https://www.facebook.com/ThenpulolyoorKrish/videos/491879694688267/
Monday, July 1, 2019
நன்றியன் கவித்தேன் நமக்காய்த் தந்தருளும்
நாயகன் திருவள்ளுவரை நன்றியொடு வாழ்த்தினேன் பணிந்து
கவித்தேன் சுவைத்தேன் கலைமா மணியே
குவித்தேன் கரங்களைக் கூப்பி – உவந்தேன்
உனது தமிழ்ப்பணி உன்போ லுயர்வே
கனவானே வாழ்க களித்து!
வள்ளுவனே வந்தானோ வண்தமிழை வாழவைக்க
தௌ;ளு தமிழமுதச் செய்யுளெலாம் - அள்ளுறுதே
பாரெலாம் வாழுகின்ற பன்னாட்டுச் செந்தமிழர்
வாரி அணைக்கின்றீர்! வாழ்த்து!
(அள்ளுறுதல் - வாயூறல் )
உள்ளம்போ லோங்கிய உத்தமன் சேதுராமன்
தௌ;ளு தமிழுக்காய்த் தந்தானோ- வள்ளுவனை
அள்ளித் தருகின்றா னன்னைத் தமிழமுதை
கொள்ளை அழகினிலே கோர்த்து!
கள்ளங் கபடமிலாக் கண்ணியனே வள்ளுவா
உள்ள நிறைவுடனே உன்பணிகள் - தௌ;ளத்
தெளிவாய்த்; தெரிகிறதே தேசமெலா மோங்கி
ஒளிமயமே உன்வாழ்வு ஓம்!
தௌ;ளு தமிழினைத் தேனில் கலந்துநீ
அள்ளித் தருகின்றா யன்றாடம் - வள்ளலே
உன்னாசா னுன்தந்தை உன்னைப் படைத்தானே
என்னே யவன்சேவை ஏத்து!
செல்லும் சபையெலாம் சிரிப்பொலி சேர்த்திடும் சிற்பியே வள்ளுவா!
சொல்லின் உறுதியும் சோர்விலாச் செந்தமிழ் ஞானமும் கொண்டு
அல்லும் பகலும் அயராது அன்னைத் தமிழ்காக்கும் கலைமா மணியே!
வல்லவனே! வளத்தொடு வாழ்வாங்கு வாழி வானரும் போற்றவே!
கரும்பென இனித்து வாழ்க! கண்ணியா நீடு வாழ்க!
விருதுகள் பல்கிப் பெருகி வளமொடு வாழ்வை வாழ்க!
திரும்பிடும் திசைகள் தோறும் தேடிய நட்பு மலிந்து
விரும்பிய யாவும் பெற்று வள்ளுவா வாழ்க வாழ்க!
உள்ளமும் உடலும் என்றும் உறுதியாய் நிலைத்து வாழ்க!
தௌ;ளு தமிழ் ஞானம் தெவிட்டாது இனித்து வாழ்க!
பிள்ளைகள் பேரர் பூட்டர் பந்தம் சூழ்ந்துநீ வாழ்க!
வள்ளுவா வாழி வண்தமிழ் உலகம் வாழ்த்த நீடே!
அன்பொடு அருட்கவி ஞானகணேசன் குடும்பம்
நாயகன் திருவள்ளுவரை நன்றியொடு வாழ்த்தினேன் பணிந்து
கவித்தேன் சுவைத்தேன் கலைமா மணியே
குவித்தேன் கரங்களைக் கூப்பி – உவந்தேன்
உனது தமிழ்ப்பணி உன்போ லுயர்வே
கனவானே வாழ்க களித்து!
வள்ளுவனே வந்தானோ வண்தமிழை வாழவைக்க
தௌ;ளு தமிழமுதச் செய்யுளெலாம் - அள்ளுறுதே
பாரெலாம் வாழுகின்ற பன்னாட்டுச் செந்தமிழர்
வாரி அணைக்கின்றீர்! வாழ்த்து!
(அள்ளுறுதல் - வாயூறல் )
உள்ளம்போ லோங்கிய உத்தமன் சேதுராமன்
தௌ;ளு தமிழுக்காய்த் தந்தானோ- வள்ளுவனை
அள்ளித் தருகின்றா னன்னைத் தமிழமுதை
கொள்ளை அழகினிலே கோர்த்து!
கள்ளங் கபடமிலாக் கண்ணியனே வள்ளுவா
உள்ள நிறைவுடனே உன்பணிகள் - தௌ;ளத்
தெளிவாய்த்; தெரிகிறதே தேசமெலா மோங்கி
ஒளிமயமே உன்வாழ்வு ஓம்!
தௌ;ளு தமிழினைத் தேனில் கலந்துநீ
அள்ளித் தருகின்றா யன்றாடம் - வள்ளலே
உன்னாசா னுன்தந்தை உன்னைப் படைத்தானே
என்னே யவன்சேவை ஏத்து!
செல்லும் சபையெலாம் சிரிப்பொலி சேர்த்திடும் சிற்பியே வள்ளுவா!
சொல்லின் உறுதியும் சோர்விலாச் செந்தமிழ் ஞானமும் கொண்டு
அல்லும் பகலும் அயராது அன்னைத் தமிழ்காக்கும் கலைமா மணியே!
வல்லவனே! வளத்தொடு வாழ்வாங்கு வாழி வானரும் போற்றவே!
கரும்பென இனித்து வாழ்க! கண்ணியா நீடு வாழ்க!
விருதுகள் பல்கிப் பெருகி வளமொடு வாழ்வை வாழ்க!
திரும்பிடும் திசைகள் தோறும் தேடிய நட்பு மலிந்து
விரும்பிய யாவும் பெற்று வள்ளுவா வாழ்க வாழ்க!
உள்ளமும் உடலும் என்றும் உறுதியாய் நிலைத்து வாழ்க!
தௌ;ளு தமிழ் ஞானம் தெவிட்டாது இனித்து வாழ்க!
பிள்ளைகள் பேரர் பூட்டர் பந்தம் சூழ்ந்துநீ வாழ்க!
வள்ளுவா வாழி வண்தமிழ் உலகம் வாழ்த்த நீடே!
