Monday, March 24, 2025

 

வீங்கிடும் அளவைப் போன்றே

வீணான இந்தி வேண்டாம்!

 தூயவன்

 

சிந்தன  சிறிதும் இன்றி

செந்தமிழ் மொழியைச் சாடும்

நந்தமிழ் மண்ணின் மங்கை 

நிர்மலா பேசும் வேசம்

நொந்திடும் தமிழர் வாழ்வில்

 நுட்பமாய்த்  தாக்கும் மாயம் 

வந்திடும் பதவி சுகத்தால்

வண்டமிழ் தாக்கும் கயமை!

 

திருக்குறள் கூறும் நாவால்

 தீந்தமிழ் பழிக்கும் மோசம்

பெரியாரின் சொல்லைக் கூறி

பெருந்தமிழ் அழிக்கும் அவலம்

பாரதி சொன்னான் அன்றே

பைந்தமிழ் சாகும் என்றே

 அருமைப்  பற்றால் வாழ

 அருந்தமிழ்ச் சொற்கள் அன்றோ

 

 நந்தமிழ் நாட்டின் பேறே

 நங்கையர் அமைச்சர் வாழ்வு

 செந்தமிழ் காக்கா விடினும்

 செழுமையைப் புதைக்க வேண்டாம்

 குந்தகம் பிரதான் பேச்சால்

 குருதியில் கலக்கா இவர்கள்

 மந்தியைப் போன்றே வாழும்

 மனிதர் இவர்கள் அன்றோ!

 

ஆங்கிலம் தமிழைக் கற்றே

அகிலமே புகழ வாழும்

தேங்கிடும் இந்தி கற்க

தேவையில் திணிப்பு அன்றோ!

 ஓங்கிடும் மாநிலம் எல்லாம்

ஒருகுடைக் கீழே காண்க

வீங்கிடும் அளவைப் போன்றே

வீணான இந்தி வேண்டாம்!

 

Sunday, March 9, 2025

 

பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞரின்  இரு மொழிக் கொள்கையே  எங்கள் கொள்கை மும்மொழிக் கொள்கை என்றும் வேண்டாம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

இடம் வள்ளுவர் கோட்டம் சென்னை நாள் 10 - 3 - 2025 

   நேரம்  காலை 10 - 11

 ஓன்றிய அரசின்  இந்தி திணிப்பு பாரதிய சனதா ஆட்சி மூன்றாம் முறை ஆட்ட்சியமைத்துபோதும் தொடர்வது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைப்பதாக உள்ளது. மிகச் சாதாரண  தொடர்வண்டி பெயர்கள் கூட பாமர மக்கள் அறியா வண்ணம் அந்தோத்திய வந்தே பாரத் என பெயர்கள் சூட்டி  மகிழ்கின்றனர். மக்களின் தேவையோ பயன்பாடோ அவர்களுக்கு முதன்மையாக இல்லாத து வேதையைத்தருகிறது. இருசெம்மொழி உள்ளநாடு இந்தியா. தமிழ் சமசுகிருதம் கலைஞர் கண்ட செம்மொழிக் கனவை நசுக்குகிறது இந்த ஒன்றிய  அரசு. சமற்கிருத த்திற்கு வழங்கும் நிதியில் ஒருசிறு பங்கு கூட தமிழுக்கு வழங்க  ஒன்றிய அரசுக்கு மனமில்லாமல் தமிழை நசுக்கும் மோசமான வித த்தில் நடக்கிறது. செம்மொழி நிறுவனத்திற்கு தமிழ் தமிழர் சார்ந்த கொள்கைக்கு விரோதமான ஒரு அம்மையாரை தலைவராக்கி அகத்தியபுராணம் பாடி தொல்காப்பியரை இழிவு படுத்துகிறது.காலத்தால் அழிக்கமுடியாத செந்தமிழை பைந்தமிழை இப்பொது பள்ளிகளிலும் அழிக்க புதிய கவிக்கொள்கை என முகமூடி அணிந்து கட்டாயமாக்க திட்டமிட்டு இந்தக் கொள்கையை ஏறகா விட்டால் கல்விநிதியைத் தரமாட்டோம் என சனநாயகத்தையும் ஏழை எளிய மக்களின் தாய் மொழிக் கல்வியை நசுக்கும் பணியைச் செய்கிறது ஒன்றிய அரசு.

