Tuesday, November 12, 2024

 

ஓங்கிய நாதம் அந்தோ

 ஓய்ந்தாரே எசுறா சற்குணம் 

 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


புத்தொளிர் புரட்சித் தந்தை

புயலென விரட்டும் வறுமை

 வித்தகச் சமூக நீதி

வியப்பான அறங்கள் செய்தோன்

உத்தமத் தலைவர் கலைஞர்

 உரிமையாய் எழுத்தித் தோழர்

சத்தியம் காத்த வேதச்

சரித்திரம் எசுறா மறைந்தார்!

 

பாங்காக் மாநாடு வந்தேம் பன்னாட்டு உறவைக் காத்தார்

 தாங்கிடும் உயிர்மெய்த் தமிழைத்

 தகைமையாய் முழங்கிய தமிழர்

 ஏங்கிடும் எளியோர் உள்ளோம்

 ஏந்திய எசுறா சற்குணம்

 ஓங்கிய நாதம் அந்தோ

ஓய்ந்ததே அருளின் தேகம்

 

மரகதப் புத்தர் சிலையை

 மகிழ்வாய் அறிஞர் சேர்ந்தே

பெருங் கவிக்கோ  தலைமை  

பெற்றிமைக் கலைஞர் கரத்தில்

பெருமையாய் வழங்கினோம் அன்றே

அருந்தமிழ் உறவு காத்த

அருளாளர் நம்மை விட்டே

 அகன்றது சோகம் அந்தோ!

 

ஆளுமை எசுறா தொண்டை

அனைவரும் போற்றித் தொடர்வோம்

பேருடை கொள்கைக் கோமான்

 பேதமை நீக்கி வாழ்வோம்

 யாழியே மீட்டும் இசையாய்

 யாவரும் தோழமை காப்போம்

கோளிலே எசுறா புகழும்

குவளயம் தாண்டிக் காப்போம்!

 

 

 

 

No comments:

Post a Comment