அன்பொடு அருட்கவி ஞானகணேசன் குடும்பம்
Thursday, December 31, 2015
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் பதில்கள்
பேட்டி கண்டவர் முனைவர் பேராசிரியர் சாந்தி சென்னை
1. கவிதையில்
உங்களுக்கு ஈடுபாடு வரக் காரணம்.? நான் பிறந்தது தமிழ்க்
கவிதைக் குடும்பம். தந்தை பெருங்கவிக்கோ அவர்கள்
எங்களைப் பள்ளிப் பருவத்திலிருந்த்தே கவிதை எழுத ஊக்குவிப்பார்கள். தந்தையார் கவிதைகளும்,
இந்நூற்றாண்டில் வாழும் கவிஞர்களின் கவிதைகளின் தாக்கமே கவிஊற்றின் காரணம். சமூக அவலங்களைக்
காணும்போது எழும் உள்ளக் கொதிப்பே கவிதையின் பிறப்பு.
2. வணிகவியல்
படித்துவிட்டு தமிழ் எழுத்தாளர் வரிசையில் வரக் கார்ணம் என்ன?
பள்ளி நாடகளிலேயே எழுத்தார்வம் எம்மை
ஆட்கொண்டது. தமிழ்ப்பணி எனும் இதழ் தந்தையாரால் தொடங்கப்பட்டு 44 ஆண்டுகளாக் வெளியிட்டு
வருகிறேன். புதுமுக வகுப்புக்குப்பிற்குப் தமிழ்ப்பணியின் ஆசிரியராகவும் மாலைநேரக்
கல்லூரியில் வணிகவியலும் படித்தேன். தமிழ்ப்பணிக்கென அச்சகம் தொடங்கினேன்.பின் முதுகலை
வணிகவியல் அஞ்சல் வழியில் படித்தேன். என் அன்னைக்கு வங்கிப்பணிக்கு யான் செல்லவேண்டும்
என்ற பேரவா. தந்தையின் வழிகாட்டுதலில் தமிழ்ப்பணியே
என்னை ஆட்கொண்டது.‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” என்ற வள்ளுவனாரின் எண்ணமே எழுத்தாளர்
வரிசையில் வரக் காரணம்.
3. உங்கள் புத்தகங்களில்
ஈழத் தமிழர்கள் குறித்து அதிகம் எழுதியுள்ளீர்கள் அதுகுறித்து சில வார்த்தைகள்? ஈழத் தமிழர் போராட்டங்களைப்
பற்றி எழுதுவது மட்டுமல்ல அவர்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவாக பன்னாட்டுத் தமிழுமன்றம்
எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளோம். தமிழகத்தில் அனைத்துக் கட்சி போராட்டங்கள் தில்லி
மாநகர் போரட்டங்கள் சுவிடசர்லாந்து, இலண்டன், அமெரிக்கா கனடா ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழர்
போராட்டங்களில் கலந்து அவர்களுடைய இன்னலில் பங்கேற்றுள்ளேன்.தமிழகத்திலிருந்து எண்ணற்ற்
ஈழ மக்கள் புலம் பெயர்வதற்கு என் இல்லத்திலேயே தங்கவைத்து வழிப்படுத்தியுள்ளேன். அந்த
புறநானூற்றுத் தமிழர்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளேன்.நம் வாழும் காலத்தில் தமிழர்களின்
வீரத்தையும் பெருமையையும் உலகுக்கு உணர்த்தியவர்கள் ஈழத்தமிழர்களே.
4. தந்தை பெரியாரின்
சிந்தனைகளை உங்கள் எழுத்துக்களின் பதிவு செய்துள்ளீர்கள் பெரியாரின் கருத்துப்படி பெண்களின்
முன்னேற்றம் உள்ளதா இல்லையா? தந்தைபெரியார்
இல்லை என்றால் தமிழகத்தில் சமத்துவம் தோன்றிருக்காது. தந்தை பெரியார் 94ஆம் அகவை வரை
முத்திரப்பையை சுமந்து இறுதி வரை மனித இனதிற்கும் சமூக நீதிக்க்கும் பெண்சமத்துவத்திற்கும்
போராடிய மாமனிதர்.. அவர் போராடிய அனைத்திலும் சமூகம் முன்னேற்ற்ப் பாதையில் உள்ளது.
பெண்கள் முன்னேற்றம் சிறப்பாக உயர்ந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு மேலாக
கோலோச்சுகிறார்கள். சொத்துரிமை, குடும்ப கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு.அனைத்திலும் முன்னனியில்
உள்ளார்கள். ஆண்பெண் சமத்துவச் சிற்பி தந்தைபெரியார். அவருடைய பகுத்தறிவுக் கொள்கைகளே
தமிழர்களின் ஆயுதம் என்பதில் அசையாத கொள்கையாளன் நான்.
5. சினிமா பெண்களை காட்சிப் பொருளாக விளம்பரப் பொருளாக பயண்படுத்திக்
கொண்டிருப்பது குறித்து தங்கள் கருத்து? ”பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்ற
பொய்யாமொழியாரின் மொழியை உணராத அறிவிழிகள். பெண் தாயாக, தாரமாக, மகளாக. மருமகளாக, வாழ்ந்து
சமூகத்திலும் தலையாய பங்கேற்கிறார்கள். நான் பெண் என்ற தலைப்பிலேயே நெருப்ப்பு நதி
நூலில் எழுதியுள்ளேன். அவர்கள் காட்சிப் பொருளல்ல கற்பகத் தருக்கள். அந்தப் படங்களை
மக்கள் புறக்கணிபதற்கு கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
6. இன்றைய இளைஞர்கள்
மத்தியில் காதலைத் தவிர வேறு சிந்தனை இந்த சினிமா பதிக்கவில்லை அதுகுறித்து உங்கள்
கருத்து? தமிழர்கள் வாழ்வில்
காதல் இரண்டறக் கலந்தது “செம்புலப் பெயல்நீர் போல அன்புடைநெஞ்சம்” என புறநானூற்றும்
புலவன் பாடியுள்ளான். காதல் இருபாலாரும் கற்புடன் கடமையுடன் சமூக உணர்வுடன் இருக்கும்
காதலாக இருக்கவேண்டும். சாதியை சமாதியாக்கும் ஒரே சக்தி காதல்தான். வரும் படங்கள் காமத்தையே
தூண்டுகிறது காதலைத் தூண்டவில்லை கண்டிக்கப் படவேண்டிய ஒன்று.
7. சமூகச் சீரழிவுகளைக்
களைய இளைஞர்கள் மத்தியில் எந்த வழியில் சிந்தனைகளைப் பதிக்க வேண்டும். ஒவ்வொறு
இளைஞனுக்கும் திருக்குறள் மறை நூலாகப் பதியவைக்க வேண்டும். அது வீடு பள்ளி சமுகம் என
நம் தமிழர்களுக்குப் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்து வோமானல் சீரழிவுகள் தானகக் களையும்.தமிழர்கள்
தலைநிமிர்ந்து வாழ்வர்.