ஏற்கன்வே மத்திய அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் தமிழே இல்லாமல் கல்விக்கூடங்கள் நட  த்துகின்றனர். எந்தப் பள்ளியிலும் தமிழாசிரியர்களே இல்லாத நிலையில் உள்துறை அமைச்சர் அமித்சா பொறியியல் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழிக் கொணரவேண்டும் என்கிறார். நமக்குஎல்லா நிலைகளிலும் தமிழ் ஆளவேண்டும் என்பதுதான் நம் வேட்கை. ஒன்றிய ஆட்சியின் பள்ளிகளிலேயே ஒழித்துவிட நினைப்போர் உயர்கல்வியில் தமிழைப்பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.  இந்திய மாநிங்ங்களில் மும்மொழிக் கொளகையை ஏற்றோர் தாய்மொழியை இழந்து தவிக்கும் வெதனயை  நம் கண்முன் காண்கிறோம் கேரளா ஆந்திர தெலுங்கானா மகராட்டிய  பஞ்சாப் அரசுகள் தாய்மொழிக் கல்வியின் அசியத்தை புரிந்து தமிழகத்தைப் பின்பற்ற எண்ணுகின்றனர்.

பேரறிஞர் அண்ணாவின் அறிவு நுட்பத்தால் நாம் கண்ட இருமொழிக் கொள்கை தலைவர் கலைஞர் இனமானக் காவலர் பேராசிரியர்  நம் பொற்கால முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் ப்ல்வேறு சோதனை வேதனைகளுக்கிடையில் காக்கப் பட்டு வருகிறது. . இந்தி திணிப்பை எதிர்து தம் இன்னுயிரை ஈந்த ஈகிகளை நன்றி உணர்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறோம் அவர்களின் தியாகம் தான் இன்றளவும் நம்க்கு உணர்ச்சியை வழங்கும் தீக் கங்குகளாக உள்ளன.

இருமொழிக் கொள்கையால் தமிழர்கள் உலக்ங்கும்  தொழில் வல்லுநர்கள் பேரறஞர்களாக விளங்கி இந்தியாவிற்கு உலகெங்கும் பெருமையை சேச்ர்க்கின்றனர்..வட மாநிலங்களில் ஒரே இந்தி மொழி ஒன்றைத்தான படிக்கின்றனர் ஆங்கிலம் கூட படிப்பதில்லை. சிங்கப்பூரில் தாய்மொழி ஆங்கிலம் என தமிழ் சீனம் மலாய் எனப் படித்து வழிகாட்டுகின்றனர். மலேசியாவில் ஆங்கிலத்தில் படிக்க ஊக்குவிக்கின்றனர். இருமொழிக் கொள்கையிலும் தமிழ் காக்கவேண்டிய் நிலையிலும் நாம் உள்ளோம். தமிழை எப்படிக் காப்பது  என்று நாம் எண்ணும் வேளையில் இவர்கள் இந்தியைத் திணிக்க நினைப்பது வெந்த புண்ணில் வேலைப்ப் பாய்ச்சுவது  போன்றதாகும்,

 கனடாவில் டொரண்டோவிலிருந்து தலைநகர்  ஒட்டாவா செல்லும் வழியில் கியூபெக் எனும் மாநிலம் உள்ளது அந்நகர்முழுமையும் பிரெஞ்சின் ஆதிக்கமே இருக்கும் அந்த அளவிற்கு  மொழிக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர்

மகாகவி பாரதி அன்றுபாடிய

செப்பு மொழி பதினெட்டுடையால்

சிந்தனை ஒன்றுடையால்

 என்ற பாடலுக்கு இலக்கணாமாக இந்தியாவைக் காப்பற்ற வேண்டும். அனைத்து அட்டவனை மொழிகளுக்கு தேசிய மொழி தகுதி வழங்கி இந்தியாவைக் காக்க வேண்டும்

தமிழைப் பழித்தோர் தாய்தடுத்தாலும் விடேன்

 என்ற புரட்ட்சிக் கவிஞர் பாவேந்தர் வழி நம்  முதல்வரின் கரத்தை  வலுப்படுத்துவோம். இந்த கண்டனப் போராட்த்திற்கு தலைமையேற்கும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களையு ம் கண்டனப் போராட்ட த்தை தொடங்கி வைக்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களையும் அனைத்து தமிழ் அமைப்புகளின் தலைவர் போறுப்பால்ளார்கள் அனைவரியும் வரவேற்று மகிழ்கிறேன்.

