Wednesday, November 24, 2021

 தமிழ்நாடு நாள் வாழ்க

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

                                         

தமிழ்நாடு என்ற நாதம்

தமிழினம் கண்ட வெற்றி

எமினினத்தின்  தலைவர் அண்ணா

ஏந்தலென மாற்றார் கூட்டி

தமிழ்நாடு வாழ்க என்றே

தலைவரெலாம் முழங்கச் செய்தே

உமியெனவே பகைவர் நாண

உதித்தஎழில் நாடே வாழ்க1


தமிழ்நாடே நாளே நம்மின்

தகுதியெனப் பெருமை நாளாம்

எமைஆளும் முதல்வர் ஸ்டாலின்

எத்திக்கும் இனிமை பொங்க

தமைஆளும் தகுதி வென்றே

தக்கனவே மொழிந்தார் வாழ்க!

இமைமூடாப் பணிகள் ஆற்றும் 

இஸ்டாலின்  வேந்தே வாழ்க!


நம்நாட்டைப் பிய்த்துப் பிய்த்தே

நாறியெமை நோக வைத்தே

தம்மனம்மே வருந்தும் வண்ணம்

தளர்ந்தநாள் நமது நாளோ

செம்பரிதி அண்ணா தந்த 

எம்செழுமை தமிழ் நாளே

நம்மினம் போற்றும் நாளாம்!

தமிழ்நாடே என்ற போதில் 

தமிழினத்தின் வீரம் செப்பும்

தமிழ்நாடே முழங்கும் போது

தமிழினத்தின் தனிமை ஆளும்

தமிழ்நாடே செப்பும்  போது

தமிழினத்தின் முதமை காணும்

தமிழ்நாடே எழுதும் போதே

தமிழினத்தின் பேறு அன்றோ!  


                              


No comments:

Post a Comment