8. நூல் ஆசிரியர்
கவிஞர் பேச்சாளர் இதில் எந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்வீர்கள்?
நான் எழுத்துவதையோ பேசுவதையோவிட செயல்
வடிவில் தொண்டாகச் செய்வதில்தான் மகிழ்ச்சியடைவேன். எழுதுவதால் மட்டும் சாதித்து விடமுடியாது
அதைப் பின்பற்றினால்தான் சமுதாயம் மேன்மையுறும். என்னுடைய ஒரு நூலின் தலைப்பே “கற்றபின்
நிற்க” என வைத்துள்ளேன்
9. உங்கள் படைப்புகளில்
எது சிறந்தது.? என்னுடைய
படைப்புகள் அனைத்துமே சிறந்த படைப்புகளாகவே. இருப்பினும் “யாதும் ஊரே” உலகத் தமிழர்களின் உரைகல். கனடாவில்
டோரண்டோ நகரில் இந்நூல் வெளியீட்டின்போது கீதம் வானொலி அறிஞர் கணபதி இரவீந்திரன் ஈழத்தமிழர்கள்
பற்றிய நான் ;பட்டியலிட்ட கருத்துக்களை நெகிழ்வுடன் கூறி ஈழத்தமிழர்கள் துன்பத்தை திருவள்ளுவர்
பதிவு செய்துள்ளார் ஈழத்தமிழர்கள் ஆசிரியருக்கு அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறியது
நூலின் பயணை உணர்ந்தேன். மலேசியாவில் ஆய்வறிஞர் அமரர் சந்திரகாந்தன் ஆய்வுரை என உலக
நாடுகளில் பலநாடுளிலும் வெளியீடு கண்ட நூல்.
10. உங்கள் படைப்புகளில்
எதை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று நினைத்தது உண்டா?
யான் பர்மா சென்று திரும்பியவுடன்
பர்மா மண்ணிலே எனும் நூல் வெளியிட்டேன். இன்னும் விரிவாக பர்மா பற்றி எழுத ஆவல் காலப்
போக்கில் நிறைவு செய்வேன்.
11. தமிழ்நாட்டில்
தமிழ் பின் தங்கியதற்கு காரணம் என்ன? தமிழ் நாட்டில் தமிழ்
பின் தங்கியதற்குக் காரணம் பெற்றோர்களின் ஆங்கில மோகம். கல்வியை அரசு கட்டுப்பாட்டிலிருந்து
மெட்ரிகுலேசன் பள்ளி என தனியார் துறையாக்கியது. அரசு பள்ளி ஏதோ எழைமக்களின் புகழிடம்
என மாற்றி வஞ்சித்தது. தமிழ் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை அளிக்காதது. தமிழ்நாட்டில்
தமிழரல்லாதாரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில்
1993ஆம் ஆண்டு தந்தையார் 50 தமிழ் அறிஞர்களுடன் 1330கி.மீ. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
கொள்கைக்காக நடைப்பயணமாக வந்தோம். தொடர்ந்து 23 ஆண்டுகாலமாக ஊர்திப் பயணமாக விழிப்புணர்வுப்
பயணத்தைத் தொடர்ந்து செய்துவருகிறோம். மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். ஆட்சியாளர்கள்
கபட நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் ஆள வகை செய்யவேண்டும்.
12. ஒருமொழியின்
பொருளாதர பொருளாதார நிலை உயரும்போது மொழியின்நிலை உயரும் இது குறித்து உங்கள் கருத்து? தமிழுக்கு எல்லா ஆற்றலும் உண்டு
தமிழர்களுக்கு உண்டா. மொழி தலைமுறை தலைமுறையாக வென்று வருகிறது. அது தன் இனத்திற்கு
மிகப் பெரிய அரணாக உள்ளது. கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என்பது வரலாறு இன்று வாழும்
தலைமுறையினர் தம் பொருளாதர வளத்தைப் பெருக்கி மொழியைக் காக்கவேண்டியது அவசியம. அதற்கு
ஆட்சியாளர்களைப் பணிய வைப்பதற்கு புரட்சி வேண்டும் அதற்கு தமிழர்கள் அணியமாக வேண்டும்.
வீன் பிதற்றலால் பயணில்லை.
13. மலேசிய மக்களுக்கு தமிழ்ப் பற்று அதிகம் காரணம் என்ன
என்பது குறித்து கருத்துகள்? பேரறிஞர் அண்ணா அவர்கள்
மலேசியா பயணத்தின்போது மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று குறிப்ப்பிட்டார்.
இன்றும் அதுதான் தமிழை வாழவைக்கிறார்கள். தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், ஆலயங்கள், பகுத்தறிவு
முழக்கங்கள், தமிழ் மாநாடுகள் நூல் வெளியீடுகள்
நாளிதழ்கள் பருவ இதழ்கள் தமிழ் இயக்கங்கள், தமிழ் வானொலி, தொலைக்காட்சி என தமிழ்
வளர்ச்சியைப் பட்டியலிடலாம். கற்றணைத்து ஊறும் நூலில் விரிவாகக் கூறியுள்ளேன்.
2009 ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6ஆம் உலகத்தமிழர் ஒற்றுமை மாநாடு கோலாலம்பூர்,
ஈப்போ. பினாங்கு. கெடா ஊர்களில் நான்கு நாட்கள் நடத்தினோம். நடத்திய பெருமைக்குரியவர்கள்
மலேசியத் தமிழர்களே.