 எந்திரன் வடிவாய் எழுச்சித் திருவாய்


 எழுக எழுக பெருங்க விக்கோ


 


தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 

ஆசிரியர்  த்றமிழ்ப்பணி  

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்


 


சிந்தை குளிர சிந்தனைக் களமாய்


 சிறகை விரிக்கும் பெருங்க விக்கோ


விந்தைச் செயலால் விரிவான் அளவை


வியக்க அளந்த பெருங்க விக்கோ


 மந்திரக் கணக்கால்  மாத்தமிழ் அன்பர்


மனதை வென்ற பெருங்க விக்கோ


எந்திரன் வடிவாய் எழுச்சித் திருவாய்


 எழுக எழுக பெருங்க விக்கோ


 


சிம்புட் பறவை பிறப்பைப் போன்றே  


சாம்பல் துளியில் பிறப்பெ டுப்பார்


அம்புகள் பாயும் அறிவுக் கொடையென


அகிலம் முழுமையும் படைத்த ளித்தார்


வம்புகள் வழக்கு தமிழுக்கு வருமெனில்


வரிந்து புரிந்து  நின்றே போரிடுவார்


 நம்பும் தமிழை நாநிலம் போற்றவே


 நடையாய் நடந்த நாயகர்  வாழியவே


 


                        தொண்ணூறு கண்டு தொண்டறம் போற்றி


தொல்குடி காக்கும் செழுமைச் சீராளன்


 கண்ணென கலைஞர் வழியில் நின்றே


 கழகம் காக்கப் பாடல் புணைந்தோன்


தன்னிலை மறந்தே தமிழைக் காக்க  


தளமெலாம் தமிழர் மாநாடு கண்டோன்


முன்னிலை மறந்து பொதுநிலை காக்க


 முனையும் அறமூ திளைஞர் வாழியவே


 


                        இல்லற வாழ்வின் எழுச்சித் தெய்வம்


இதய சேதுவின் வார்ப்பு இவரே


சொல்லால் வையகம் இணைக்கும் ஆற்றல்


 செழுமைச் சிறப்பின்  பண்பு இவரே


 வெல்லும் வகைகள் வேதனை வரினும்


 வெடிக்கும் வெடியாய் வலம்வரு வாரே


அல்லும் பகலும்  மொழியில் பொழியும்


 அமிழ்த அன்னை யிவரே  வாழியவே

.எந்திரன் வடிவாய்எழுச்சித் திருவாய்

எழுக எழுக பெருங்க விக்கோ

Monday, January 27, 2025

 

தொண்ணூறு கண்டு நூற்றாண்டு நோக்கி பெருங்கவிக்கோவின் தமிழ்த் தொடர் திருவிழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

  இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

தந்தையார் பெருங்கவிகோவின் 90 அகவைத் திருவிழா என்பது தம் வாழ்நாள் முழுமையும் கண்ட உழைப்பு உரிமை இவற்றின் உச்சத் திருவிழா. 1975ஆம் ஆண்டு சென்னையில்  கவிஞரின் 40ஆம் அகவைக்கு குழு அமைத்து சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் எண்ணச்சுடர் என்ற 600  பக்க நூலை வெளியிட்டது இன்னும் என் நெஞ்சில் நீங்கா நினைவாக உள்ளது. திரைப்பட இய்க்குநர் சிவானந்தம் அவர்களின் அர்ப்பணிப்பு மக்த்தானது. அதைத் தொடர்ந்து இன்று வரை நூல் வெளியீடும் பிற்ந்த நாளும் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம்.

