Monday, June 1, 2015

தலைவர் கலைஞர் தளபதி பிள்ளைத்தமிழ் பாராட்டுரை


(சென்னை இராயப்பேட்டையில் 31=5-2015 அன்று நடந்த ஓவியக் கவிஞர் வண்ணப்பூங்கா வாசன் 69ஆம் அகவை விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)
.
நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் திராவிட இயக்கத்தின் தூண்கள் அமைப்புச் செயலர் ஆர்.எசு பாரதி அவர்களே மொழிப்போர் தளபதி எல்.கணேசன் அவர்களே கவிஞர் முத்துமாணீக்கம் அவர்களேசெம்பை சேவியர் புலவர் தேவதாசு அவர்களே கவிபாடிய கவிஞர் பெருமக்களே விழா நாயகர் ஓவியக் கவிஞர் வண்ணப்பூங்கா வாசன் அவர்களே வருகை தந்திருக்கும் பெருமக்களே அனைவருக்கும் வணக்கம்.

அண்மையில் கவிஞர் அவர்களின் தலைவர் தளபதி பிள்ளைத்தமிழை சென்னையில் இராணி சீதைமன்றத்தில் மிகச் சிறப்பாக வெளியிட்டார். இந்நூலைப் படித்த்தால் கலைஞரையும் தளபதியையும் இரு கண்களாகவே பதிவு செய்துள்ளார்.தலைவர் கலைஞர் அவர்களின் 92 ஆம் அகவை திருநாளை நாமெல்லாம் கொண்டாட உள்ளோம். இந்த நேரத்தில் கவிஞர் நூலில் கலைஞரையும் தளபதியையும் பற்றி அவர்  கூறியுள்ள கவிதைகளைக் கூறுவது பொறுத்தம் எனக் கருதுகிறேன்.

காப்புப் பருவத்தில் கலைஞர் பற்றிக் கூறுவது மிகச் சிறப்பாக உள்ளது.

”மூன்றாம்நாள் சூன்திங்கள் இருபத்து நான்கில்
முழுமதியார் கதிரொளியார் பிறந்த ஆண்டு” (பக் 51)

தலைவர் கலைஞர் அவர்களை முழு மதியாயாகவும் தமிழர்களின் இன்னல் எனும் இருட்டைப் போக்கவந்த கதிரொளியார் எனப் பகரும் விதம் அருமையிலும் அருமை.

நாமெல்லாம் கலைஞரை பகுத்தறிவின் வடிவாகவும் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா அவர்களின் திரு உருவமாகவே இன்றும் காண்கிறோம். தமிழினத்திற்கு தொண்டாற்றும் ஈடு இணையற்ற் தலைவரை கவிஞர் வரியில் காண்போம்.

”கருவான ஐயாவை அண்ணவை உன்றன்
உருவாகக் காணுவதால் தமிழே காக்க “ (பக் 53)
எனப் பதிவு செய்கிறார்.

கலைஞரின் வரலாற்று அளவை மிகச் சிறப்பாக மெய்ப்பிக்கிறார் தலைவர் கலைஞர். தமது வரலாற்றை நெஞ்சுக்கு நீதியில் தொடர் தொகுப்பாக வெளிவந்து அதில் உலக வரலாறு தமிழர் வர்லாறு தமிழ் வரலாறு என கலைஞர கலைக் களஞ்சியமாகவே உள்ளது. கவிஞர் தம் வரியில் கூறும் வண்ணத்தைப் பாருங்கள்.

”வித்தகமே மொத்தமாக சித்தம் ஏற்றோம்
விண்ணளவு வரலாற்றைத் தமிழே காக்க” (பக் 54)

நம் தளபதி அவர்களின் பெயர் சூட்டல் வரலற்றை மிக சிறப்பாகக்
கூறுகிறார்,
”அண்ணாவை அய்யாவை நினைவு படுத்த
அய்யாதுரை என்றா பெயர் வைப்பதற்கும்
எண்ணத்தில் வைத்திருந்தார் தந்தை கலைஞர்
ஏற்றமிகு ருசுயநாட்டு தலைவர் சுடாலின்
மண்ணகத்தில் பிரிந்ததாலே அவரின் பெயரை
மாண்புடனே சுடாலின் என்ற பெயரைச் சூட்டி” (பக் 55)

சுடாலின் என்ற பெயருக்கு ஒப்ப வியக்கும் தமிழகத்தில் வலம் வருகிறார்.
நூலில் தாலப் பருவத்தில்  சான்றுகள் எல்லாம் நம் தொல் தமிழ் நூல்களில் உள்ளது, கலைஞர் பெருமான் நிலையான சான்றுகளாக தமிழகத்தில் உருவாக்கிய வள்ளுவர் கோட்டம், குறளோவிம், குமரியில் அய்யன் 133 அடிதிருவள்ளுவர் சிலை, பூம்புகார்,பன்னெடுங்காலம் மூடியிருந்த திருவள்ளுவர் சிலையை திறந்த வைத்த திறத்தை, தீரத்தை தம் பா வடிவில் தருகிறார் சுவையுங்கள்.