14. அமெரிக்கா
கனடா சப்பான் ஐரோப்பிய தென்ஆப்ரிக்கா போன்ற வெளிநாடுகளில் தமிழின் நிலைகுறித்து தங்கள்
கருத்து? அமெரிக்கத் தமிழர்கள் அனைத்து
மாநிலத்திலும் ச்ங்கம் வைத்து தமிழ் வளர்க்கின்றனர். ஆண்டுதோறும் ஃபெட்னா கூட்டமைப்பின்
மூலம் மாநாடுகள் நடத்திவருகின்றனர். ஒவ்வொரு சங்கமும் தமிழ் இதழ்கள் நடத்துகின்றனர்.இந்த
ஆண்டு சூலை25,26. பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 7ஆம் உலகத் தமிழர்கள் மாநாடு வாசிங்க்டன்
நகரில் நடத்தினோம் உலகளாவிய பெருமக்கள் பங்கெற்றனர். கனடாவில் ஈழத் தமிழர்களின் தமிழ்
உணர்ச்சியையும் வளர்சியையும் கணலாம் டொரண்டோ நகரில்எங்கு நோக்கினும் தமிழ்ப்பெயர்ப்
பலகைகள். 15 மேற்பட்ட தமிழ் இதழ்கள் தமிழ்க்
கல்லூரிகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள். நாள்தோறும் கலை நடன விழாக்காள் ஆண்மிக
ஆலயங்கள் என தமிழ் உணர்வு பொங்கும் நாடு கனடா. ஐரோப்பிய நாடுகளில் நாடுகளின் தம் பிள்ளைகளுக்கு
தமிழைக் கற்றுக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர். ஈழத் துன்பத்தல் புலம் பெயர்ந்தாலும்
தமிழைத் தன் வாழ்வில் நீங்கா வண்ணம் காத்து வருகின்றனர்.உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம்
மூலம் 10 மாநாடுகள் உல்கம் முழுமையும் நடத்தியுள்ளனர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
செர்மனி பெர்லின்நகரில் 3ஆம் உலகத்தமிழ்மாநாடு நடத்தினோம். 50 அறிஞர் பெருமக்கள்
50 ஈழக் குடும்பங்களில் தங்கினர். உலகப் பெருமக்கள் பங்கேற்ற மாநாடு இது. தென் ஆப்ரிக்காவில்
நம் இந்தியத் தமிழர்கள் தமிழ் மறந்து தமிழ் பெயரளவில் கொண்டுள்ளனர், தமிழ்கத்திலிருந்து
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் இராமசாமி பல்கலைகழகமும் இணைந்து தமிழ் பயிற்றுணர்களை
உருவாகியுள்ளனர். யானும் தந்தையும் தென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் பட்டமளிப்பு விழாவில்
பங்கேற்றோம். கவிவானம் நூலில் பதிவு செய்துள்ளேன். தமிழ்க்கலை ஆலயம் அங்கு சிறப்பாக
உள்ளது.
15. பேச்சுத்
தமிழ் குறித்து உங்கள் கருத்து? பெற்றோர்கள் இல்லத்தில்
தமிழிலேயே மக்களிடம் பேசவேண்டும். ஆனால் மம்மி டாடியும் வாக் பன்னித் டாக்பன்னி என பன்னித் தமிழ் தமிழர் நாவில் வருவதைக்
கண்டு நெஞ்சம் குமுறுகிறது. மக்களை வழிப்படுத்த வேண்டிய ஊடகங்களின் தலைப்பும் பேச்சும்
ஆங்கில மயம்.செய்தித் தாள்கள் தமிழ் பத்திரிகை என்ற எண்ணமே இல்லை, நான் பர்மா சென்றிருந்த்தபோது
அனைத்து மக்களிடமும் இராமநாதபுர மாவட்ட கொஞ்சு தமிழ் நடமாடியது. உங்கள் தொலைக் காட்சி
இங்கு வந்தவுடன் தமிழ் இங்கு கெடுகிறது என்று கூறிய்போது வெட்கித் தலைகுனிந்தேன். தமிழில்
பேசும்போது ஆங்கிலக் கலக்காத தமிழே பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் ஆங்கிலம்
பேசும் மான உணர்ச்யைக் கொள்ளவேண்டும்.
16. கவிதைகள்
குறித்து உங்கள் கருத்து? தழிழ்க் கவிதையின்
பொற்காலம் இக்காலம். மூத்த கவிஞர்களும் இளைய கவிஞர்களும் உலகம் முழுமையும் சாதனை புரிகின்றனர்.
எல்லா பாவகைத் தளத்திலும் தமிழ்க் கவிதை உச்சத்தில் உள்ளது, இணைய தளத்திலும் கவிதைத்
தாய் ஊர்வலம் மிகச்சிறப்பாக உள்ளது. எம் தந்தையார் கூறுவதுபோல் ஒரு தமிழ்க் கவிஞர்
நோபல் பரிசு பெறுவார். தமிழ்க் கவிதை தம் வீச்சால் உலகை ஆள்கிறது.
17. பொதுவுடைமை
குறித்து உங்கள் கருத்து
பெரியார் சிந்தனைகள் எல்லம்
பொதுவுடைமை கருத்து தானே. பெரியார் சிந்தனையாளர்கள் பொதுவுடைச் சிந்த்னையாளர்களே
18. தமிழ் வளர்வதற்கு
அரசு செய்ய வேண்டிய வேலை என்ன.? முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் தமிழுக்கென்று ஒரு
அமைச்சரை நியமித்து எல்லா நிலைகளிலும் தமிழை முதன்மைப் படுத்தினார்கள் அது தொடர வேண்டும்.
செம்மொழி எனத் தகுதி பெற்று அதற்கென நிதி பெற்று செம்மொழி மாநாடு உலகமே வியக்கும் வண்ணம்
நடத்தினார்கள் தற்போது செம்மொழி என்ற சொல்லே இல்லாமல் புதைக்கிறார்கள் அது யார் ஆண்டாளும்
செம்மையாக தொடரவேண்டும். தமிழர்கள் பெட்டகம் அறிஞர் அண்ணா நூலகம் போன்று மாவட்டம் தோறும்
தொடரவேண்டும். ஆட்சி மாற்றம் தமிழைப் புதைக்கக் கூடாது. ஆட்சியில் அலுவலில், நீதிமன்றத்தில்.
கல்விக்கூடத்தில். உயர்கல்வியில் ஆலயத்தில், வாழ்கையில் அனைத்திலும் தமிழை நடைமுறைப்படுத்தவேண்டும்.
19. மெட்ரிக்குலேசன்
கல்வி குறித்து தங்கள் கருத்து? கல்வியை
வியாபார மையமாக மாற்றிய ஒரு அமைப்புதான் மெட்ரிகுலேசன் பள்ளி. பெற்றோர்களிடம்பகல் கொள்ளை,
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சொற்ப ஊதியம் அவர்கள் கல்லூரி பல்கலைக்கழகமென உயர்வர்.
அங்கு படித்தவர்கள் பெரும்பாண்மையினர் எவ்வித எம்மொழியறிவும் இல்லாமல் அறிவுமின்றி
அல்லலுறுகின்றனர். சென்னை முதல் குமரி முதல் அனைவருக்கும் ஒரே அரசுவழி தரமான தமிழ் வழிக் கல்வி கொண்ட வரத் திட்டமிட வேண்டும்.