1985ஆம் ஆண்டு சனவரி 27  என் திருமணம் மதுரையில் பேராசிரியர் தலைமையில்  திருச்சியில்  பிப்ரவரி 2,3 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற முதல் மாநாடு சென்னையில் 9ஆம் நாள் இதே பெரியார் திடலில் பொன்விழா அனைத்துக் கட்சிகள் சூழ மிகச் சிறப்பாக நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் டி.பி.இராதாகிருட்டிணன் பொன்விழாக் குழுத் தலைவராகவும் குறள்ஞானி மோகன் ராசு செயலாளராகவும்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொறு பிற்ந்த நாளிலும் நூல் வெளியீடுகள்.

1990ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் இரண்டாம் மாநாடு நான்கு நாட்கள் கவிஞர் புரட்சி தாசன் திருமண மண்டபத்திலும் விசிபி தங்க கடற்கரை அரங்கிலும் சிறப்பாக நடைபெற்றது. தடா என்ற கொடிய சட்டம் இருந்த நாளில் தமிழ் உணர்வு தழைத்து ஓங்க இம் மாநாடு அச்சாரமாக விளங்கியது.

1993 தமிழாசிரியர் பதவியை உதறி குமரி சென்னை நடைப்பயணம் பிப்ரவரி  9ஆம் நாள் சென்னையில் பிறந்தநாள் முடித்து பிப்ரவரி 12ஆம் நடைப்பயணம் 100 தமிழறிஞர்களுடன் தொடங்கி 50 நாட்கள் நடந்து  சென்னையில் நிறைவு விழா இதே பெரியார் திடலில்.முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் நீதியரசர் வேணுகோபால் சங்கரலிங்கனார் உள்ளிட்டோரின் ஆதரவு மகத்தானது. தொடர்ந்து ஊர்திப் பயணமாக அதே தட த்தில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் குன்றாமல் தொடர்ந்து பயணிக்கிறது. உச்சமாக குமரி சென்னை ஐதிராபாத் போபல் இமயம் தில்லி வரை சென்று இந்தியப் பிரதமரிடம் திருகுறளை தேசிய நூலாக்கவும் தமிழை ஆட்சி மொழியாக்கவும் கோரிக்கை வழங்கப்பட்ட து. சென்னையில் வைரவிழா முடித்து இவ்வாண்டும் ஊர்திப் பயணம் தொடர உள்ளது தொடர்ந்து குமரியில் காந்தி மண்டபத்தில் தொடக்க விழா நட த்தும்  தியாகி முத்துக்கருப்பண் பாராட்டுக்குரியவர்.

அதே 19993ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 3ஆம் மாநாடு செருமணி பெர்லினில் உலகமே வியக்க நடைபெற்றது. தமிழகத்திலிருந்து 50பெருமக்கள் பங்கேற்றனர். இந்த மாநாடு ஒருவராலாற்றுப் பதிவு.

1995ஆம் ஆண்டு பெருங்கவிக்கோவின் 60ஆம் அகவை மணிவிழா. நீதியரசர் வேணுகோபால் தலைவராகவும்  காவலர் செம்மல் முனியாண்டி செயலாளராகவும் ஒரு குழு அமைத்து சென்னை மீயூசிக் அகடாமியில் ஒருநாள் விழாவாக தமிழகமே திரண்டு வாழ்த்தியது. தலைவர் முத்தமிழறிஞர்  கலைஞர் மக்கள் தலைவர் மூப்பனார் பங்கேற்று வாழ்த்தினர். கலைஞர் திருக்கரத்தால் ஒரு அம்பாசிடர் ஊர்தி வழங்கி ஒரு சாதனையை நிகழ்த்தினோம். தொடர்ந்து ஒவ்வொறு ஆண்டும் நூல் வெளியீடுகள்

1999ஆம் ஆண்டு தாய்லாந்து பங்காக் நகரில் பன்னாட்டுத் தமிழுறவு ம்ன்ற 4ஆம் மாநாடு 4 நாட்கள் உலகமே வியக்க நடைபெற்றது உலகெங்கிலிருந்தும் உலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.தலவர் கலைஞரின் பவளவிழாவை பாங்காக்கில் நடத்தி தலைவர் கலைஞரின் திருக்கரத்தில் மரகத புத்தர் சிலை வழங்கினோம். இலங்கை அமைச்சர் தொண்டைமாண் பேராயர் சற்குணம் டான்சிறி சோமசுந்தரம் பங்கேற்று சிறப்பித்தனர். தமிழகத்திலிருந்து 160 பெருமக்கள் பங்கேற்றனர். சிலர் மலேசிய சிங்கப்பூர் சென்று திரும்பினர். உயிரைப் பணயம் வைத்து நட த்திய மாநாடு.

