பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞரின் இரு மொழிக் கொள்கையே எங்கள் கொள்கை மும்மொழிக் கொள்கை என்றும் வேண்டாம்
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசிரியர் தமிழ்ப்பணி
இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
இடம் வள்ளுவர் கோட்டம் சென்னை நாள் 10 - 3 - 2025
நேரம் காலை 10 - 11
ஓன்றிய அரசின்
இந்தி திணிப்பு பாரதிய சனதா ஆட்சி மூன்றாம் முறை ஆட்ட்சியமைத்துபோதும் தொடர்வது
இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைப்பதாக உள்ளது. மிகச் சாதாரண தொடர்வண்டி பெயர்கள் கூட பாமர மக்கள் அறியா வண்ணம்
அந்தோத்திய வந்தே பாரத் என பெயர்கள் சூட்டி
மகிழ்கின்றனர். மக்களின் தேவையோ பயன்பாடோ அவர்களுக்கு முதன்மையாக இல்லாத து
வேதையைத்தருகிறது. இருசெம்மொழி உள்ளநாடு இந்தியா. தமிழ் சமசுகிருதம் கலைஞர் கண்ட செம்மொழிக்
கனவை நசுக்குகிறது இந்த ஒன்றிய அரசு. சமற்கிருத
த்திற்கு வழங்கும் நிதியில் ஒருசிறு பங்கு கூட தமிழுக்கு வழங்க ஒன்றிய அரசுக்கு மனமில்லாமல் தமிழை நசுக்கும் மோசமான
வித த்தில் நடக்கிறது. செம்மொழி நிறுவனத்திற்கு தமிழ் தமிழர் சார்ந்த கொள்கைக்கு விரோதமான
ஒரு அம்மையாரை தலைவராக்கி அகத்தியபுராணம் பாடி தொல்காப்பியரை இழிவு படுத்துகிறது.காலத்தால்
அழிக்கமுடியாத செந்தமிழை பைந்தமிழை இப்பொது பள்ளிகளிலும் அழிக்க புதிய கவிக்கொள்கை
என முகமூடி அணிந்து கட்டாயமாக்க திட்டமிட்டு இந்தக் கொள்கையை ஏறகா விட்டால் கல்விநிதியைத்
தரமாட்டோம் என சனநாயகத்தையும் ஏழை எளிய மக்களின் தாய் மொழிக் கல்வியை நசுக்கும் பணியைச்
செய்கிறது ஒன்றிய அரசு.
ஏற்கன்வே மத்திய அரசுப் பள்ளிகள் தமிழகத்தில்
தமிழே இல்லாமல் கல்விக்கூடங்கள் நட த்துகின்றனர்.
எந்தப் பள்ளியிலும் தமிழாசிரியர்களே இல்லாத நிலையில் உள்துறை அமைச்சர் அமித்சா பொறியியல்
மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழிக் கொணரவேண்டும் என்கிறார். நமக்குஎல்லா நிலைகளிலும்
தமிழ் ஆளவேண்டும் என்பதுதான் நம் வேட்கை. ஒன்றிய ஆட்சியின் பள்ளிகளிலேயே ஒழித்துவிட
நினைப்போர் உயர்கல்வியில் தமிழைப்பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. இந்திய மாநிங்ங்களில் மும்மொழிக் கொளகையை ஏற்றோர்
தாய்மொழியை இழந்து தவிக்கும் வெதனயை நம் கண்முன்
காண்கிறோம் கேரளா ஆந்திர தெலுங்கானா மகராட்டிய பஞ்சாப் அரசுகள் தாய்மொழிக் கல்வியின் அசியத்தை புரிந்து
தமிழகத்தைப் பின்பற்ற எண்ணுகின்றனர்.
பேரறிஞர் அண்ணாவின் அறிவு நுட்பத்தால்
நாம் கண்ட இருமொழிக் கொள்கை தலைவர் கலைஞர் இனமானக் காவலர் பேராசிரியர் நம் பொற்கால முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்
அவர்களால் ப்ல்வேறு சோதனை வேதனைகளுக்கிடையில் காக்கப் பட்டு வருகிறது. . இந்தி திணிப்பை
எதிர்து தம் இன்னுயிரை ஈந்த ஈகிகளை நன்றி உணர்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறோம் அவர்களின்
தியாகம் தான் இன்றளவும் நம்க்கு உணர்ச்சியை வழங்கும் தீக் கங்குகளாக உள்ளன.
இருமொழிக் கொள்கையால் தமிழர்கள் உலக்ங்கும் தொழில் வல்லுநர்கள் பேரறஞர்களாக விளங்கி இந்தியாவிற்கு
உலகெங்கும் பெருமையை சேச்ர்க்கின்றனர்..வட மாநிலங்களில் ஒரே இந்தி மொழி ஒன்றைத்தான
படிக்கின்றனர் ஆங்கிலம் கூட படிப்பதில்லை. சிங்கப்பூரில் தாய்மொழி ஆங்கிலம் என தமிழ்
சீனம் மலாய் எனப் படித்து வழிகாட்டுகின்றனர். மலேசியாவில் ஆங்கிலத்தில் படிக்க ஊக்குவிக்கின்றனர்.
இருமொழிக் கொள்கையிலும் தமிழ் காக்கவேண்டிய் நிலையிலும் நாம் உள்ளோம். தமிழை எப்படிக்
காப்பது என்று நாம் எண்ணும் வேளையில் இவர்கள்
இந்தியைத் திணிக்க நினைப்பது வெந்த புண்ணில் வேலைப்ப் பாய்ச்சுவது போன்றதாகும்,
கனடாவில் டொரண்டோவிலிருந்து தலைநகர் ஒட்டாவா செல்லும் வழியில் கியூபெக் எனும் மாநிலம்
உள்ளது அந்நகர்முழுமையும் பிரெஞ்சின் ஆதிக்கமே இருக்கும் அந்த அளவிற்கு மொழிக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர்
மகாகவி பாரதி அன்றுபாடிய
செப்பு மொழி பதினெட்டுடையால்
சிந்தனை ஒன்றுடையால்
என்ற பாடலுக்கு இலக்கணாமாக இந்தியாவைக் காப்பற்ற
வேண்டும். அனைத்து அட்டவனை மொழிகளுக்கு தேசிய மொழி தகுதி வழங்கி இந்தியாவைக் காக்க
வேண்டும்
தமிழைப் பழித்தோர் தாய்தடுத்தாலும் விடேன்
என்ற புரட்ட்சிக் கவிஞர் பாவேந்தர் வழி நம் முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவோம். இந்த கண்டனப் போராட்த்திற்கு
தலைமையேற்கும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
அவர்களையு ம் கண்டனப் போராட்ட த்தை தொடங்கி வைக்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத்
தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களையும் அனைத்து தமிழ் அமைப்புகளின் தலைவர்
போறுப்பால்ளார்கள் அனைவரியும் வரவேற்று மகிழ்கிறேன்.