20. இலக்கிய
உலகில் தமிழின் நிலை முதல் இடத்தில் உள்ளது ஆனால்
நடைமுறையில் ஏன் தளர்ந்து உள்ளது? தாங்கள்
கூறுவது உண்மை சங்க காலம் முதல் இன்றுவரை தமிழின் நிலை முதல்நிலையில்தான் உள்ளது. மதத்தைப்
பரப்பவந்த மத போதகர்களை ஆட்கொண்டு அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. இன்று
தமிழர்கள் அனைத்தையும் படிக்கும் ஆர்வம் பெருக வேண்டும். தமிழ் உணர்வாளர்கள் தமிழுக்காக
போராடியவர்கள் போற்றப்பட வேண்டும். வளர்ந்தவர்கள் தங்களைப் பற்றியே தன்னல விளம்பரம்
செய்யாமல் அனைவரையும் வெளிச்சம் காட்டவேண்டும். அரசு பரிசுகள் நடுநிலையோடு வழங்கி ஊக்கமளிக்கவேண்டும்.
ஆசிரியரில் நூல்கள் அரசு நூலகங்களில் கன்னியத்தோடு வாங்கி எழுத்தாளர்களை பாதுகாக்கவேண்டும்.தமிழ்
என்றும் முதன்மையாகவே இருக்கும் தமிழைத் தாங்குவர்களை
தமிழர்கள் முன்னிறுத்தவேண்டும்.
21. தமிழ் மொழியின்
ஆய்வுகள் குறித்து ஒரு சில கருத்துகள்?
தமிழ் காட்சிப் பொருளாக இல்லாமல். கருவூலமாகத் திகழ எல்லா நிலைளிலும் தமிழ்
ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும். தமிழர்கள் இன்று உலகம் முழுமையும் வெற்றிகொடி நாட்டுவதை
தமிழ்த் திரைப்படம் வரும்போது உணரலாம், இந்தத் தளத்தை ஆய்வுக் களமாக எல்லா நிலைகளிலும்
முயற்சி மேற்கொள்ளவேண்டும். ஒவ்வொரு உலகப் பல்கலைக்கழகங்களும் தமிழ் இருக்கைகள் அமைத்து
உலகத் தமிழர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழனால் முடியும் என்ற சாதனைச் சரித்திரம் நிலைகொள்ளவேண்டும்.
கனடா டோரண்டோ நகரில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவரின் கற்றபின் நிற்க நூல் வெளியீட்டு விழா
(கனடா டோரண்டோ நகரில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவரின் கற்றபின்
நிற்க நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)
கனடா டோரண்டோ நகரில் அரும்பாடு பட்டு கற்றபின் நிற்க நூலின் வெளியீட்டு
விழா நடத்தும் அருமைச் சகோதரர் உதயன் ஆசிரியர்
லோகேந்திரலிங்கம் அவர்களே நிகழ்வுக்கு தலைமை தாங்கும் சோதிசெல்லா அவர்களே முதுபெரும
எழுத்தாளர் நவம் அவர்களே வருகை தந்துள்ள ஈழத் தமிழ் நெஞங்க்களே உங்கள் அனைவருக்கும்
என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். கற்றபின் நிற்க நூலை சிறப்பாக ஆய்வுரை
வழங்கிய கீதம் வானொலி கணபதி இரவீந்திரன் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றி.
தங்கள் முன் இன்றுநிற்பதற்குக்
காரணம் அமெரிக்காவில் வாசிங்க்டன் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 7ஆம்
மாநாடு. தமிழகத்திலிருந்து 20 பெருமக்களோடு நான் நான் வாசிங்டன் நகருக்கு வந்தேன்.
அதுபோது அண்ணன் உதயன் லோகேந்திரலிங்கம் தலைமையில் கனடாவிலிருந்து ஒரு குழுவை அழத்துவந்தார்கள்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் துரைராசா அவர்க்ளில் ஒருவர். அவர்களும் இந்நிகழ்வில்
பங்கேற்றுள்ளார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி. இருபெரும்க்களும் மாநாட்டில் அரியொரு உரை நிகழ்த்தி
மாநாடு சிறக்க பங்கேற்றமையை போற்றி மகிழ்கிறேன்.
அண்ணன் லோகன் அவர்கள்
தமிழகம் வந்திருந்தபோது என் கற்றபின் நிற்க நூலைக் கொடுத்து இந்நூல் கனடாவில் வெளியீடு
காணவேண்டும் என்ற அவ்வாவினைத் தெருவித்தேன். அண்ணன் அவர்கள் நான் தமிழகத்திலிருந்து
புறப்படுவதற்கு முன்பே தொலைபேசியில் பேசி நாள் இடம் அனைத்தையும் உறுதிப்படுத்தி முகநூலிலும்
உதயன் இதழிலும் பெரும் விளம்பரப் படுத்தினார்கள்.
உதயன் அவர்கள் நான் மட்டுமல்ல உலகிலிருந்து வரும் தமிழ்ப் பெரும்க்களை பாராட்டும் நட்பின்
நாயகர்.
மாநாடு வாசிங்டனில்
முடித்து அமெரிக்கா வாசிங்க்டனிலிருந்து கனடா டொரண்டோவிற்கு தன் மகிழ்வுந்திலேயே என்னை
இங்கு அழைத்துவந்துள்ளார்கள். அமெரிக்கா சாலைகளில் நாங்கள் பயணிக்கும்போது ஆனந்தக்
களியாட்டம்தான். நீண்ட பரந்த சாலைகளும் எங்கு நோக்கினும் இயற்கைத்தாயின் எழிலும் எம்மை
ஆட்கொண்டன. உதயன் லோகன் கவித்துவம் உடைய கவிநெஞ்சர். ஒவ்வொரு இயற்கைக் காட்சியின்போதும்
நாயகாராவைத் தாண்டும்போதும் இவருடைய கவியருவியும் தலைகாட்டும்.
நான் உலக நாடுகளில்
ஆற்றிய உரைகளின் தொகுப்பே கற்றபின் நிற்க எனும் இந்நூல். பல்வேறு நாடுகளில் அருந்தமிழ்த்
தொண்டாற்றும் பெருமக்களின் அருமை பெருமைகளைப் பதிவு செய்துள்ளேன். தமிழ் இலக்கியம்
சமுதாயம் இன உணர்வு எழுத்தாளர்கள் என பல்வேறு கோணங்களில் இந்நூல் பறைசாற்றும். எமை பேச அழைத்த பெருமக்கள் பெருமையுறும்
வண்ணம் நன்கு தாயாரித்தபின்தான் பேசச் செல்வேன் அந்தப் பேச்சுக்களும் அந்நிகழ்வை அரும்பாடுபட்டு
நடத்தியர்களையும் உலகறியச் செய்வதுதான் இந்த கற்றபின் நிற்க நூல் என பெருமையுடன் கூறிக்
கொள்கிறேன்.