2003ஆம் ஆண்டு மதுரையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் வெள்ளிவிழா ஐந்தாம் மாநாடு ஐந்து நாட்கள் திருக்குறட்செம்மல் மணிமொழியனார் தலைமையில் நடைபெற்றது உலகெங்கும் தமிழர்கள் பஞ்கேற்று சிறப்பித்தனர்.

9-2-2005 பெருங்கவிக்கோவின் 70ஆம் அகவை விழா சென்னை இராணி சீதை அரங்கில்  தலைவர் கலைஞர் பேராசிரியர் காவியக்கவிஞர் வாலி பங்கேற்று சிறப்பித்தனர். தோழர் நிலவு முத்துகிருட்டிணன் அரும்பணியாற்றினார். தொடர்ந்து நூல் வெளியீடுகள்.

2009ஆம் ஆண்டு மலேசியாவில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 4ஆம் மாநாடு கோலாலம்பூர் ஈப்போ பினாங்கு மலேசியா நான்கு நகர்களில் நான்கு நாட்கள்ள் நடைபெற்றது உத்தமா சாமிவேலூ பிரதம துறையின் அமைச்சர் செம்மொழி இராமசாமி பினாங்கு மாநில துணையமைச்சர் பேராசிரியர் இராமசாமி உலகத் தமிழ்ப் பெருமக்கள் பங்கேற்றனர்.மலேசியா தருமலிங்கம் இரா. மாணிக்கம் பாலசுப்பிரமணியம் விக்டர் போன்றோரின் பங்களிப்பு மகத்தானது.

9-2-20010ஆம் ஆண்டு பெருங்கவிக்கோவின் 75ஆம் ஆண்டு பவளவிழா சென்னையில் சந்திரசேகர் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.  இனமானப் பேராசிரியர் க.அன்பழகனார் தலைமையில் சேது காப்பியம் வெளியிட வள்ளல்பெருந்தகையர்  சேப்பியார் 10,00,000 பொற்கிழி வழங்கி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சேது காப்பியம் 12 காண்டங்கள் தொடர்ந்து  வெளிவந்துள்ளது

. 9-2- 2015 பெருங்கவிக்கோவின் 80ஆம் அகவை முத்துவிழா நீதியரசர் கோகுலகிருட்டிணன் தலைவராகவும்  மேனாள் மேயர் சா.கணேசன் புரவலராகவும் முனைவர் திவாகரன் செயலராகவும் இருந்தனர். இதே பெரியார் திடலில் சிறப்பக நடைபெற்ற்றது இனமானப் பேராசிரியர் தமிழர் தலைவர் பங்கேற்று வாழ்த்தினர்

2015ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 7ஆம் மாநாடு அமெரிக்கா வாசிங்டனில் நடைபெற்றது. அமெரிக்காவில் பெருங்கவிகோவின் சேது காப்பியம் நூற்கள் அறிமுகமும் 80ஆம் அகவை விழாவும் நடைபெற்றது. மாநாட்டில் மேனாள் மேயர் சா,கணேசன் சந்திரசேகர் கவிச்சிங்கம் கண்மதியன் உலகநாயகி பழநி எண்ணற்ற உலகளாவிய பெருமக்கள் பங்கேற்றனர்.கணிஞர் வா.மு.சே.கவியரசன் பொறிஞர் வா.மு.சே. தமிழ்மணிகண்டன் பொறுப்பேற்று சிறப்புடன் நட த்தினர். தொடர்ந்து நூல்ல்வெளியீடுகள்.

