Friday, October 25, 2024

 

 

தலைவரின்  கலைஞரின் செல்வம் என்ற செங்கோல்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

 

      இந்திய வரலாற்றில் மக்களாட்சியின் முடிசூடா மன்னனாக வாழ்ந்து மறைந்த பெருமை தலைவருக்கு உண்டு. அந்த பெருமைக்கெல்லாம் காரணம் உண்மையாக உழைக்கும் தொண்டர்களும் தலைவர்களும்தான் காரணம். ஒவ்வொரு துறைக்கும் ஆன்றவிந்த சான்றோர்களை பொறுத்தமாக அமர்த்தி தமிழினத்தை  தமிழ்நாட்டை முன்னிருத்தியவர் கலைஞர். நம் முதல்வர் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதுபோல் சகோதரி செல்வியின் கணவராக இருந்தாலும் தம் குட்டி அத்தானை அண்ணன் என்றுதான் அழைப்போம் என்று பதிவிட்டுள்ளார். உண்மையிலும் உண்மை அனைவரின் அண்ணன் தான்  நம் முரசொலி காப்பாளர் எழுத்தாளர் அரசியல் மேதை செல்வம் அவர்கள். கோபாலபுரம் கலைஞர் இல்லத்தில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பிலும் உலகத்தம்ழர்கள் சார்பிலும் பூத உடலுக்கு மலர் வளையம் வைத்தபோது எனக்கும் தந்தைக்கும் கண்ணீர் கரைபுரண்டோடியது.

           இதே இல்லத்தில் கலைஞர் இறப்புவரை தொடர்ந்து தந்தையும் தலைவரைக் கண்டு வாழ்த்துப் பெறுவது வழக்கம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் கலைஞரின் பிறந்த நாளிர்குச்சென்று வாழ்த்துப் பெற்றோம். அப்போது முரசொலிக்கு தந்தை கவிதை அனுப்பியிருந்தார் அது அன்று முரசொலியில் வெளியாகவில்லை. தந்தைக்கு பெரும் கவலை ஒவ்வொரு ஆண்டும் தலைவருக்கு வாழ்த்துக் கவிதைஎழுதி முரசொலியிலும் 53 ஆண்டுகாலமாக வெளிவரும் தமிழ்ப்பணியிலும் வெளியிடுவோம். அன்று தமிழ்ப்பணி இதழில் வெளியிட்டு கலைஞர் திருக்கையில் வழங்கி வாழ்த்தும்பெற்று வெளியில் வந்தோம். கீழ்த் தள வாயிலில் அண்ணன் செல்வம் நின்று கொண்டிருந்தார் நான் அண்ணனிடம் தமிழ்ப்பணி இதழைக் கொடுத்து விட்டு முரசொலியில் வெளியாகவில்லை எனக் கூறினேன். உடனே தொலைபேசியில் முரசொலி ஆசிரிய குழுவிற்கு தொலைபேசி செய்து ஏன்பெருங்கவிக்கோ கவிதை வெளிவரவில்லை  என வினவினார் மறுநாள் சிறப்பாக வெளியிட்டனர். தொண்டர்களை கவிஞர்களை சான்றோர்களைக் காக்கும் செங்கோல் நம் முரசொலி செல்வம்.

   அதிமுக ஆட்சிக் காலத்தில் பால்கமிசன் அறிக்கையை முரசொலியில் வெளியிட்ட தற்காக சட்டமன்றத்தில் கூண்டில்நிறுத்தி தண்டணை கொடுத்தனர்  புண்முறுவலோடு ஏற்ற இதழாளார் கோமகன் நம் இதழாளார் பெருமை செப்பும் புரட்சிச்  செங்கோல் நம் முரசொலி செல்வம.

     கவிஞர் இறைவன் முரசொலியில் பணியாற்றியவர் எங்களது குடும்ப ந்ண்பர். பின் மின்வாரியத்தில் பணியாற்றி கழக க் கண்மணியாக வாழ்ந்தவர் .தற்போஒது அச்சமில்லை இதழின் ஆசிரியராக உள்ளார். அவர் சாலையில் நடந்து சென்றகொண்டிருந்தபோது மகிழுந்தில் சென்று கொண்டிருந்த செல்வம் இறைவன் இறைவன் என அழைத்து நலம் விசாரித்த மனிதநேயர். பின் தனக்கு சாலிகிராமத்தில் மனைவாங்குவதற்கு கடன் வசதி வேண்டுமெனக் கூறியபோது பெரும் முயற்சியெடுத்து அந்த கடன் வசதியை செய்து தாம் சொந்த வீட்டில் வாழ உ உதவியவர் செல்வம் என்று நன்றி உணர்ச்சியோடு. குறிப்பிடுவார் .முரசொலியில் பணியாற்றிய இறைவன் அவர்களை மனித நேயத்தோடு கண்டு  உதவி மக்கள் செங்லோலாக வாழ்ந்த பெருமகன் நம் முரசொலி செல்வம்.

      முரசொலியில் சிலந்தி எனும் பெயரில் கண்டனக் கனைகளை எழுதி தொண்டர்களுக்கு உணர்ச்சிப் பிளம்பாக கட்டுரைகளை வழங்கிய இதழ் புரட்சியாளர் செல்வம். தொடர்ந்து முரசொலியில் எழுதி நூலாக வெளியிட்டார் அதை முதல்வர் பெருமகன் வெளியிட்டு புகழாரம் சூட்டினார். தமிழ்ப்பணியிலும் வெளியிட்டு ஐயாவிடம் வழங்கினோம். தொலைபேசியில் பேசியில் பேசும்போதெல்லாம் மறுமொழி வழங்கிய இல்லோர் செம்மல்களின் செங்கோலாக வாழ்ந்த முரசொலி செல்வம் இழப்பு பேரிழப்பு. தலைவர் முதல்வர் ஸ்டாலின் கூறியதுபோல் தாம் சாய்ந்த கடைசித் தோள் அவருக்கு மட்டுமல்ல இந்த  தமிழ்க்குடிக்கும்தான். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பிலும் உலகத்தமிழர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கல்.

Sunday, October 13, 2024

 

மொழிப்போராளி புலவர் சுந்தராசன்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

 

     கன்னியாகுமரி மாவட்ட த்தில் பிறந்து சென்னையில் மாநாகராட்சிப் பள்ளியில் தமிழாசிரியாகப் பணியாற்றி தம் வாழ்நாள் முழுமையும் மொழிக்காகவே வாழ்ந்த சுந்தர ராசன் குமரியில் அடக்காட்சிவிளையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

     கறுத்த உருவம் வெண்ணிற எளிய வேட்டி சட்டை  எண்ணெய் படிந்த தலைமுடி அப்பலுக்கில்லாத புன் சிரிப்பு அடங்க மறுக்கும் அமைதியான் ஆளுமை  சுந்தராசனின் அடியாளங்களாகும்

தலைநகர்த் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை சென்னையில் உருவாக்கி தமிழகத்தில் மொழிப்பொராட்ட உணர்வுகளுக்குக் களம் அமைத்தவர் புலவர் பெருமகன். தமிழகம் முழுமையும் பயணித்து உணர்வுகளைத்திரட்டி தமிழிற்காக அணிஅமைத்த பெருமை சுந்தராசன் அவர்கட்கு உண்டு..

              உச்சக்க்கட்ட போராட்டமாக தில்லியில் செம்மொழிப் போராட்ட த்திற்க்காக  தந்தையார் பன்னாட்டுத் தமிழிறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தமிழாகரர் ஆறு அழகப்பன் புலவர் அறிவுடை நம்பி தில்லி தமிழ்ச்சங்கச் செயலாளர் முகுந்தன் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்த்தை நத்திய போது களம் கண்ட பொராளிகளுள் நானும் ஒருவனாக நினைவுகளெல்லாம் மனக் கண்முன் தோன்றுகிறது.

                       தலைவர் காலைஞர் அவர்கள் த்ந்தையார் பெருங்கவிக்கோ அவர்களையும் ,புலவர் சுந்தரராசன் அவர்களையும் கலைஞர் கடித த்தில் தகுறிப்பிட்ட பதிவு வரலாற்றுப் பதிவு. அனைத்துக் கட்சித் தலைவர்களயும் தமிழ் அமைப்புகளையும் தமிழிற்க்காக ஒன்று திரட்டிய பெருமை புலருக்கு உண்டு.

       சென்னையில் வண்டலூரி ப்குதியில் தலைந்கர்த் தமிழ்ச்சங்கத்தின் கட்டிட த்தை கட்டிய மாவிர ர். கட்டிட த்தில் உள்ள ஒவ்வொரு செங்கலும் அவருடைய உழைப்பை பறைசாற்றும். கட்டிட அரங்கில்நூற்றிர்க்கௌ தமிழிற்காக உழைத்த தமிழறிஞர்க்ளின் படங்கள்  அலஙகரிக்க்கின்றன. இன்றும் தமிழ் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்வுகள்அரங்கில்  தொடர்ந்து நடைபெறுகின்றன சென்னையில். ஒரு நிலையான அரங்கையும், அதன் முன் செம்மாந்த திருவள்ளுவர் சிலையையும் உருவாக்கிய பெருமகன் சுந்தர ராசன்..பாவலர் கணபதி சிறப்பாக நட த்தி வருகிறார்.

தலைநகர்த் தமிழ்சங்கம் வழி மக்கள் செங்கோல் என்ற இதழையும் நட த்தி சிறந்த இதழாளராக அரும்பணியாற்றினார். ஒரு சிறந்த எழுத்தாளர் தமிழ் ஆட்சிக் கட்டிலில் அமர முப்பது நூல்களைப் படைத்த் படைப்பாளி .

     புலவர் சுந்தர ராசன் தொண்டர்க்குத் தொண்டர் சிறந்த படைப்பாளர் மொழிக்காக களம் கண்ட போராளி அவர் இழப்பு தமிழுக்குப் பேரிழப்பு அவர் பணியை தொடர்ந்து சிரமேற்கொண்டு பணியாற்றுவதே புலவர்க்குச் செய்யும் அஞ்சலியாகம். புலவர் பெருமான் புகழ் ஓங்குக.