மலேசியா. சிங்கப்பூர்
கனடா அமெரிக்கா என பல நாடுளில் ஆற்றிய உரைகள் இடம்பெற்றுள்ளன. திரைப்படங்களே தமிழர்களை
ஆளூகிற நேரத்தில் இலக்கியமும் உலகை வலம் வருவது எண்ணி மகிழத்தக்க ஒன்று. கனடாவில் தமிழ்
இதழ்களும் கலைகளும் தமிழ்ப் பள்ளிகளும் வானொலி தொலைகாட்சி கண்டுபெருவகை கொள்கிறேன். சுகார்பொரோ பகுதியில்
சென்றால் எங்கு நோக்கினும் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் கண்டு பேராணந்தம் கொண்டேன்.
சென்றமுறை நான் இங்கு
வந்தபோது நகராட்சி தேர்தல் நடைபெற்றது. அப்பொது இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கும் சகோதரர்
சோதிசெல்லா மற்றும் நம் தமிழ்ப் பெருமக்கள் பலர் போட்டியிட்டனர் அதுபோது நம் மக்களின்
சன்நாயகப் பங்களிப்பைக் கண்டேன்.தற்போது இங்கு
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினாராக உள்ள இரதிகா சிற்சபேசன்,
செந்தில், மற்றும் பல தமிழ்ப் பெருமக்கள் கனடாவின் மூன்று கட்சியிலும் போட்டியிடுகின்றனர்.
சுகார்பரோ தொகுதியில் போட்டியிடும் மூன்று கட்சிகளும் வேட்பாளர்கள் தமிழர்களே. இந்த
சனநாயகப் பங்களிப்பில் நம் தமிழ்மக்களின் உள்ளார்ந்த உணர்வைக் கண்டு மகிழ்கிறேன். மக்களாட்சியின்
மாண்பை உலகுக்கு உணர்த்தும் கனடா நாட்டை போற்றிப் பாராட்டுகிறேன்..
ஈழத்து மூத்த எழுத்தாளர்
நவம் அவர்களின் நூலும் வெளியீடு கண்டுள்ளது. ஐயா அவர்களை சென்னையிலேயே கண்டு அளவலாவிய
பேறுபெற்றுள்ளேன். அந்தக் காலத்திலேயே இலங்கையிலிலிருந்து தமிழகம் வந்து பயணக்கதையாக
தந்துள்ளார்கள். அந்தக் கால தமிழகத்தை படம்பிடித்துக் காட்டியுள்ளார்கள். பெருமகனாருக்கு
என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.
தமிழன் என்ற இனத்தை
உலகிற்கு உணர்த்திய பெருமை ஈழப் போராட்டத்திற்கே உண்டு. ஈழ மக்களின் ஈகம் என்றும் நிலைத்து
நிற்கும். காலத்தின் கோலத்தால் ஈழத் தமிழர்களிள் புலம், பெயர்ந்த நாடுகளில் வாழலாம்.
அவர்களுடைய உணர்வு எங்கும் தமிழ் தமிழர் பெருமையைக் காக்கும் பேரரணாக உள்ளது. தாங்கள்
அளித்துள்ள ஈகம் வீண் போகாது காலப்போக்கில் கட்டாயம் தமிழீழம் பிறக்கும். பிறக்கும்
எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
Monday, September 28, 2015
Saturday, September 5, 2015
அமெரிக்க மண்ணில் தேமதுரத் தமிழோசை
தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்
(அமெரிக்க நாட்டில் வாசிங்டன் நகரில் சூலை 25,26 – 2015 நாட்களில் நடந்த பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் தமிழர் ஒற்றுமை மாநாட்டு மலருக்கு மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவரின் முகவுரை )
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் தமிழர் ஒற்றுமை மாநாடு அமெரிக்க நாட்டில் வாசிங்டன் நகரில் நடைபெறுவதென்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாளாகும். அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் ஐந்தாம் உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு சான்பிரான்சிசுக்கோ செல்லதிட்டமிட்டபோது உலக்கவிஞர் சங்கத் தலைவர் பத்மபூசன் கிருட்டிணா சீனிவசன் வழி உலகக் கவிஞர் உரோசுமேரி வில்கின்சன் சான்று அனுப்பி அமெரிக்க நுழைவைப் 35 ஆண்டுகட்கு முன்பே பெற்று அருமை சிற்றந்தையார் வா.மு.முத்துராமலிங்கம் பயணச்சீட்டு வழ்ங்க மாநாடு முடித்து உலகை வலம் வந்தார். பின் மருத்துவாமாணி பஞ்சாட்சரம் அவர்கள் தமிழ் ஈழ மாநாடு நீயூயார்க்கில் தந்தையார் தலைமையிலேயே உலகத் தமிழ்த் தலைவரக்ள் பங்கேற்றனர்.
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதின் மெய்மையை வாழ்வில. உணர்கிறோம். என் அன்புச் சகோதரர் பொறிஞர் கவியரசன் அவர்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாடு நடந்தபோது பெரும் இன்னலுக் உட்பட்டோம் பெருந்தொகை அனுப்பி மாநாடு வெற்றிகரமாக நடத்த பேருழைப்பும் பொருளும் வங்கினார். கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உத்தமம் போறுப்பேற்று செம்மையான முறையில் மாநாட்டை நடத்தினார். அமெரிக்காவிலும் பல்க்லைகழக வாசு அரங்கநாதன் அவர்களோடு இணைந்து கணினி மாநாட்டை தமிழ்ப் பெருமக்களுக்கு சான்று வழங்கி அழைத்து சிறப்பாக நடத்தி தமிழுக்கும் தமிழர்க்கு பெருமைசேர்த்தார்.