9-2-2025ஆம் ஆண்டு  90ஆம் அகவை வைரவிழா நடத்த கல்வி வேந்தர் கல்விக்கோ விசுவநாதன்  தலைமையில் ஒரு குழு உருவாக்கி மிகச் சிறப்பாக 90 அகவைத் திருவிழாவை நட த்த திட்டமிட்டு குழுக் கூட்டங்கள் ஐயா வேந்தர் அவர்கள் இல்லத்திலேயே நடைபெற்று மிகச் சிறப்பாக குழு இயங்குகிறது.அனைத்துக் கட்சித் தலைவர்கள் தமிழக முதல்வர் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் பேரதரவு தந்து வருகின்றனர். பெருங்கவிக்கோவின் ஒவ்வொறு ஆண்டும் தமிழுக்கு ஒரு படைப்பும் தமிழகம் முழுமையும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் முழக்க ஒருங்கிணைப்பும் உலகளாவிய தமிழர்களின் தமிழ்த்திருவிழாவாக நடைபெறுகிறது

என்றன்  இனத்தை ஒன்று சேர்க்காமல்

இறுதி எமக்கு வாராது

 என்றன் மொழி உலகாளவைக்காமல்

என்றன் உயிரோ போகாது  

என்ற பெருங்கவிக்கோவின் கவிதைக்கிணங்க வாழ்நாள் தொடரட்டும் தமிழ் தழைத்து ஓங்கட்டும். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத்தமிழர்கள் சார்பாகவும் வைரவிழா வாழ்த்துகள்.

 

Thursday, January 9, 2025

 

பொற்கிழிக் கவிஞர் கயிலைமணிஅருசோ ஒரு சகாப்தம் அவருக்கு இந்த தேவகோட்டை  மண்ணில் கட்டாயம் சிலை வைக்க வேண்டும்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

செட்டி நாட்டிலே பிறந்து இளமையிலேயே கல்வி பயின்று ஆசிரியப் பணியிலிருந்து அதையும் துறந்து நூல்கள் எழுதி சேக்சுபியர் நூல்களைமொழியாக்கம் செய்து உலகப் பயணம் மேற்கொண்டு அதையும் பயண நூலாக எழுதி இறுதியில் இராமாயண இராமர் கோயிலைக் கட்டி மறைந்த அருசோ அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தலில் பங்கேற்பதில் சோகம் கலந்த பெருமை கொள்கிறேன். மிகச் சிறந்த இந்நூற்றாண்டின் கவிஞர் உரையாளார் சென்னைக்கு திருவற்றியூரில் உரையாற்ற வரும்போதெல்லாம் அழைப்பார் சென்று கேட்டு மகிழ்ந்துள்ளேன். அவருடை ய நினைவேந்தலில் பங்கேற்ற பெருமக்களெல்லாம் அவர்தம் பெருமையை நிலைநாட்டியுள்ளனர்.  இங்கே பேசிய மருத்துவர் நான் நகரத்தாரல்லாதவன் அவர் பெருமையைப் பேசுகின்றேன் என்றார். நகரத்தார்கள் உழைப்பும் பெருமையும் உலகம் முழுமையும் நீக்கமறநிறைந்துள்ளது. குறிப்பாக பர்மா மலேசியா சிங்கப்பூர் நாடுகளிலுள்ள அறப் பணிகள் எல்லாம் இன்றும் அவர்கள் பெருமைக்கு இலக்கணமாக உள்ளதும் இன்றும் தமிழர்களின் பெருமையாக ஒளிர்கின்றது. இங்கிருக்கும் நகரத்தார்களெல்லாம் அறியமாட்டார்கள்

.ஐயா அருசோ அவர்கள் மன மாசில்லாமல்  வாழ்ந்த பேரறிஞர்.. ஆச்சி கயிலைமணி சோம நீலா அம்மையாரோடு  வாழ்நாள் வரை இல்லறமும் சொல்லறம் கண்டு வாழ்ந்தபெருமகன். வள்ளுவப் பெருமானின்

மனத்துக்கண் மாசிலன் ஆதால் அனைத்தறன்

ஆகுல் நீர பிற.

என்ற குறளுக்கு ஒப்ப மன மாசிலாமல் மிகச் சிறந்த் ஒப்புரவாளாரக வாழ்ந்துள்ளார். அதற்கு ஒரு சான்று 1963ஆம் ஆண்டு எம் தந்தையார் பெருங்கவிக்கோ இராமநாதபுரத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார. அது போது காரைக்குடியில் புத்தக வெளீயீடு எழுத்தாளரகாப் வீறுநடைபோட்ட அருசோ அவர்கள் தந்தயாரின் நெஞ்த்தோட்டம் நூலை கர்மவீர ர்  காமராசர் திருக்கரத்தார்  வெளியீடு செய்துள்ளார்.அந்நூலில் அருசோ அவர்கள் தந்தைக்கு எழுதிய வாழ்த்துக்கவிதை

            மலையெனும் தோற்றம் கொண்டான்

மதிநலம் மிகவும் பெற்றான்

அலைகடல் போல என்றும்

அரும்பணி செய்து வாழ்வான்

ஆசையே இல்லா இந்த

அருங்கவிச் சேது ராமன்

மீசையும் கவிதை பாடும்

மேன்மையைக் காண்போ மாக

 

என்று மன் மாசில்லாமல் பாடிய கவிதை இன்று உலகப் புகழ் பெற்ற மாக்கவியாக வலம் வருகிறார். அண்மையில் காரைக்குடியில்  உள்ள சேதுபாசுகாரா விவசாய பல்கலைக் கழகத்தில் நடந்த 48ஆம்  உலக க் கவிஞர்கள் மாநாட்டில்  உலக க் கவிஞர்கள் சூழ கிருட்டிணா சீனிவாசன் விருது பெற்றார். நூறு நூலகளுக்குமேல் படைத்துள்ளார். மாசற்ற மனம் கொண்ட அருசோ 2022 ஆம் ஆண்டு இங்கு வருகை தந் த தையும் இங்கு பொறித்து வைத்துள்ளார். இப்படி எண்ணற்ற பெருமக்களை உருவாக்கிய பெருமை அருசோ அவர்களைச் சாறும்.அருசோ அவர்கள் புலவர்குழுவிலும் பங்கேற்று சிறப்பித்த பெருமகன் ஒருமுறை  மலேசிய சென்று திரும்பும்போது தந்தையரோடும் அருசோவோடும் நானும் தம்பி ஆண்டவரும்  பயணித்த போது தந்தையாரை அந்தக்காலம் போன்றே இன்றும்  போன்றே பரபரப்பாக உள்ளாரே என வாஞ்சையோடு கூறியது என்செவிகளில் ரிங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. அருசோ பேசும்போது நகைச்சுவை கலந்து சிரித்துக்கொண்டே பேசுவது அவருடைய தனிச் சிறப்பு,  அவரை இந்த  இல்லத்திலேயே பலமுறை வந்து ச்ந்தித்துள்ளேன். என் தமிழ்ப்பணி இதழை மாத ந்தோறும் வெளிவருவதைக்கண்டு அடிக்கடி வாழ்த்துவார். என் மணிவிழா ஆண்டு இங்கு வந்து ச்ந்தித்தபோது அப்போது வாழ்த்துப் பா பாடி வாழ்த்தினார்.

காசி இரமேசுவர,ம் நடைப்பயந்த்தை தானே நடந்து அதை நாள் வாரியாக குறிப்பிட்டு ஒரு பெரிய நூலையும் படைத்துள்ளார். அவர்காலத்திலேயே தொடர்ந்து சென்றனர். இன்றும் போறுப்பேற்று செல்லும் பெருமக்கள் வருகை தந்துள்ளனர். தாம்வாழ்ந்த காலத்தில்ஒருமிக்ப் பெரிய தாக்கத்தை ஏற்ப்டுத்திய மாமேதை அருசோ அவர்கள்.நாங்க்ள் குமரி முதல் இமயம் தில்லி வரை திருக்குறளை தேசிய நூலாக்கவும் தமிழை தேசிய  மொழியாக்கவும் ஊர்திப்ப்யணமாக சென்ற்போது தம் சம்பந்தியையே எங்களோடு அனுப்பிவைத்து முறைப்படுத்திய சான்றோர் நம் கவிஞர்.. அருசோ ஒரு சகாப்தம் அவருர்க்கு இந்த் தேவகோட்டையில்  மண்ணில் கட்டாயம் சிலை வைக்க வேண்டும் அது நகரத்தார்க்கு ஏன் உலகத் தமிழர்களுக்கே பெருமை  ஐயன் திருவள்ளுவர் கூறியது போல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும்

