கிய பெருமக்களுக்கும் நென்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
    என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல்                                 இறுதி இறுதி எமக்கு வாராது                                        என்றன் மொழி உககாள வைக்காமல்                                 என்றன் உயிரோ போகாது
என்ற என் தந்தையாரின் கவிதைக்கொப்ப தமிழர்கள் ஒற்றுமை மாநாடு அமரிக்கா வாசிங்டன் நகரில் நடைபெறுகிறது. தேமத்ரது தமிழோசை அமெரிக்க மண்ணில் ஒலிக்கிறது.                

No comments:

Post a Comment