தம்பி தமிழ்மணிகண்டன் வாஞ்சையின் வடிவம். பிறருக்கு உதவுவதில் பேருள்ளம் கொண்டவர். எங்களது பணிகளில் இரண்டறக் கலந்தவர். 1993 ஆம் ஆண்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்காக சென்னை கன்னியாகுமரி நடைப்பயணம் வந்தபோது எங்களோடு உர்க்க முழக்கமிட்டு நடந்த நற்றமிழ் நாயகர். சென்ற ஆண்டு நான் அமெரிக்கா சென்றபோது அவருடைய இல்லத்தில் தமிழ் நூல்கள் பலவற்றையும் வாங்கி ஆழ்ந்த சிந்தனையில் பல்வேறு பாடல்களைப் பாடினார். நான் இரசித்தேன் தந்தை எங்களுக்கெல்லாம் ஊட்டிய உணர்வு குன்றாமல் பெருக்கெடுத்து ஒடியது கண்டு மகிழ்ந்தேன்.
தற்போது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டை உலகத்தமிழ் அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்று பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 7ஆம் உலகத்தமிழர் மாநாட்டை சிறப்பாக அரும்பாடுபட்டு நடத்திகிறார். உலகம் முழுமையும் வரும் பேராளர்களுக்கு சான்றுருதி வழங்கி அழைத்துள்ளார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற பொன் மொழிக்கொப்ப எங்களுடைய இன்பங்களை பொதுமையாக்கி தமிழிற்கும் தமிழர்க்கு ஏற்றம் தரு பணிகளில் மகிழ்கிறோம்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநட்டை அழைப்பை 44 ஆண்டுகளாக தமிழர்களின் படைக்கலனாக இருக்கும் தமிழ்ப்பணியில் வெளியானவுடன் ஆர்வத்தோடு பேராளர்களாகப் பதிவு செய்தனர். அமெரிக்கா என்பது அனைவராலும் வர இயாலாத பொருட்செலவு உள்ள பணியாக இருந்தது. இருப்பினும் தமிழ் மீதும் அருமைத் தந்தையார் அவர்களின் கண்ணயராப் பணீமீதும் எண்பது வயதில் தடம் மாறாமல் கொள்கைச் சிகரமாக வாழும் தொண்டறக் கோமான் மீது கொண்ட பேரன்பால் பதிவு செய்து வருகை தருகின்றனர். அப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
இணைப்பு
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் மாநாடு எனது பொன்விழா ஆண்டில் மலேசியாவில் 2009ஆம் ஆண்டில் 4 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அண்ணன் டாக்டர் தருமலிங்கம், அருளாளர் விக்டர் அவர்க்ளின் பேருழைப்பை மறக்க இயாலாது.
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டு மலர்கள் தமிழினத்தின் வரலாற்றுப்பதிவுகள். அறிவியல் முன்னேற்றத்தின் முழு சக்தியையும் பயண்படுத்தி மலர் தயாராகிறது. உல்கம் முழுமையும் கட்டுரை வாழத்துரை வழங்கிய பெருமக்களுக்கும் நென்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல் இறுதி இறுதி எமக்கு வாராது என்றன் மொழி உககாள வைக்காமல் என்றன் உயிரோ போகாது
என்ற என் தந்தையாரின் கவிதைக்கொப்ப தமிழர்கள் ஒற்றுமை மாநாடு அமரிக்கா வாசிங்டன் நகரில் நடைபெறுகிறது. தேமத்ரது தமிழோசை அமெரிக்க மண்ணில் ஒலிக்கிறது.
தமிழுக்காக ஒரு உலகத் தமிழர் மிக்கி செட்டி
{2015 மே 1- 4 வரை தென் ஆப்ரிக்கா பயணத்தின் போது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் எழுதியது)
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் உலகின் மிகச்சிறந்த இயக்கம். தலைவர் இர. ந. வீரப்பனாரின் அரிய முயற்சியால் உலகம் முழுமையும் தழைத்து ஓங்கி உள்ளது. பொதுச் செயலாளர் செயலாளர் நாயகம் கணேசலிங்கம் அவர்களின் அளப்பரிய தொண்டு போற்றத்தக்கது. இயக்கத்தின் முதல் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்ளோடும் முனைவர் அருகோ அவர்களோடும் இணைந்து நடதிய முதல் மாநாடாகும். தமிழ்ப்பணியில் சார்பில் அரியதொரு மலர் ஒன்று வெளியிட்டோம. தொடர்சியாக பலவேறு நாடுகளில் உலகத்தமிழ்ப் பண்பாடு மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தந்தையும் நானும் பல்வேறு நாடுகளில் பங்கேற்று அளப்பரிய பங்காற்றி வருகிறோம்.
தலைவர் மிக்கி செட்டி அவர்கள் உதப இயக்கத்தின் தென் ஆப்ப்ரிக்கா கிளையின் தலைவரும். உலகத் துணைத்தலைவரும், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் பன்னாட்டுக் குழு உறுபினரும் ஆவார். பல்வேறு மாநாடுகளில் பெருமகனின் அளப்பரிய தொண்டைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவருக்கு சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். அண்மையில் சென்னையில் நடைபெற்ற தந்தையாரின் முத்துவிழாவிற்கு வருகை தந்து பெருமைப்படுத்தினார்.
மிக்கிசெட்டி அவர்கள் இந்நூற்றாண்டின் சிகரமான் சாதனையை தென் ஆப்ரிக்கா தமிழர்களுக்கு வழங்கியுள்ளார். தென் ஆப்ரிக்கா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் தமிழக எசு.ஆர். எம். பல்கலைக் கழகமும் இணைந்து தென் ஆப்ரிக்கா மக்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்களை உருவாக்கி உள்ளனர். அந்த பட்டமளிப்பு விழவிற்கு உலகின் பல்வேறுபகுதியிலிருந்து உதப இயக்கப் பொறுப்பாளர்கள் 30 பெருமக்கள் கலந்து கொண்டனர். அதில் நானும் தந்தையும் கலந்து கொண்டோம். இராமசாமி பல்கலைக் கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் அவர்களும் பல்கலைகழத்தின் பொறுப்பாளர்களும் தென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றனர்.
வந்திருந்த அனைவருக்கும் கோஃச்ட் லாண்ட் உணவகத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைவரையும் டர்பன் இந்தியப் பெருங்கடலின் கடற்கரை அழகை காண அழைத்துச் சென்றனர். காந்திவாழ்ந்த இல்லத்திற்கும் சென்றோம். 20 ஆண்டுகள் காந்தி அங்கிருந்து ஆற்றிய தொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அன்னை தில்லையாடி வள்ளியம்மை காந்தியடிகளுக்கு ஆற்றி தொண்டு இந்த இடத்தில்தான். அண்ணல் காந்தி நடத்திய இந்தியன் போஸ்ட் இதழ் அச்சகம் அனைத்தும் கண்டோம். அறிஞர் திரு.வி. க. எழுதி பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட காந்தியடிகள் பற்றிய நூலை பயணம் முழுமையும் படித்து மகிழ்ந்தேன. அவர் தென் ஆப்ரிக்காவில் காந்திடிகள் கண்ட சோதனைகளை பதிவு செய்துள்ளார், அந்த மண்ணில் அவர் வாழ்ந்து விடுதலைக்கு வித்திட்ட உணர்வைப் பெற்ற இடத்தில் நாங்கள் அனைவரும் வலம் வந்து எங்களின் பதிவுகளை குறிப்பேட்டில் பதிவு செய்தோம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்த வந்த பெருமக்களை டர்பன் வலம் வரச் செய்த பெருமை தலைவர் மிக்கிசெட்டி அவர்களைச் சாறும்.
டர்பனில் உள்ள இந்தியப் பெருங்கடல் வழியாகவே நம் தமிழர்கள் அந்நாட்களில் கப்பல் வழியாக ஆங்கிலேயர்கள் தோட்டப் புற வேலைகளுக்கு அழைத்து வந்துள்ளனர்.அன்று வந்த தமிழர்கள் இன்று மொழி இழந்து உருவில் தமிழர்களாக உள்ளனர்.ஆங்கிலமே பேசுகின்றனர் வழிபடும்போதுகூட ஆங்கிலத்தில் எழுதி வைத்தே படிக்கின்றனர்
இராமசாமி பல்கலைக் கழக வேந்தர் பாரிவேந்தர் அவர்கள் ஒருநாள் அனைவருக்கும் விருந்து வழங்கினார். தென் ஆப்ரிக்கா பெருமக்கள் அரியதொரு கலைநிகழ்ச்சி வழங்கினர். தென ஆப்ரிக்கா வாழ் தமிழர்கள் சங்கீதமும் இசையும் பாட்டும் தமிழ்கத்தில் உள்ளதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.திரு சின்னப்பன் அவர்களின் மகள் சிவானி அவர்களின் பாட்டும் நடனமும் மெய்சிலிர்க்க வைத்தது. என் கால்களும் உடலுமே ஆடத் தொடங்கின. நாங்கள் தங்கிய நான்கு நாட்களூம் அசைவம் சைவம் என ஆப்ரிக்கத் தமிழர்களின் விருந்தோம்பல் திருவள்ளுவர் கூறிய விருந்தோம்பலின் சான்றாக இருந்தது.
தென ஆப்ரிக்காவில் டர்பன் நகரில் உள்ள மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றனர். காட்டில் திறந்தவெளி உந்துவில் சென்றோம். தந்தையும் நானும் வேந்தர் பாரிவேந்தர் செருமனி நயினை விசயன் கனடா உதயன் லோகெந்திர லிங்கம் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோரோடு பயணித்தோம். வரிக்குதிரைகளும் ஒட்டகச் சிவிங்கங்களும் காட்டு எருமைகளும் எங்கள் கண்கள் முன் உலா சென்றுகொண்டிருந்தன. அருமைத் தந்தையார் அவர்கள் திருவள்ளுவர் சிவிகை என்று குறிப்பிட்டிருக்கீறாரெ இங்குள்ளோர் கூறமுடியமா என்றார். உந்து அமைதியாகவே சென்றுகொண்டிருந்தது. இராமசாமி பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் அந்தக் குறளைக் கூறினார்.
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தா விடை (37)
வேந்தர் அவர்களின் அவர்களின் இமாலயா உயர்வின் உண்மையை புரிய முடிந்தது.
டர்பன் நகரில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் இராமசாமி பலகலைக்கழகமும் இணைந்து பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மிக்கிசெட்டி பேசும்போது என் வாழ்நாள் பணியாக இந்த மண்ணில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் இன்று என் கனவு நிறைவேறுகிறது என நெஞ்சம் நெகிழ கண் கலங்கக் கூறினார். உலகத் தமிழர்கள் அனைவரும் கண்கலங்கினர். ஐம்பதுக்கு மேற்பட்ட பெருமக்கள் ஆப்ரிக்காவில் தமிழ் பயிற்றுவிக்கப் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற பெருமக்கள் இளமையும் முதுமையும் கலந்த பெருமக்களாக இருந்தனர். எழுபத்தைந்து வயது பெருமாட்டி பட்டம் பெற்றது அவர்களின் ஆர்வத்தை உணரலாம்.
மிக்கிசெட்டி அவர்கள் அனைத்துப் பெருமக்களுக்கும் கல்விக் கட்டணம் செலுத்தி ஆப்ரிக்கத் தமிழர்களுக்கு உணர்வு ஊட்டியதை காணும்போது பாரதியின் ”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செயதல் வேண்டும்” கனவு இன்று தென் ஆப்ரிக்காவில் மெய்யாகியுள்ளது.
யான் மிக்கி அவர்களின் துணைவியார் திருமதி கசுத்தூரி மிக்கி அவர்களிடம் பேசி கொண்டிருந்தபோது கண் கலங்கினார். ஏனம்மா என்று வினவியபோது தன் மருமகன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவரசரப் பிரிவில் உள்ளார் என்றார். அண்மையில் அவர் காலமாகிவிட்டார் என்ற சோகமும் கேட்டு மனம் நொந்தோம்.
தன் மருமகன் மருத்துவமனையில் இருந்த நேரத்திலும் மிக்கி அவர்கள் தமிழைக் காக்க அவர் கொண்ட முயற்சியை எண்ணும்போது இவரல்லவா உலகத் தமிழர் என் எண்ணம் பெருமிதம் அடைந்தது
தற்போது ஆப்ரிக்காவில் இருந்து 50 பெருமக்களை ஆலயங்களில் தமிழில் வழிபாடு செய்ய வேந்தர் சகத்ரட்சகன் அவர்களின் பாரத் பல்கலைகழகம் வழி தன் செலவில் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து அருட்சுணைஞர் பட்டம் பெற வழிவகுத்துள்ளார். துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்ளின் வழிகாடுதலின்படி அறிஞர் சக்திவேல் முருகனார் பயிற்றுவிக்கிறார்.
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மண்ணுயிர் எல்லாம் தொழும்.
என்ற வள்ளுவர் வாய்மொழி வழி காந்தி வாழ்ந்த மண்ணில் தமிழுக்காக ஒரு உலகத் தமிழர் மிக்கி செட்டி.
Subscribe to:
Posts (Atom)