வள்ளுவர்க்கே எழிற்கோட்டம் கட்டி முடித்து
வரலாறாய் குறளோவியம் தீட்டிக் காட்டி
அள்ளும் அலை கன்னியாகுமரி திடலாம் கடலில்
அய்யனுக்கே உயரமான் சிலையை வைத்தாய்
துள்ளுகின்ற காவியமாம் சிலப் பதிகாரத்
தந்துபியை பூம்புகாரை வடித்த்தெடுத்தாய்
கள்ளென்று வெயில்காணா பெங்களூரீல்
சிறப்பான் சிலைதிறந்தாய் தாலோ தாலேலோ  (பக் 76)

தலைவர் கலைஞர் அவர்கள். மாற்றார் இழிசொல்லால் பெருமகனாரைச் சாடியபோது அவருகே உரித்த முறையில் அவர்கள் என்னைப் பற்றி வாழ்த்திய பேச்சுகளை எண்ணிக்கொள்வேன் என வள்ளுவனார் கூறிய

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
என்ற குறளுக்கு ஒப்ப வாழ்ந்து வருகிறார், அதை தம் கவிதையில் வண்ணப்பூங்காவின் வண்ணத்தைப் பாருங்கள்.
”இழிச்சொல்லைப் படிக்கட்டாய் மாற்றிக் காட்டி
இயக்கத்தை வளர்த்தெடுத்த வாய்மையாளர்” (பக் 102)
முத்தப் பருவத்தில் தள்பதியை வாழ்த்துவது சிகரமாக உள்ளது. ஓவியக் கவிஞரின் கவி ஒவியத்தைப் பாருங்கள்.
“பொதுவுடைமைத் தலைவர்பேர்  உனக்கும்  உண்டு
பொன்றாப்புகழ் நின்றதனால் எமக்குச் செண்டு
புத்ப்பொலிவை கழகத்தில் கொண்டு வந்தாய்
புதுநீதி கல்லார்க்கும் பாடம் தந்தாய்
பொதுநீதி வழுவாத புதுமை வேழம்
பொழிவாக மழையாக விழைவோம் உன்னை
செதுக்குகின்ற கற்சிலையாய் உன்னின் உறுதி
செம்மொழியே எம்விழியே முத்தந் தருகவே (பக் 103)
இந்நூலில் கழகத்தின் முன்னணிப் பெருமக்கள் அனைவரையும் கலைஞரோடும் தளபதியோடும் இணைத்து ஒரு வரலாற்றுப் பதிவாகவே தந்துள்ளார்.
இனமானக் காவலர் பேராசிரியர், தமிழர் தலைவர் கி வீரமணி ஆகியோரின் வாழ்த்துரைகள் இந்நூலிற்கு மகுடமாக உள்ளது.
கோவையில் ஐயா மு. இராமநாதன் அவர்களின் பட்டரையில் உருவானவர் எனபதை அறியும் நெஞ்சம் நெகிழ்கிறது. அவரது வாழ்த்துரையும் அணிசேர்க்கிறது.

தலைவர் தளபதி பிள்ளைத்தமிழ் திரவிட மாண்புடையோரின் களஞ்சியமாக உள்ளது.

வண்ணப்பூங்கா வாசன் பன்னெடுங் காலத்திற்கு முன்பே கழகக் குடும்பத்தின் போராளி. இலக்கிய வாணில் ஒளிரும் நட்சத்திரம். பல் போராட்டங்களுக்கிடையில் தம் கொள்கையை கூற வண்ணப்பூங்கா எனும் இதழை நடத்திவரும் இதழாளர். தாம் மட்டுமல்ல மற்றோரையும் அறிமுகப் படுத்த 1000 பெருமக்களின் யார் எவர் தொகுப்பை வெளியிட்ட பண்பாளர். அவர் கையால் பட்டம் பெறாதவர்கள் இல்லை எனும் அளவிற்கு பட்டம் வழங்கிய பாவலர். அவர் பட்டம் வழங்கும் விதம் பெறுவோர் பெருமிதம் கொள்ளத்தக்க அளவு வாங்குவோரை சிறப்பு இருக்கையில் உட்காரவைத்து தலையில் முடிசூட்டி பட்டம் வழங்குவார்.

இராயப்பேட்டையில் தேனியாகப் பணியாற்றும் தொண்டர். அவரது ஓவியங்கள் சான்றோர்களின் பாராட்டைப் பெற்றவை. அதனால்தான் அவர் ஓவியக் கவிஞராக வலம் வருகிறார், 69ஆம் அகவை காணும் ஒவியக் கவிஞரை காவியக் கலைஞரை  வாழ்த்துவதில் பேருவகை கொள்கின்றேன்.வண்ணப் பூங்கா வாசன் அவர்கள் சோர்வு அறியாத இளைஞர்.முதுமை அவரின் எழுச்சியால் குறையும் தமது துணைவியார் கோமதி அம்மையார் இழந்த நிலையிலும் அயராமல் தொண்டாற்றும் வாசன் நீடு வாழ்க, அவர்து பணிக்கு உறுதுணையாக இருக்கும் திருமகன் சுந்தரக் கண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வண்ணப்பூங்கா  வளர்க அவரது கழகத் தொண்டு

1 comment:

  1. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete