காலம் வெல்க ஞாலம் ஆள்க
தமிழ்மாமணி வா. மு. சே திருவள்ளுவர்
மிகுதியாய் மிக்கவை செய் யும் நலமே
மீண்டெழ வழிசொல் மதிஅறி மாண்பே
தகுதியாய் தக்கவை தந்திடும் அறமே
தவித்திடும் உடல்நலம் விரைந்தே காப்பாய்
விகுதியாய் விளைந்த அனைத்தும் வீனே
விந்தையின் வீச்சாம் வித்தகன் விவேகம்
பகுதியாய் வந்தவள் பழகிடும் அன்பில்
பரிதியாய் அன்பை ஏற்றிடு துணையே
உறுதியாய் உழைத்த உண்மைகள் எல்லாம்
உளம்கொள் வஞ்சக உளரல் வினையோ
கருவியாய் வாழ்க்கை காத்த ஈகம்
கயமைச் சூழ்ச்சி சூழ்ந்த மோசம்
உருவிலா இயற்கை மாட்சி எல்லாம்
உன்னதத் தாங்கல் வியப்பின் வியப்பே
பெருமழை போன்றே துன்பம் துடைக்க
பொழிக பொழிக இன்பம் பொழிக
கருணைக் காவலன் கள்ளமில் நேயம்
கருதும் ஊழை வென்றே வாழ்க
உரிமைக் காப்போர் உணர்ந்தே நோக்கும்
உத்தம அறிஞன் உலகம் வெல்க
அறிவும் செறிவும் ஆண்மைச் செறுக்கும்
அகிலம் போற்ற உயர்வாய்த் தருக
தெரியும் வழியில் தெளிந்த வாய்ப்பை
தேனின் மழையெனத் தருக தருக
வழிவழிப் பரம்பரை காக்கும் மறவன்
வல்லமை ஆற்றல் முனைந்து பெற்றான்
ஊழ்வினை சோகம் வந்த போதும்
உணர்வுக் கோமகன் வாழ்க வாழ்க
பேழைக் குருவின் பேற்றால் வந்தோன்
பேணும் முறைமை முழுதும் உணர்ந்தோன்
காலக் கதிரவன் எழுச்சி போன்றே
காலம் வெல்க ஞாலம் ஆள்க
No comments:
Post a Comment