தெய்வத்துள் வைக்க ப்படும்

இங்கு வாழ்ந்த மாசறு மேதையாக உள்ளார். அவர் வாழும்போது அவருக்கு துணையாக இருந்த இன்றும் அவர் புகழ பரப்பும் வாழ்க்கைத் துணைநலம் நீலா  ஆச்சி அவர்களையும்  மக்களையும் தாத்தா புகழ் பரப்பும் பேரன்களையும் வாழ்த்தி மாபெரும் சகாப்த்தமான ஐயா அருசோ அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி விடைபெறிகிறேன்.

Tuesday, January 7, 2025

 

கவினார் ஞாலம் காப்போம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

 

பூத்துக் குலுங்கும் மரங்கள்

 புன்னகை ம்னிதம் எங்கும்

காத்துக் கிடக்கும் மேகம்

களிப்பாய் பொழியும் மழையாய்

சேற்றில் புதையும் கால்கள்

 செழுமை வளர்ச்சி நல்கும்

காற்றும் மாசில் கொடையாய்

கவினார் ஞாலம் காக்கும்

 

பொல்லா மழையின் மோசம்

புரியா மனிதன் தவறே

 கல்லா உழவன் காத்த

கருணை இயற்கை பேணா

நில்லா உலகம் முறையாய்

நிமிரும் நிலையைக் காணார்

 சொல்லால் உலகைக் கவிஞர்

 சுடராய் நாமும் காப்போம்

 

 மரத்தை ஊன்றும் மாந்தர் 

மகிழும் பசுமை வித்தாய்

 அறமாய் வாயு குறைக்க

அனைவரும் ஒன்றாய்ப் பயணம்

திறமாய் உலகில் மின்னூர்தி

 திடமாய் காணும் நாள்தான்

வரமாய் வாழும் மக்கள்

வாழக் காணும் வழியாம்

 

கவிக்காடு களம் காணும்

 கண்மணிக் கவிஞர் குழாம்

புவிக்காடு வளம் காண்போம்

பூமிதனை மீட்டெ டுப்போம்

அவிக்கும் தனலைத் தகர்க்க

அணியாய் மரம் நடுவோம்

தவிர்க்கும் ஞாலம் காக்க

v

Tuesday, November 12, 2024

 

ஓங்கிய நாதம் அந்தோ

 ஓய்ந்தாரே எசுறா சற்குணம் 

 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


புத்தொளிர் புரட்சித் தந்தை

புயலென விரட்டும் வறுமை

 வித்தகச் சமூக நீதி

வியப்பான அறங்கள் செய்தோன்

உத்தமத் தலைவர் கலைஞர்

 உரிமையாய் எழுத்தித் தோழர்

சத்தியம் காத்த வேதச்

சரித்திரம் எசுறா மறைந்தார்!

 

பாங்காக் மாநாடு வந்தேம் பன்னாட்டு உறவைக் காத்தார்

 தாங்கிடும் உயிர்மெய்த் தமிழைத்

 தகைமையாய் முழங்கிய தமிழர்

 ஏங்கிடும் எளியோர் உள்ளோம்

 ஏந்திய எசுறா சற்குணம்

 ஓங்கிய நாதம் அந்தோ

ஓய்ந்ததே அருளின் தேகம்

 

மரகதப் புத்தர் சிலையை

 மகிழ்வாய் அறிஞர் சேர்ந்தே

பெருங் கவிக்கோ  தலைமை  

பெற்றிமைக் கலைஞர் கரத்தில்

பெருமையாய் வழங்கினோம் அன்றே

அருந்தமிழ் உறவு காத்த

அருளாளர் நம்மை விட்டே

 அகன்றது சோகம் அந்தோ!

 

ஆளுமை எசுறா தொண்டை

அனைவரும் போற்றித் தொடர்வோம்

பேருடை கொள்கைக் கோமான்

 பேதமை நீக்கி வாழ்வோம்

 யாழியே மீட்டும் இசையாய்

 யாவரும் தோழமை காப்போம்

கோளிலே எசுறா புகழும்

குவளயம் தாண்டிக் காப்போம்!